அரசு ஒப்பந்ததாரரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் உள்ள எரியோட்டையில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நாடார் சங்கத்தின் நிர்வாகியாகவும் அரசு ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார். இவர் இந்த பகுதியில் இருக்கும் விநாயகர் கோவிலின் முன்பாக அமர்ந்து சிலருடன் பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் பழனிச்சாமியை அரிவாளால் வெட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர். […]
Tag: முன்விரோதம்
கடலூரில் நிலப் பிரச்சினையால் டிராக்டர் ஏற்றி விவசாயி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள சக்தி விளாகம் என்ற கிராமத்தை சேர்ந்த ஆழ்வார் என்பவரின் மகன் ராமதாஸ். இவர் ஒரு விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் ஸ்ரீதர் என்பவருக்கும் நிலப் பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் முன்பு இருந்த ராமதாசை […]
முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள அக்ரஹார பூவனூர் பகுதியில் விசுவநாதன் மகன் கலைமணி வசித்து வருகின்றார். இவருக்கும் பூவனூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் குடும்பத்தினருக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் கலைமணி நீடாமங்கலம் வந்துவிட்டு பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ராஜ்குமார் மற்றும் சிலர் கலைமணியை காரில் அழைத்துச்சென்று நீடாமங்கலம் ரயில் நிலைய பகுதியில் வைத்து அவரை கம்பியால் தாக்கினர். இதனால் காயமடைந்த […]
முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் பெண்ணை பாட்டிலால் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள பனிச்சகுடி கிராமத்தில் செல்வமணி என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து கருணாநிதியின் மாடுகள் காளியம்மாளின் வயலில் மேய்ந்து கொண்டிருந்துள்ளது. எனவே காளியம்மாள் கருணாநிதியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருணாநிதி காளியம்மாளை தகாத வார்த்தைகளால் பேசியதோடு […]
பெண்ணை தாக்கிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொக்குபட்டி பகுதியில் ராஜபாண்டி – அபிராமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி என்பவருக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து அபிராமி தனது தோட்டத்துக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேலுச்சாமி, அவரின் மனைவி விஜயலட்சுமி மற்றும் மகள்கள் மாலதி, சுகந்திரியா, நித்தியா ஆகியோர் அபிராமியை சரமாரியாக […]
வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் தம்மத்துகோணம் குருகுலம் சாலையில் பெபிலின் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சுகாதார ஆய்வாளர் படிப்பை முடித்துவிட்டு தற்போது கல்லூரியில் பி.எஸ்.சி. படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் பெபிலின் இந்திரா தெரு பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த 2 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த பெபிலின் சிகிச்சைக்காக […]
முன்விரோதத்தால் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பழைய சாட்சியாபுரம் சாலையில் கனகராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கேரளாவில் உள்ள ஒரு பேக்கரி கடையில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த கனகராஜ் தனது நண்பர்கள் அய்யனார், பாண்டிமணி, சுதாகர், அந்தோணி போன்றோருடன் குறுக்கு பாதையில் உள்ள ஒரு மைதானத்தில் வைத்து மது அருந்தி இருக்கின்றார். அப்போது அதே மைதானத்தில் […]
முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கருப்பூர் மெயின் ரோட்டில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தர்மராஜ் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக தர்மராஜ் மணிகண்டன் ஆகிய இரண்டு பேருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தர்மராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனை வெட்டினார். இதில் […]
முன்விரோதம் காரணமாக விவசாயியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய அண்ணன்-தம்பி இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அச்சு தராயபுரம் பகுதியில் விவசாயியான அருள் பூபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுதா என்ற மனைவி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கேசவன் என்பவருக்கும் இடையே வேலி பிரச்சினை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருள் பூபதியின் மனைவியான சுதா தனது வீட்டின் […]
கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக – திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடலூர் தொகுதி சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. திமுகவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவிற்கு தேர்தல் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சூர்யா, சரண்ராஜ், சுபாஷ் ஆகிய 3 பேரை தாக்கி அவர்களின் வீடு, கடைகளை திமுகவினர் அடித்து உடைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் கடலூர் […]
பெரம்பலூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்லத்தில் சற்குணராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ் (24) என்ற மகன் உள்ளார். மோகன்ராஜ் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். இந்நிலையில் தனது நண்பர்களான வேலூரை சேர்ந்த அரவிந்த், கோகுல்ராஜ், துறைமங்கலத்தைச் சேர்ந்த கிஷோர் ஆகியோருடன் […]
பெண் ஒருவரை முன்விரோதம் காரணமாக இரண்டு பேர் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் முத்துப்பாண்டி (40) – முப்புடாதி (35). இவர்களுக்கு 11 வயதில் மாரிசெல்வம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துப்பாண்டி வேலைக்கு சென்றுள்ளார். மேலும் அவருடைய மகன் மாரிசெல்வம் தனது பாட்டி வீட்டிற்கு தூங்க சென்றுள்ள நிலையில் முப்புடாதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து காலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து முத்துப்பாண்டி […]
முன்விரோதத்தில் காய்கறி வியாபாரியை நண்பர்களே உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் உமச்சிகுளம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரசு மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கைகலப்பு ஏற்பட்டு மணிகண்டனின் நண்பர்கள் அவர் மீது தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டனர். உடல் முழுவதும் […]
லாட்டரியால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கல்லால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருக்கும் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த டீ கடை உரிமையாளர் அகமது பாஷா. இவர் மூன்று வருடங்களுக்கு முன்பு சட்டத்திற்குப் புறம்பாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ள சமயத்தில், அவரது நண்பரான சதீஷ் என்பவர் அகமது பாஷாவிடம் லாட்டரி சீட்டின் நம்பரை மாற்றி தனக்குப் பரிசு விழும்படி செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அகமது பாஷா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவர் […]
மதுரையில் முன்விரோதம் காரணமாக தாய்-மகன் ஆகிய இருவரும் ஆயுதங்களால் தாக்கப்பட்ட பதபதைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. மதுரை பெத்தானியாபுரம் மாதா கோவில் பாஸ்கி நகர் பகுதியைச் சேர்ந்த ரெஜினா தனது கணவர் வெள்ளைச்சாமி மற்றும் மகன் முரளிதரனோடு வசித்து வரும் நிலையில் எதிர் வீட்டில் உள்ள லூர்துசாமி என்பவருடன் மாநகராட்சி இட ஆக்கிரமிப்பு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற போவதாக லூர்துசாமிடம் எச்சரித்துள்ளனர். இதையடுத்து ரெஜினா குடும்பத்தினரிடம், லூர்துசாமி குடும்பத்தினர் தகராறில் […]
ஆலங்குடி அருகே முன்விரோதம் காரணமாக சிற்றுண்டி கடைக்கு தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே முன்விரோதம் காரணமாக சிற்றுண்டி கடைக்கு தீ வைத்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர் தீ வைக்கப்பட்ட கடையின் உரிமையாளராக நாகராஜன் ஆலங்குடி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். இந்த கடை நேற்று இரவு திடீரென தீப்பற்றி […]
மதுரையில் முன்விரோதம் காரணமாக சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை போடி லையன், பழைய காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் வெள்ளிக்கண் செந்தில் மற்றும் முருகன் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர் இருவரும் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக தத்தநேரி பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு தப்பி […]