Categories
தேனி மாவட்ட செய்திகள்

“முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் குறைப்பு”…. மின் உற்பத்தி குறைவு….!!!!!!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைந்ததால் லோயர் கேம்பில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. தமிழக-கேரளா எல்லையில் முல்லைப் பெரியாறு அணை இருக்கின்றது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீர் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. சென்ற சில வாரங்களாக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததன் காரணமாக மின் உற்பத்தியும் குறைந்தது. நான்கு ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 126 முதல் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. அந்த வகையில் இன்று காலை முதல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பாசனத்திற்காக திறந்து வைக்கப்பட்ட முல்லை பெரியாறு 18-ம் கால்வாய்”…. திறந்து வைத்த ஆட்சியர்…!!!!!

முல்லை பெரியாற்றில் பாசனத்திற்காக பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம், போடி தாலுகாவில் இருக்கும் கோம்பை, பண்ணைபுரம், தேவாரம், சிந்தலைசேரி, சங்கராபுரம், கோடாங்கிபட்டி, பொட்டிபுரம் ஆகிய பகுதிகள் பாசன வசதி பெரும் வகையில் முல்லைப் பெரியாற்றில் பதினெட்டாம் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பாசனத்திற்காக பதினெட்டாம் கால்வாயில் இருந்து தண்ணீரை திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து இன்று பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று […]

Categories
மாநில செய்திகள்

விநாடிக்கு 9,237 கன அடி: இடுக்கி அணைக்கு போகும் உபரிநீர் அதிகரிப்பு….!!!!

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,451 கனஅடியாக இருந்ததால், இடுக்கி அணைக்கு போகும் உபரிநீரானது விநாடிக்கு 9,237 கன அடியாகவும் சென்றது. முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க் கிழமை நிலவரப்படி அணையின் நீர் மட்டம்,139.55 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), அணைக்குள் நீர் இருப்பு 7,012 மில்லியன் கன அடியாகவும் இருக்கிறது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 10,451 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு திறக்கப்படும் நீரின்அளவு வினாடிக்கு 2,144 கன அடியாகவும் இருந்தது. இடுக்கி […]

Categories
மாநில செய்திகள்

முல்லை பெரியாறு அணை விவகாரம்….. கேரள அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என , முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதி இருந்தார். இதற்குப் பதில் அளித்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு பதில் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது ; “முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து….. வினாடிக்கு 2,551 கனஅடி நீர் வெளியேற்றம்….. வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடி உயர்ந்ததை தொடர்ந்து வினாடிக்கு 2,551 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. கேரளாவில் மிகப்பெரிய அணையாக பார்க்கப்படும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து வினாடிக்கு 2,551 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகின்றது. இடுக்கி அணைக்கு வெளியேறும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை… முல்லைப் பெரியாறு விவகாரம்…. அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்…!!!!!!

தமிழக சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று காலை கூடியது. இன்றைய கேள்வி நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் உரையாற்றினார். இந்த தீர்மானம் குறித்து ஓபிஎஸ் பேசியதாவது, பேபி அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் ஏற்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர். அணையின் முழு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது…! மத்திய அரசு மீண்டும் திட்டவட்டம்…!!!

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி எம்பிக்கள் முல்லைப் பெரியாறு அணை நீரியல், புவி அதிர்வு, கட்டுமான அடிப்படையில் பலமாக உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் விஸ்வேஸ்வரர் துடு முல்லைப் பெரியாறு அணை நீரியல், புவி அதிர்வு, கட்டுமானம் என்று அனைத்திலும் அணை பலமாக உள்ளது என்று விளக்கமளித்தார். மேலும் இதுதொடர்பாக மத்திய குழு முல்லைப் பெரியாறு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முல்லை பெரியாறு அணை தொடர்பாக….  உச்சநீதிமன்றத்தில் புதிய மனு…. தமிழக அரசு…!!!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. கடந்த சில நாட்களாகவே முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் வந்தவண்ணம் உள்ளது. ஒரு பக்கம் முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் தேக்கம் 142 அடியிலிருந்து குறைத்து 136 அடி உள்ளபோதே தண்ணீர் திறந்து விடப்பட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் பலரும் ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மற்றொரு பக்கம் பேபி அணையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பெற்றுத்தந்த உரிமையை தாரைவார்த்து விட்டு…  சப்பை கட்டுகட்டாதீங்க… ஓபிஎஸ் விமர்சனம்..!!!

