Categories
தேசிய செய்திகள்

விலை கட்டுக்குள் வந்துடுச்சு…! உங்க இஷ்டப்படி செய்யுங்க…. மத்திய அரசு உத்தரவு…!!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து விதமான வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெங்காயம் உற்பத்தி குறைந்து, விலை அதிகரித்ததால் கடந்த செப்டம்பர் மாதம் வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. தற்போது விலை ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து, வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிக்கைகள் எழுந்தன. அதன்படி வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஓட்டுநர் வேண்டாம்…! ரயில் தானாக போகும்… இன்று மோடி தொடங்கி வைக்கிறார் ..!!

நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் தேவைப்படாத தானியங்கி முறையில் செயல்படும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் திரு. நரேந்திர மோதி டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார். தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சிபிடிசி எனப்படும் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் இது செயல்படுத்தப்படுகிறது. முந்தைய மெட்ரோ ரயில் மார்க்கங்களில் இயக்கப்படும் ரயில் சேவையை விட, இது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

அடடே..! செம மகிழ்ச்சி… நாடு முழுவதும் சூப்பர்…. வெளியான தகவல் …!!

இந்தியாவில் கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர், தினசரி கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 732 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது- 279 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, தினசரி கொரோனா பலி மற்றும் கொரோனா பாதிப்பு கனிசமாக குறைந்துள்ளதாக, சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில், குணமடைவோர் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக டீச்சர் சூப்பர்…! நீங்கள் தான் நாட்டுக்கு தேவை…. வெகுவாக பாராட்டிய மோடி …!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகளவில் சென்றடைய வேண்டும் என பிரதமர் திரு நரேந்‌திர மோதி தெரிவித்துள்ளார். மனதின் குரல் எனப்படும் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோதி, நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகளவில் சென்றடைய வேண்டும் என்றும், உள்ளூரில் தயாரிக்கும் பொருட்களின் தரத்தில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார். நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர் திரு மோதி, […]

Categories
தேசிய செய்திகள்

6 மாதத்துக்கு பிறகு…! நாடு முழுவதும் மகிழ்ச்சி… இப்படியே இருந்தா நல்லா இருக்கும் ..!!

இந்தியாவில் கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 300-க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 251 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்குப் பின்னர், கொரோனா பலி எண்ணிக்கை 300-க்கும் கீழே சென்றுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 95 புள்ளி ஏழு எட்டு சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில், குணமடைவோர் விகிதம் […]

Categories
தேசிய செய்திகள்

ரொம்ப பெருமையா இருக்கு…! இது ஒரு எடுத்துக்காட்டு… பிரதமர் மோடி கருத்து …!!

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக பிரதமர் திரு. நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை, ஜம்மு காஷ்மீரில் பிரதமர் திரு. நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் உள்ள ஒருசிலர் தன்னை எப்போதும் அவமதிப்பதாகவும், ஜனநாயகம் என்ற வார்த்தையையே கேள்விப்படாத அவர்கள், அது குறித்து தனக்கு பாடம் எடுப்பதாகவும், காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல் காந்தியை மறைமுகமாகச் சாடினார். […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக தோத்து போச்சு… இதான் நல்ல உதாரணம்…. சுட்டிக்காட்டும் அகிலேஷ் ..!!

புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம், மத்திய பா.ஜ.க. அரசின் தோல்விக்‍கு சிறந்த உதாரணம் என உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான திரு. அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். பணக்கார நண்பர்கள் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகள் பலனைடயும் […]

Categories
தேசிய செய்திகள்

இதான் சரியான நேரம்…! பாஜகவுக்கு எதிராக ஸ்கெட்ச்…. மம்தா பானர்ஜி அதிரடி …!!

மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு எதிராக மேற்குவங்கத்தில் மிகப்பெரிய பேரணி நடத்த எதிர்க்‍கட்சி தலைவர்களுக்‍கு முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்‍கு குறித்து, எதிர்க்‍கட்சிகள், பொய்களை பரப்புவதாகவும், விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாகவும், மத்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து, புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்களிடையே பொய்களை பரப்புவது, மத்திய பா.ஜ.க. அரசா? அல்லது எதிர்க்‍கட்சிகளா? என்று, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை கண்டன அறிக்‍கை வெளியிட்டுள்ளன. இதனிடையே, […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் பொய் சொல்கிறார்… சொல்வதில் உண்மையில்லை… விவசாயிகள் பதிலடி ..!!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் விவசாயிகளால் நடத்தப்படும் இந்த போராட்டம், அரசியல் சார்பற்றது என்றும் விவசாய சங்கங்களின் போராட்டக்குழு தெரிவித்துள்ளது. மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 31 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லா முதல்வரையும் வச்சு…! தமிழகத்தை பாராட்டிய மோடி… நெகிழ்ந்து போன எடப்பாடி ..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தமிழக அரசை பாராட்டியதை தமிழக முதல்வர் நினைவுகூர்ந்து நெகிழ்ந்து போனார். சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பேசிய தமிழக முதல்வர், நேற்றுமுன்தினம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்றிருந்தேன் அங்கே அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றபோது கொரோனா பாதிப்பு குறித்து கேட்டேன். அப்போது அவர்கள் இரண்டு நாட்களாக எங்கள் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறினார்கள் .அது நாம் மேற்கொண்ட கடுமையான முயற்சிக்கு கிடைத்த பலன். ஒவ்வொரு மாவட்டமாக தொற்று குறைக்கப்பட்டு தமிழகம் […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழி நடத்துகின்றனர் – பிரதமர் குற்றச்சாட்டு …!!

புதிய வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழி நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, மத்திய பாஜக அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புவதாகவும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும் மீண்டும் தெரிவித்தார். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளதாக குறிப்பிட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேற யாருகிட்டயும் பேசாதீங்க…. உங்க அட்வைஸ் தேவையில்லை…. விவசாயிகள் அதிரடி முடிவு ..!!

விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் பிற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. டெல்லியில் போராட்டம் நடத்தி வரக்கூடிய 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களுக்கு த்திய வேளாண் துறை அமைச்சகமானது கடிதம் எழுதி இருந்தது. அதில், உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அதே போல திருத்தங்களை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம். மேலும் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்துவதற்கு எழுத்துப்பூர்வமாக கையொப்பமிட்டு தருவதற்கும் தயாராக இருக்கிறோம். எனவே பேச்சுவார்த்தைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாடம் எடுக்குறீங்க.. நாடகம் நடத்துறீங்க… நேரில் பேச முடியாதா ? மோடிக்கு வேண்டுகோள் ..!!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடியால் பேச முடியுமா ? என திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில்  பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவர்களை வரவழைத்து இந்த சட்டம் நல்ல சட்டம் என வகுப்பு எடுக்கிறது.போராடுபவர்களுடன் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற நாடகத்தை மத்திய அரசு நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த சட்டத்தால் என்ன நன்மைகள் என்று தொழிலதிபர் மாநாட்டில் பேசுகின்ற பிரதமர் விவசாயிகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூப்பரா பேசி இருக்கீங்க…! மகிழ்ச்சியா இருக்கு… மோடிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்… ஏன் தெரியுமா ?

பிரதமர் மோடி பேசியது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பாராட்டினார்.  நேற்று நடந்த திமுக பிரச்சார கூட்டத்தில் முக.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பாராட்டினார். திண்டுக்கல்லில் நடந்த சிறப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,  கடந்த 11ஆம் தேதி மகா கவி பாரதியாரின் பிறந்த நாள் விழா. நமது பிரதமர் மோடி அவர்கள் பாரதியாரை புகழ்ந்து பேசியிருக்கிறார். அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என […]

Categories
தேசிய செய்திகள்

டிரம்ப்பால் முடியல… மோடியால் முடிந்தது… ஜெ.பி.நட்டா புகழாரம்…!!!

அமெரிக்காவில் டிரம்ப் செய்ய முடியாததை இந்தியாவின் பிரதமர் மோடி திறம்பட செய்துள்ளார் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஆட்டம் காட்டி வருகிறது. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. உலக நாடுகளில் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

பாஜகவில் இணையும் ”லேடி சூப்பர் ஸ்டார்”…. அடி தூள் …!!

நடிகை விஜயசாந்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து பல பிரபலங்கள் பாஜகவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் நடிகர் – நடிகைகள் பாஜகவில் இணைந்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் விஜய சாந்தி […]

Categories
தேசிய செய்திகள்

கோட் சூட் போட்டு கொள்ளையடிக்கும் அரசு… மோடியை சாடிய ராகுல் காந்தி …!!!

நாட்டில் விவசாயிகளிடம் கோட் சூட் போட்டுக் கொண்டு பொய்களை பரப்பும் அரசு உள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் எடப்பாடியுடன், பிரதமர் மோடி பேச்சு …!!

புரெவி புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி எடப்பாடி பழனிசாமியிடம்  பிரதமர் நரேந்திர மோடி விசாரித்தார்.மேலும் புரெவி புயல்  பாம்பனில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து கொண்டுஇருக்கிறது.இலங்கையின் முல்லைத்தீவுவை  30 கிலோமீட்டர் தொலைவில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும்  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி: அரசு அதிரடி – செம சூப்பர் அறிவிப்பு …!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதில் மண் கோப்பைகளில் இனி தேநீர் விற்பனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த முயற்சி பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவுக்கு ரயில்வேயின் பங்களிப்பாக இருக்கும்.  மண் கோப்பைகள் சுற்றுசூழலை காக்கின்றன. மேலும் லட்சக்கணக்கான மக்கள் இதன் மூலம் வேலை வாய்ப்பை பெற முடியும் என தெரிவித்துள்ளார். மத்திய அரசு சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து கொண்டிருக்கின்றனது.  […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனி தமிழ் மொழி தான் படிக்கணும் – மத்திய அரசு அதிரடி முடிவு ….!!

தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்க ஐஐடி மற்றும் சில அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி துறையை கூறியிருக்கிறது. தாய் மொழியில் தொழில்நுட்ப படிப்பு மத்திய அரசின் முக்கியமான கொள்கை முடிவுகளில் ஒன்றாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொழில்நுட்ப படிப்புகள் ( இன்ஜினியரிங் மற்றும் மற்ற தொழில்நுட்ப படிப்புகள்)  தாய்மொழியில் கற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்தி மொழியில் இந்த கோரிக்கை என்பது நீண்ட நாட்களாக இருந்து வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: பாஜகவில் இணையும் ”லேடி சூப்பர் ஸ்டார்”…. அடி தூள் ..!!

மத்தியில் இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து பல பிரபலங்கள் பாஜகவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் நடிகர் – நடிகைகள் பாஜகவில் இணைந்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் விஜய சாந்தி மீண்டும் பாஜகவில் இணைய உள்ளார். ஏற்கனவே பாஜகவில் இருந்த அவர் டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். […]

Categories
தேசிய செய்திகள்

மாநில முதல் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து சில மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்துமாநிலங்களுக்கு பல்வேறு உதவிகளும் வழங்கி வருகிறது.கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி அடிக்கடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டங்களில் மாநிலங்களின் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறியும் அவர், அவற்றில் இருந்து மக்களை […]

Categories
மாநில செய்திகள்

பிரதமருடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை…!!

தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். நாட்டில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இதே போல்,  நோய் தொற்று குறைந்த மாநிலங்களில் தடுப்பு மருந்துகள் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாமே மாறிக்கிட்டு இருக்கு…. நாம் ஒன்றாக போராட வேண்டும்…. பிரதமர் மோடி அழைப்பு …!!

காலநிலை மாற்றத்தை எதிர்த்து ஒன்றாக போராட, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் நமது கவனத்தை செலுத்த வேண்டியது முக்கியமான ஒன்று என்றும், காலநிலை மாற்றத்தை ஒருங்கிணைந்து எதிர்த்து போராட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி-20 உச்சிமாநாட்டில், காணொலி மூலம் கலந்து கொண்டு பேசிய அவர், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்த, கோடிக்கணக்கான செல்வில் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இந்தியா பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை பூர்த்தி செய்து வருவதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடுமையா உழைக்கிறாரு.. ஆற்றலோட செயல்படுறாரு… பாராட்டு மழை பொழிந்த OPS ..!!

பிரதமர் மோடி கடுமையாக உழைக்கின்றார், ஆற்றலோடு செயற்படுகின்றார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார். கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மாண்புமிகு அம்மா அவர்களது அரசு அனைத்து துறைகளிலும் ஏராளமான சரித்திர சாதனைகளை படைத்து, தமிழக மக்களுடைய பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. அம்மாவின் அரசு கோடிக்கணக்கான தமிழக மக்களை நம்பி கழகத் தொண்டர்களின் மீது நம்பிக்கை வைத்து, மக்களுடன் பயணித்து, மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டுவதில் இந்தியாவிலேயே முன்னிலையில் உள்ளது என்பதை நாம் நன்றாகவே அறிவோம். […]

Categories
உலக செய்திகள்

”வேணாம்னு” உதறிய அமெரிக்கா… கையிலெடுத்த சீனா… இந்தியாவை வீழ்த்த சூழ்ச்சி …!!

அமெரிக்கா ராணுவம் பயன்படுத்த தயங்கிய ஒரு ஆயுதத்தை சீனா இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு அண்டை நாடாக இருந்து வந்த சீனா, சமீப காலமாக மோதல் போக்கை கையாண்டு வருகிறது. எல்லை பிரச்சனையை காரணம் காட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வருவதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் பதினைந்தாம் தேதி லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைந்த சீன படையினரை விரட்டி அடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

275 கிமீ TO 350 கிமீ தூரம்…. ரொம்ப கஷ்டமா இருக்கு… பக்கத்துல வையுங்க… டெல்லிக்கு பறந்த கடிதம் …!!

ஒருங்கிணைந்த முதுநிலை மருத்துவ படிப்புகளான INI – CET தேர்வு மையம் தொடர்பாக   பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி, போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், நாக்பூர், ராய்ப்பூர் எய்ம்ஸ், நிமான்ஸ், ஜிப்மர் போன்ற நிறுவனங்களில்  6 வருடம் கால அளவு கொண்ட ஒருங்கிணைந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கு INI – CET என்றழைக்கப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் தேர்வு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது …!!

பிகார் மாநிலத்தில் நடைபெற்ற 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதனால் ஒவ்வொரு தொகுதிகளிலும் காவல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்திய மக்களே…! அமெரிக்கர்கள் திருந்திவிட்டார்கள்… இதான் நாட்டுக்கு நல்லது… பாஜக மீது சிவசேனா தாக்கு …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியுற்றதிலிருந்து, இந்தியா பாடம் கற்றால் நாட்டிற்கு நல்லது என சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர். ட்ரம்பைத் தேர்ந்தெடுத்த தவறை அமெரிக்க மக்கள் நான்கு ஆண்டுகளிலேயே சரிசெய்தனர். அவரால் ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. டிரம்பின் தோல்வியிலிருந்து நாம் எதையாவது கற்றுக்கொள்ள முடிந்தால், அது நாட்டிற்கு நல்லது. அமெரிக்காவில் வேலையின்மை கொரோனா பாதிப்பைவிட அதிகளவு உள்ளது. இதற்கு ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி உலகிற்க்கே வழிகாட்டுகிறார்…! நம்மை கண்டு பயப்படுறாங்க… கெத்தாக பேசிய எல்.முருகன் ..!!

பிரதமர் மோடி உலகிற்க்கே வழிகாட்டுகின்றார் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று வேல் யாத்திரை தொடங்கியது. வேல் யாத்திரைக்கு தடை வித்த தமிழக அரசு பாஜகவினரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். இந்த வேல் யாத்திரை பயணத்தில் தொண்டர்களிடம் பேசிய பாஜக தலைவர் எல். முருகன் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி உலகத்திற்கே வழி காட்டியாக இருக்கின்றார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமையின் கீழ் இன்றைக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ரொம்ப மோசமா போகுது…. ட்விட் போட்ட மோடி…. பீகாரில் மந்தமான வாக்குப்பதிவு …!!

பீகார் மாநிலத்தில் தொடங்கியுள்ள 3ஆம் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 7.09 % வாக்குகளே பதிவாகியுள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை 9 மணி வரை 7.09% வாக்குகள் மட்டுமே தற்போது பதிவாகி இருக்கிறது. என்றால் வட மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலவும் கடும் குளிர் உள்ளிட்ட காரணமாக மிகக் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகி இருக்கிறது. குறிப்பாக நக்சலைட் ஆதிக்கம் மிகுந்த வால்மீகி நகர், ராம் நகர் உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

நீங்க ரொம்ப கிரேட்… உலகத்துக்கே உதவுனீங்க ? கலக்கிய மோடி சர்க்கார்…. குவியும் பாராட்டுக்கள்…!!

கொரோனா  போராட்டத்தில்  உதவியதற்காக கனடாவின் வெளியுறவு அமைச்சர் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா பரவிவரும் சூழலும் இந்தியா உலக முழுவதிலும் தேவைப்படும் மருந்துகளில் முக்கிய பங்கு வகிப்பதாக அமைந்தது என அமைச்சர் பிரான்ஸ் கோயிஸ் பிலிப் கூறியுள்ளார். கனடா தலைமையிலான கொரோனா தொடர்புடைய அமைச்சர்களின் ஒருங்கிணைப்புக் குழுவில் இந்தியா முதன்முறையாக இணைந்திருக்கும் சூழலில், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இந்த சம்பவம் தொடர்பாக கன்னட வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிப் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதத்தில் கனடாவிற்கு இந்தியா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்கின – பிரதமர் மோடி…!!

புல்வாமா தாக்குதலில் பாதுகாப்பு படையினரின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தி எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தை ஒட்டி குஜராத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். காஷ்மீர் விவகாரம் வடகிழக்கு மாநில பிரச்சனைகள்  […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நவம்பர் 1முதல்…. எவை இயங்கும் ? எவை இயங்காது ?

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அக்டோபர் மாதத்திற்கான பொதுமுடக்கம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டது. தற்போது அக்டோபர் மாதம் நிறைவடைகிறது. எனவே நவம்பர் மாதத்திற்கான தளர்வுகள் என்ன என்பதை அறிவிக்க வேண்டும். தற்போது மத்திய அரசு என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்?  நவம்பர் 30-ஆம் தேதி வரை நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் இன்று முதல் – பிரதமர் மோடி மாஸ் அறிவிப்பு …..!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார சிக்கல், மக்களின் வாழ்வாதாரத்தை சரி செய்வதற்கு மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், சலுகைகளை வழங்கி வருகிறது. ஏற்கனவே மத்திய அரசு சார்பாக பல நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று ஒரு திட்டத்தை அறிவிக்கின்றார். நாடு முழுவதும் உள்ள 300000 சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமர் மோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் அடிப்படையில் பயனாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.24,000,00,00,000 சேமிப்பு…. மாஸ் காட்டும் மோடி அரசு… கெத்து காட்டும் பாஜகவினர் …!!

பிரதமர் மோடி…. இந்தியாவின் இயற்கை எரிபொருள்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எரிசக்தி துறையில் உலகில் மூன்றாவது சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும். எல்இடி விளக்குகளின் பயன்பாட்டால் இந்தியா ரூபாய் 24 ஆயிரம் கோடி வரை சேமித்து உள்ளது. அதோடு நாடு முழுவதும் தட்டுப்பாடு இன்று எரிவாயு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் இந்த கருத்தை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் கொண்டாடி வருகின்றனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடி, அம்பானி, அதானி உருவ பொம்மைகளை கொளுத்தி தசரா கொண்டாட்டம்…!!

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம் முழுவதும் பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கௌதம்  அதானி ஆகியோரின் உருவ பொம்மைகளை கொளுத்தி விவசாயிகள் தசரா பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பதின்ராவில்  உள்ள  பெரிய விளையாட்டு மைதானத்தில் பாரதிய கிசான் யூனியன் தலைமையில் திரண்ட விவசாயிகள் விவசாய சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். விலை நிலங்களை பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை அவர்கள் தீயிட்டு கொளுத்தினர். உருவ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ரொம்ப கோவமா இருக்காங்க…. இது நாட்டுக்கு நல்லதல்ல… மோடி உடனே பேசுங்க …!!

பஞ்சாப் விவசாயிகளின் குரலை பிரதமர் மோடி கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி விவசாயம் தொடர்பான மூன்று சட்ட மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும், விவசாயிகளை வஞ்சிக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இந்த சட்டம் ஆதரவாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடு தழுவிய போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்தன. இந்த நிலையில்தான் நேற்று நடைபெற்ற தசரா விழாவை […]

Categories
தேசிய செய்திகள்

70-வது “மனதின் குரல்” நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்…!!

பிரதமர் திரு நரேந்திர மோதி மன்கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்ற உள்ளார். அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் எனப்படும் மன்கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் திரு பிரதமர் நரேந்திர மோடி உரையாடுவது வழக்கம். அதன்படி அக்டோபர்  மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று எழுபதாவது மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார். காலை 11 மணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒரே மோடி, மோடி தானா ? நான் கண்ணுக்கு தெரியலையா ? ராகுல் காந்தி வேதனை …!!

24 மணி நேரமும் தொலைக்காட்சிகளில் மோடியை மட்டும் காட்டுகிறார்கள் என ராகுல் காந்தி வேதனையை தெரிவித்துள்ளார். நேற்று பீகார் மாநில தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, என்னுடைய பேச்சு இப்போது நடந்து கொண்டிருக்கிறது, மோடியும் பேசுவார். நீங்கள் தொலைக்காட்சியை பாருங்கள். உங்களுக்கு தொலைக்காட்சியில் காங்கிரஸ் தெரியாது, ராகுல்காந்தி தெரியமாட்டார், உங்களுக்கு தொலைக்காட்சியில் வெறும் நரேந்திர மோடி மட்டுமே தெரிவார். நீங்கள் யோசித்து இந்த கேள்வி கேளுங்கள் 24 மணி நேரமும் நரேந்திர மோடியை ஏன் காண்பித்துக் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

24 மணி நேரமும் மோடி தானா ? ஏன் இப்படி செய்யுறீங்க…. கொஞ்சம் என்னையும் காட்டுங்க …!!

24 மணி நேரமும் பிரதமர் மோடியை மட்டும் டிவியில் காண்பிக்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று பீகார் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறுகிறார். இவ்வளவு நாள் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது கூறுகிறீர்கள் 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று. கடந்த ஆறு வருடங்களாக என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ? தேர்தல் வரும்போது வாக்குறுதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

என் பேச்சை கேட்காதீர்கள்…. நீங்களே போய் டீ கடைல கேளுங்க…. மக்களுக்கு எடுத்துக்கொடுத்த ராகுல் …!!

நீங்களே டீ கடை போய் மோடி என்ன செய்தார் என்று கேளுங்கள் என பீகார் மக்களிடம் ராகுல் காந்தி பேசியுள்ளார். நேற்று பீகார் மாநில தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் நிதீஷ்குமார் அரசாங்கம் எப்படி இருக்கின்றது ? என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொதுச் சந்தை, ஜிஎஸ்டி இவை இரண்டும் பீகார் மற்றும் இந்தியாவை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்டது என்று கூறப்பட்டது. என்னுடைய இந்தியா எப்படி இருக்கும் என்று நீங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்…!!

பீகாரின் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பீகாரின் சசாரம் பகுதிகளில் உள்ள பயாநோ மைதானத்தில் பிரச்சாரம்  பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி மற்றும்  முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி பீகார் சமீபத்தில் தனது 2 மகன்களையும் இழந்தது என்றார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களால கேட்க முடியுமா…. மோடிக்கு துணிச்சல் இருக்குதா ? ஜோதிமணி காட்டம் …!!

இந்தியாவை அசுத்தமான நாடு என்ற அமெரிக்க அதிபரை பிரதமர் மோடி கண்டிப்பாரா என மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க தேர்தல் வருவதையொட்டி இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கின்றது. இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான ஜோ பிடனும், டொனால்ட் ட்ரம்ப்பும் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த விவாதத்தின் போது பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவைப் பாருங்கள், அது இழிவானது. ரஷ்யா – இந்தியாவை பாருங்கள் அது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுவரொட்டி கிழிப்பு -பா.ஜ.க. நிர்வாகி மீது தாக்குதல்…!

பிரதமர் மோடியின் சுவரொட்டி கிழிப்பு விவகாரம். சென்னை அயனாவரத்தில் பிரதமர் மோடியின்  சுவரொட்டி கிழிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி திமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சசிகுமார் ஆயுதங்களால் தாக்கி உள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சமரசம் செய்து வைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த  தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதை அடுத்து தப்பிச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் சசிகுமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

தென்கொரிய அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை…!!

தென்கொரிய அதிபர் மூஞ்சே உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் சர்வதேச விவகாரங்கள் குறித்து உரையாடினார். தென் கொரிய குடியரசின் அதிபர் முஞ்சே உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நேற்று உரையாடினார். அப்போது கொரோனா பெரும் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளின் முன்னேற்றம் சர்வதேச மதிப்பு சங்கிலிகலின் தற்போதைய பரவல் வளர்ச்சி சார்ந்த மற்றும் விதிமுறைகள் அடிப்படையிலான சர்வதேச வர்த்தக முறை மற்றும் உலக வர்த்தக அமைப்பின் முக்கியப் பங்கு ஆகிய சர்வதேச விஷயங்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ.3,737,00,00,000 ஒதுக்கீடு…. 30,67,000பேர் பயன்….மத்திய அரசு அதிரடி அறிவிப்பு …!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவேற்கும் இந்த சூழ்நிலையில் பண்டிகை காலம் உடனடிபோனஸை ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறது. இதன் காரணமாக 30.67 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், மத்திய அரசுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டம் …!!

புதிய வேளாண் மசோதாக்களை தர வலியுறுத்தி பஞ்சாப் சட்டமன்றத்திற்குள் படுத்து உறங்கி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளிலும்  அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாபில் முதல்வர் அமரிந்தேர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு புதிய சட்டத்தை கொண்டு வரவுருக்கிறது . […]

Categories
தேசிய செய்திகள்

ஏழைகள் வாழ்க்கையில் சாதகமான மாற்றம் ஏற்பட வேண்டும்…!!

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையில் சாதகமான மாற்றம் ஏற்பட வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று தொடங்கியுள்ளது. இதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் நவராத்திரியின் முதல் நாளான இன்று மாத சைலபத்திரியை  வணங்குவதாக கூறி உள்ளார். அன்னையின் ஆசீர்வாதங்களுடன் நமது பூமி பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருக்கட்டும் என்று கூறியுள்ளார். ஏழைகள் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.75 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி…!!

உணவு மற்றும் வேளாண் அமைப்பான எஃப்ஏஓ-வின் 75 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75ஆம் ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்றார். நிகழ்ச்சியில் இந்தியாவுக்கும், எஃப்ஏஓ அமைப்புக்கும் உள்ள நீண்டகால தொடர்பை குறிக்கும் வகையில் 75 ரூபாய் சிறப்பு நினைவு நாணயத்தை மோடி வெளியிட்டார். அண்மையில் உருவாக்கப்பட்ட உயிர்சரி ஊட்டிய 8  பயிர்களின் […]

Categories

Tech |