Categories
தேசிய செய்திகள்

ரகசிய அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த 17 பெண்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மும்பையில் தகிசார் பகுதியில் அமைந்துள்ள பார் ஒன்றில் போலீசார் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பாரில் ரகசிய அறை ஒன்றை இருப்பதை கண்டறிந்து அதில் ஆய்வு நடத்திய போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த அறையில் 17 பெண்களை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் விஷயத்தை போலீசார் கண்டறிந்தனர். அந்த ரகசிய அரங்கில் முதலில் நான்கு பெண்கள் இருப்பதை கண்டறிந்த போலீசார் ஆய்வு செய்தபோது 17 பெண்கள் அங்கு பதுங்கியுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கடற்படைக்கு அதிநவீன மர்மகோவா போர்க்கப்பல்… ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை சேர்ப்பு…!!!!!!

ராணுவ மந்திரி ராஜ்நாத்  சிங் மும்பையில் நாளை நடைபெறுகிற விழாவில் அதிநவீன மர்மகோவா போர்க்கப்பலை இந்திய கடற்பறையில் சேர்க்கிறார். இந்தக் கப்பல் முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் இருப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த மர்மகோவா போர்க்கப்பல் இந்திய கடற்படையின் கடல் சார்ந்த திறனை மேம்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி  வருகிறது. இந்தக் கப்பலின் சிறப்பு அம்சங்கள் ஆவது. *இந்த கப்பலில் அதிநவீன ரேடார் தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் […]

Categories
தேசிய செய்திகள்

வருகிற 2023 ஜனவரி முதல் இரண்டடுக்கு மின்சார பேருந்து சேவை தொடக்கம்…. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி முதல் 2 அடுக்கு மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட இருக்கிறது. அதன்படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14-ம் தேதி நகரம் முழுக்க 10 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதன்பின் 50 பேர் பேருந்துகளாக எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று மும்பை பிஇஎஸ்டி பொது நிறுவன மேலாளர் லோகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இம்மாதத்தில் மின்சார பேருந்து சேவை தொடங்க எனவும், அடுத்த மாதம்‌ 2 அடுக்கு மின்சார […]

Categories
தேசிய செய்திகள்

நீங்காத காதல் நினைவுகள்….. கணவருக்கும், மாமியாருக்கும் Slow Poison…. மனைவியின் கொடூரச் செயல்…!!!

மும்பையை சேர்ந்த கவிதா என்பவரது கணவர் கமல் காந்த். சில நாட்களுக்கு முன்பு கணவரை பிரிந்த இவர், மீண்டும் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அவருடன் இணைந்து வாழ்ந்துள்ளார். ஆனால் அவரின் காதலின் நினைவுகள் இவரை துரத்தியதால், கணவருக்கும் மாமியாருக்கும்  slow poison ஐ சாப்பாட்டில்  கலந்து கொடுத்துள்ளார். இதன் காரணமாக  இவரது மாமியார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். தற்போது  கணவரும் வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

இனி வங்கிகள் ஞாயிற்றுக்கிழமைகளும் இயங்கும்…. எங்கு தெரியுமா?…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் 47 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயம் பொது விடுமுறை நாட்களும் வங்கிகள் இயங்காது. இந்நிலையில் மும்பையில் எஸ்பிஐ வங்கியின் கோவந்தி கிளையில் ஊழியர்களுக்கான வாரம் விடுமுறை நாள் ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து வெள்ளிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 1ஆம் தேதி முதல் வங்கி […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடேங்கப்பா!…. இத்தனை அடுக்கு மாடிகளா….? பிரம்மாண்ட பங்களா வீட்டைக் கட்டும் ரன்வீர்-தீபிகா ஜோடி…. வைரலாகும் வீடியோ…..!!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் தற்போது ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இவருடைய கணவர் பிரபல டாப் ஹீரோ ரன்வீர் சிங். அதன் பிறகு நடிகை தீபிகா நடிப்பது மட்டும் இன்றி பல்வேறு விதமான தொழில்களையும் செய்து வருகிறார். அதோடு தன்னுடைய நிறுவனத்தின் மூலம் பல்வேறு தொழில்களில் முதலீடும் செய்துள்ளார். இதனையடுத்து பேஷன் மற்றும் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனங்களையும் தீபிகா நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே மற்றும் அவருடைய […]

Categories
தேசிய செய்திகள்

தட்டம்மை பாதிப்பு: புதியதாக 30 பேருக்கு உறுதி…. ஒருவர் இறப்பு…. வெளியான தகவல்…..!!!!

