Categories
அரசியல்

நர்சிங் கல்லூரி ஒப்புதல்…. 30 லட்சம் ரூபாய் மோசடி…. விஜயபாஸ்கர் மீது புகார்….!!!!

நர்சிங் கல்லூரி ஒப்புதல் வாங்கி தருவதாக முன்னாள் மருத்துவத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 30 லட்சம் பெற்று மோசடி செய்ததாக கூறி, கல்வியாளர் ஒருவர் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் நர்சிங் கல்லூரி மற்றும் கூடுதலாக கல்லூரிகளை ஆரம்பிப்பதற்காக 30 லட்சம் ரூபாயை முன்னாள் மருத்துவத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளரிடம் கொடுத்ததாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கல்வியாளர் இளமாறன் புகார் மனு அளித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே இதை யாரும் செய்யாதீங்க…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி வெளியானது. நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் மின்னஞ்சலுக்கு தேசிய தேர்வு முகாமை நேரடியாக அனுப்பியது. மேலும் தேசிய தேர்வு முகமையின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திலும் மாணவர்கள் நீட் ஸ்கோர் கார்டை டவுன்லோட் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள். இந்நிலையில் மருத்துவ ஆலோசனை குழு வெளியிட்ட அறிவிப்பில், அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in வெளியிடப்படும் தகவலின் […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர் அறிவிப்பு…. செல்: 9444128512 மக்களே உடனே கால் பண்ணுங்க…..!!!

நாட்டில் மக்களை ஏமாற்றி பல்வேறு நூதன மோசடி நடைபெற்று வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரசு எச்சரித்து வருகிறது. இந்நிலையில் பவர் பேங்க் செயலி மூலம் முதலீடு செய்து பணத்தை இழந்து பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம் என்று சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர். அதன்படி 9444128512 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி யிலும் புகார் தெரிவிக்கலாம். அல்லது காவல் ஆய்வாளர், சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு எண் 220, பாந்தியன் […]

Categories
பல்சுவை

Friend in Need: WhatsApp யூஸ் பண்றேங்களா?…. வெளியான அதிர்ச்சி செய்தி….!!!

தற்போது மக்களை ஏமாற்றுவதற்கு பல்வேறு விதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன.அதனைப் பற்றி அறியாத மக்கள் தங்கள் பணத்தை இழந்து விடுகின்றனர். அதன்படி தற்போது வாட்ஸ் அப்பில் புதுவித மோசடி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப்பில் பிரெண்ட் இன் நீட் (friend in need) என்ற பெயரில் மோசடி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வெளிநாட்டில் எங்கோ சிக்கியிருப்பதாகவும்,தாயகம் திரும்புவதற்கு பணம் வேண்டுமென்றும் பயனர்கள் தங்கள் நண்பர்களிடம் இருந்து வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியை பெற்றுள்ளனர். அதன் மூலம் தனிப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

இப்படி பண்ணுவானு நினைக்கல..! காதலியை நம்பி மோசம் போன இளைஞர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை..!!

சுவிட்சர்லாந்தில் இளைஞர் ஒருவர் தனது காதலியை நம்பி பிட்காயின் மோசடியில் சிக்கி பெருந்தொகையை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் வசித்து வந்த தாரியோ (34) என்பவர் தாரா என்ற பெண்ணுடன் இணையத்தில் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் நாளடைவில் நட்பு காதலாக மாற இருவரும் தங்களது விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்ள தொடங்கினர். இந்த நிலையில் பிட்காயின் உள்ளிட்ட Cryptocurrency வர்த்தகத்தில் தாராவுக்கு ஈடுபாடு இருந்த காரணத்தினால் முதலீடுகள் குறித்த நல்ல பயனுள்ள […]

Categories
பல்சுவை

மக்களே…. உடனே இந்த Apps-களை உங்க போனில் இருந்து நீக்குங்க…. ஷாக்….!!!!

சைபர் பாதுகாப்பு தளமான அவாஸ்ட் ஆண்ட்ராய்டு போன்களில் பதிவிறக்கம் செய்யக்கூடிய 151 செயலிகள் மூலம் மோசடி நடப்பதை கண்டு பிடித்துள்ளது. இந்த செயலிகள் ஒரு பெரிய எஸ்எம்எஸ் மோசடியின் ஒரு பகுதியாக உள்ளன. எனவே ஆண்ட்ராய்டு பயனாளிகள் இந்த செயலிகளை பதிவிறக்கம் அதை தவிர்க்க வேண்டும் என்று அவாஸ்ட் கூறியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் மால்வேர் மற்றும் மோசடிகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும். சுமார் 80.5 மில்லியன் மக்கள் இந்த மோசடி செயலிகளை 80க்கும் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் உத்தரவு… வேலை வாங்கித்தருவதாக பணமோசடி… முன்னாள் அதிமுக அமைச்சர் உட்பட 30 பேர் அதிரடி கைது!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ் மணியனின் உதவியாளர் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் முக ஸ்டாலின் டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ் மணியனின் உதவியாளர், மறைந்த அதிமுக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நிலம் விற்பதாக கூறி…. 2 பேரின் துணிச்சலான செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

நிலம் விற்பதாக கூறி தொழிலதிபரிடம் பணம் மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடச்சூர் பாலமுருகன் நகரில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நூற்பாலை வைத்து நடத்தி வருகின்றார். இவரிடம் கோபி நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த 2 பேர் தங்களிடம் லக்கம்பட்டியில் ஒரு ஏக்கர் 15 சென்ட் நிலம் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் நல்ல கவுண்டம்பாளையத்தில் ஒரு நிறுவனம் இருப்பதாகவும், அதை விற்பனை செய்ய உள்ளதாக மகேஸ்வரனிடம் அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இந்த எண்ணிற்கு Google Pay மூலம் பணம் அனுப்ப வேண்டாம்….!!!

தற்போது மக்களை ஏமாற்றி பலவித நூதன மோசடிகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.அதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து 7010424309 என்ற எண்ணிற்கு Google pay மூலம் குடிநீர் வரிகளைச் செலுத்த சொல்வதாக தரும் குறுஞ்செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாரிடமும் கூகுள் பே மூலம் வரி செலுத்த சொல்லவில்லை. எனவே பொதுமக்கள் போலியான அவர்களிடம் ஏமாறாமல் உஷாராக இருக்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“உங்களுக்கு மறதிநோய் இருக்கு” மனைவி செய்யும் வேலையா இது…? பிரபல நாட்டில் அதிர்ச்சி….!!

கணவருக்கு மறதிநோய் உள்ளதாக அவரை நம்ப வைத்து கோடிக்கணக்கில் பணத்தை திருடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் East Haven பகுதியில் மரினோ என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 20 வருடங்களாக கணவரின் பணத்தை மோசடி செய்து வந்திருக்கிறார். அதன்படி மரினோ தன் கணவரின் வங்கி கணக்கை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்தபடி அவரின் கையெழுத்தை போட்டு 20 வருடங்களில் $600,000 (கிட்டத்தட்ட ரூ 12 கோடிகள்) அளவில் மோசடி செய்திருக்கிறார். இதனை சமீபத்தில்தான் […]

Categories
மாநில செய்திகள்

கவரிங் நகைகளுக்கு 2,39,00,000…. கூட்டுறவு வங்கியில் மோசடி…. 3 பேர் அதிரடி சஸ்பெண்ட்….!!

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி வங்கி உயரதிகாரிகள் அனைத்து கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகை கடன் விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தேவிகாபுரத்தில் கூட்டுறவு நகர வங்கி யில் தணிக்கை குழுவினர் நகை கடன் பற்றி ஆய்வு மேற்கொண்டபோது கவரிங் நகைகள் இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர். இந்த கவரிங் நகைகளுக்கு 2,39,00,000 நகை கடன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நாடகமாடிய தம்பதியினர்…. உண்மையை அறிந்த வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மனைவியை நண்பனின் காதலியாக நடிக்க வைத்து 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகின்றார். இவர் வாடகை கார்கள் வைத்து தொழில் நடத்தி வருகின்றார். இவருக்கு திருமணம் முடித்து வைக்க அவரதுபெற்றோர் பெண் தேடி வந்தனர். இவர்களில் பாலாஜியின் நண்பராக ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர் இருக்கின்றார். இவர் கார் டிரைவராக இருக்கின்றார். இதில் ராஜாவிற்கு நித்யா என்ற […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு….! வசமாக சிக்கிய பி.ஏ… ஷாக் ஆன எடப்பாடி …!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் உட்பட 2 பேர் மீது சேலத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடுபட்டியை சேர்ந்தவர் மணி. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளராக உள்ளார். இவர் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஓமலூர் செம்மாண்டப்பட்டியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் பலரிடம் […]

Categories
உலக செய்திகள்

“இரத்தக்கறை படிந்த கையுறைகளை ஏற்றுமதி செய்த நாடு!”.. கொரோனா பரவலை பயன்படுத்தி மிகப்பெரிய மோசடி..!!

கொரோனா சமயத்தில் கையுறைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தாய்லாந்து நாட்டில் சில நிறுவனங்கள் அதிக மோசடியை செய்தது தெரியவந்திருக்கிறது. மியாமியில் வசிக்கும் Tarek Kirschen என்ற தொழிலதிபர், Paddy the Room என்ற தாய்லாந்து நிறுவனத்திடமிருந்து 2 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட கையுறைகளை இறக்குமதி செய்திருக்கிறார். அதனை மற்ற விநியோகஸ்தர்களுக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் இவரிடம் கையுறை வாங்கியவர்கள், அவர், ஏற்கனவே பயன்படுத்தியதை சுத்தப்படுத்தி சாயம் ஏற்றி புதுப்பித்து ஏமாற்றி விட்டார் என்று […]

Categories
மாநில செய்திகள்

மோசடி முதல் ரீ-பண்ட் வரை…… “ஐ-போன்-க்கு பதில் சோப்பு” சைபர் க்ரைம் முயற்சி…. வாடிக்கையாளர் மகிழ்ச்சி….!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா பகுதியில் நூருல் அமீன் என்பவர் வசித்து வந்தார்.இவர் வெளிநாடு வாழ் இந்தியர். மேலும் இவர் கடந்த 12 ஆம் தேதி அன்று ஆன்லைன் வர்த்தகம் வலைதளத்தில் ரூ.70,900 ஐ-போன் ஆர்டர் செய்துள்ளார். இந்த ஆடர் கடந்த 15ஆம் தேதியன்று டெலிவரி செய்யப்பட்டது. நூருல்  அமீன் அதை பிரிக்கும் முன் வீடியோ எடுத்து உள்ளார். அதன் பிறகு அந்த பார்சலை திறந்து பார்த்தபோது ஐபோனுக்கு பதிலாகவும் சோப்பு மற்றும் ஐந்து […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

ஓடிபி மூலம் கொள்ளையா ? உடனே இத செய்யுங்க…!!

உலகிலேயே அதிகளவு இணையத்தை பயன்படுத்தும் நாடு இந்தியா. வளர்ந்த தொழில்நுட்பத்தை பலவகைகளில் பயன்படுத்தி பலன் அடையும் பலருக்கும் அதிலுள்ள குறைபாடுகள் முழுமையாக தெரிவதில்லை. அப்படி இருக்கும் குறைபாடுகளில் ஒரு பகுதியாக தொழில்நுட்ப ரீதியிலான ஆன்லைன் மோசடிகளில் பலரும் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய – மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தாலும் ஆங்காங்கே இது குறித்தான புகார்கள் மோசடிகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் ஓடிபி மூலமாக கொள்ளை நடைபெறுகிறது என்ற […]

Categories
உலக செய்திகள்

மோசடியில் ஈடுப்பட்ட பெண்…. கடற்கரை ஓரத்தில் கிடந்த கால்கள்…. வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

