தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கிடையே கற்றல் இடைவெளியானது அதிகரித்துள்ளது. இந்த கற்றல் இழப்பை சரி செய்வதற்காக தமிழக அரசு 1 முதல் 3ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து செயல்முறைகளை பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]
Tag: மூன்று நாட்கள்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் […]
தமிழகத்தின் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் பலருக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது. காரைக்காலில் காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காலராவுக்கு இன்று இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் பரவல் காரணமாக 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விடுதிகள், மண்டபங்கள், உணவகங்கள், கல்விக் கூடங்களில் ஆய்வு […]
கொரோனா பரவலை தடுக்க கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தடை விதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தபோது: “புத்தாண்டு தினத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் […]
சென்னை மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை மூன்று நாட்களில் அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பெய்த கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு சென்னை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறது. இருப்பினும் சாலையில் அடித்துச் செல்லப்பட்ட திட கழிவுகள் அனைத்தும் சாலைகளில் தேங்கி உள்ளதால், அவற்றை […]
தீபாவளிக்காக வெளியூர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்புவதை மூன்று நாட்களுக்கு தள்ளி வைக்குமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டதை தொடர்ந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்றுள்ளனர். தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் வெளியூருக்கு சென்ற மக்கள் மூன்று நாட்களுக்கு சென்னைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கான அறிவிப்பில் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடல் […]
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 539 கோவில்களில், மூன்று நாட்கள் தொடர்ந்து தூய்மை பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட 539 கோவில்களில் மூன்று நாட்களுக்கு, பெருமக்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த 539 கோவில்களிலும் நேற்று முதல் சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த கோவில்களில் உள்ள பிரகாரம், நந்தவனம், தண்ணீர் தொட்டி, […]
சசிகலா அடுத்த 3 நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் இருப்பார் என்று இயக்குனர் மனோஜ் கூறியுள்ளார். அரசு மருத்துவமனை இயக்குநர் மனோஜ் கூறியதாவது: “சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. அவர் காலை உணவு அருந்தினார். எழுந்து நடந்தார். மூன்று நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் அவர் இருப்பார் என தெரிவித்துள்ளார். மேலும் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலாவுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கண்காணிப்புக் குழுவில் சசிகலா வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நோயாளி அல்ல என்றும்” […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் மாதம் முடிக்கவேண்டிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ஆம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை […]