புதுச்சேரியில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு நாராயணசாமி தெரிவித்துள்ளர். புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் தலைமைச் செயலக கருத்தரங்க அறையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பெருகி வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திரு. நாராயணசாமி வெளியிட்டுள்ள காணொளி செய்தியில், இன்னும் 6 […]
Tag: முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் முழு ஊரடங்கின் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜிஎஸ்டி சாலை வாகன நடமாட்டம் இன்றி காணப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல இடங்களில் பால், மருந்து மற்றும் மருத்துவ சேவைகளை […]
புதுச்சேரியில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு பல பகுதிகளில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மக்கள் அரசின் உத்தரவை கடைபிடிக்க மறுக்கிறீர்கள். அலட்சியம் காட்டுகிறீர்கள். இதனால் விரைவில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். முன்பை காட்டிலும் அலட்சியத்தால், தொடர்ந்து […]
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் நாளை முதல் 11ம் தேதி வரை முழு ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜூலை 31ம் தேதி வரை பல மாநிலங்களில் 6 கட்ட நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த பட்சத்தில், ஆகஸ்ட் 1முதல் கொரோனாவின் நிலையை பொருத்து ஊரடங்கு குறித்து முடிவு எடுத்துக் கொள்ளுமாறு அந்தந்த மாநில அரசுக்கு அதிகாரம் […]
நாளை ஊரடங்கு என்பதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சமூக விலகலை மறந்து வியாபாரிகள் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மீன்களை வாங்க குவிந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் , முகக்கவசம்அணியாமலும் வியாபாரிகள் மீன் வாங்க வந்தத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் 150க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். பொது மக்கள் வருவதை […]
சட்டவிரோதமாக விற்கப்படும் மதுவை குடித்துவிட்டு குடிமகன் ஒருவர் போதையில் தள்ளாடுகின்ற வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஞாயிறு தோறும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் நேற்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் விஐபிகள் செல்லும் ஐந்தாவது நுழைவு வாயில் அருகே ஒரு நபர் நடக்கக்கூட முடியாத அளவிற்கு மது அருந்திவிட்டு கீழே […]
கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சில தளர்வுகளுடன் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இன்றும் […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என வருவாய் ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் சமயத்தில், பல தளர்வுகள் ஏற்படுத்தபட்டாலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை 1 நாள் மட்டும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காகவே முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் […]
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜூலை 12 முதல் 25ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் மக்கள் தளர்வுகளுடன் நடமாட தொடங்கியுள்ளனர். இருப்பினும் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தமிழகத்தின் […]
தேனியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் எதிரொலியால் தேனி மாவட்டத்தில் இன்று மாலை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும், இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள […]
தமிழகத்தில் மதுரை, வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 59,377 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 32,754 ஆக அதிகரித்துள்ள நிலையில் 757ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னைக்கு […]
சென்னையில் திருமணம், மருத்துவம் தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது, மறுபதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு மிக கடுமையாக பின்பற்றப்படும் என அறிவித்துள்ளார். மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 2 கி.மீ தூரத்துக்குள் உள்ள கடைகளுக்கு மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் (ஜூன் 19ம் தேதி) முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் முழு ஊரடங்கின்போது கடைபிடிக்க வேண்டிய […]
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழுஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதால் ரேஷன்கடைகள் செயல்பாடாது என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் ஐந்தாவது கட்ட நிலையை ஊரடங்கு நெருங்கும் போதே அதில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்படவே பாதிப்பு இந்தியாவின் பல பகுதிகளிலும் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்து வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா […]
முழு ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து வரும் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விதித்த கட்டுப்பாடுகள், உணவு விநியோகம் செய்பவர்கள் மற்றும் வங்கிக்குச் செல்லும் நபர்கள் முறையான அடையாள அட்டை வைத்திருந்தால் அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டை போலியானது என கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் […]
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 22ம் தேதி முதல் காலை 8 முதல் மாலை 6 மணி வரை ரூ.1000 விநியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, […]
முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகளில் ஜூன் 22 முதல் 26 வரை ரேஷன் கடைகள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று ரூ.1,000 நிவாரணம் இந்த தேதிகளில் வழங்கப்படும் என்பதால், 5 நாட்களுக்கு ரேஷன் கடைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை வாங்காதவர்கள் ஜூன் 27க்கு பிறகு வாங்கிக் கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட 4 […]
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலாகிறது. முழு ஊரடங்கு அமலாகும் போது, கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். நோய் தடுப்பு பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்கும் வகையில், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும் மக்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய தேவைக்காக வரும் மக்கள் மாஸ்க் அணிவதை மாநகராட்சி அதிகாரி, மாவட்ட நிர்வாகம் உறுதி […]
டெல்லியில் வரும் 18ம் தேதி முதல் 4 வாரங்களுக்கு கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற தகவலுக்கு அம்மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலுக்கு டெல்லி அரசு தற்போது மறுத்து தெரிவித்து உள்ளது. கடும் ஊரடங்கு பிறப்பிப்பது தொடர்பான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் பல […]
