சமூக வலைதளங்களில் பலவித வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோக்கள் மகிழ்ச்சி, சோகம், அச்சம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும் வீடியோவாக இருக்கும். இவற்றை நெட்டிசன்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி சமீபகாலமாக வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதும், மக்களை தாக்குவதும் மற்றும் குடியிருப்புகளை செய்தபடுத்துவதும் போன்ன்ற செய்திகள் வெளி வருகின்றன. இது பற்றிய வீடியோகளும் வெளிவந்து அச்சமூட்டி உள்ளது. இருப்பினும் வனப்பரப்பு குறைந்து கொண்டே செல்வது மக்கள் ஆக்கிரமிப்பு வன அழிப்பு காரணங்களாக கூறப்படுகின்றன. இந்நிலையில் […]
Tag: மேற்குவங்காளம்
மேற்குவங்காளத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதியுள்ள பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது விடைத்தாளில், புஷ்பா படத்தின் வசனத்தை எழுதி இருக்கிறான். அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் திரைப்படத்தில் வரும் பாடல்களும், வசனங்களும் அவ்வளவு எளிதில் மக்கள் மனதை விட்டு நீங்குவதில்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக மாறியிருக்கிறது புஷ்பா திரைப்படம். இந்தத் திரைப்படம் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், கடந்த […]
மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையின் படி நேற்றைய கோவிட் -19 நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 22,645 ஆக பதிவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஜனவரி 31ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கான வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓமைக்ரான் எனப்படும் மாறுபட்ட கோவிட் […]
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழுமையாக பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு நிலைமை சீரடைந்து தற்போது தான் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வந்து செல்கின்றனர். அந்தவகையில் மேற்கு வங்க மாநிலத்தில் நவம்பர் […]
மேற்குவங்காளத்தில் வரும் 7ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேற்குவங்காளத்தில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 7ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் கடந்த ஜூன் மாதம் கொரோனா பெரும் தொற்று […]
மேற்கு வங்க மாநிலத்தில் தீபாவளி, புத்தாண்டு, காளி பூஜை போன்ற பண்டிகையின்போது பட்டாசுகளை விற்பதற்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த வருடம் கொரோனா தீவிரமாக இருந்த காரணத்தினால் தீபாவளி உள்ளிட்ட பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கு பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தாக்கம் இல்லை எனினும், மூன்றாவது அலை தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பெரும்பாலான மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் […]
மேற்கு வங்காளத்தில் 2 தொகுதி வேட்பாளர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மரணமடைந்ததால் தேர்தல் நடத்தப்படாமல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்காளத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து நடத்தியது. அதில் 2 தொகுதி வேட்பாளர்கள் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ள காரணத்தால் அந்த தொகுதிகளில் மட்டும் தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் 292 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 213 […]
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 213 இடங்களை பெற்று அபார வெற்றி பெற்றது காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைகின்றது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் 294 தொகுதிகள் 8 கட்டங்களாக பிரித்து நடத்தப்பட்டது. தேர்தலின்போது மம்தா பானர்ஜிக்கு பா. ஜனதா கடும் நெருக்கடி கொடுக்கும் என கருத்து வெளிவந்தது. கருத்துக் கணிப்பில் பா.ஜனதா சவால் விடும் அளவிற்கு இடங்களை பிடித்து வெற்றி பெறும் […]
மேற்குவங்காளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வந்த ராகுல் காந்திக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி “உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் பரிசோதனை செய்து கொண்டதில் லேசான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில தினங்களுக்கு முன்பு என்னை […]
கொரோனா நோய் தொற்று காரணமாக மேற்கு வங்காளத்தில் இரவு 7 மணி முதல் காலை 10 மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை செய்துள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடந்து வருகிறது. அதில் 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் 5-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 22, 26 மற்றும் 29ஆம் தேதிகளில் மீதமுள்ள மூன்று கட்ட […]
மேற்கு வங்காள மாநிலத்தில் சிடால்குச்சி பகுதியில் வாக்குச்சாவடிக்கு வெளியே இரு கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டு கலவர கும்பல் வெடி குண்டு வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்காள மாநிலத்தில் முன்னதாகவே 3-கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு வருகின்றது. தேர்தலையொட்டி இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வாக்குச்சாவடிகளில் மத்திய காவல்துறை பாதுகாப்பு படைவீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தன. […]
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி சிடால்குச்சி என்ற பகுதியில் தேர்தல் பொதுக்கூட்ட பிரச்சாரம் நடைபெற்றது.அதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது நடந்து முடிந்துள்ள 2 ஆம் கட்ட தேர்தல் வாக்களிப்பில் பெருமளவில் மக்கள் திரண்டு வந்து தனது வாக்குகளை பதிவு செய்தது பெரும் மகிழ்ச்சியை அளித்தது . பா.ஜ.க 60 தொகுதிகளில் […]