மராட்டிய மாநிலம் மும்பை நகரில் தட்டம்மை பாதிப்பானது அதிகளவில் பரவுகிறது. அதன்படி புதியதாக 30 நபர்களுக்கு தட்டம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே நேரம் 22 நோயாளிகள் சிகிச்சை முடிந்து திரும்பி சென்று உள்ளனர். மும்பை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்குரிய அடிப்படையில் 156 நபர்களுக்கு புதியதாக தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கிறது. இந்த வருடத்தில் இதுவரையிலும் மும்பையில் 233 நபர்களுக்கு இந்த பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 8 மாத ஆண்குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

150 வருட பழமையான பாலம் அகற்றம்…. புதிய பாலம் எப்போது?….. ரயில்வே துறை வெளியிட்ட தகவல்….!!!

மும்பையில் புறநகர் பாதையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் மஸ்ஜித் பண்டர் இடையே 150 ஆண்டுகள் பழமையான இரும்பினாலான கர்னக் மேம்பாலம் இருந்தது. 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில் கடந்து 2014 ஆம் ஆண்டு பெருமளவு போக்குவரத்து குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த மேம்பாலத்தை ஆய்வு செய்த மும்பை ஐஐடி நிபுணர்க் குழு கடந்து 2018 ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் பாதுகாப்பபற்றது என்று சான்றிதழ் அளித்தது. இதனையடுத்து பாலத்தை அகற்ற ரயில்வே திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…. 6 வயது மகனை கொன்ற தந்தை… பயங்கர சம்பவம்…!!!!!

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தந்தையே தன்னுடைய மகனை கொன்ற  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தன்னுடைய 6 வயது மகனை தந்தை கொன்றுள்ளார். இது பற்றி மும்பை காவல்துறை அதிகாரி கூறியதாவது, நந்தன் என்பவர் தன்னுடைய மனைவி சுனிதாவுடன் சண்டை போட்டுள்ளார். அதன் பின் தன்னுடைய மகன் லக்ஷ்யாவை கொலை செய்துள்ளார். அதாவது நேற்று காலை சுனிதா வழக்கம் போல் தன்னுடைய 13 வயது மகளை பள்ளியில் விடுவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

பாட்டில் நிறைய “கொசுக்களுடன்” கோர்டுக்கு வந்த கைதி…. இது என்ன புதுசா இருக்கு…!!!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் சம்பந்தப்பட்ட இஜாஜ் லக்டாவாலா என்பவர் 2020ம் ஆண்டு முதல் மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் கொசுக்கள் அதிகம் இருப்பதாக கொசுவலை பயன்படுத்த அனுமதி தேவை என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதுகுறித்த விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், தன்னுடன் பாட்டில் நிறைய கொசுக்களையும் கொண்டு வந்து, சிறையில் கொசுத்தொல்லை இருப்பதை நூதனமாக தெரிவித்தார். அதோடு, புதிதாக சிறைக்கு வந்தவர் கொசுவலையுடன் வந்துள்ளார். அதனால் எனக்கும் கொசு […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் புது சிறைச்சாலை, போலீஸ் நிலையங்கள்?…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!

