பள்ளியில் மரம் முறிந்து விழுந்ததால் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கண்ணாடிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 18 மாணவிகள் மற்றும் 4 மாணவர்கள் என மொத்தம் 22 பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் முன்பு இருந்த பழமையான மரம் ஒன்று அதிகாலையில் திடீரென முறிந்து பள்ளியின் கட்டிடத்தின் மீது விழுந்துள்ளது. இதனைஅடுத்து பள்ளியை சுத்தம் செய்வதற்காக வந்த பணியாளர்கள் மரம் முறிந்து […]
Tag: முறிந்து விழுந்த மரம்
ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் மீது மரம் முறிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் சேது எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரத்திற்கு வந்தடைந்த ரயில் அதிகாலை 3.45 மணியளவில் ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த ரயில் ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை -பெருங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. […]
சாலையில் முறிந்து விழுந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கீழ் நாடுகாணி என்ற இடத்தில் பெரிய மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்து விட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர். […]
சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோரம் இருக்கும் மரம் முறிந்து விழுந்து விட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து ஒரு மணி நேரம் கழித்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.