ஆஸ்திரேலியாவில் மோசடியில் ஈடுபட்ட பெண் காவல்துறையினரிடம் தப்பிக்க தனது கால்களை வெட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பல பேரிடம் மோசடி செய்து அவர்களின் பணத்தை பறித்துச் சென்ற மெலிசா கேடிக் எனும் பெண் கடந்த வருடம் நவம்பர் மாதம் 12-ஆம் தேதி நியூ சவுத் வேல்ஸில் உள்ள தனது வீட்டில் இருந்து காணாமல் போனார். இதில் மெலிசா கேடிக் மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருக்கிறது. அதாவது மெலிசா கேடிக் பல பேரிடம் தொழில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்த கண்ணாடியில் பார்த்தா…. முன்னாடி இருக்கவங்க உடை இல்லாமல் தெரிவாங்க…. பரபரப்பு சம்பவம்….!!!!

தேனியில் தன்னிடம் மாயக்கண்ணாடி இருப்பதாகவும், அவற்றை கண்களில் அணிந்தால் எதிரில் இருப்பவர்கள் நிர்வாணமாக தெரிவார்கள் என்று கூறி கும்பகோணம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரிடம்  ஒரு லட்சம் ரூபாய்க்கு விலைப் பேசியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பார்ப்பவர்களை நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடி என்று கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பி சென்ற இன்னொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், தேனி வீரபாண்டி […]

Categories
தேசிய செய்திகள்

200 கோடி மோசடி வழக்கு… பிரபல நடிகையிடம் அமலாக்கத் துறை விசாரணை…..!!!

மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகர் 200 கோடி மோசடி செய்த வழக்கில் பாலிவுட் நடிகை நோகா நோரா ஃபேடேகியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் புரமோட்டர் ஆன ஷிவிந்தர் சிங்கின் மனைவியிடமிருந்து ரூபாய் 200 கோடி ஏமாற்றிய வழக்கில் சுகாஷ் சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவி லீனா பால் மீது குற்றம்சாட்டப்பட்டது. தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகாஷ் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த தகவல்…. ஏமாற்றத்தை உணர்ந்த என்ஜினீயர்…. போலீஸ் விசாரணை….!!

ஆன்லைன் விளையாட்டின் மூலம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அற்புதாபுரத்தில் ஜெரால்டு என்பவர் வசித்து வருகின்றார். இவர் என்ஜினீயராக இருக்கின்றார். இவருடைய செல்போனுக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது வீட்டில் இருந்து பகுதி நேரமாக பணியாற்றி வருவாய் பெறலாம் என தகவல் வந்தது. அந்த தகவலை ஜெரால்டு பார்த்தபோது ஒரு தொடர்பு வாட்ஸ்-அப் எண்ணிற்கு சென்றது. இதனையடுத்து தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றது. அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வயதானவர்களிடம் மோசடி…. தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள்…. போலீஸ் விசாரணை…!!

வயதானவர்களை ஏமாற்றி பணம் மற்றும் நகை பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. சென்னை மாவட்டத்திலுள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது இரண்டு நபர்கள் அங்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து மூதாட்டி முக கவசம் அணியாததை சுட்டிக்காட்டி காவல்துறையினர் அபராதம் விதித்து விடுவார்கள் என்று அவரை முகக்கவசம் அணிய வைத்துள்ளனர். அதன்பிறகு மூதாட்டி அணிந்திருந்த 12 பவுன் நகைகளை நூதன முறையில் பறித்து விட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

DSP-க்கே இந்த நிலைமையினா…. நம்ம நிலைமை பரிதாபம் தான்…. என்ன நடந்துச்சின்னு நீங்களே பாருங்க….!!!!

சென்னை வில்லிவாக்கம் பெட்ரோல் பங்கில் டிஎஸ்பி பைக்குக்கு பெட்ரோல் போடும்போது மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு டிஎஸ்பி பெட்ரோல் போட சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் போடுவதில் மோசடி என புகார் எழுந்துள்ளது. 2.47லிட்டர் பெட்ரோல் போட்டதாக மீட்டரில் காட்டிய நிலையில் அளந்து பார்த்தபோது 1.8 சோ மச் லிட்டர் மட்டுமே பெட்ரோல் இருந்துள்ளது. இதனை தட்டிக்கேட்ட டிஎஸ்பி.லவகுமாரிடம் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

போன் கால் மூலம் பேசி பணம் மோசடி… 15 பேர் கைது… உஷாரா இருங்க மக்களே…!!!

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பணம் பறித்த 15 கிரிமினல்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஒரு திருட்டு கும்பல் பல மக்களிடம் இருந்து வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கார்டில் இருக்கும் எண்ணை கேட்டு பின்னர் அவர்களின் வங்கியிலிருந்து பணத்தை திருடி வந்துள்ளனர். இவர்களை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 24 செல்போன்கள், 41 சிம் கார்டு மற்றும் 41000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து அழைப்பாத கூறி, […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சில்லரை கேட்ட மர்மநபர்…. ஏமாற்றத்தை உணர்ந்த முதியவர்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

மருந்து வாங்கச் சென்ற முதியவரிடம் போலி 2 ஆயிரத்தை கொடுத்து மர்ம நபர் ஏமாற்றி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியில் முதியவர் சித்தன் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக இருக்கின்றார். இவர் தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் முதியவர் சித்தன் தன் வீட்டு அருகில் உள்ள மருந்தகம் கடைக்கு சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் அவரிடம் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து சில்லரை கேட்டுள்ளார். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

பழங்கால பொருட்கள் விற்பதாக கூறி 10 கோடி மோசடி… பலே மோசடி மன்னன் கைது…!!!

கேரளாவில் பழங்கால பொருட்கள் இருப்பதாக கூறி 10 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள களூர் பகுதியில் பழங்கால பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருபவர் மோம்சன் மாவுங்கள். இவர் பல நூறு ஆண்டுகள் பழமையான பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கூறி வந்துள்ளார். இவரது வீடும் கலை பொருட்கள்,  விற்பனை நிலையமும் மிக பிரமாண்டமாக இருப்பதால் இங்கு பல முக்கிய பிரமுகர்கள் வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் இவர் விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே உஷார்…. முகநூலில் புதுவிதமான மோசடி…. வசமாக சிக்கிக் கொண்ட இளைஞர்….!!!!

முகநூலில் அழகான இளைஞரின் புகைப்படத்தை பயன்படுத்தி காதலிப்பதாக கூறி சாட்டிங் செய்து நகை மற்றும் பணத்தை பறித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளது. வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து பணம் சம்பாதிக்க நினைத்துள்ள லோகேஷ் முகநூலை பயன்படுத்தி குறுக்கு வழியில் சென்றதால் இப்போது கம்பி எண்ணுகிறார். சென்னையில் வசித்து வரும் இளம் பெண் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் நிஷாந்த் என்பவர் என்னை காதலிப்பதாக நடித்து வாட்ஸ்அப்-இல் சாட்டிங் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உன் பிள்ளைகளுக்கு திருமணமே ஆகாது…. உடனே இதை செய்யணும்…. நூதன மோசடியில் ஈடுபட்ட போலி மந்திரவாதி பெண்……!!!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் கஸ்தூரிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி சுஜிதா(34) . இவருக்கு நாகர்கோவிலை சேர்ந்த 49 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுஜிதா தன்னை ஒரு சாமியார் போல அந்த பெண்ணிடம் காட்டிக் கொண்டார். அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அந்த பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக சுஜிதா கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவருடைய 2 மகள்களுக்கு திருமணமே ஆகாது என்று கூறி அந்த பெண்ணிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: பீர் விலையில் மோசடி…. ரூ.8730000000 கோடி அபராதம்……!!!

