தஞ்சாவூரிலிருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்று உள்ளார். இந்நிலையில் மூதாட்டி மறுபடியும் அதே பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது நடத்துனர் அந்த மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது வீடியோவில் நடந்துனர், காசு ஓசி என்றால் போயிட்டு போயிட்டு வருவியா என அந்த மூதாட்டியிடம் கேட்கிறார். அதற்கு மூதாட்டி “காசு ஓசி என […]
Tag: மூதாட்டி
சாமியை தரிசிக்க வந்த ஒரு மூதாட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த கோவிலுக்கு பெண்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த தேவ் என்ற 99 வயது மூதாட்டி மாலையிட்டு ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இவர் பிற பக்தர்கள், போலீசார், நம்பூதிரிகள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதுகுறித்து அவர்கள் […]
மராட்டிய மாநிலத்தின் மும்பை நகரில் டோபிகாட் பகுதியில் 65 வயதுடைய பிச்சை எடுக்கும் மூதாட்டி ஒருவர் அசதியில் உறங்கிகொண்டிருந்தார். அப்போது அவரருகே பிச்சை எடுக்க பயன்படுத்தும் பழைய பை ஒன்றையும் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு நபர் இதை கவனித்துள்ளார். அந்த பையில் நிறைய பணமிருக்கும் என்ற நினைப்பில், யாருக்கும் தெரியாமல் மூதாட்டியிடம் இருந்த பையை அந்நபர் திருட முயன்றுள்ளார். அந்த நேரம் மூதாட்டி உறக்கத்தில் இருந்து எழுந்தார். இதையடுத்து அவர் தன் பையை திருடவிடாமல் […]
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர்நகர் பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் சந்திரா(72). இவரது கணவர் சுப்பிரமணி சென்ற சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார். இதில் சந்திரா பஜனை கோயில் தெருவிலுள்ள தன் மகன் வடிவேலுவுடன் வசித்து வருகிறார். வயதான சந்திரா அடிக்கடி கோயிலுக்கு செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக சந்திரா சிங்கப் பெருமாள் அருகேயுள்ள கோயிலுக்கு அடிக்கடி சென்றுவருவார். அதன்படி வழக்கம்போல் சந்திரா சிங்கப்பெருமாள் கோயிலுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். […]
நாள் முழுதும் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும், பாட்டாளி வர்க்கத்தினருக்கும் அவர்களது களைப்பை போக்கி புத்துணர்ச்சி தரக்கூடிய ஒரு பானமாக தேநீர் இருக்கிறது. உலகம் முழுதும் தண்ணீருக்கு அடுத்தப்படியாக அதிகளவு அருந்தக்கூடிய பானமாக இந்த தேநீர் உள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியாக தமிழகத்தின் பல இடங்களில் தேநீர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனிமேல் பாக்கெட்டில் 10 ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு டீ கடை பக்கம் கூட செல்ல முடியாத சூழல் உருவாகி […]
சுசீந்திரம் அருகே உள்ள அக்கறை குத்துக்கல் பகுதியில் ஆனந்தம்(87) என்பவர் வசித்து வருகின்றார். இந்த நிலையில் ஆனந்தம் வீட்டில் தனியாக இருந்துள்ள போது ஆபாச வார்த்தைகளால் தனக்குத்தானே பேசியதாக தெரிகின்றது. அதே சமயம் அந்த பகுதியை சேர்ந்த அசோக்நாத் என்ற தொழிலாளி என்பவர் நடந்து சென்றுள்ளார். இந்த நிலையில் தன்னைத்தான் அவர் திட்டுகிறார் என நினைத்த அசோக்நாத் வீடு புகுந்து ஆனந்தத்தை தாக்கி செங்களால் தலையில் அடித்ததாக கூறப்படுகின்றது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்தம் நாகர்கோவில் அருகே […]
உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 94 வயதான பகவானி தேவி தாகர் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பின்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்துவருகிறது. இந்தியாவை சேர்ந்த 94 வயதான பகவானி தேவி இதில் தங்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தை 24.74 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். மேலும் குண்டு எரிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பல தரப்பின தங்களது பாராட்டுகளை […]
இலங்கையில் அரசுக்கு எதிராக போராடி வரும் மக்கள் நேற்று அதிபர் மாளிகையை கைப்பற்றினர். இதை எடுத்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி சென்றார்.இந்நிலையில் அதிபர் மாளிகையில் நுழைந்த மக்களில் வயதான ஒரு மூதாட்டி அதிபரின் இருக்கையில் அமர்ந்து சிரிக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அதிபரின் சிம்மாசனத்தில் அமர்ந்தும், சொகுசான படுக்கை அறையில் இருந்த கட்டிலிலும் அமர்ந்தும் தங்கள் வெற்றியைக் கொண்டாடினர். போராட்டக்காரர்கள் குழுவில் இருந்த பெண்மணி ஒருவர், அதிபர் மாளிகையில் வீற்றிருந்த […]
