லண்டன் – ஹீத்ரோ விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Icelandair மற்றும் Koreanair விமானத்திற்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் அவசர சேவைகள் சம்பவ இடத்தில் உள்ளன. புதன்கிழமை இரவு 8.06 மணிக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் இந்த சிறிய விபத்து நடந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விபத்தில், பயணிகள் யாருக்கும் காயங்கள் எதுவும் பதிவாகவில்லை. மேலும் விமானங்களில் வருகை அல்லது புறப்பாடுகளில் […]
Tag: மோதி விபத்து
திருவனந்தபுரம், கேரள மாநிலம்,கொல்லம் மாவட்டத்தில் நேற்று இரவு குளத்துப்புழா-மடத்தாரா சாலையில் அரசு பேருந்து மீது சுற்றுலா பேருந்துமோதி விபத்துக்கு உள்ளானது. இதில் 57 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த 42 பேர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயம் அடைந்த 15 பேர் கடக்கலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காயம் அடைந்தவர்களை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் மருத்துவமனையில் சென்று சந்தித்தார்.
சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் தந்தை, மகன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.