மும்பையில் புது சிறைச்சாலை மற்றும் 7 போலீஸ் நிலையங்களை அமைக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டு இருப்பதாக துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தன் சுட்டுரை பதிவில், மாநிலத்தலைநகர் மும்பை, நாக்பூர் மற்றும் புனே போன்ற இடங்களில் புது சிறைச்சாலைகளின் தேவை தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடந்தது. இப்போது மும்பையில் ஆர்தர் ரோட்டில் ஒரேஒரு ஜெயில் மட்டும்தான் இருக்கிறது. அத்துடன் காவலர் குடியிருப்புகளுக்கு அரசிடமிருந்து நிதிப்பற்றாக்குறை ஏற்படாது என உறுதியளித்தார். மும்பையின் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(நவ…1) முதல் அனைவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

மும்பையில் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மட்டுமல்லாமல் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகப் பட்டுள்ளது.சாலைகளில் இரு சக்கரங்கள் அதிகம் விபத்துக்குள்ளாவது போலவே கார்களும் அதிக விபத்துக்களை சந்திக்கின்றன.காரில் பயணிப்பவர்களில் ஓட்டுநர் மட்டுமே பெரும்பாலும் பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் அணைந்து வரும் நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் கார்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. அனைத்து வாகனங்களிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் வசதியை ஏற்படுத்த அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

மும்பை அந்தேரி பகுதியில் பூஜா ஷா (29) என்ற பெண் வசித்து வருகிறார்.இவர் கடந்த 23ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் உணவு டெலிவரி ஆப்பில் இனிப்புகளை ஆர்டர் செய்துள்ளார். ஆன்லைனில் ஆயிரம் ரூபாய் செலுத்த முயன்றுள்ளார். ஆனால் பணப்பரிவர்த்தனை தோல்வி அடைந்தது. இதனால் பூஜா சம்பந்தப்பட்ட இனிப்பு கடையின் எண்ணை கண்டுபிடித்து போன் செய்து தொடர்பு கொண்டார். பண பரிவர்த்தனை ஆகவில்லை என்று கடைக்காரரிடம் கூறிய நிலையில் பூஜாவிடம் இருந்து அந்த நபர் கிரெடிட் […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசுக்காக கொலை செய்த சிறுவர்கள்…. தீபாவளியில் பகீர்…!!!!

நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இந்நிலையில் மும்பை சிவாஜி நகரைச் சேர்ந்த சுனில் சங்கர் (21) என்ற இளைஞர், நேற்று 12,14,15 வயதுடைய 3 சிறுவர்கள் கண்ணாடி பாட்டிலில் வெடி வெடிப்பதை தடுத்துள்ளார். இதனால் வாக்குவாதம் முற்றவே சிறுவர்களில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை வைத்து அந்த இளைஞரை சரமாரியாக குத்தியுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த இளைஞர் உயிரிழக்கவே, போலீசார் 2 சிறுவர்களை கைது […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! மாத்திரைக்குள் ரூ. 15 கோடி மதிப்புள்ள பொருளா…..? விமான நிலையத்தில் நடந்த சம்பவம்….. தீவிர விசாரணை…..!!!!

இந்தியாவுக்கு சர்வதேச கொரியர் பார்சல் மூலமாக போதை பொருள் கடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை தெரிவித்தது. இதன் காரணமாக மும்பை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சரக்கு விமான நிலைய வளாகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பாரிசில் இருந்து மும்பையின் நலசோபரா பகுதிக்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அந்த பார்சலை அதிகாரிகள் பிரித்து சோதனை செய்த போது அதில் மாத்திரை வடிவில் ஆம்பெட்டமைன் ரக போதை பொருள் இருப்பது தெரிய வந்தது. இதில் மொத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. மிக மோசமாக பாதிக்கும் கண் நோய்…. மாநகராட்சி திடீர் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. பல மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் ‘கான்ஜுன்டிவிஸ்’ என அழைக்கப்படும் கண் அலர்ஜி நோய் பொதுமக்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த நோயால் அதிகம் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மும்பை மருத்துவமனைகளில் பலர் சிவந்த கண்களுடன் வரிசையில் நிற்கின்றனர். அதனை தொடர்ந்து மழை காலங்களில் காற்றின் வெப்பநிலை அதிகரிக்கும் போது அது […]

Categories
தேசிய செய்திகள்

காரில் செல்பவர்கள் கவனத்திற்கு…. இனி இது கட்டாயம்….மாநில அரசு கடும் எச்சரிக்கை….!!!!

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் பிரபல தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்தார். அதிவேகமாக சென்று சாலை தடுப்பில் மோதிய காரில், பின் இருக்கையில் இருந்த அவர் சீட் பெல்ட் அணியாததுதான் அவரது உயிரிழப்பு முக்கிய காரணம் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் மட்டுமில்லாமல் தேசிய அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் எழும் எச்சரிக்கை ஒலி தடுப்பு கருவி விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

நவம்பர் 1 முதல் அனைவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

மும்பையில் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மட்டுமல்லாமல் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகப் பட்டுள்ளது.சாலைகளில் இரு சக்கரங்கள் அதிகம் விபத்துக்குள்ளாவது போலவே கார்களும் அதிக விபத்துக்களை சந்திக்கின்றன.காரில் பயணிப்பவர்களில் ஓட்டுநர் மட்டுமே பெரும்பாலும் பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் அணைந்து வரும் நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் கார்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. அனைத்து வாகனங்களிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் வசதியை ஏற்படுத்த அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

புனே பேருந்தில் திடீர் தீ விபத்து…27 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்… பெரும் பரபரப்பு…!!!!!

மும்பையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை அருகே பிவாண்டியில் உள்ள கிராமத்திலிருந்து புனே மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பீமா சங்கர் கோவிலுக்கு 27 பயணிகள் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது பீமா சங்கர் கோடகான் சாலையில் ஷிண்டோவாடி அருகே  மற்றொரு பேருந்து ஓட்டுநர் பேருந்தில் இருந்து புகை வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். அதன் பின் அவசர அவசரமாக பேருந்து நிறுத்தப்பட்டு அதிலிருந்து பயணிகள் கீழே இறக்கி […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! 9 மாதத்தில் இவ்வளவா….? போதைப்பொருள் விவகாரம் குறித்த அதிர்ச்சி தகவல்….!!!!!

மும்பை போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நடபாண்டின் 9 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விவரம் மற்றும் கைது நடவடிக்கைகள் போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடத்தின் 9 மாதங்களில் மட்டும் 11,300 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட 58 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு போதை பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக 46 வழக்குகள் பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

31 க்கும் 35 க்கும் இடையேயான விஷயம்….! பெண்கள் உருக அவர் என்ன ஹீரோவா….? கடுப்பான நீதிபதி…!!

இளைஞர் ஒருவர் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் 31 வயது பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்து கொள்ள தற்போது மறுக்கிறார். மேலும் தன்னிடம் 21 லட்சம் பணம் மோசடியும் செய்துள்ளார். மேலும் அந்த இளைஞர் இதேபோன்று பல பெண்களோடு பழகி ஏமாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, பெண்கள் எல்லாம் அவருக்காக உருகுவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. கடும் அவதியில் பொதுமக்கள்…. மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல்…..!!!!!

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மஞ்சள் எச்சரிக்கை அலர்ட் விடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது கனமழை பெய்த நிலையில், அதன் பிறகு மழை பெய்யாமல் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மும்பையில் பலத்த கன மழை பெய்து வருகிறது. இதனையடுத்து வருகிற 2 நாட்களுக்கு மும்பை, தானே, பால்கர் மற்றும் கொங்கன் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனால்  மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

சீட் பிடிக்க இப்படியா!…. ரத்தம் சொட்ட சொட்ட அடித்து உருண்ட பெண்கள்…. தீயாய் பரவும் வீடியோ….!!!

மும்பையில் மின்சார ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். அதன்படி  கடந்த புதன்கிழமை இரவு 7:45 மணிக்கு தானே-பன்வெல் நோக்கி  ரயில் சென்று கொண்டிருந்தது. அதில் பெண்கள் பெட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் ஏறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருக்கைக்காக மற்றொரு பெண் பயணியிடம் வாக்குவதில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் 3 பேரில் ஒருவர் சக பயணியை முடியை பிடித்து அடித்துள்ளனர். இதனால் பெட்டியில் பயணித்த சக பயணிகள் சண்டையை நிறுத்துமாறு அறிவுறுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