முழு ஊரடங்கு குறித்து திங்கள் கிழமை காலை முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது 5வது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும், இதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. எனவே தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தினால் மிகச் சிறப்பாக இருக்கும் என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால் தமிழக அரசோ இப்போதைக்கு அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை என திட்டவட்டமாக […]
முழு ஊரடங்கை காரணம் காட்டி சென்னையை விட்டு தப்பி செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. பிழைப்பிற்காக சென்னை வந்த பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் மாட்டிக் கொண்டனர். சிலர் சென்னையில் கொரோனா அதிகம் பரவி வருவதால் தென்மாவட்டங்களில் இருக்கக்கூடிய தனது உறவினர்கள் வீட்டிற்கு செல்லலாம் என தமிழகத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் நாள்தோறும் அதிகாரிகளுக்கு தெரியாமல் பயணிப்பவர்கள் […]
நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர, நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை தனிநபர்களின் நடமாட்டம் கண்டிப்பாக தடைசெய்யப்படும் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார். அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை […]
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38,716 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 27,398ஆக உயர்ந்துள்ளது. வழக்கு விவரம் : இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழங்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் வினீத் […]
சென்னையில் முழுஊராடங்கு என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என தமிழக முதல்வர் எச்சரித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது 5வது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் உள்ளது. இருப்பினும் இந்த ஐந்தாவது கட்டத்தில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் சுதந்திரமாக வெளியே நடமாட தொடங்கியுள்ளன. ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்ட பின் கொரோனா பாதிப்பு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட […]
சென்னையில் கண்டிப்புடன் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையில் முழுமையான ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்த கோரிக்கை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தமிழரசு என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, “இந்தியாவில் கடந்த 8ஆம் தேதி நிலவரப்படி 1,24,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1,24,429 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 7,200 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]
கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜூன் 9ம் தேதி முதல் 2 வார காலத்திற்கு மொத்த பூட்டுதலை அதாவது முழு ஊரடங்கை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சோரம்தங்கா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்ததை தொடர்ந்து இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று 8 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது கண்டதறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 21 வயது […]
கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கிடையாது என ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி வந்தன. […]
தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு இல்லை என அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்ட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி வந்தன. கொரோனா […]
கடலூர், திருவாரூர், அரியலூரை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மருந்தகங்கள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் […]
கொரோனவை கட்டுப்படுத்த நாளை ஒரு நாள் மட்டும் கடலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கூறியுள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும் வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக […]
சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கை கடந்த 24ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு […]
சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை […]
அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் முழுவதும் […]
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த நாளை நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதாக ஆட்சியர் பிரவீன் அறிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களை டோர் டெலிவரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், 1077 மற்றும் 04365-251992 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பால், மருந்து பொருட்கள் வீட்டிற்கே வரும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் […]
திருவாரூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை, கோவை, […]
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும். அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம் போல செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்தது. 26ம் தேதி முதல் 29 வரை சென்னையில் மளிகை, இறைச்சி, பேக்கரி கடைகள் […]
முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளில் மக்களை கூட்டம் அலைமோதுகிறது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, சேலம், திருப்பூரில் […]
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் இன்று மட்டும் பிற்பகல் 3 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி சென்னை, கோவை, மதுரையில் நாளை காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு […]
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 26ம் தேதி காலை 6 மணி முதல் 29ம் தேதி இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு […]
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு என்றும் கூறியுள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் எதெற்கெல்லாம் அனுமதி : மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் […]
கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு என்றும் கூறியுள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் […]
சேலத்தில் இன்று மதியம் 1 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் வரும் சனி, ஞாயிறு நாட்களில் கடைகளை திறக்க அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல அத்தியாவசிய பொருட்கள் விற்கும் மளிகை கடைகள், சந்தைகள் என அனைத்தையும் முழுமையாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், நேற்று […]