சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் போன்ற பகுதிகளில் இருக்கும் லாரி உரிமையாளர்களின் செல்போன் எண்ணை மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்கள் தங்களிடம் குறைந்த விலையில் டீசல் இருக்கிறது. வாங்கி கொள்கிறீர்களா? என கேட்டுள்ளனர். மேலும் ஒரு லிட்டர் டீசல் 50 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும், மொத்தமாக 100 லிட்டர் 120 லிட்டர் என வாங்கினால் பாதி விலைக்கு விற்பனை செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர். இதனை நம்பி லாரி உரிமையாளர்கள் குறைந்த விலையில் […]
Tag: மோசடி செய்த நபருக்கு வலைவீச்சு
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளனூரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான அன்பழகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அன்பழகனுக்கு வேலைவாய்ப்பு சம்பந்தமாக முகநூலில் ஒரு லிங்க் வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை அன்பழகன் தொடர்பு கொண்டு பேசிய போது, மறுமுனையில் பேசிய நபர் விளம்பர வீடியோவை பார்த்தால் ஒரு வீடியோவுக்கு 50 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்தார். இதனை நம்பி அன்பழகன் அவர் அனுப்பிய 7 வீடியோக்களை பார்த்த பிறகு அவரது […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு சாஸ்திரி நகரில் தனியாருக்கு சொந்தமான சோலார் பல்புகள் மற்றும் டயர்கள் விற்பனை செய்யும் நிறுவனம் அமைந்துள்ளது. இதன் மற்றொரு கிளை பெங்களூருவில் இருக்கிறது. அங்குள்ள மேலாளரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் தன்னை ராணுவ அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். இதனையடுத்து சோலார் பல்புகள், அதன் விலை விவரங்கள் தெரிய வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதனால் அந்த நிறுவனத்தினர் அவரின் செல்போன் எண்ணிற்கு விவரங்களை அனுப்பி வைத்தனர். மீண்டும் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் சிட்கோவை பகுதியில் ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு ரவிசங்கரின் டெலிகிராம் முகவரிக்கு அமெரிக்க சுற்றுலா நிறுவனமான ஹயாத் என்ற பெயரில் ஒரு லிங்க் வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை ரவிசங்கர் தொடர்பு கொண்டு பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் எங்களது நிறுவனம் குறித்து கருத்துக்களை பதிவிட்டு பணத்தை முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என ஆசை […]
சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் கண்ணிலால் நகல் 2-வது தெருவில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை நண்பர்கள் மாற்றுதிறனாளி நல சங்கத்தில் தலைவராக இருக்கிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஆனந்தகுமார் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் சங்கீதா உட்பட 150 மாற்றுத்திறனாளிகளிடம் அரசு ஒதுக்கீடு செய்யும் வீடுகளை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி ஒவ்வொருவரும் தலா ரூ.20,000 என மொத்தம் 12 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயை ஆனந்தகுமாரிடம் கொடுத்ததாக […]
வியாபாரியிடம் 9.38 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கமலாபுரம் பகுதியில் சர்க்கரை வியாபாரியான மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மோகன் குமார் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த கிரண் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் சர்க்கரை வாங்க முடிவு செய்தார். இந்நிலையில் 25 டன் சர்க்கரை வாங்குவதற்காக மோகன் குமார் அந்த நிறுவனத்திற்கு 7,79,625 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் […]
வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எல்லப்பாளையம் பகுதியில் தவமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது கணவர் மூலம் கோவையைச் சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2020-ஆம் ஆண்டு ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர் அமைச்சர் ஒருவரை நன்கு தெரியும் எனவும், கட்சியில் பொறுப்பாளராக இருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து […]