காரில் சென்ற மூதாட்டி வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடுமையான மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு காரில் சென்று கொண்டிருந்த ஒரு 72 வயது மூதாட்டி திடீரென வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். இந்த நாள் பதில் போன மூதாட்டி உடனடியாக அவசர சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டார். அந்த தகவலின் படி சமூக இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் காருக்குள் இருந்த மூதாட்டியை […]
ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த மூதாட்டியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது . இந்த ரயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று ரயில் நிலையத்தில் அமைந்துள்ள தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த அந்த மூதாட்டியின் சடலத்தை […]
ராகுல்காந்தி தன் மக்களவைத் தொகுதிஆன வய நாடுக்கு இன்று வருகை புரிந்தார். இங்கு வந்திருக்கக்கூடிய ராகுல்காந்தி, ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர்பிரிவான இந்திய மாணவர்கள் கூட்டமைப்பினரால் சேதப்படுத்தப்பட்ட தன்னுடைய அலுவலகத்தைப் பார்வையிட்டார். அண்மையில் ஆளும் சிபிஐ (எம்) இன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு (அல்லது) எஸ்எஃப்ஐயின் செயல்பாட்டாளர்களால் சேதப்படுத்தப்பட்ட தன் அலுவலகத்தையும் பார்வையிட்டார். இந்நிலையில் ராகுல்காந்தியை காண மூதாட்டி ஒருவர் நாள்முழுக்க காத்திருந்ததோடு, அவரை பார்த்ததும் அவருக்கு கை குலுக்கி மகிழ்ந்தார். அத்துடன் ராகுல்காந்தியை […]
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 65 வயது மூதாட்டி ஒருவர் காட்டுப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வேலுச்சாமி என்ற நபர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். மூதாட்டி கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் திரண்டதைப்பார்த்து வேலுச்சாமி தப்பிக்க முயற்சி செய்தார். இதனை தொடர்ந்து வேலுச்சாமியை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் இது […]
உக்ரைன் நாட்டை சேர்ந்த 82 வயது மூதாட்டியின் குடியிருப்பு ரஷ்யா நடத்திய தாக்குதலில் அழிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 4-ஆவது மாதமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தியதில் உக்ரைன் நாட்டின் பல குடியிருப்புகள் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு வசித்து வரும் மரியா மாயாஷ்லபக் என்ற 82 வயதுடைய மூதாட்டியின் குடியிருப்பு வெடிகுண்டு தாக்குதலில் தகர்க்கப்பட்டது. ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல், தன் வீட்டின் சமையலறையை தாக்கியதாக வருத்தத்துடன் […]
மூன்று தினங்களாக அனாதையாக சுற்றித்திரிந்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டன. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லுகெட்டி என்ற இடத்தில் கடந்த மூன்று தினங்களாக ஒரு மூதாட்டி அனாதையாக சுற்றித்திரிந்து உள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் பமலா, சுகாதார ஆய்வாளர் மேஷாக், கவுன்சிலர்கள் அபிலாஷ், ஸ்டாலின், பி.கே.சிந்துகுமார், ராஜகோபால் ஆகியோர் அந்த மூதாட்டி சந்தித்து விசாரணை […]
சென்னையில் உள்ள நீலாங்கரை பகுதியில் செண்பகம் என்ற மூதாட்டி வசித்துவருகிறார். இவரின் மூத்த மகன் பாபு மற்றும் இளைய மகன் சுரேஷ் ஆவர். பாபுவிற்கு திருமணமாகி தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இளைய மகனுக்கு திருமணமாகி கெல்சி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து மூதாட்டி செண்பகம் தனது இளைய மகன் சுரேஷுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சுரேஷ் தனது மனைவி, பிள்ளைகளுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் […]
மிக பெரிய ஏரியை மூதாட்டி ஒருவர் குறைந்த நேரத்தில் கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்க நாட்டின் Maine என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் 71 வயதுடைய ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் இஸ்ரேலில் உள்ள 21கிலோ மீட்டர் தூரம் கொண்ட Sea of Galilee என்ற நன்னீர் ஏரியை 8 மணி 22 நிமிடங்களில் நீந்தி கடந்துள்ளார். மேலும் இந்த நன்னீர் ஏரியை மிக அதிக வயதுடைய மூதாட்டி கடந்து […]
திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடுவூர் அருகில் மேலநெம்மேலி கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (55) ஆவார். இந்த தம்பதியினரின் மகன்கள் காமராஜ், கனகராஜ் போன்றோர் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக தம்பதியினர் தன் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். சென்ற சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணவேணி திடீரென்று காணாமல் போய்விட்டார். இது குறித்து அவருடைய மகன் கனகராஜ் காவல் நிலையத்தில் கடந்த 20ஆம் தேதி புகார் கொடுத்தார். அந்த புகாரில் கிருஷ்ணவேணி […]
ரஷ்ய படையினரால் வன்கொடுமை செய்யப்பட்ட 83 வயது மூதாட்டி இதற்கு தன்னை கொன்றிருக்கலாம் என்று கதறியிருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்ய படை போர் தொடுக்க தொடங்கியது முதல் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். மேலும் அதிகமாக வன்கொடுமை சம்பவங்களும் நடக்கின்றன. ரஷ்ய படை, தங்கள் கண்ணில் படக்கூடிய உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுமிகள், பெண்கள் அனைவரையும் பாலியல் வன்கொடுமை செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறிதும் மனிதாபிமானமின்றி இரக்கமில்லாமல் 83 வயது மூதாட்டியை ரஷ்ய வீரர் பாலியல் வன்கொடுமை […]
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே அரசல் ஆற்றில் 65 வயதான மூதாட்டி ஒருவர் ஆற்றில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்து மூதாட்டியின் உடலை ஆற்றிலிருந்து மீட்டெடுத்து பிரேத பரிசோதனைகாக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலையா கொலையா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஸ்ஸாமில் குவஹாத்தி விமான நிலையத்தில் இடுப்பில் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகி சக்கர நாற்காலியில் வந்த பயணியிடம் ஆடையைக் கழற்றி சோதனை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலரை மத்திய தொழில் பாதுகாப்புபடை இடைநீக்கம் செய்துள்ளது. லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்தில் தன் பேத்தியுடன் வந்திருந்த மூதாட்டி, தில்லிக்கு செல்ல இருந்தார். நாடு முழுவதும் குவஹாத்தி உட்பட 65 விமான நிலையங்களில் பாதுகாப்பு அளித்து வரும் […]
மகனின் ஆதரவில் வாழ்ந்து வந்த மூதாட்டி பாரமாக இருக்க விரும்பவில்லை என்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே வடகால் பகுதியில் 70 வயதான மூதாட்டி தன் மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தன் மகனுக்கு வயதான காலத்தில் இடையூறாக இருக்க வேண்டாம் என்று நினைத்துள்ளார். மேலும் மகனுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று எண்ணிய அவர் வடகால் பக்கத்தில் இருக்கும் தனியார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச்சம்பவம் […]
மதுரையில் வயதான மூதாட்டி அரசு பஸ் மோதி உயிரிழந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . மதுரை மாவட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி பெரியார் பேருந்து நிலையம் நவீன படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியார் பேருந்து நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது திருமங்கலத்திலிருந்து வந்த அரசு பஸ் மூதாட்டி மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதனால் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கிய மூதாட்டி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]
பெங்களூருவைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி 6129 அடி உயர மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார். அவரை பற்றிய விபரம் பின்வருமாறு, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 62 வயது மூதாட்டியான நாகரத்தினம்மா தன்னுடைய இளம் வயதில் மலையேற்றத்தில் அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கியுள்ளார். இந்நிலையில் திருமணத்திற்குப் பின்னர் குழந்தைகள் கணவரை கவனிக்கும் பட்சத்தில் அவர் மலையேற்றத்தில் இருந்து சற்று ஒதுங்கி இருந்துள்ளார். கடைசியாக அவர் மலை ஏறிய போது அவருக்கு 22 வயது என அவரே […]
தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி 31-வது வார்டில் மூதாட்டி ஒருவர் ஸ்ட்ரெச்சரில் படுத்த படுக்கையாக ஆம்புலன்சில் வந்து வாக்களித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் […]
டெல்லியின் திலக் நகரில் பகுதியில் 87 வயது நிரம்பிய மூதாட்டியின் அவருடைய மகளுடன் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவருடைய மகள் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக சந்தைக்கு சென்றதாக கூறப்படுகிறது. மூதாட்டி மட்டும் வீட்டில் தனியே இருந்ததை அறிந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியை கடுமையாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு வீட்டில் இருந்த செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் திருடிச் சென்றுள்ளார். சந்தைக்கு சென்ற […]
இங்கிலாந்தில் ஒரு பராமரிப்பாளர் 99 வயதான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் வசிக்கும் 99 வயது மூதாட்டிக்கு ஞாபகமறதி நோய் இருக்கிறது. எனவே, Black Bull என்ற பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருக்கிறார். இந்நிலையில், அவரின் உறவினர்கள் அவரை பார்க்க சென்றிருக்கிறார்கள். அப்போது, மூதாட்டியின் செயல்பாடுகளில் சில வித்தியாசங்கள் இருந்திருக்கிறது. எனவே, சந்தேகமடைந்த அவர்கள், உடனடியாக கண்காணிப்பு கேமராவை அறையில் ரகசியமாக பொருத்தியிருக்கிறார்கள். அதில் Phillip Carey என்ற 48 வயதுடைய […]
நாடு முழுவதும் தற்போது பல்வேறு இடங்களில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மோசடியில் ஈடுபடுபவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டி, தனது செல்போனில் ஆன்லைன் மூலம் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். இதற்காக அவரது வங்கி கணக்கில் இருந்து 9,999 ரூபாய் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் உலர் பழங்கள் ஆர்டர் செய்தார் இதற்காக 1,146 ரூபாய் செலுத்தினார். இதையடுத்து தனது கணக்கில் இருந்து […]
அமெரிக்காவில் 87 வயதுடைய மூதாட்டியிடமிருந்து பர்சை பிடுங்கி சென்ற திருடனை இளைஞர் ஒருவர் துரத்திப் பிடித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் ஓஹியோ என்னும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியிலுள்ள சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த 87 வயதுடைய மூதாட்டியிடமிருந்து மர்ம நபர் ஒருவர் பர்சை பிடுங்கிக்கொண்டு ஓடியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியிலிருந்த இளைஞர் ஒருவர் 87 வயதுடைய மூதாட்டியிடமிருந்து பர்சை பிடுங்கிக் கொண்டு சென்ற திருடனை துரத்தி பிடித்துள்ளார். அதன்பின்பு அந்த இளைஞர் […]
மூதாட்டியை வீட்டை விட்டு விரட்டி பிச்சை எடுக்க வைத்த தனது பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூரில் 94 வயது மூதாட்டி அலமேலுவை அவரது பிள்ளைகள் வீட்டை விட்டு விரட்டி பிச்சை எடுக்க வைத்தனர். இதனால் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி மனு கொடுத்தார். இதில் மூதாட்டி அலமேலுக்கு மீஞ்சூர் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, கடை போன்றவை […]
மீன் விற்றுவிட்டு வந்த மூதாட்டியை பேருந்தில் ஏற விடாமல் இறக்கி விட்ட சம்பவம் கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் ஒரு மூதாட்டி மீன் விற்றுவிட்டு வந்துள்ளார். தான் ஊருக்குச் செல்லும் பேருந்து வந்ததும் அதில் ஏற முற்பட்டபோது அந்த பேருந்தின் நடத்துனர் “மீன் வித்துட்டா வர்ற? நாறும் இறங்கு இறங்கு” என்று கூறி அந்த மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக பேருந்தில் ஏறிய அவரை மீண்டும் இறக்கி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மெகா முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழகத்தில் 14வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா தடுப்பு முகாமில் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். நாட்றம்பள்ளியில் உள்ள ஆத்தூர் குப்பம் பகுதியில் நடைபெற்ற முகாமில் 100 வயதை கடந்த அன்னம்மாள் என்ற மூதாட்டி தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டார். இந்தச் சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கொரோனாவுக்கு […]
மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னகாம்பட்டி கிராமத்தில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணம்மாள்(67) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்த 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்து அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் தம்பதியினர் சின்னகாம்பட்டியில் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டி கிருஷ்ணம்மாள் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. […]
ஸ்பெயின் ஆட்சி காலத்தில் கடந்த 1897 ஆம் ஆண்டு பிலிப்பைன்சில் பிறந்த மற்றும் உலகிலேயே மிகவும் வயதானவராக கருதப்படும் மூதாட்டி தற்போது உயிரிழந்துள்ளார். ஸ்பெயின் ஆட்சிக்காலத்தில் கடந்த 1897 அஸ்ம் ஆண்டு பிலிப்பைன்சில் பிரான்சிஸ்கா சுசானோ பிறந்துள்ளார். இதனையடுத்து இவருக்கு தற்போது 124 வயதான நிலையில் திடீரென எந்தவித காரணமும் மின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதற்கிடையே 124 வயதாகும் பிரான்சிஸ்கோ சுசானோ என்னும் உலகிலேயே மிகவும் வயதானவர்கள் கருதப்படும் மேலே குறிப்பிட்டுள்ள அந்த மூதாட்டி உலக சாதனை […]
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு வீரர்ககளை பொதுமக்கள் பாராட்டினர். அரியலூர் மாவட்டம் காரைப்பாக்கத்தில் பழனிச்சாமி மனைவி மூக்காயி(72) வசித்து வருகிறார். இவர் அங்குள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க இறங்கியபோது நிலை தடுமாறி விழுந்துவிட்டார். இதனால் மூதாட்டி மூக்காயி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் திருமானூர் சோதனை சாவடியில் பணியில் இருந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி […]
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள நாடார் தெருவில் ரம்யாதேவி என்ற மூதாட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு அருகே உள்ள தனது மாட்டு கொட்டகைக்கு நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் திடீரென மூதாட்டி அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து […]
பெரம்பூரில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த மூதாட்டியின் புடவையில் பற்றிய தீயை துரிதமாக அணைத்தார் போக்குவரத்து தலைமை காவலர்.. சென்னை பெரம்பூரில் அகரம் சந்திப்பில் அமைந்துள்ள கோவிலின் வெளியே உள்ள சாமி சிலைக்கு 60 வயதான மூதாட்டி விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று விளக்கிலிருந்து மூதாட்டியின் புடவைக்கு தீ பற்றியுள்ளது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து தலைமை காவலர் செந்தில்குமார் சற்றும் யோசிக்காமல் உடனடியாக மூதாட்டியை கீழே உருட்டி புடவையிலிருந்து உடம்புக்கு தீ […]
முதுமையைக் காரணமாகக் காட்டி பிச்சை எடுக்க விரும்பாத மூதாட்டி பேனா விற்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பலர் வயதான பிறகு தங்களின் முதுமையின் காரணமாக வைத்து தெருக்களில் பிச்சை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சில வயதான முதியோர்கள் தங்கள் உயிர் உள்ளவரை உழைத்து தான் சாப்பிடுவோம் என்று வைராக்கியமாக வேலை பார்த்து வருகின்றனர். அதுபோன்று மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஒரு மூதாட்டி தனது முதுமையை காரணமாக வைத்து பிச்சை எடுக்க விரும்பவில்லை என்று கூறி பேனா […]
மும்பை ஆரேகாலனியில் தன்னை தாக்க வந்த சிறுத்தைப்புலியை மூதாட்டி ஒருவர் தடியால் அடித்து விரட்டிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. மும்பை மாநிலம், ஆரேகாலனி, விசாகா என்ற பகுதியில் வசித்துவரும் மூதாட்டி நிர்மலா ராம்சிங். இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு உள்ள வராண்டா பகுதியில் அமர்ந்து இருந்தார். அப்போது பின்னாலிருந்து வந்த சிறுத்தைப்புலி திடீரென மூதாட்டியை தாக்க முற்பட்டது. இதனால் மூதாட்டி நிலைகுலைந்து கீழே விழுந்தார். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு அவர் […]
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டியின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள கைனூர் நேதாஜி நகரில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கங்கம்மாள் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அன்று இரவு உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அரக்கோணம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் கனகம்மாள் அணிந்திருந்த […]
சாலையை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளி மூதாட்டியை இடித்துவிட்டு கார் நிற்காமல் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அவர் மெதுவாக ஊர்ந்து சாலையைக் கடக்க முயற்சி செய்தபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்று அந்த மூதாட்டியை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் இதை பார்த்த […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடைக்கு சென்ற மூதாட்டியிடம் உதவி செய்வதாக கூறி மர்மநபர்கள் 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் நாகலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அங்கம்மாள்(63). இந்நிலையில் இவர் காய்கறி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் கூட்டமாக இருந்ததால் காவல்துறையினர் கூட்டத்தை சீராக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து அங்கம்மாள் முகக்கவசம் அணியாமல் சென்றதை பார்த்த மர்மநபர்கள் உதவுவது […]
