திருவள்ளூர் மாவட்டம் இடையூர் -கலியனுரை இணைக்கும் விதமாக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் முழுவதும் மேம்பாலம் கட்டி முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அவதி அடைந்துள்ளார்கள். பாலம் கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ளதால் ஆபத்தான முறையில் கொசஸ்தலை ஆற்றில் இறங்கி ஏணி மூலமாக பாலத்தில் ஏறி மாணவர்கள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க […]
Tag: மேம்பாலம்
குமாரபாளையத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதால் இதனை தடுக்க கத்தேரி பிரிவு பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். சேலம் முதல் கோவை வழியாக கேரள மாநிலம் கொச்சி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை குமாரபாளையம் வழியே செல்கின்றது. இந்த சாலை சேலம் முதல் செங்கப்பள்ளி வரை நான்கு வழிச்சாலையாகவும் செங்கப்பள்ளி முதல் கோவை வரை 6 வழிச்சாலையாகவும் இருக்கின்றது. சென்னையில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு செல்கின்ற கனரக வாகனங்கள் இந்த சாலை […]
கலங்கரை விளக்கத்திலிருந்து கிண்டி வரை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயரமான மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கான சாத்தியக்கூறு தாயரிக்க ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு இருக்கின்றது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அவ்வகையில் சென்னை மாநகரில் இருக்கும் கலங்கரை விளக்கத்திலிருந்து கிண்டி வரை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கான சாதிய கூறு அறிக்கையை தயாரிக்க தமிழக நெடுஞ்சாலை துறை ஒப்பந்தபுள்ளி கோரி இருக்கின்றது. இது […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் ரெயின்போ காலனி பகுதியில் இருந்து முதல் பங்குச் சந்தை கட்டிடம் வரை அமைந்துள்ளது. இதற்காக 253 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிவடைந்ததால் கடந்த மாதம் 11-ஆம் தேதி திறக்கப்பட்டு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். […]
மேம்பாலத்தின் மீது பைக் மோதி சேல்ஸ்மேன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் ரெயின்போ காலனி பகுதியில் இருந்து முதல் பங்குச் சந்தை கட்டிடம் வரை அமைந்துள்ளது. இதற்காக 253 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிவடைந்ததால் கடந்த மாதம் 11-ஆம் தேதி திறக்கப்பட்டு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த மேம்பாலம் […]
மிக நீளமான மேம்பாலமாக அண்ணா மேம்பாலம் அமைந்துள்ளது. சென்னை மாவட்டத்தில் இந்தியாவிலேயே மிக நீளமான மேம்பாலமாக அண்ணா மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் அண்ணா சாலை தலைமை செயலகம் முதல் திண்டிவனம் வரை 15 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்டு அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் அமைக்க 1971 -ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் திட்டமிடப்பட்டு 66 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பிறகு அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையில் […]
தமிழகத்தில் இருந்து சித்தூர், திருப்பதி போன்ற ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கு நுழைவு வாயிலாக வேலூர் மாவட்டம் உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் – மங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்பாடி வழியாக நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் மற்றும் திருப்பதி செல்லும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இதையடுத்து 1989-ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தின் மேல் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மேலும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தில் வருகிற ஜூன் […]
சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாம்பரம் வேளச்சேரி மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் திறந்து வைத்தார். சென்னை அடுத்த மேடவாக்கம் பகுதியில் இருந்து பரங்கிமலை, வேளச்சேரி, தாம்பரம், சோலைநல்லூர் போன்ற பல பகுதிகள் முக்கிய பகுதிகள் செல்கின்றது. இந்த பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல்கள் அதிகளவில் ஏற்படுகின்றது. இவற்றை குறைப்பதற்காக 2016 ஆம் ஆண்டு இரண்டு மேம்பாலங்கள் அதாவது வேளச்சேரியில் இருந்து […]
அமெரிக்காவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் மரப்பாலம் இடிந்து விழுந்ததில் பள்ளத்தில் கிடந்த பேருந்தை ராட்சத கிரேன் மூலமாக வெளியில் எடுத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிபர் ஜோ பைடன் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் 50 வருடங்கள் பழமை வாய்ந்த மரத்தாலான மேம்பாலம் இடிந்து விழுந்தது. இதில் ஒரு சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. மேலும், அந்த நேரத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் விழுந்து 10 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. இது மட்டுமன்றி, […]
