திராவிட கழகத்தின் தலைவர் கீ. வீரமணியின் 90 வது பிறந்தநாள் விழாவானது சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கி. வீரமணியை பாராட்டி பேசினார்கள். இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நூற்றாண்டை கடந்தும் வீரமணிக்கு பிறந்தநாள் விழாவை எழுச்சியோடு கொண்டாடுவோம். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நேரத்தில் நான் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறேன். அதுதான் என்னுடைய முதல் சிறை […]
Tag: மு.க. ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றார். இதுகுறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதுகு வலியை பரிசோதனை செய்வதற்காக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது போரூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் பரிசோதனை முடிந்து முதல்வர் உடனடியாக வீடு திரும்பினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 17ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் சற்று முன்னதாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சரியாக இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. வரக்கூடிய 17ஆம் தேதி குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பது தொடங்கப்படவுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில் […]
அக்டோபர் இரண்டாம் தேதியான இன்று மகாத்மா காந்தியடிகளின் 154 ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து சுட்டுறையில் பதிவிட்டுள்ள மு க ஸ்டாலின் பேதங்களை கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்தவர் அண்ணல் காந்தி. அவரது பிறந்தநாளில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் இந்த […]
தேசிய தன்னார்வ ரத்ததான நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ரத்ததானம் மூலமாக மதிக்கத்தக்க மனித உயிர்களை காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதல் திங்கள் கிழமை தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்திடும் விதமாக விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது […]
தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 கோரிக்கைகளை தெரிவிக்க எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்ப வேண்டும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் கடிதம் : திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி 07.05.2022 அன்று உங்கள் […]
75 ஆவது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பாக நடத்தப்பட்ட சுதந்திர தின விழாவில் மு க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பென்ஷன் உயர்வு உயர்வு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி விடுதலை போராட்ட தியாகிகளுக்காண பென்ஷன் தொகையை 18,000 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளார். மேலும் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கான குடும்ப பென்ஷன் தொகை 9000 இலிருந்து 10009 ரூபாயாக உயர்த்தப்பட்டதாக அறிவித்துள்ளார். இதுபோக அரசு ஊழியர்கள் மற்றும் […]
ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தின் அருகே விளம்பரப் பலகையின் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் மற்றும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். நேற்றைய தினம் (7-8-2022) பெருங்களத்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் – ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாக செல்லும்போது சாலையின் அருகில் இருந்த விளம்பரப் பலகையில் மோதி, அப்பலகை […]
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது . சேவைகளை காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பார்வையிட்டார். இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் படித்த அனைவருக்கும் வேலைகள். அவர்களது படிப்புக்கு ஏற்ற வேலைகள். நிறுவங்களின் தேவைக்கு ஏற்ற பணியாளர்கள் என்ற சூழலை தமிழகத்தில் உருவாக்குவோம். புத்தொழில் […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கியுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போஸ்பாயிண்ட் ரிசர்ட் என்கின்ற ஐந்து நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற்று வருகிறது. இதற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் […]
மாமல்லபுரத்தில் 45 அடி உயர சிற்பக்கலை தூணை முதல்வர் மு க ஸ்டாலின் சற்று நேரத்திற்கு முன் திறந்து வைத்தார். மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயிலில் கலை நயத்துடன் 45 அடி உயரத்திற்கு சிற்பக்கலை தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். பூம்புகார் என அழைக்கப்படும் தமிழகத்தின் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கலகம் தமிழ் கைவினை கலைஞர்களின் உழைப்பினால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இது செயல்படுத்தப்பட்டு […]
முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று திருவண்ணாமலைக்கு சென்றார். அப்போது செல்லும் வழியில் செஞ்சியில் முருகன் என்பவருடைய மகன் வாசன் மற்றும் மகள் பூஜா ஆகியோர் முதல்வரை சந்தித்து தங்களுக்கு கடந்த ஏழு வருடங்களாக பட்டியலின வகுப்பு சான்றிதழ் வழங்கப்படாமல் இருக்கிறது என்று புகார் மனு அளித்தனர். மேலும் தங்களுக்கு வகுப்பு சான்றிதழ் வழங்கிட ஆவண செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதனை கருணை உள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர் […]