கோட்டை சுற்றுச் சுவரில் இருந்து மூதாட்டி குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் கோட்டையின் முன்புறம் சுற்றுச்சுவரின் நடைபாதையில் 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது தற்கொலை செய்யும் நோக்கில் மூதாட்டி திடீரென சுற்றுச்சுவரில் இருந்து கீழே குதித்து விட்டார். அவர் அகழிக்குள் விழாமல் கோட்டை மதில் கீழ் சுவரில் உள்ள புதரில் விழுந்ததில் மூதாட்டிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வடக்கு காவல் நிலையம் […]
டெல்லியில் வயதான மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த மூதாட்டி கவிதா. இவருக்கு 72 வயது ஆகிறது. இவர் வீட்டின் அருகே வசித்து வரும் அனில் ஆர்யா மற்றும் தனு ஆர்யா என்ற தம்பதிக்கு ஒரு லட்சம் ரூபாயை கடனாக வழங்கியுள்ளார். இதை சென்ற மாதம் 30ஆம் தேதி திருப்பி கேட்டுள்ளார். இதனால் தம்பதிகள் இருவரும் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்ய […]
மின்கம்பம் அறுந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்மின்னல் பகுதியில் வெங்கடேசன் என்பவர் கட்டிட தொழிலாளியாக வசித்து வருகின்றார். இவருக்கு சாரதாம்பாள் என்ற தாய் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது பேரப்பிள்ளைகளுடன் வீட்டின் வெளியே இருந்தபோது திடீரென வீட்டிற்கும் மேலே செல்லும் மின்சார வயர் தீப்பற்றி எரிந்தது. இதனால் சாரதாம்பாள் தனது பேரப்பிள்ளைகளை வீட்டிற்குள் போகும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்குள் மின்சார கம்பி அறுந்து சாரதாம்பாள் மீது விழுந்து […]
மூதாட்டி குடும்பத்துடன் நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு தாலுகா கொத்தூர் கிராமத்தில் மூதாட்டி சரஸ்வதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது 2 மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் சேர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மூதாட்டி சரஸ்வதி கூறியபோது, எனது மகன்கள் ரமேஷ், பூபாலன் இருவரும் […]
மது போதையில் இருந்த 30 வயது இளைஞர் ஒருவர் 62 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 25 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி தனது மகன் மற்றும் பேரனுடன் டெல்லியில் உள்ள டலுபுரா என்ற பகுதியில் வசித்து வருகிறார். அவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்தை முடித்து விட்டு தனது பேரனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சமையல் […]
முத்துப்பேட்டை அருகில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடகாடு கிராமத்தில் காசிநாதன் மனைவி கோவிந்தம்மாள் (103) வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகனும், 1 மகளும், 8 பேரன்களும், 5 பேத்திகளும், 8 கொள்ளுப் பேரன்களும், 5 கொள்ளு பேத்திகளும் இருக்கின்றனர். இதனையடுத்து மூதாட்டி கோவிந்தம்மாள் உடல் ஆரோக்கியத்துடன் தினசரி தனது பணிகளை தானே சுறுசுறுப்பாக செய்து வந்துள்ளார். அதன்பின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் […]
நகைக்காக வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை திருட வந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில், அப்பிக்கானிப்பள்ளி என்ற பகுதியில் 30 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி என்ற இளைஞர் இரவு அவரது வீட்டுக்குள் புகுந்து அவர் வைத்திருந்த 4 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளார். இதை தடுத்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் மூதாட்டியின் […]
முதுகுத்தண்டு வலியினால் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் பகுதியில் பெரிய தம்பி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 75 வயதுடைய சீனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு பன்னீர்செல்வம் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில மாதங்களாகவே சீனியம்மாள் முதுகுத்தண்டு வலியினால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சீனியம்மாள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வலி குறையாத காரணத்தினால் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். […]
மன நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாகைகுளம் பகுதியில் 70 வயதுடைய வள்ளியம்மாள் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாகவே வள்ளியம்மாள் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வள்ளியம்மாள் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் வலி தாங்க முடியாமல் வள்ளியம்மாள் அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை […]