பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் இலவச எரிவாயு சிலிண்டர் திட்டத்தை மேலும் மூன்று மாதத்துக்கு நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே போல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாடகைக்கு வழங்கும் வகையில் ஒரு லட்சம் வீடுகளைக் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும் பிரதமர் அறிவித்த நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் திட்டத்துக்கும் […]
Tag: #மோடி
ஆளும் கட்சியில் நேபாள பிரதமருக்கு கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது அதனால் இன்று மாலை ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் 5 மாநிலங்களான சிக்கிம்,மேற்கு வங்காளம்,பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 1,850 கி.மீ. எல்லையை நேபாளம் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தியா நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. தற்போது, நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 32,000 கோர்கா வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில் இரு நாடுகளும் எல்லையைத் தாண்டி மக்களை […]
இந்தியாவை அமெரிக்கா நேசிப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 244 – வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பி வைத்திருந்தார். அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று அதிபர் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும் , இந்தியாவும் சுதந்திரத்தை கொண்டாடுவதாகவும் மோடி தெரிவித்திருந்தார். இந்த ட்விட்டர் பதிவிற்கு நன்றி தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப் […]
கள்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்வதாகவும் அமைதியை அடைய வீரமே அடிப்படை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். லடாக்கில் பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, மோதலில் வீரமரணம் அடைந்த நமது வீரர்களின் தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்காது என தெரிவித்தார். வீரர்களின் உயிர் தியாகம் நாட்டின் வளத்தை உலகறிய செய்துள்ளதாகவும், மலை சிகரம் விட உயரமானது என்று கூறினார். இந்திய வீரர்கள் பயமரியாதவர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர் […]
இந்தியா – சீனா எல்லை பகுதியில் உள்ள லடாக் பகுதியில் ஆய்வு செய்த பிரதமர் மோடி வீரர்களிடம் பேசும் போது, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ராணுவ வீரர்களின் துணிச்சல் முன்மாதிரியானது. இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலை ஒரு போதும் நாடு மறக்காது. இந்திய ராணுவத்திற்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் சக்தி உண்டு. இந்திய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை. மலையின் சிகரங்களைவிட இந்திய வீரர்களின் துணிச்சல் உயரமானது.இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். […]
எல்லையில் பார்வையிட்டு, ஆய்வு செய்யும் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கின்றார் என்று தெரியவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கிற்கு சென்றார். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பிரதமர் மோடி அங்கு சென்று அங்குள்ள பல்வேறு இடங்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் இந்தோ – திபெத் எல்லை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோரை சந்தித்தார். லே என்கின்ற இடத்தில் தற்போது […]
பிரதமர் நரேந்திர மோடி எல்லையில் உள்ள லடாக் பகுதியில் தீடீர் ஆய்வை நடத்தி வருகின்றார். பிரதமர் நரேந்திர மோடி எந்த முன்னறிப்பிப்புமின்றி இந்தியா – சீனா எல்லை பகுதியில் இருக்கும் லடாக்கிற்கு சென்றார். அங்குள்ள பகுதியில் ஆய்வு நடத்திய பிரதமர் இந்தோ – திபெத் எல்லைப் படையில் இருக்க கூடிய எல்லை பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நேரடியாக கலந்து ஆலோசித்து இருக்கிறார். ராணுவ முப்படை தளபதியும் இருந்திருக்கிறார். இந்த பயணம் என்பது […]
இந்தியா -சீனா எல்லை பகுதியில் உள்ள லடாக் எல்லை பகுதியில் பிரதமர் மோடி தீடீர் என ஆய்வு நடத்துகின்றார். இன்று காலை எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா – சீனா எல்லையோரம் உள்ள லடாக் பகுதிக்கு சென்றுள்ளார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராபாத்தும் உள்ளார். இது மிக முக்கியமான ஒரு பயணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சம்பந்தப்பட்ட கல்வான் பகுதிக்கு பிரதமர் மோடி செல்வாரா ? அல்லது லடாக் பகுதியில் […]
