ஆசியாவிலேயே மிகப் பெரிய தந்தங்கள் கொண்ட யானைகளில் ஒன்றாக கருதப்படுவது போகேஷ்வரா என்ற பெயர் கொண்ட யானை. இந்த யானை கர்நாடக வனப்பகுதியில் உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளது. இந்த யானை கடந்த சில தினங்களாக கபினி வனப்பகுதியில் உடல்நலக்குறைவு காரணமாக சுற்றி திரிந்துள்ளது. இதற்கு வயது சுமார் 86 ஆகும். யானைக்கு உடல்நல குறைவாக இருந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tag: யானை உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ரயில்கள் மோதி 61 யானைகள் உயிரிழந்துள்ளது என்று ராஜ்யசபாவில் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் அடையாளம் காணப்பட்ட வழிதடங்களில் 37 யானைகள் மற்றும் அடையாளம் காணப்படாத வழித்தடங்களில் 24 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதை தடுப்பதற்காக ரயில்வே அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், வன அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கொண்ட குழு […]
கோவையில் இருந்து கேரளா மாநிலத்துக்குச் செல்வதற்கு, பாலக்காடு மாவட்டம் வழியாக ரயில் தண்டவாள வழித்தடம் செல்கிறது. இதன் வழியாக தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரயில்கள் கேரள மாநிலத்துக்குச் சென்று வருகின்றன. இந்நிலையில், நவக்கரை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று இரண்டு குட்டிகளுடன் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த மங்களூரில் இருந்து சென்னை செல்லும் […]
டயரில் தீ வைத்து யானையின் மீது வீசும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடியில் 40 வயதுடைய ஆண் யானைக்கு காது பகுதிகள் மற்றும் முதுகு பகுதிகளில் பயங்கர தீ காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜனவரி 20-ம் தேதியன்று சிகிச்சை பலனளிக்காமல் இந்த யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சுகுமார், ராஜேஷ், பாரத் ஜோதி போன்ற வனத்துறை மருத்துவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் யானைக்கு உடற்கூறு ஆய்வு […]