உலகிலேயே மிக உயரமான முத்து மலை முருகன் கோவிலுக்கு காமெடி நடிகரான யோகி பாபு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை புத்திர கவுண்டன் பாளையத்திலுள்ள முத்து மலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை (146 அடி) உள்ளது. இக்கோவிலுக்கு ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அது மட்டுமல்லாமல் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள், அரசியல் […]
Tag: முருகன் கோவில்
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு இருக்கிறது. திருப்பதி கோயில்கள் வாசலில் கூட புகைப்படம் எடுக்க முடியாது. தமிழகத்தில் தான் சாமி சிலைகளுக்கு முன்பு செல்பி எடுக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். எனவே திருச்செந்தூர் கோயிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்ற கிளை ஆனது உத்தரவிட்டிருக்கிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு சுற்றறிக்கை அனுப்பவும், இந்து அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் […]
திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருத்தணி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்று முதல் துவங்கி இந்த மாதம் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடந்து வருவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சித்திரை மாத பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று […]
திருத்தணி முருகன் கோவிலில் நித்திய பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற திருக்கோயில் ஆகும். இந்த கோவிலில் நித்திய பிரசாதம் வழங்கும் திட்டத்தை சென்னை வடபழனி முருகன் கோவிலில் இருந்து காணொலி காட்சி வழியாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மலைக்கோவிலில் திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் பரஞ்ஜோதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவலால் மலேசியாவில் பத்துமலையில் இருக்கும் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா எளிமையாக நடந்திருக்கிறது. மலேசியாவில் பத்துமலையில் இருக்கும் முருகன் கோவிலில் வருடந்தோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். இங்கு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்நிலையில், தற்போது கொரோனா அதிகரித்திருப்பதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பால்குடம் ஏந்தி வந்த பக்தர்கள் சாமிக்கு நேர்த்திக்கடன் செய்தனர். அதன்பிறகு, கோவிலுக்கு அருகில் இருக்கும் நதிக்கரையில் முருகருக்கு படையலிட்டு பக்தர்கள் வழிபட்டார்கள்.
திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந் தேதி திருப்படித் திருவிழாவும், நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் . அதன்படி நாளை திருத்தணி முருகன் கோவிலில் படித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. நாளை காலை 8 மணிக்கு கோவில் மலைப்பாதையில் உள்ள 365 படிகளிலும் கோவில் நிர்வாகம் சார்பில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை நடத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தங்கத்தேர் வீதியுலா நடைபெறுகிறது. இரவு 10 […]
ஆங்கில புத்தாண்டு தரிசனம் திருத்தணி முருகன் கோயிலில் மிகவும் விசேஷமானது. ஏனெனில் மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழிகளில் 365 படிக்கட்டுகள் உள்ளது. இது ஒரு வருடத்தைக் குறிக்கும் என்பதால் இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் 31 மற்றும் 1ஆம் தேதிகளில் திருப்புகழ் திருப்படி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு பஜனைக் குழுவினர் பங்கேற்று ஒவ்வொரு படியிலும் சிறப்பு பூஜைகள் செய்து பாடல் பாடியவாறு கோவிலுக்குள் சென்று வழிபடுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4 ஆம் தேதி சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று 6 ஆம் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 9 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை,2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம, 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி […]
தமிழ்க்கடவுளான திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் திடீரென இந்தி மொழியில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம்படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தமிழ் கடவுள் என்ற சிறப்பு உண்டு. அந்த சிறப்பை குறைக்கின்ற வகையில், இத்தனை ஆண்டுகளாய் இல்லாத இந்தி மொழி கல்வெட்டை திருச்செந்தூர் முருகன் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாத்தலங்கள், கடற்கரைப் பகுதிக்கு மக்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் நீராட நேற்று […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் நேற்று சித்திரை மாத கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் நேற்று சித்திரை மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வெளிப்பிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும், ஆறுமுகக் கடவுளுக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள தெய்வானை, வள்ளி, […]
பழனி முருகன் கோவிலில் இன்று முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு இதுவரை தளர்த்தப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை மீண்டும் செயல்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று முதல் பழனி முருகன் கோவிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க படுவதாகவும் இரவு […]
காணும் பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காணும் பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம், விஸ்வரூப தீபாராதனை, அதன்பின்னர் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் பரிவேட்டைக்காக கோவிலில் இருந்து புறப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கும் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. […]
பழனி மலை முருகன் கோவிலில் மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி மலை முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால், அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு அடிவாரத்திலிருந்து மலை கோவில் செல்வதற்கு ரோப் கார் இயக்கப்பட்டு வருகின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக அது இயக்கப்படவில்லை. பழனிக்கு வரும் பக்தர்கள் அனைவரும் படிப்படியாக மலை கோவிலுக்கு செல்கிறார்கள். அதனால் ரோப் கார் நிலைய பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. இந்நிலையில் நேற்று மதியம் […]