Categories
தேசிய செய்திகள்

பிரபல இந்தி பாடகர் மரணம்….. பிரதமர் மோடி இரங்கல்….!!!!!

பிரபல இந்தி பாடகரான பூபிந்தர் சிங் (82) கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து இவர் கடந்த 10 நாளுக்கு முன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் பூபிந்தர் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அவரது மனைவி மிதாலி தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

இரங்கல்களை தெரிவிக்கிறேன் – பிரதமர் மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று “மன் கீ பாத்” என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாடுவது வழக்கம். அதன்படி இந்த வாரம் நடந்த மன் கி பாத் நிகழ்ச்சி உரையாடலில், பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் புயல்களை மாநில அரசுகள் மிக தைரியமாக எதிர் கொண்டன என்றும், நம்முடைய படைகள் தைரியமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்கள் எனவும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

பிரபல மலையாள கவிஞர் காலமானார்…. மோடி இரங்கல்…!!

பிரபல மலையாள கவிஞர் விஷ்ணு நாராயணன் நம்பூதிரியின் மறைவிற்கு மோடி உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல மலையாள கவிஞர் விஷ்ணு நாராயணன் நம்பூதிரி(81) காலமானார். நரம்பியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று திருவனந்தபுரத்தில் காலமானார். ஆசிரியராகவும் பேச்சாளராகவும் இருந்த இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். மேலும் சில புத்தகங்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார். பத்ம ஸ்ரீ விருது, சாகித்ய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய மறைவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்தில்…. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு…. தலா ரூ.2 லட்சம் இழப்பீடு…!!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தானது பட்டாசு மருந்துகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சீரம் தீ விபத்தில் பலியானவர்களுக்கு…. மோடி இரங்கல்…!!

சீரம் நிறுவனத்தின் தீ விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்தில் தான் கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தடுப்பூசி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் கட்டிடத்தில் தீ பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது மாடியில வேலை […]

Categories
தேசிய செய்திகள்

“லாரிகள் நேருக்கு நேர் மோதியதில்” 11 பேர் பலி…. குஜராத்தில் கோர விபத்து…. மோடி இரங்கல்…!!

நெடுஞ்சாலை பகுதியில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் வதோதரா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்…!!

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 82. முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். இவர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நிதித்துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் அமைச்சராக பதவி வகித்துள்ளார். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு […]

Categories

Tech |