அசாமில் 48.26 என்ற சதவீத வாக்குகளும், மேற்கு வங்காளத்தில் 58.15 சதவீத வாக்குகளும் 2 மணி அளவில் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநில தேர்தலோடு இணைந்து மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெறுகின்றது. அதில் வருகின்ற 6-ந் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகின்றது. அதன்பின் இரண்டு மாநிலங்களிலும் முதல்கட்ட தேர்தல் சென்ற 27-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அதில் மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்கள் […]
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடக்கிறது. இன்று இரண்டாம் கட்ட தேர்தல் 30 தொகுதிகளில் நடைபெற்று வருகின்றது. மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் எட்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகின்றது. அதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. அதன் பின் மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 தொகுதிகளில், 30 தொகுதிகளுக்கு மட்டும் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடக்கின்றது. அவற்றில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராமம் […]
அசாமில் முதல் கட்டமாக 47 தொகுதிகளும், மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மேற்குவங்காளம் மற்றும் அசாம் மாநிலங்கள் முழுவதும் சட்டசபை தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அசாம் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றுள்ளது. மேற்கு வங்காளத்தில் மொத்தமாக 294 தொகுதிகள் இருக்கின்றன. அதில் முதல் கட்டமாக 30 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. அதேபோல் அசாமில் மொத்தமாக 126 சட்டசபை […]
மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு அடைந்துள்ளது தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றது. அதில் அசாம் மேற்கு வங்காளத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்வடைகின்றது. மேற்கு வங்காளத்தில் 8 கண்டங்களாக சட்டசபை பிரிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதில் 30 தொகுதிகளில் வருகின்ற 27ஆம் தேதி […]
கோவிலுக்கு சென்றுவிட்டு வந்த மம்தா பானர்ஜியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் கட்சியின் தலைவருமனவர் மம்தா பானர்ஜி. இவர் நந்திகிராமம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மம்தா பானர்ஜி பிரசாரத்தை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வெளியில் வந்து யாருடைய பாதுகாப்பும் இல்லாமல் காரின் அருகே தனியாக நின்று கொண்டிருந்துள்ளார். […]
மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் களமிறங்க உள்ளார். மேற்குவங்காளத்தில் மார்ச் 27-ஆம் தேதி தொடங்கிய தேர்தல் எட்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டு ஏப்ரல் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் அவர்களது வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதாக திரிணாமூல் கூறியுள்ளார். இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளதாக பட்டியலில் தெரிவித்துள்ளனர். மேலும் முதல்வர் மமதா பானர்ஜிக்கு எதிராக நந்திகிராமம் தொகுதியில் […]
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் கட்சி சார்பில் போட்டியிட உள்ள அனைத்து வேட்பாளர்களின் பட்டியலையும் முதலமைச்சர் செல்வி மமதா பானர்ஜி ஒரே கட்டமாக வெளியிட்டுள்ளார். 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. 38 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழுக் கூட்டம் கல்கத்தாவில் உள்ள முதலமைச்சர் செல்வி மமதா பானர்ஜியின் […]
மேற்கு வங்காளத்தில் கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் 20ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் ஜூன் மாதத்திலிருந்து ‘அன்லாக்’ என்ற முறையின் மூலமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் உள்ள குறிப்பிட்டப் பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. மத்திய அரசு ‘அன்லாக் 4’ பற்றி […]
மேற்கு வங்காளத்தில் ஒரே நாளில் மட்டும் 3,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் முதலில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டதால், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,35,596 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,737 […]
மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியில் செயல்படும் வடக்கு வங்காள மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ரெயின்கோட், சன்கிளாஸ்கள் மற்றும் பெட்ஷீட்களால் ஆன முக கவசங்களை வழங்குவதாக புகார் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகையே ஒரு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது. அதில், இந்தியாவில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,000 தாண்டி செல்கின்றது. இன்று மட்டும் பல மாநிலங்களில் மேலும் பலருக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 32 […]
இந்தியாவில் இஸ்லாமிய பெண்ணும் அவரின் குழந்தையும் இந்துக்களால் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டுகின்றனர் என கூறி ஒரு வீடியோ வைரல் ஆன நிலையில் அதன் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆரிப் என்ற முன்னாள் ராணுவ வீரர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் பெண்ணும், குழந்தையும் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கும் காட்சி இடம் பெற்றிருந்தன. முகமது அந்த பதிவில் இந்தியாவில் இஸ்லாமியர்களை இந்துக்கள் உயிரோடு புதைக்கிறார்கள் […]