பீர் விலையில் நிர்ணய முறைகேடு வழக்கில் United Breweries, Carlsberg India ஆகிய பீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.873 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பீர் மதுபான விலை நிர்ணயம் முறைகேட்டில் ஈடுபட்ட பல்வேறு நிறுவனங்களும் அபராத நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கின்றது. இந்த நிறுவனங்கள் ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 8 மாநிலங்களில் விலை நிர்ணயம் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது

Categories
மாநில செய்திகள்

SHOCKING: நகைக்கடன் தள்ளுபடி…. தமிழகம் முழுவதும் பரபரப்பு…..!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் ஒரே நபர் நகை கடன் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பக்தர்களுக்கு அல்வா… தரிசன டிக்கெட்டில் ஏற்பட்டுள்ள மெகா மோசடி… மக்களே உஷாரா இருங்க…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் தரிசன டிக்கெட்டில் மோசடி நடந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து இல்லால் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாட்டில் உள்ளதால் தரிசன டிக்கெட் பெறுவதில் பிரச்சினைகள் உள்ளன. அதை பயன்படுத்தி மோசடி கும்பல் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். ஒன்றிய அமைச்சர் கிருஷ்ணன் ரெட்டி பேரில் அரங்கேறிய மோசடியின் அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த மோசடி அரங்கேறியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் […]

Categories
மாநில செய்திகள்

“நீட் மோசடிகள் கூடாரம்” +2 மதிப்பெண் அடிப்படையில்…. மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துங்க…!!!

நீட் தேர்வு மோசடிகளின் கூடாரம் என்று சாடி உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கூடாது என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மராட்டிய மாநிலத்தை மையமாக வைத்து டெல்லியிலும், ஜார்கண்டிலும் நடத்தப்பட்டதாக கூறப்படும் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் மோசடி தகவல் குறித்து வெளியான தகவல்கள் பேரதிர்ச்சி அளிக்கிறது. நீட் தேர்வை மோசடிகளின் கூடாரமாக மாறி இருப்பது மாணவர்களிடம் நம்பிக்கையின்மை ஏற்படுத்தியிருக்கிறது. நீட் தேர்வு மோசடிக்காக போலி சான்றிதழ், அடையாள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அதிக பணம் வாங்கி தாரேன்” 6 கோடி ரூபாய் மோசடி…. பாதிக்கப்பட்டவர்கள் மனு….!!

பழைய நகைகளை விற்று தருவதாக மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கோடிப்பள்ளம் மற்றும் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் பல்வேறு நகைக்கடைகளில் மதிப்பீட்டாளராக வேலை பார்த்தார். இந்நிலையில் அவர் பழைய நகைகளை கொடுத்தால் அதை அதிக விலைக்கு விற்றுத் தருவதாக […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் மோசடி…. தமிழகத்தில் பெரும் பரபரப்பு…!!!

கடந்த அதிமுக ஆட்சியில் நகைகடனில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு தமிழக அரசு அம்பலப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குரும்பூர்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. குரும்பூர் அங்கமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் விவரங்களை திருச்செந்தூர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது வங்கியில் நகையே வைக்காமல் போலியான பையை வைத்து அதில் நகை இருப்பது போல கூறி கடன் வாங்கி […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்…. அதிமுக ஆட்சியில் பலே மோசடி…. திடிக்கிடும் தகவல்கள்….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் ஒரே நபர் நகை கடன் […]

Categories
அரசியல்

நகையே இல்லாமல்…. வெறும் பையை வைத்து ரூ.2 கோடி…. அதிமுக ஆட்சியில் பெரும் மோசடி…!!!

கடந்த அதிமுக ஆட்சியில் நகைகடனில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று திமுக அரசு பெரும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குரும்பூர்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. குரும்பூர் அங்கமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் விவரங்களை திருச்செந்தூர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது வங்கியில் நகையே வைக்காமல் போலியான பையை வைத்து அதில் நகை இருப்பது போல கூறி […]

Categories
மாநில செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறி…. மோசடி செய்த வழக்கில்…. நீதிமன்றம் ஆஜராக உத்தரவு…!!!

வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வழக்கில் புகார்தாரர்களின் வாக்குமூலங்களை வழங்குவதற்காக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட இரண்டு பேரை நேரில் ஆஜராகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ் குமார், தேவசகாயம் உள்ளிட்டவர்கள் புகார் அளித்திருந்தனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் அருகே…. குரும்பூர் கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி…

கூட்டுறவு வங்கியில் 3 கோடிக்கு நகை கடன் மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடனில் மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. தமிழக அரசின் நகை கடன் தள்ளுபடி குறித்த ஆய்வின் போது 3 கோடிக்கும் மேல் மோசடி நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது, நகை அடமானம் வைக்கப்பட்ட 548 பைகளில் 261 அடமான பைகள் மாயமாகியுள்ளது. 3 கோடி நகை கடன் மோசடி தொடர்பாக கூட்டுறவு […]

Categories
அரசியல்

கடந்த ஆட்சியில்…. சுகாதாரத்துறையில் மோசடி…. 3 பேர் மீது நடவடிக்கை பாயும்…!!!