பர்தா அணிய மறுத்த இந்துமத பெண்…. கத்தியால் குத்தி கொடூர கொலை…. கணவர் கைது… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மும்பையில் இக்பால் ஷேக் (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் டாக்ஸி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ரூபாலி (20) என்ற இந்து மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இக்பால் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்து மதத்தை சேர்ந்த தன்னுடைய மனைவி ரூபாலியின் பெயரை சாரா என்று மாற்றியுள்ளார். அதோடு இக்பாலின் குடும்பத்தினர் ரூபாலியிடம் பர்தா […]

Categories
தேசிய செய்திகள்

தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் மிரட்டி பணம் பறித்த வழக்கு….. திடீர் திருப்பம்….!!!!

மும்பை வெர்சோவா பகுதியில் சேர்ந்த ஒருவரை தொழிலதிபரும், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளிமான ரியாஸ் பத்தி மற்றும் முகமது சலீம் ஆகியோர் மிரட்டி ரூ.30 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ரூ.7,50,000 ரொக்க பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து வெர்சோவா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்ட அதிபர் ரியாஸ் பதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் அதிகரிக்கும் கோடீஸ்வரர்கள்…. வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவல்….!!!!

மும்பையில்  ஏராளமானோர் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமாக மும்பை விளங்குகிறது. மேலும் மும்பை இந்தியாவின் மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் நவி மும்பை மற்றும் தானே  அருகில் உள்ள புறநகரங்களில் மட்டும் ஏறத்தாள 19 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் உள்நாட்டு உற்பத்தியில் மட்டும் 5 சதவீதமும், தொழில்துறை உற்பத்தியில் 25 சதவீதமும், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு கடல்வழி வாணிபத்தில் 40 விழுக்காடும், மூலதன பரிமாற்றத்தில் 70 சதவீதம் அளித்து இந்தியாவின் […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 1 ரூபாய்க்கு சாப்பாடு….. பசியாறும் ஏழை மக்கள்….. அசத்தும் திருநங்கைகள்….!!!!

மும்பையில் ஐந்தாயிரம் திருநங்கைகள் இணைந்து உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.  மும்பையில் ஏராளமான திருநங்கைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு யாரும் வேலை கொடுக்காத காரணத்தினால் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் யாசகம் பெற்று வாழ்கிறார்கள். அவர்கள் தாங்கள் பெறும் யாசகத்தில் இருந்து சிறிய தொகையை பொதுமக்கள் உடைய பசியை போக்க நன்கொடையாக கொடுக்கின்றனர். இந்த உணவகத்தில் காலை உணவானது வெறும் ஒரு ரூபாய்க்கும் மதிய உணவானது வெறும் பத்து ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.  இந்த உணவகம் மும்பை அருகில் உள்ள கல்யாண் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல்.!!

மும்பை நவசேவா துறைமுகத்தில் 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பை நவசேவா துறைமுகத்தில் கண்டைனரில் கடத்தப்படவிருந்த 22,000 கிலோ ஹெராயினை டெல்லி போலீசின்  சிறப்பு பிரிவு கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூபாய் 1,725 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. In one of the biggest seizures of Heroin, a container having 22 tonnes approx of Licorice coated with Heroin […]

Categories
உலகசெய்திகள்

பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு எதிரான தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை போட்டது ஏன்…? விளக்கம் அளித்த பிரபல நாடு…!!!!!!

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை போட்டது பற்றி சீனா விளக்கம் அளித்துள்ளது. மும்பையில் 2008 ஆம் வருடம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர் இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியாக சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க அமெரிக்கா மற்றும் இந்தியா சார்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான சீனா இந்த தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை […]

Categories
தேசிய செய்திகள்

புதிய வந்தே பாரத் ரயில்கள்… செப்டம்பர் 30 முதல்… இந்த வழித்தடங்களில்..!!!!.

ரயில்வேயின் தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகள் மீது அரசு கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் அதிவேக ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக பணிகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகின்றது. மேலும் அதிவேக ரயில்கள் பயணிகளின் விருப்பமாக இருக்கின்ற நிலையில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ரயில்வே தரப்பில் இருந்து விதிகளும் மாற்றங்கள் செய்யப்பட்டு கூடுதலாக அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு வருகின்றது. வந்தே பாரத் வந்தே பாரத் 2 என்ற செமி ஹை ஸ்பீட் ரயிலின் மேம்படுத்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல்….. இந்தியாவில் எந்த நகரங்கள் தெரியுமா?…. இதோ லிஸ்ட்….!!!!

உலக அளவில் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு நாடுகளிலும் மிக முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. உலக அளவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள் இடம் பெற்றுள்ளன. வருடத்திற்கு 123 மணி நேரத்தை போக்குவரத்து நெரிசலில் இழக்கிறது மும்பை. மற்ற நகரங்களில் ஒப்பிடும்போது மும்பை 53 சதவீதம் […]

Categories
தேசிய செய்திகள்

இவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் பரிசு வெளியான முக்கிய அறிவிப்பு

மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டி வெடிப்பில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி ஆனால் தாவூத் இப்ராகிமை தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியா அறிவித்துள்ளது. அவர் பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் காராச்சி நகரில் தலைமறைவாக வசித்து வருகிறார். பாகிஸ்தான் அரசு அவருக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கூறியது, இந்தியாவில் ஒரு பயங்கரவாத குழுவை அமைத்து நாட்டுககுள் வெடிபொருள்கள், பயங்கர ஆயுதங்கள், கள்ள நோட்டுகள் மற்றும் போதைப்பொருளை […]

Categories
உலக செய்திகள்

மும்பையில் தாக்குதல் நடத்த திட்டமா?…. பொய் தகவல் பரப்புகிறார்கள்…. இந்தியாவை சாடும் பாகிஸ்தான்…!!!

பாகிஸ்தான் நாட்டின் தொலைபேசி எண்களிலிருந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக இந்தியாவில் வெளியான செய்தியை பாகிஸ்தான் மறுத்திருக்கிறது. மும்பையில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப் போவதாக காவல்துறையினருக்கு இரண்டு நாட்களுக்கு முன் குறுஞ்செய்தியில் மிரட்டல்கள் வந்திருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, “மீண்டும் மும்பையில் 26/11 போன்ற தாக்குதல் மேற்கொள்ளப்படும், நகரமே சூறையாடப்படும்” என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. மும்பையில் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறார்கள். இந்நிலையில், இதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கும் என்ற சந்தேகங்கள் எழுந்தது. ஆனால், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதனை மறுத்திருக்கிறது. அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“2008 ஆம் வருடம் போல மும்பையை தகர்க்கப் போகின்றோம்”… போலீசாருக்கு மிரட்டல்… பாதுகாப்பு அதிகரிப்பு…!!!!

மும்பை அருகே உள்ள ராய்கார்டு கடலில் கடந்த வியாழக்கிழமை ஏகே 47 ரக துப்பாக்கிகள் தோட்டாக்களுடன் ஆயுத படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது பயங்கரவாதிகளின் சதி வேலையா என மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவினர் போலீஸர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திடீரென பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கும் மிரட்டல் வந்துள்ளது. ஒர்லி போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்அப் நம்பருக்கு நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் மர்ம நபரிடம் இருந்து அடுத்தடுத்து குறுந்தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

“26/11” மும்பையில் தீவிரவாத தாக்குதல்…. பாகிஸ்தானில் இருந்து வந்த குறுஞ்செய்தியால் பரபரப்பு….!!!

பாகிஸ்தான் நாட்டிலிருந்து வந்த குறுஞ்செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் நாட்டிலிருந்து கடல் வழியாக வந்தவர்கள் நடத்தினர். இந்த தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டதோடு, 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பைக்கு அருகே உள்ள ஒரு கடற்கரையில் ஆளில்லாத கப்பல் ஒன்று கரை ஒதுங்கியது. அந்தக் கப்பலில் 3 ஏகே 47 […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்….. வாட்ஸ்ஆப் மிரட்டலால் பரபரப்பு….!!!!