நாமக்கல் மாவட்டம் பொம்மகுட்டையில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மிக மிக சிறு வயதில் திமுகவிற்காக என்னை நானே ஒப்படைத்துக் கொண்டேன் அப்படி அரசியலில் நுழைந்த எனக்கு முதலில் கிடைத்தது பதவிகள் அல்ல, பாராட்டுக்கள் அல்ல, சிறைச்சாலைகள், சித்தரவதைகள்தான் எனக்கு முதலில் கிடைத்தது. மக்களுக்கு நல்லது செய்வதால் என்னை மக்கள் வரவேற்கின்றனர், பாராட்டுகின்றனர், மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்குவது தான் மிகவும் சிரமமானது. தமிழகத்தில் பல திட்டங்கள் […]
மக்களுக்கு நன்மை செய்வதற்கே எனக்கு நேரம் போதவில்லை. இதனால் வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரம் கிடையாது என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் 581 கோடி மதிப்பிலான 99 புதிய பணிகளுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு க ஸ்டாலின் ” 47 கோடியில் கரூர் திருமா நிலையூர் பகுதியில் விரைவில் பொது பேருந்து நிலையம் அமைக்கப்படும். கரூர் மாவட்டத்தில் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாள் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழகத்தில் பல்வேறு நல திட்டங்களும், பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தந்த துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் அவர்களுடைய பணியில் சரியாக ஈடுபடுமாறும் அறிவுறுத்தி வருகிறார். அவ்வாறு தங்களுடைய பணியை சரியாக செய்யாதவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஒரு சில இடங்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாகவே ஆய்வு செய்தும் வருகிறார். அந்த வகையில் ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் நல மையத்தில் […]
சாதி, மதம், நிறம், பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை என உலக ரத்த தான தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், ‘விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது பிறர் உயிர் காக்க குருதி கொடையளிப்போரின் நல்லுள்ளம் போற்றுவோம்! சாதி – மதம் – நிறம் – பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை! குருதிக் கொடையளித்து மனித உயிர் காப்போம்! மானுடம் தழைக்கச் […]
தொண்டர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் கூறியதாவது:- • முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-ஆவது பிறந்தநாளை, ஜூன் 3 முதல் தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி, கழக ஆட்சியின் சாதனைகளையும், கழகத்தின் வரலாற்றையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். • […]
தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்காக ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில் மு.க ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மே 7-ஆம் தேதி அன்று சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் விதமாக குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டமொன்று அமல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது என்று […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு பல்வேறு விவகாரங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் . அதனால் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வேண்டும். நீதிபதிகளை […]
கவிஞர் வைரமுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,ஓராண்டை நிறைவு செய்துள்ளதையடுத்து, வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதல்வராக திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. எனவே இதை முன்னிட்டு, திமுக சார்பில் பல நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து முதல்வராக பொறுப்பேற்று ஓர் ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, கோபாலாபுரத்தில் உள்ள தம் இல்லத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், தனது தாயார் தயாளு அம்மாவிடம் ஆசி பெற்றுள்ளார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக தொண்டர்கள் மற்றும் […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், பெரும் தலைவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனை பயோபிக் படங்கள் என்று அழைப்பார்கள். தமிழில் இதுவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து குயின் என்ற வெப்சீரிஸ், தலைவி என்ற படமும் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போதைய தமிழக முதல்வர் […]
தமிழக முதல்வர் மலையாளத்தில் பேசியதை கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடானது ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை கண்ணூரில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழைப்பினை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான […]
சென்னையில் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் ரூபாய் 8.74 கோடி செலவில் 2 புதிய கட்டிடங்களை முதல்வர் முக ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் முக்கிய பயிற்சி மையமாக விளங்குகிறது. மேலும் புத்தக பயிற்சிகள் அளிப்பது அரசு ஊழியர்களின் பணித் திறனை மேம்படுத்துவது போன்றவை கல்லூரியின் முக்கிய நோக்கமாகும். இதற்கிடையில் கடந்த ஆண்டு சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூயில் […]
சென்னையில் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். ரூ.874 கோடி மதிப்பீட்டில் சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் ஆறு குளிர்சாதன வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் 15 குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகளை முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டம், 1975இன் கீழ் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி நிறுவப்பட்டது. மத்திய […]
நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான பி வி சிந்து அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் ஆட்டத்தை வென்றார். மேலும் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது, தனது ஆதிக்கம் மிகுந்த அபார ஆட்டத்தால் சுவிஸ் ஓப்பன் 300 இறகுப் பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி.சிந்து மீண்டும் ஒருமுறை பெருமை கொள்ளச் செய்துள்ளார். இது இப்பருவத்தில் ஒற்றையர் பிரிவில் அவர் கைப்பற்றியுள்ள இரண்டாவது தொடராகும். அவர் […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள நிலையில் இன்று மாலை அபுதாபி செல்கின்றார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக சென்ற 24-ஆம் தேதி துபாய் சென்றார். இந்நிலையில் துபாயில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அபுதாபி செல்ல இருக்கின்றார். வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியம்” அமைப்பதற்கு தேவையான நிதி வழங்கி உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய சமூகம் மற்றும் கலாச்சாரம் மற்றும் […]
துபாய்க்கு சுற்றுப்பயணம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டூடியோவிற்கு சென்று பார்வையிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணமாக துபாய் சென்றுள்ளார். நேற்று துபாயில் நடந்த உலக கண்காட்சியில் இந்திய அரங்கில் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டு அரங்கினை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட தமிழ்நாட்டு பாரம்பரிய நிகழ்ச்சிகளை பார்த்த பிறகு அங்கு உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்குப் பின் முதல்வர் துபாயில் உள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் ஸ்டுடியோவிற்கு சென்று பார்வையிட்டார். இது குறித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் […]
சட்டசபையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோரின் பதில் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, இந்த அரசு மிகச் சிறப்பாக பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நிதித்துறை தான். இந்த நிதித் துறையை தனக்கு தெரிந்த பல திறமைகளுடன் லாவகமாக கையாண்டு வருகிறார் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அவரை நான் மனதார பாராட்டுகிறேன். அதே போல் […]
2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியது. அந்த வகையில்,இந்நிலையில் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பட்ஜெட் தொடர்பாக […]
மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று (04.03.2022) நடைபெற்றது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான இடங்களிலும் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக ஆகிய காட்சிகளுக்கான பேரூராட்சி, நகராட்சி பதவிகள் திமுகவினரால் பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சி […]
இன்று பிறந்தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மணல் சிற்பத்தின் மூலம் நெல்லூரை சேர்ந்த ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று 69-ஆவது பிறந்தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த சனத்குமார் என்ற மணல் சிற்பக் கலைஞர் மணல் சிற்பத்தின் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா 3-வது அலை வேகமாக பரவியது. அதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு கடந்த ஜனவரி மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்து வந்ததன் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி மாத இறுதியில் இரவு நேர […]
உங்களில் ஒருவன் நூலைப் பிறந்தநாள் பரிசாக நாளை நான் உங்களுக்குத் தருகிறேன்’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் – துணைதலைவர் தேர்தலில் நீங்கள் கட்டுக்கோப்புடன் செயல்படுவதே நான் உங்களிடம் எதிர்பார்க்கும் பிறந்தநாள் பரிசு! உங்களில் ஒருவன் நூலைப் பிறந்தநாள் பரிசாக நாளை நான் உங்களுக்குத் தருகிறேன். உங்கள் வாழ்த்துகளே என் உழைப்புக்கு ஊக்கம்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுடன் உரையாடினார். உக்ரைன் மீது ரஷ்யா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. இதனால் உக்ரைன் உதவி கேட்டும் உலக நாடுகள் ரஷ்யாவுடன் போரிட முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைனுக்கு கல்வி மற்றும் வேலைக்காக சென்ற இந்தியாவை சேர்ந்த பிற மாநிலத்தவரும் மற்றும் […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்த பிறகு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்சியல் தமிழில் எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு ஆவணங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பெயர் எழுதுபவர்கள் இனிசியலை தமிழில் எழுத வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இனி தமிழகத்தில் அரசு ஆவணங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பெயர் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பணமாலை அணிவிக்க வந்த கவுன்சிலரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை 133-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் ஏழுமலை என்பவர் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதற்காக 20 ரூபாய் நோட்டுகள் தொடுக்கப்பட்ட 40,000 ரூபாய் மதிப்புள்ள பணமாலையுடன் சென்னை அறிவாலயத்திற்கு வந்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், உள்ளாட்சி அமைப்புகளில் 70%-க்கும் மேலான இடங்களில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. மேலும் 21 மாநகராட்சிகளில் திமுக அனைத்தையும் கைப்பற்றியுள்ளது. தமிழகம் முழுவதும் திமுகவின் இந்த வெற்றியினை அந்த கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும், “9 […]