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகம் முழுவதுமாக கடந்த வாரம் 40 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தம் 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் மொத்தமாக 62% தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிக அளவில் மத்திய அரசு தடுப்பூசி வழங்கினால் கூடுதலாக தடுப்பூசி செலுத்த தயார் நிலையில் இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் 63 லட்சம் பேருக்குதான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அப்போது எளிதாக தடுப்பூசி கிடைத்தும் அதை போடுவதற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் அனுப்புறேன்…. நம்பி ஏமாந்த மாணவன்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பேஸ்புக் மூலமாக பண மோசடியில் ஈடுபட்டவர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரங்காபுரம் கிராமத்தில் கிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலமாக ஜூலி பேட்ரிக் என்ற இளம்பெண் நண்பர் ஆகினார். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண், கிறிஸ்துதாசிடம் உனக்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அந்த பார்சலில் ஐபோன், தங்ககாசு, […]

Categories
உலக செய்திகள்

போலி வலையில் சிக்கிய அமெரிக்கர்கள்… இந்தியர் செய்த மோசடி… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை..!!

அமெரிக்காவில் 10 மில்லியன் டாலர் மோசடி செய்த இந்தியருக்கு அமெரிக்க நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் போலியான “கால் சென்டர்” வைத்து நடத்தி வந்த ஷெஷத்கான் பதான் (40) என்பவரும், அவருடன் இருந்தவர்களும் தானியங்கி அழைப்புகள் வாயிலாக அமெரிக்கர்கள் பலரை தொடர்பு கொண்டு நம்பிக்கையூட்டும் வகையில் பேசி போலி கடன் திட்டங்களை அவர்களிடம் அறிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள திட்டங்களில் முதல் தவணை மட்டும் செலுத்தினால் உடனடியாக கடன் […]

Categories
தேசிய செய்திகள்

என்-95 முக கவசத்தில் மைக்…. நீட் தேர்வில் பலே மோசடி…. போலீசார் அதிரடி…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் சிகார் பகுதிகளில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பதிலாக போலியான நபர்களை, மோசடி கும்பல் ஒன்று தேர்வு எழுத  வைப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தத்தின் பேரில் அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் 21 மருத்துவ மாணவர்களை இரு வேறு இடங்களில் கைது செய்தனர். அவர்களை சோதனை செய்ததில் சந்தேகிக்கும் வகையில் இருந்த என்-95 முக கவசத்தின் உட்பகுதியில்  மைக்கை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அவர்களை விசாரித்ததில் ஆன்லைனில் தகவல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தாரேன்… 10 லட்சம் ரூபாய் மோசடி…. போலீஸ் வழக்குப்பதிவு….!!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் கீழே தெருவில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக இருக்கின்றார். இவர் முகநூலில் சரோன் மோர்கன் என்பவருடன் நண்பராக பழகி வந்தார். இதில் மோர்கன் இங்கிலாந்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜீவா வேலை இல்லாமல் இருப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் மோர்கன், ஜீவாவுக்கு இங்கிலாந்தில் வேலை வாங்கி தருவதாக ஆறுதல் வார்த்தைகளை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“உன்னை எரித்து கொன்றுவேன்” 23 நபர்களிடம் மோசடி…. கைது செய்த போலீஸ்….!!

வீட்டுமனை விற்பனை செய்வதாக கூறி 23 நபர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சூளை ஈ.பி.பி நகரில் தேவராஜன்-லதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் லதா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் இருப்பதாவது நரிபள்ளம் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் நான் பணி செய்து வருகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு சொந்தமாக வீடு கட்டுவதற்காக இடம் தேடிக்கொண்டு இருக்கும்போது ஸ்டார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏமாந்துபோன வாலிபர்கள்…. 9 1/2 லட்சம் ரூபாய் மோசடி…. கலெக்டரிடம் மனு….!!

வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி ஜங்கமசமுத்திரம் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். நரிப்பாடி பகுதியில் தினேஷ்குமார் மற்றும் செல்வம் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் மாவட்ட கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் இருப்பதாவது படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த எங்களுக்கு ஆத்தூர் கோட்டில் கணினி ஆபரேட்டர் பணி வாங்கி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதை நம்பி ஏமாந்துட்டோம்…. பல லட்சம் ரூபாய் மோசடி…. போலீஸ் சூப்பிரண்டிடம் மனு….!!

மோசடி செய்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் ஈரோடு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகின்றார். இவர் நிலங்களை வீட்டு மனைகளாக பிரித்து மாதத் தவணையில் விற்பதாக விளம்பரம் செய்திருந்தார். இதனால் நாங்கள் சிறுக […]

Categories
மாநில செய்திகள்

ரூ.75 லட்சம் மோசடி பண்ணிட்டு…. கொலை மிரட்டல் விடுறாங்க…. சிக்கிய முன்னாள் பெண் அமைச்சர்…!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வசிப்பவர் குணசீலன். இவர் அதிமுக முன்னாள் சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் சரோஜாவின் உதவியாளர் ஆவார். இவர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சரோஜாவிடம் உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் முன்னாள் அமைச்சர் சரோஜா சமூகநிலை துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 75 லட்சம் பணம் மோசடி செய்துவிட்டதாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் ஷாக்…. ரூ.516,00,00,000 மோசடி… அமைச்சர் பகீர் தகவல் …!!

அதிமுக ஆட்சியில் பயிர் கடன் வழங்குவதில் 516 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த  ஆட்சியில் பயிர்க்கடன், நகைக்கடனுக்காக மூன்றே  நாட்களில் 16  லட்சம் பயனாளர்களை தேர்வு செய்வது எப்படி என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.  சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு துறை மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆகிய மாநிலங்களின் மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்குப் பின்னர் பதில் உரையாற்றிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி,  […]

Categories
மாநில செய்திகள்

பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பதிலளித்து பேசினர். இதில் விவசாயிகளுக்கான பயிர்க்கடனை 5 சதவீதம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் பயிர்க் கடன் வழங்கியதில் ரூ.516 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். சிட்டா அடங்கலில் குறிப்பிடப்பட்ட சாகுபடி நிலங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

மேட்ரிமோனி பதிவு… 50க்கும் அதிகமான பெண்கள்…. அய்யோ பாவிகளா….!!!!

பெங்களூரை சேர்ந்த சூர்யா (25) என்பவர் தன்னை இன்ஜினியர் என கூறி உள்ளார். அவர் திருமண தகவல் மையம் மூலம் பதிவு செய்த இளம் பெண்கள் 50க்கும் மேற்பட்டோரை திருமணம் செய்வதாக கூறி விடுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதை தனது செல்போனில் வீடியோ எடுத்து பல லட்சம் ரூபாய் மற்றும் 100 சவரனுக்கு மேல் மோசடியும் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து இது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிங்கிளாக வந்து திருமணத்துக்கு பெண் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய வகையில் மோசடி…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை…..!!!

இணைய திருடர்கள் புதிய வகையில் மோசடி சம்பவங்களில் ஈடுபடுவதால் வங்கி வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. இணைய மோசடியில் ஈடுபடுவோர் தற்போது புதிய முறையை கையாண்டு மோசடி சம்பவங்களை செய்துவருவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மொபைல்போனில், எஸ்எம்எஸ் எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அதன் மூலம் வங்கி கணக்கு மூடப்படுகின்றது. இதை தவிர்ப்பதற்கு எஸ்எம்எஸ் இல் உள்ள இணைய இணைப்பின் மூலம் சரி பார்க்க செல்பவர்கள், அந்த இணைப்பில் […]

Categories

Tech |