மும்பை போலீசாருக்கு 26/11 பாணியில் தாக்குதல் அச்சுறுத்தல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் வர்த்தகத் தலைநகரில் மற்றொரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் என மும்பை காவல்துறை போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கு ஒரு செய்தி வந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். அச்சுறுத்தல்கள் வாட்ஸ்அப் செய்தியில் இருந்து வந்துள்ளன. அண்டை நாட்டிலிருந்து, அனுப்பியவரின் விவரங்கள் அல்லது தாக்குதல் எப்போது நடக்கும் என்பது பற்றி தகவல் ஏதும் அதில் குறிப்பிடப்படவில்லை. அடுத்த பயங்கரவாத தாக்குதல் மும்பை நகரில் 26/11-ல் நடந்த தாஜ் […]

Categories
தேசிய செய்திகள்

தூங்கும்போது ஏசி வெடித்து தாயும் மகளும் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….. சோகம்…..!!!!

தூங்கிக் கொண்டிருக்கும்போது ஏசி வடித்து தாயும் மகளும் உயிரிழந்த நிலையில் தந்தையும் மகனும் பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை லோயர் பரோலில் உள்ள வீட்டில் ஏசி விடுத்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். காயமடைந்த இருவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மும்பை லோயர் பரோலில் உள்ள இல்லத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. ஏசி வெடித்ததால் லேசான தீயும் ஏற்பட்டது . உயிரிழந்தவர் லட்சுமி ரத்தோரின் மகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 67…. “படத்திற்கான வேலையை தொடங்கிய லோகேஷ்”….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

தளபதி 67 திரைப்படத்தின் லொகேஷனை தேர்வு செய்வதற்காக லோகேஷ் கனகராஜ் மும்பை சென்றுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ்  மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருகின்றார். இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டிவி பார்த்துக்கொண்டே சமைத்தால் விபரீதம்….. நூடுல்ஸ் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு….!!!!

மும்பையில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட்டு இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பாஸ்கல் வாடி பகுதியை சேர்ந்த ரேகா நிஷாத் (27) திருமணமாகி கணவர் மற்றும் கணவரின் சகோதரருடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்ததால் கடந்த ஜூலை 21ம் தேதி எலிகளை கொல்ல தக்காளியின் மீது எலி விஷம் கலந்து வைத்துள்ளார். பின் அடுத்த நாள் டிவி பார்த்துக்கொண்டே இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சமைத்த போது தவறுதலாக […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ என் குழந்தை…! குடையோடு விளையாடிய சிறுவன்…. பின் நேர்ந்த பயங்கரம்….. கதறும் தாய்….!!!!

மும்பை மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பதினோராவது தளத்தில் குடையோடு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவனுடைய குடும்பத்தினர் பைகுல்லா பகுதியில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் உள்ள 11வது தளத்தில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்து குடையுடன் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியாக 11வது தளத்திலிருந்து சிறுவன் கீழே விழுந்துள்ளர். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“இன்று இந்த மாநிலத்திற்கு ரெட் அலார்ட்”…… இந்திய வானிலை எச்சரிக்கை….!!!!

மும்பையில் நான்கு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மும்பையில் கடந்த மாதம் முதல் பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. இதில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் மும்பையில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று ஐந்தாவது நாளாக பலத்த மழை பெய்து வருகின்றது. தொடர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள நகரங்களில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை, தானே, பால்கர், ராய்க்காட் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. வெளுத்து வாங்கும் கனமழை…. 2 நாட்களுக்கு வெளியே வராதீங்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. சியான், அந்தேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் அளவு தேங்கியுள்ளது. அது மட்டுமில்லாமல் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. மேலும்  தாழ்வான பகுதிகள் மற்றும் ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சில வழித்தடங்களில் பேருந்து, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

4 அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்தது….. நொடியில் தப்பிய உயிர்கள்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

