உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முலாயம் சிங். இவருக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில் கட்சித் தொண்டர்கள் யாரும் மருத்துவமனையில் கூட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் முழுமையாக குணமடைந்த பிறகு கட்சித் தொண்டர்கள் அவரை சந்திக்கலாம் என்று […]
Tag: முன்னாள் முதல்வர்
பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் அமரீந்தர் சிங். இவரின் வயது 80. காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் கடந்த ஆண்டு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதலில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புது கட்சி தொடங்கிய அமரீந்த சிங் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி […]
மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ எஸ். சாமிவேலு உடல்நலக்குறைவால் காலமான நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மலேசிய முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழர்களின் உரிமைக்குரலாக விளங்கிய டத்தோ எஸ். சாமிவேலு காலமானார். அவருக்கு வயது 86. டத்தோ எஸ். சாமிவேலு மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக இருந்து பதவி வகித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம், பொதுப்பணி போன்ற முக்கியமான துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தார். நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் பதவி வகித்த […]
முன்னாள் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி மற்றும் காங்கிரஸ் எதிர்கட்சி தலைவராகவும் இருப்பவர் சித்தராமையா. இவர் சங்பரிவார் அமைப்பின் வீர் சவார்க்கரை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார். இதன் காரணமாக சித்தராமையாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு பாஜகவினர் சித்தராமையாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கருப்புக் கொடி ஏந்தியும் கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில் குடகு பகுதிக்கு சித்தராமையா சென்றபோதும் அவருக்கு பல்வேறு […]
ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் சோம்பல்லி கிராமத்திற்கு சென்றார். கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல், படகு மூலம் சென்றபோது, எதிர்பாராதவிதமாக படகு தண்ணீரில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தண்ணீரில் மூழ்கினர். இதில் சந்திரபாபு நாயுடுவும் நிலை தவறி நீரில் விழுந்தார். இதனை கவனித்த […]
சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ கூட்டத்திற்கு பிறகு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “மாணவி ஸ்ரீமதியை இழந்த வேதனையோடு இருக்கின்ற தாய்க்கு அரசு நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்க வேண்டும். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் சந்தேகப்படுகிறார். அப்படி ஏதாவது சம்பவம் ஏற்பட்டு இருந்தால் பல்வேறு நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ அவர்களிடம் தெரிவித்து இருந்தால் இந்த […]
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா 87 வயதில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் . ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா. இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவராக பதவி வகித்தார். ஆசிரியர் தேர்வாணைய முறைகேடுகள் தொடர்பான வழக்கில் டெல்லி நீதிமன்றம் இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்தது. கடந்த 2017ஆம் ஆண்டு தேசிய […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]
மக்களின் இயல்பு வாழ்க்கை மழையினால் பாதிக்கப்பட்டதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த 10 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வீடூர் அணை, தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது. மேலும் விளை […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐசியு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இன்றைய முதல்வர் பினராயி விஜயனுக்கும் அரசியல் வழிகாட்டியாக இருந்த அச்சுதானந்தன் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்தவர். அவர் தனது ஆட்சி காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்(89) காலமானார். ரத்த தொற்றுநோய் காரணமாக கடந்த ஜூலை 4ஆம் தேதி முதல் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். ராஜஸ்தான், இமாச்சல பிரதேச மாநில ஆளுநராக பதவி வகித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 2009 முதல் 2014 […]
89 வயதான உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான கல்யாண் சிங் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் உடல்நிலை மிகவும் கவலைகிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உயிர்காக்கும் கருவிகள் உதவிமூலம் மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்துவருவதாக தெரிவித்துள்ளனார். கல்யாண் சிங்கின் பேரன் ரஜ்வீர் சிங்கிடம் பிரதமர் மோடி , உ.பி […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பல்கலைகழகம் பெயருக்குத்தான் செயல்பட்டு வருகின்றது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இணைத்து அண்ணாமலை பல்கலைக்கழகம் இணைப்பு பல்கலைக்கழகமாக செயல்படும் என சென்னையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் பெயருக்குத்தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் எந்த பணிகளும் அங்கு நடைபெறவில்லை. எனவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர் […]
பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு கிட்னி செயலிழந்து விட்டதாகவும் ரத்த அழுத்தம் அதிகரித்து விட்டதாகவும், அவரது உடல் நிலை மோசமடைந்து உள்ளதாகவும், சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 75% செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2017-ல் மாட்டுத் தீவன வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனையிலிருந்த லாலுபிரசாத் […]
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி முதல்வர் பழனிசாமி அவரை நினைவு கூர்ந்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளித்தது. ஒருமுறை அவர் அளித்த பேட்டியில், 60 வயதுக்கு மேல் நான் […]
தமிழகமே அம்மா என்று அழைக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தினத்தை முன்னிட்டு மக்கள் மரியாதை செலுத்தி வருகிறார்கள். தமிழக மக்கள் அனைவராலும் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளித்தது. ஒருமுறை அவர் அளித்த பேட்டியில், 60 வயதுக்கு […]
கர்நாடக மாநிலத்தின் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் முதல் மந்திரியான குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது, ” கர்நாடக மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கொரோனா பாதிப்பு மற்றும் வெள்ளப் பாதிப்புகளால் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 40 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மக்கள் […]