மதுபோதையில் டிரைவர் ஆட்டோவை ஓட்டியதால் பின்னால் இருந்த பயணி 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம், திருநகர் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ், டிவி மெக்கானிக் ஆவார். இவர் நேற்று முன் தினம் காலையில் தனது நண்பரை சந்தித்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஆட்டோ பாடி மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்த போது, ஆட்டோ ஓட்டுநரான வில்லிவாக்கம் அகத்தியர் நகரை சேர்ந்த பிரபாகரன் மது போதையில், திடீரென கட்டுப்பாட்டை […]
வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பணிகள் இதுவரை முடியவில்லை என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கீழம்பாக்கம் மேம்பாலம் பணிகள் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
நான்கு வழி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை பகுதியில் 4 வழி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் சிறு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய கோரியும், பாலத்தின் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரயில்வே துறையில் புகார் அளித்தனர். எனவே ரயில்வேதுறை அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்தனர். அந்த […]
கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீ நெடுஞ்சேரி-பவழங்குடி கிராமங்களுக்கு பாலம் இல்லாததால் திருமணத்திற்கு சென்ற பொதுமக்கள் தண்ணீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீ நெடுஞ்சேரி-பவழங்குடி கிராமத்திற்கிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 17 கோடி செலவில் தடுப்பணை சுவர் மட்டும் கட்டப்பட்டு மேம்பாலம் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக வீராணம் ஏரி நிரம்பி உபரி நீர் கரைபுரண்டு செல்கிறது. இந்த நிலையில் பவழங்குடி கிராமத்தில் ஒரு திருமணத்திற்காக ஸ்ரீ நெடுஞ்சேரி […]
போக்குவரத்து பாதிப்பைத் தடுக்க ரயில்வே மேம்பால பணிகளை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ரயில்வே நிலையத்தில் காலிபெட்டிகளுடன் கூடிய சரக்கு ரயில் வந்தது. இதனையடுத்து ரயில் தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டது. அதன்பின் விரைவு ரயில் வந்ததால் ரயில்வே கேட் சுமார் ஒரு மணிநேரம் அடைக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக தஞ்சை-திருவாரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மாலை வேளையில் எர்ணாகுளம் விரைவு ரயிலுக்காக ரயில்வே கேட் அடைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அரிசி […]
மதுரை -நத்தம் சாலையில் மதுரை செட்டிகுளம் இடையே 7.3 கிலோ மீட்டர் தொலைவில் 600 கோடி ரூபாய் செலவில் கடந்த இரண்டு வருடங்களாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை இந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து அமைச்சர்கள் பலரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்நிலையில் இந்த விபத்து சம்பவத்தில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேம்பாலப் […]
மதுரை -நத்தம் சாலையில் மதுரை செட்டிகுளம் இடையே 7.3 கிலோ மீட்டர் தொலைவில் 600 கோடி ரூபாய் செலவில் கடந்த இரண்டு வருடங்களாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை இந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து தீயணைப்பு துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என 40க்கும் மேற்பட்டவர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை நேரில் […]
அரியானாவில் 12 வயது சிறுமியை வைத்து மேம்பாலத்தை திறக்க வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. அரியானா மாநிலம் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாரதிய ஜனதா மற்றும் ஜே.எம்.எம். கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. தற்போது மத்திய அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் அரியானாவில் மிக தீவிரமாக இருக்கின்றது. இதனால் அந்த கிராமத்தில் அரசியல்வாதிகள் யாரும் உள்ளே நுழைவதற்கு அனுமதி கிடையாது. விவசாயிகள் சாலையை மறித்து போராட்டத்தில் […]
ரயில்வே மேம்பாலம் அமைக்க இருக்கும் இடங்களை சப்- கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் பகுதியில் மற்றும் சிவகாசி- விருதுநகர் சாலையில் திருத்தங்கள் பகுதியில் ரயில்வே கேட் இருக்கின்றது. இந்த ரயில்வேகேட் வழக்கமாக ஒரு நாளைக்கு 8 முறை அடைத்து திறக்க வேண்டிய நிலை இருந்துள்ளது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக தினமும் 3 முறை சென்று, திரும்பும் மதுரை- செங்கோட்டை பயணிகள் ரயில் இயக்கப்பட வில்லை. இதனால் தற்போது தினசரி […]
சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு பொன்னியின் செல்வன் என்று பெயர்சூட்டி காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து 35 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று மதுரை மேம்பாலம் அருகே தனியாக அழுது கொண்டிருந்தது. இந்தக் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட போலீசார் அந்த குழந்தையை மீட்டு அங்கு அருகில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த குழந்தை அனாதையாக விட்டுச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தையை அங்கிருந்து மருத்துவ பரிசோதனைக்கு […]