மகராஷ்டிரா தலைநகர் மும்பை குர்லா பகுதியில் உள்ள நாயக் நகரில் நான்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென நேற்று இரவு இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதன் முதல் கட்டமாக இடிபாடுகளில் இருந்து 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 20 முதல் 25 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து மீட்பு […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து….. 8 பேர் மீட்பு…. தீவிர மீட்புப் பணி….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையின் குர்லாவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கியவர்கள் இதுவரை 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அடுக்கு மாடி கட்டிடத்தின் இடுபாடுகளில் சுமார் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை எடுத்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்குப்பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அங்கு ஏராளமான மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

‘எலக்ட்ரிக் வாகனங்கள் என்றாலே தீப்பிடிக்கும்’…..ஓலா கருத்தால்…. இணையத்தில் பெரும் சர்ச்சை….!!!!

மும்பையில் உள்ள புறநகர் பகுதியில் டாடா நெக்ஸான் என்ற எலக்ட்ரிக் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தின் வீடியோவை, டுவிட்டரில் கமல் ஜோஷி என்பவர் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இந்த பதிவினை பார்த்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பவிஷ்  அகர்வால் என்பவர் ரீட்வீட் செய்துள்ளார். அதாவது எலக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்துக்கள் ஏற்படுவது, உலக அளவில் அனைத்து தயாரிப்புகளிலும் நிகழும் ஒரு சம்பவம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் எலக்ட்ரிக் வாகனங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: மும்பையில் உட்சபட்ச உஷார் நிலை….. காவல்துறைக்கு அலர்ட்….!!!!!

மும்பையில் சிவசேனா கட்சியினர் பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து மும்பை முழுவதும் காவல்துறையினர் தயார் நிலையில் இருக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் காவல்துறையினர் உச்சபட்ச உஷார் நிலையில் உள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

6 குழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொன்ற கொடூர தாய்…. பகீர் காரணம்…. உச்சகட்ட அதிர்ச்சி….!!!

கணவர் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக 6 குழந்தைகளைப் பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் என்ற மாவட்டத்தில் உள்ள காரவலி கிராமத்தில் உள்ள 30 வயதான பெண் ஒருவர் அந்த கிராமத்தில் உள்ள கிணற்றுக்குள் தனது ஆறு குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்து உள்ளார். அலறிக்கொண்டே தண்ணீருக்குள் விழுந்த குழந்தைகள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின்படி […]

Categories
தேசிய செய்திகள்

“ஏண்டா இப்படி பண்ணுன” காதலன் வீட்டிலேயே…. தூக்கில் தொங்கிய காதலி…. பெரும் அதிர்ச்சி….!!!!

மும்பையைச் சேர்ந்த பிரனாலி(20) என்ற பெண் 27 வயதான வாலிபர் ஒருவரை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று இரவு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இருவரும் திரும்பியுள்ளனர். அப்போது பிரணாலி தனது காதலன் வீட்டில் தங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதை அந்த வாலிபர் ஏற்காமல் வீட்டுக்கு செல் என்று கூறி அனுப்பியுள்ளார் .இதனால் கிளம்பிய பிறகு பிரனாலி மீண்டும் தன்னுடைய காதலனுக்கு போன் செய்து கேட்டு இருக்கிறார். ஆனால் அப்போதும் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக் நியூஸ்..! ஆபாச படத்திற்கு வாலிபர் அடிமை… 10 ஆண்டில் 18 முறை பாலியல் வழக்கில் கைது…!!!

மும்பையில் இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் குறித்து அச்சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து இந்த விசாரணையில் அந்த இளைஞர் கல்பேஷ் தேவ்தரே என்பது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2011 முதல் 2020 வரை, […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!

ரயில் கட்டணம் குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இயங்கிவரும் லோக்கல் ரயில்களில் ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர். அதுமட்டுமின்றி மும்பையில் ஏசி வசதி கொண்ட லோக்கல் ரயில்களும் இயங்கி வருகிறது. இந்த லோக்கல் ரயில்களில் 5 கிலோ மீட்டருக்கும் குறைவாக 65 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் மிக அதிக அளவில் இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த கட்டணத்தை குறைக்குமாறு மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ரயில் கட்டணம் […]

Categories

Tech |