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் பேசும் போது நாட்டில் இருவருக்கு தலைவனாக்குவதாக குறிப்பிட்டார். பிரதமர் மோடி நேற்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது 80 கோடி மக்களுக்கு இலவச உணவு பொருட்களை வழங்கும் திட்டத்தை ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய நான்கு மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட்ட உள்ளது என்று தெரிவித்தார். அதில் பிரதமர் மோடி நாட்டில் 2 பேருக்கு நான் தலை வணங்குகின்றேன் என்ற முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டு பேசினார். […]
இந்தியா – சீனா எல்லை பிரச்சனையை தொடர்ந்து மத்திய அரசு அடுத்தடுத்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டன. குறிப்பாக சீன ராணுவத்தினர் ஊடுருவி இந்திய பகுதிக்குள் வந்து, இந்த தாக்குதலை நடத்தினர். இதில் 20 ராணுவ வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களுக்கு நிகராக சீன தரப்பிலும் இழப்பு இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சீனா – […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு காணொளி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது, என் அன்புக்குரிய நாட்டு மக்களே வணக்கம்… கொரோனா பெருந்தொற்றுக்கெதிரான போரில் நாம் தற்போது unlock இரண்டிற்கும் நுழைந்து இருக்கிறோம். அதிகரிக்கும் இருமல், சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புகளின் காலத்திற்குள் நாம் நுழைந்து இருக்கிறோம். இதன் காரணமாக உங்களை சிறப்பாக பார்த்துக் கொள்ளும்படி உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கின்றேன். நண்பர்களே…. கொரோனாவின் இறப்பு விகிதத்தை பொறுத்தவரை […]
பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது மேலும் ஐந்து மாதங்களுக்கு இலவச ரேஷன் திட்டத்தை அறிவித்துள்ளார். இன்று காணொளி மூலம் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, மேலும் ஐந்து மாதங்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை அத்துடன் ஒரு கிலோ கடலைப் பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இதற்காக 90 ஆயிரம் கோடி […]
நவம்பர் வரை இலவச பொருட்கள் வழங்கப்படும் என்றும் 18 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மோடி தெரிவித்தார். விதிமீறலுக்கு ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை பார்க்கிறோம். பிரதமர் முதல் சாமானியன் வரை அனைவருக்கும் நமது நாட்டிலும் ஒரே விதி தான். பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருப்பதால் கரீப் கல்யாண் திட்டம் நவம்பர் வரை நீட்டிக்கப்படுகின்றது.கொரோனா கால கட்டத்தால் கரீப் கல்யாண் திட்டத்தின் நவம்பர் மாதம் வரை இலவசமாக உணவு பொருட்கள் […]
கொரோனா ஊரடங்கு தளர்வு 2.0, இந்தியா சீன எல்லையில், சீன செயலிகளை தடை போன்ற சூழலில் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசினார். unlockdown 2.0 தொடங்கிவிட்டது. கொரோனவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் ஏற்படுவது சகஜம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது. சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட முழு முடக்கத்தான் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு […]
இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கின்றார். பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் மாலை 4 மணியளவில் நாட்டு மக்களிடையே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உரையற்ற இருக்கின்றார். இந்த அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பிறப்பிக்கபட்டுள்ள ஊரடங்கால் மீண்டும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன ? சமூக இடைவெளி, முக கவசம் அணிவது மற்றும் ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது என்று பல்வேறு விஷயங்களை பிரதமர் நரேந்திர […]
பொதுமுடக்க தளர்வுகள் 2.O என்ற பெயரில் மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பொது முடக்கம் 2 தளர்வுகள் என்ற பெயரில் மத்திய அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திறப்பதற்கான தடை ஜூலை 31-ஆம் தேதி வரை நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இயங்கும் கல்வி நிறுவனங்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள், கோச்சிங் சென்டர் உள்ளிட்டவற்றிற்கு ஜூலை 31-ஆம் தேதி வரை […]
பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கின்றார். நாடு முழுவதும் ஊரடங்கு இன்றோடு நிறைவடைய இருக்கும் சூழலில் ஒவ்வொரு மாநில அரசும் ஊரடங்கை மேலும் சில நாட்களுக்கு நீடித்திருக்கிறது. உதாரணமாக தமிழகம் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடித்திருக்கிறது. இதே போல பல மாநிலமும் ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் கூட முழு ஊரடங்கு நீட்டித்து உத்தரவு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர […]
நம்முடைய எல்லைகள் காக்கப்படும் என்று பிரதமர் மோடி மங்கிபாத் நிகழ்ச்சி மூலம் தெரிவித்திருக்கிறார். மனதின் குரல் என்ற வாராந்திர நிகழ்ச்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். குறிப்பாக சீனா – இந்தியா மோதல் குறித்த முக்கியமான விவகாரம் சம்பந்தமாக பேசினார். இந்தியா சீனா எல்லை விவகாரம் பற்றி அவர் தன்னுடைய பேச்சின் மூலமாக மக்களுக்கு எடுத்துக் கூறி வருகிறார். தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி உள்ளிட்டோர் […]
பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் இரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? வேண்டாமா ? என்பது சம்பந்தமான பரிந்துரையை வழங்க ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்தகுழு மத்திய அரசுக்கு சில முக்கிய பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில், தற்போதைய சூழ்நிலையில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் அது மாணவர்களின் சுகாதாரக்கேடு, சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தி […]
கேள்வி கேட்பவர்களை தேசத்துக்கு விரோதமானவர்கள் என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கிறீர்கள் என மத்திய ஆளும் கட்சியின் மீது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க அரசு என்ன செய்ய போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் உணர்ச்சிகரமாக பதிலளிப்பதை வாடிக்கையாக்கி உள்ளீர்கள் என குற்றம் சாட்டியுள்ளார். உணர்வுகளை தூண்டிவிட்டு தப்பிக்க முயல்வதை பிரதமரும், சகாக்களும் நிறுத்த வேண்டும் என்றும், பிரதமரின் […]
இந்திய – சீன எல்லையில் சண்டைக்கு பிறகு இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் இல்லை என்றுதான் நரேந்திர மோடி பேசினார் என பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்திருக்கிறது. நேற்றைக்கு நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது பிரதமர் இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் நடைபெறவில்லை என தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் அதே கேள்வியை முன் வைத்த நிலையில் தற்போது அதற்கு பிரதமர் விளக்கம் அளித்துள்ளது. நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு பிரதமருடைய […]
சீனாவுடனான மோதல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு சீனா அத்துமீறி தாக்கிய விவகாரம் குறித்து பேச அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று இரண்டு தினங்கள் முன்பாக பிரதமர் அலுவலகம் அழைப்பு வெடுத்திருந்து. இதில் முதல் முறையாக திமுக தலைவர் முக. ஸ்டாலின் பங்கேற்கிறார். வழக்கமாக இதுபோன்ற கூட்டத்தில் திமுக சார்பில் நாடாளுமன்றக்குழு தலைவராக இருக்க கூடிய டி ஆர் பாலு […]
இந்தியா – சீனாவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். கால்வான் பள்ளத்தாக்கு விவகாரம் சம்பந்தமாக சீனா அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தார்கள். சீனா தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் இறந்திருக்கலாம் என்று சொல்லபடுகிறது. இந்த விவகாரம் சம்பந்தமாக ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட ஆலோசனை மேற்கொண்டனர். ராஜ்நாத்சிங் இரண்டு […]
வணிக ரீதியிலான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை டெல்லியில் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நிலக்கரி துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு உள்ளது. நிலக்கரி சுரங்க ஏறத்தாழ ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் 33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று தெரிவித்தார். மேலும் சுயசார்பு இந்தியாவாக மாற இறக்குமதியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிலை வரவேண்டும் என தெரிவித்த பிரதமர் கொரோனா நெருக்கடி நிலையை இந்தியா நல்ல வாய்ப்பாக மாற்றி […]
பிரதமர் நரேந்திர மோடி அனைத்து எதிர்கட்சிகளிடம் நாளை ஆலோசனை நடத்த இருக்கின்றார். கால்வான் பள்ளத்தாக்கு விவகாரம் சம்பந்தமாக சீனா அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தார்கள். சீனா தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் இறந்திருக்கலாம் என்று சொல்லபடுகிறது. இந்த விவகாரம் சம்பந்தமாக ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட ஆலோசனை மேற்கொண்டனர். ராஜ்நாத்சிங் இரண்டு முறை பிரதமர் நரேந்திர மோடியை […]
லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார். 2வது நாளாக முதலமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையடுத்து பேசிய பிரதமர், இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது. ஆனால் அத்துமீறினால் பதிலடி கொடுக்கப்படும். பதில் நடவடிக்கையில் ஈடுபட இந்தியா ஒருபோதும் தயங்காது. லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் செய்த உயிர் தியாகம் வீண் போகாது. வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தான் இரங்கல் தெரிவிக்கிறேன் […]
இந்தியா – சீனா எல்லையில் நடைபெற்ற மோதல் குறித்து பிரதமர் மோடியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகின்றார். இந்தியா – சீனா வீரர்களிடையே நேற்று நடைபெற்ற மோதலில் இந்திய தரப்பில் 3 பேரும், சீனா தரப்பில் 5 வீரர்களும் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இரு நாட்டு எல்லைக்கும் இடையே பதற்றமான நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சற்றுமுன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து லடாக் […]
பாகிஸ்தானில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட இந்திய அதிகாரிகள் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது. இன்று காலை பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இயங்கிவரும் இந்திய தூதரக ஊழியர்கள் 2 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியது. இதை அடுத்து இந்திய அதிகாரிகள் இரண்டு பேரும் எங்கிருக்கிறார்கள் ? இந்திய அதிகாரிகளுக்கு என்ன ஆனது ? என்று அடுக்கடுக்கான விவரங்கள், விசாரணைகள் இந்திய அரசால் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது, பாகிஸ்தான் காணாமல் போன 2 இந்திய தூதரக ஊழியர் இருக்குமிடம் […]
பிரதமர் மோடி தலைமையில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை மேற்கொள்கின்றார். கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகின்றார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் அதை தடுப்பதற்கு இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன ? இன்னும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ?என்பது குறித்து ஆலோசனை […]
மத்திய அரசின் செலவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை தடுத்து வளர்ச்சியை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவித்தார். அத்தகைய சூழ்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோதியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மற்றும் ஆத்ம் நிர்பார் பாரத் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் ஏதேனும் திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு […]
பொதுமுடக்க காலத்தில் 100 % ஊதியம் வழங்குவது குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பொது முடக்க காலத்தில் நாடு முழுவதிலும் தொழில் நிறுவனங்கள் ஆங்காங்கே முடக்கப்பட்டு இருந்தாலும் தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயம் 100 சதவீத ஊதியத்தை வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். இது தொடர்பாக தனியார் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. நிறுவனம் சார்பில் […]
இந்தியாவிற்கு ஆஸ்திரேலிய பிரதமர் வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைத்திருக்கிறார். இந்தியா – ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிஸன்னுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் என்பது எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. பொதுவாக நேரில்தான் இந்த மாநாடு நடக்கும், ஆனால் தற்போது காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது. இதில் கொரோனா நிலைமை […]
குப்பையைக் கையாள்வது போல் பொருளாதாரத்தை மோடி கையாண்டுள்ளார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், நாட்டின் கடன் தர மதிப்பீட்டை ‘எதிர்மறை’ என்ற நிலைக்குக் குறைத்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதத்தினைப் பூஜ்யமாகக் கணித்துள்ளது. கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால், இந்தியாவின் நம்பகத்தன்மை குறைந்து முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராகுல் […]
ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஜி-7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியபோது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அடுத்த ஜி 7 நாடுகளின் உச்சிமாநாடு அமெரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள […]
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் இந்தியா – நேபாளம் எல்லை பகுதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு பார்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஜந்தாரா. இவர் நேற்றுமுன்தினம் அதாவது மே 30ஆம் தேதி சனிக்கிழமை இந்தியா – நேபாள நாடுகளின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இரு நாடுகளுக்கு உட்பட்ட எல்லையோரத்தில் குழந்தையை பெற்றெடுத்தன் நினைவாக அந்த குழந்தைக்கு ”பார்டர்” என புதுமையான பெயரை அப்பெண் சூட்டியுள்ளார். ”பார்டர்” என பெயர் சூட்டியுள்ள இந்தக் […]
11.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகின்றது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வருட காலம் முடிந்து இருக்கும் நிலையில் முதல் முறையாக மத்திய அமைச்சரவை கூட்டம் அவரது தலைமையில் நடக்கிறது. இன்று காலை 11.30 மணிக்கு நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினை, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பொது முடக்கத்தை படிப்படியாக விளக்குவது குறித்த நடவடிக்கைகள் என ஆலோசனைகள் நடைபெற உள்ளன. கொரோனாவுக்கு எதிராக கூடுதல் […]
கொரோனா நோய்த் தடுப்பிலும்- ஊரடங்கிற்குப் பிறகான செயல் திட்டத்திலும் தோல்வியடைந்த மத்திய- மாநில அரசுகளுக்குக் கண்டனம் என திமுக கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதிமுக அரசுக்கு, “கொரோனா நோய்” ஜனவரி 7-ஆம் தேதியே தெரிய வந்தும் – மத்திய பா.ஜ.க. அரசுக்கு டிசம்பர் 2019லேயே தெரிந்திருந்தும், அரசியல் காரணங்களுக்காக, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் மேற்கொள்ளாமல், நாட்டு மக்களை பெரும் பாதிப்பிலும் துன்ப துயரங்களிலும் ஆழ்த்தியிருக்கும் அதிமுக அரசுக்கும்- மத்திய பா.ஜ.க. அரசுக்கும் அனைத்துக் கட்சிகளின் […]
புலப்பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய அரசு கண்டு கொள்ள வில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் பிரதமர் மோடி அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஓரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். உரிய போக்குவரத்து வசதி இல்லாமல் சாலைகளில் பல நுறு கிலோ மீட்டர் நடந்தும், சைக்கிளிலும் சென்றவர்கள் பல துயரத்துக்கு ஆளாகினர். பல இடங்களில் […]
பிரதமர் மோடி தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்தவரை வெகுவாக பாராட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வாராந்திர வானொலி நிகழ்ச்சியான மங்கி பாத் மூலமாக மக்களிடம் பேசி வருகின்றார். இன்றய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அரசு எடுத்து வரும் திட்டங்கள், மக்கள் மேற்கொண்ட சேவை உள்ளிட்டவற்றை தான் பட்டியலிட்டு பேசினார். குறிப்பாக இந்த பேச்சை பொருத்தவரை நாட்டு மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக சில முக்கியமான நபர்களை எடுத்துக்காட்டாக சொல்லியிருக்கின்றார். தமிழகத்தின் மதுரையைச் […]
கொரோனாவுக்கு எதிரான ஒரு போரில் இந்திய மக்கள் வலுவுடன் போராடி வருகின்றார்கள் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருக்கிறார். மனதின் குரல் ( மங்கி பாத் ) வானொலி உரையில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனாவை இந்தியா எதிர்கொண்டு எப்படி சாதித்தது என மற்ற நாடுகள் ஆச்சர்யத்துடன் கவனித்து வருகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என்று மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்திருக்கிறார். மேலும், பொது […]
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இல்லாத அளவுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மத்திய அரசை ஆட்டம் காண வைத்துள்ளது . கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகையே மிரட்டி வருகிறது. கிட்டத்தட்ட 215க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கோர தாண்டவத்தை ஆடிவரும் கொரோனாவுக்கு அறுபத்தி 61.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.70 லட்சம் பேர் உயிரை காவு வாங்கிய கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து 27.34 லட்சம் பேர் […]
இந்தியா – சீனா எல்லை பிரச்சனையில் சமரசம் செய்து வைக்க தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக இந்திய எல்லையில் சீனா அத்துமீறி நுழைந்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதோடு இந்திய எல்லையான லடாக் பகுதி அருகே சீனாவின் எல்லையோரம் சீனா தனது படைகளைக் குவித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் தனது படைகளை அதிகரித்து […]
மத்திய அரசின் உத்தரவுகளை மாநில அரசுக்கள் கேட்காததால் பிரதமர் மோடி வேதனையில் இருக்கின்றார். சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசாங்கம் பிறப்பித்த நான்காவது ஊரடங்கு வருகின்ற மே 31-ஆம் தேதியோடு நிறைவடைகின்றது. 20 லட்சம் கோடி: […]
மற்ற நாடுகளுக்கு சொந்தமான பகுதிகளில் ஊடுருவிய, பின்னர் அந்த பகுதி தங்களுக்கே சொந்தம் என கூறி பிரச்சனையில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது சீனா. தற்போது அந்த நாடு கண் வைத்திருக்கும் இடம் லடாக். அங்கு இந்தியா சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஐந்தாம் தேதி லடாக் எல்லை பகுதியில், சீன வீரர்கள் அத்துமீறியதோடு, கற்களை வீசி இந்திய வீரர்களை தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு […]
இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் காரணமாக பதற்றம் எழுந்துள்ளது. தற்போது இது குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பகுதியில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தை ஒட்டி உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், இரு தரப்பும் ராணுவத்தை குவித்துள்ளன. லடாக்கின் […]
கடந்த சில வாரங்களாகவே இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லையோர பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருகின்றது. இதன் தற்போதைய நிலை குறித்தும், பின்னணி குறித்தும் விரிவாக பார்க்கலாம். ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து அவற்றை மத்திய ஆட்சிக்கு உட்பட்ட யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது முதலே, இந்தியாவின் எல்லையோர நடவடிக்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தது சீனா. அருணாச்சல பிரதேசம், சிக்கிம் என பல ஆயிரம் கிலோமீட்டர் எல்லை நெடுக நீண்டகாலமாகவே அத்துமீறி வந்த சீனாவுக்கு இந்தியாவில் சமீப கால […]
கொரோனா தடுப்பு பணிகளில் இந்தியாவின் செயல்பாடுகளை கண்டு உலக நாடுகள் வியந்து பார்க்கின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் கொடுந் தொற்றான கொரோனா 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில், தொழில்நுட்பத்தில் எங்களை மிஞ்சுவது யாருமில்லை என்று சொல்லக்கூடிய வல்லரசு நாடுகளும் கொரோனா பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கின்றது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கிய சீனா மீது தீராத கோபத்தோடு இருக்கின்றன. கொரோனாவின் கோரப் […]
ஆம்பன் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தை புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. 72 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உள்ளன. இதேபோல் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் புயல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், ஆம்பன் புயலின் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று காலை […]
பொருளாதார திட்ட மதிப்பு ரூ. 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி மட்டுமே என ப.சிதம்பரம் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5ம் கட்டங்களாக மத்திய […]
மாநிலத்திற்கு வர வேண்டியதை கேட்டால் எஜமானர் மனசு கோணி விடுமென்ற பயம் என தமிழக அரசு குறித்து கமலஹாசன் விமர்சனம் செய்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 20 லட்சம் கோடி […]