அதிமுக பெற்றுத்தந்த உரிமையை திமுக தாரைவார்த்துக் கொடுத்து விட்டது என்று ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் கேட்காமல் தண்ணீரை திறந்து விட்டதற்கு எதிராக கம்பம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை. ராமநாதபுரம் ஆகிய இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். தேனி மாவட்டம் கம்பத்தில் வாஉசி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அங்கு அவர் பேசியதாவது: “முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் கேரளா அரசு தண்ணீர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதையும் நம்ம முதல்வரு வேடிக்கைதான் பார்ப்பாரா…? பொங்கி எழுந்த டிடிவி தினகரன்…!!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப்பெரியாறு பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு திடீரென ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர்குழுவின் அறிவுறுத்தல் படி செய்யவேண்டிய இப்பணியை கேரளா தடுத்து நிறுத்துவது சரியானதல்ல. மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வாங்கியதையே சாதனை போல அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் […]

Categories
அரசியல்

‘அவங்கள கேள்வி கேட்கத் துணிவில்ல’… எங்கள சொல்ல வந்துட்டாரு… துரைமுருகனை மடக்கிய செல்லூர் ராஜு…!!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கேள்வி கேட்க நீர்வளத் துறை அமைச்சருக்கு துணிவு இல்லை என்று செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் 132 அடி நீர்மட்டம் இருக்கும்பொழுதே தண்ணீரை திறந்து விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீர்திறப்பு உரிமை தமிழகத்தில் உள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

முல்லை பெரியாறு அணை விவகாரம்…. 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்…. அதிமுக அறிவிப்பு….!!

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிக்க வேண்டுமென்று 5 மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 9ஆம் தேதியன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டனர். அதில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேலும் 142 அடி வரை நீர் தேக்க படாமல் கேரளாவின் நிர்பந்தத்தின் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING:  முல்லை பெரியாறு அணை….  உச்சநீதிமன்றம் கேள்வி…!!!

முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவு அபாய கட்டத்தில் இல்லாத போது இந்த விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரவி வருவது பெரும் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாகவும், இது போன்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்  அணை தீவிர கண்காணிப்பில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை… முல்லை பெரியாற்றில் வெள்ளபெருக்கு… பொதுமக்களுக்கு தடை…!!

தொடர் மழையால் முல்லை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள முல்லை பெரியாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தமபாளையம் உதவி சூப்பிரண்டு அதிகரி ஸ்ரேயா குப்தா தலைமையில்  கூடலூர் இன்ஸ்பெக்டர் முத்துமணி மற்றும் காவல்துறையினர் முல்லை பெரியாறு, குருவனற்று ஆற்றுபாலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து ஆற்றில் […]

Categories
மாநில செய்திகள்

முல்லை பெரியாறு அணையின் வயது 126 – விவசாயிகள் மரியாதை

முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டு 125 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி லோயர் கேம்பில் உள்ள பென்னிக் குயிக்கின் சிலைக்கு விவசாயிகள் மரியாதை செலுத்தினர். தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாகவும் நேரடியாக சுமார் இரண்டரை இலட்சம் ஏக்கர் நிலத்திற்க்கும், மறைமுகமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கருக்கும் பாசன வசதிகள் அளிக்கும் முல்லை பெரியாறு அணை கடந்த 1895 ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி முழுமையான பயன்பாட்டுக்கு வந்தது. இன்றுடன் முல்லை பெரியாறு அணை […]

Categories

Tech |