ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் முத்துராமலிங்க தேவருக்கு இன்று 115-வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் அதிமுக, திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வதற்காக செல்கின்றனர். திமுக கட்சியின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என் நேரு ஆகியோர் கலந்து கொள்வதற்காக செல்கின்றனர். இதேப்போன்று அதிமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், காமராஜ் மற்றும் பாஸ்கரன் உள்ளிட்ட மரியாதை செலுத்துவதற்காக […]
Tag: முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர்களின் வாகனம் விபத்தில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன் மற்றும் காமராஜ் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மானாமதுரை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென பிரேக் அடித்ததால் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ராஜேந்திர பாலாஜியை கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டில் சந்தித்து பேசினார்கள். முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ஊழல் செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதனால் ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். பின்னர் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் ராஜேந்திரபாலாஜியை போலீசார் சுற்றி வளைத்து […]
முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு அதிமுக சட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி வழக்கு இருக்கிறது. எனவே, அவர் முன்ஜாமினுக்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு காத்திருக்கும் நிலையில், காவல்துறையினர், அவரை தீவிரமாக தேடி வருவதால், இரண்டு வாரங்களாக தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரின் தலைமையில், அதிமுக சட்ட குழு உறுப்பினர்களான தளவாய் சுந்தரம், இன்பதுரை, பாபு […]
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக நடத்திய சோதனையில் ஐந்து கிலோ தங்க நகைகள், வைர நகைகள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வீரமணிக்கு சொந்தமான முப்பத்தி ஐந்து இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கே.சி வீரமணி, தன்னுடைய வீட்டில் […]