மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மெதினிபூர் பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பூத் தலைவர் ராஜ்குமார் மன்னா வீட்டில் திடீரென பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்களை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநில முதல்வரின் மருமருமகனுமான அபிஷேக் பானர்ஜியின் ஊர்வலம் நடைபெற இருந்தது. இந்த […]
Tag: மேற்கு வங்க மாநிலம்
மேற்கு வங்க மாநிலத்தில், சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜக எம்பி ரூபா கங்குலி வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பும் என்ற மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கை மாநில போலிசிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி அமைக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி […]
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்த 7 வயது குழந்தைக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாறிய ஒமைக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று பல மாநிலங்களில் தற்போது பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை 44 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் பகுதியை சேர்ந்த ஏழு வயது குழந்தைக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி […]
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, வரும் 5 ஆம் திகதி அன்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலில், நந்திகிராம் தொகுதியில், முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய மம்தா பானர்ஜி பாஜகவுடன் சேர்ந்த சுவேந்து அதிகாரியிடம் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனால் சட்டப்பேரவைத் தொகுதியில் தோல்வியை சந்தித்தாலும், முதல்வராக பொறுப்பேற்க சட்டத்தில் இடம் இருக்கிறது. எனவே மீண்டும் மம்தா பானர்ஜி மாநில முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். மேலும் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க சட்டப்பேரவை குழு […]