சென்னை மெரினாவில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை கண்டுகளித்த மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம் மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி, உங்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்து, மாணவர்களையும் ஈர்த்துள்ளது. மெரினாவில் ஊர்திகளைக் காண வந்த மாணவச் செல்வங்களுடன் பெருமகிழ்வுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடு வெல்லும்!#SelfieWithStudents pic.twitter.com/X3KsBk9wJ1 — M.K.Stalin (@mkstalin) February 21, 2022 மேலும் மு.க.ஸ்டாலின் […]
நேற்று (பிப்.19) தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்தனர். நேற்று காலை 7 மணியளவில் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இன்று (பிப்.20) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை அமைப்பு செயலாளர் இல்ல திருமண விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை […]
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திருமண விழாவில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், “முதல்வராக சிறப்பாக செயல்படும் மு.க.ஸ்டாலின் பிரதமராக வந்தால் நாடே செழிக்கும். ஸ்டாலினை போன்று பிரதமர் வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். மேலும் மு.க.ஸ்டாலினை போன்ற முதல்வரை நாங்கள் பார்த்ததில்லை என டெல்லியில் பேசுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் கூறியதாவது, சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தது அந்த வகையில் நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்பட்டது. ஆவின் பால் விலை குறைக்கப்பட்டது. குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியது மட்டும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து அமைச்சர்கள் தொடங்கி முதல்வர் வரை அனைவரும் இந்த […]
“உங்களில் ஒருவன்” எனும் தனது சுயசரிதை நூலை சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 45-வது சென்னை புத்தகக் காட்சி 2022-ஐ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் எழுதிய “உங்களில் ஒருவன்” நூலின் முதல் பாகம் இந்த மாத இறுதியில் வெளியாகும். எனது இளமைக்காலம் தொடங்கி 23 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தின் சுவடுகளை அந்த நூலில் […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 45-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மார்ச் 6-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. சுமார் 800 அரங்குகளில் 1 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.
யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலக தலைமை நிர்வாகியும், மூத்த புகைப்பட கலைஞருமான டி.குமார் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் பெற்ற யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலகத் தலைமை நிர்வாகி டி.குமார் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொண்டு பத்திரிகை துறை நண்பர்களுக்கும், டி.குமார் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என […]
தமிழகம் முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பெண்களுக்கு ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று சென்னையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “ஆளுநர் உரையில் 66 அறிவிப்புகள் […]
மத்திய அரசாக உள்ள பாஜக தான் ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் போன்ற மாநிலத்தில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் இந்த மாநிலங்கள் அனைத்தும் மத்திய அரசையும் ஆளுநரையும் முழுமூச்சாக எதிர்த்து வருகின்றன. அந்தவகையில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜெகதீஸ் தங்கருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. […]
மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும், அம்மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆளுநர் ஜக்தீப் தன்கர் சட்டமன்றத்தை முடக்கினார். மேற்கு வங்க சட்டப்பேரவையை நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் இந்த செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் மேற்கு வங்க ஆளுநரின் செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது. மாநில தலைமை பொறுப்பில் இருப்பவர் […]
மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும், அம்மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆளுநர் ஜக்தீப் தன்கர் சட்டமன்றத்தை முடக்கியுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவையை நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் இந்த செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு வங்க ஆளுநரின் செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது. மாநில தலைமை பொறுப்பில் இருப்பவர் […]
இன்று சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,”வரலாற்றில் இன்று பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். இன்று வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்!#NEET விலக்கு கோரும் சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் உடனடியாக இதனைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிடுவார் என நம்புகிறேன். pic.twitter.com/mjlxpk1ILb — M.K.Stalin (@mkstalin) February 8, 2022 நீட் விலக்கு […]