அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அந்நாட்டில் ரியல் எஸ்டேட், நட்சத்திர ஓட்டல் என்று எண்ணற்ற தொழில்களை செய்து வருகிறார். அதனைத்தொடர்ந்து டிரம்பின் நிறுவனம் 15 ஆண்டுகளாக நிதி மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து டிரம்ப், அவரது நிறுவனம் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது நியூயார்க் மாகாண நீதித்துறை வழக்கு பதிவு செய்து நீண்ட காலமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக முதல் முறையாக டிரம்ப் […]
Tag: முன்னாள் ஜனாதிபதி
புளோரிடாவில் உள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் Mar-a-Lago கிளப் வீட்டில் FBI அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 10 பெட்டிகள் அடங்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சோதனை முன்னாள் ஜனாதிபதி தனது நிர்வாகத்தின் முடிவில் எவ்வாறு முக்கிய ஆவணங்களை கையாண்டார் என்பது குறித்த நீதித்துறை விசாரணையின் ஒற்றை பகுதியாக நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தேடுதல் வேட்டை ஜனவரி 6 ஆம் தேதி திகதி அமெரிக்க கேபிட்டலில் நடந்த […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட போவதாக கூறியிருக்கிறார். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் செல்மா பகுதியில் நேற்று பேரணி நடந்திருக்கிறது. அதில், முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் தன் ஆதரவாளர்களிடம் தெரிவித்ததாவது, இரண்டு தடவை நான் அதிபர் தேர்தலில் களமிறங்கினேன். இரண்டு தடவையும் வெற்றி பெற்றேன். முதல் தடவையை விட இரண்டாம் முறை சிறப்பாக செயல்பட்டேன். அதனை மீண்டும் நாம் செய்ய வேண்டி வரும். நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் […]
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்போது நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தால், உக்ரைன் போர் நடந்திருக்காது என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் படைகளும், அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், மக்கள், பாதுகாப்பு படையினர் என்று மொத்தமாக 150- க்கும் அதிகமானோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்தது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, சரியாக நிலையை கையாண்டால், […]
ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி, காலமான பிரபல பாடகியான லதா மங்கேஷ்கரின் இனிமையான இசை என்றென்றும் நிலைத்திருக்கும் என்று கூறியிருக்கிறார். பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர். மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று காலமானார். இந்திய நாட்டின் இன்னிசை குயில் என புகழப்பட்ட அவருக்கு 92 வயது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த மாதம் எட்டாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதன் பின்பு, நேற்று அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாரதரத்னா லதா மங்கேஷ்கர் காலமானதற்கு இரங்கல் […]
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான, ஜார்ஜ் டபிள்யூ புஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போது, அமெரிக்க இராணுவ வீரர் அவருடன் வாக்கு வாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் 43வது ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ், தன் ஆட்சிக் காலத்தில், ஈராக்கில் பேராபத்தை விளைவிக்கக்கூடிய அணு ஆயுதங்கள் இருப்பதாகக்கூறி, தங்கள் படைகளை அந்நாட்டிற்கு போர் தொடுக்க அனுப்பினார். அதன்பின்பு, ஈராக்கில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், அப்போது ஆட்சியிலிருந்த சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். அதன் பின்பு […]
பிரபல நிறுவனத்தை தடைசெய்த நைஜீரிய நாட்டை புகழ்ந்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பிரபல நிறுவனமான ட்விட்டருக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். அதேபோல் நைஜீரியா நாடும் ட்விட்டர் நிறுவனத்திற்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து தங்களுடைய பேச்சுரிமையை அனுமதிக்காத மற்றும் அனைத்து தரப்பினரது கருத்துகளையும் கேட்காத ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைத் தலங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு நாடுகள் […]
மாலத்தீவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி மொஹமத் நஷீத் படுகாயமடைந்துள்ளார். மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போது நாடாளுமன்ற சபாநாயகராக இருந்து வரும் மொஹமத் நஷீத் தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த காருக்குள் ஏறும் போது அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் வெடித்து சிதறியது. இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து அவருக்கு ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை […]
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சார்க்கோசி மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சார்க்கோசி முக்கிய நீதிபதி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நிக்கோலஸ் சார்க்கோசி 2007- 2012ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் இருந்தார் . அதற்குப் பிறகு அவர் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருவதால் நிக்கோலஸ் -க்கு […]
உலக தலைவர்கள் தொடர்ந்து கொரோனா பாதிப்பால் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள தெற்கு ஆப்பிரிக்காவின் பிரதமர் Ambrose Dlamini கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Valery Giscard d’Estaining உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று உலகத் தலைவர்கள் கொரோனோ பாதிப்பால் உயிரிழப்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் ஸ்விஸ் மாகாணத்தின் முன்னாள் ஜனாதிபதி Flaviyo cotti (81) என்பவருக்கு கொரோனா […]
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் 13வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி. இவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மருத்துவமனைக்கு வேறொரு பரிசோதனைக்காக சென்ற பொழுது எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எடுக்கப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் சென்ற வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு […]