தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படங்களில் ஏதாவது ஒரு சிலவைகள் மட்டும் தான் மக்கள் மனதை வென்று வெற்றி பெறுகிறது. இதேபோன்று திரைப்படங்களில் இடம்பெறும் சில பாடல்களும் ரசிகர்களை அடிக்கடி முணுமுணுக்க வைக்கிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் யூடியூபில் ரசிகர்களால் அதிக அளவில் பார்க்கப்பட்ட டாப் 10 பாடல்களின் லிஸ்ட் குறித்து பார்க்கலாம். அதன்படி தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடல் […]
Tag: யூடியூப்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில, போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்த சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் விஜயின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா ஜிப்ரான் இசையில், […]
உலகில் உள்ள அனைவரும் யூடியூப் பார்த்து கொண்டிருக்கின்றனர். பொழுதுபோக்கை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்த யூடியூப், தற்போது வருமான வாய்ப்பையும் பயனர்களுக்கு வழங்கியது. யூடியூப் மூலம் பொழுதுபோக்கை ரசிப்பதோடு, வருமானத்தையும் கோடிக்கணக்கானவர்கள் பெற்று வருகின்றனர். இப்படிப்பட்ட யூடியூப்பில் தினசரி அப்டேட்டுகள் வந்துகொண்டே இருக்கிறது. வருமான வாய்பாக யூடியூப்பை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில், கண்டிப்பாக அந்த அப்டேட்டுகள் கட்டாயம் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதாவது யூடியூப் அப்டேட்டுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் எனில், யூடியூப் ப்ரீமியம் சந்தாதாரராக மாறவேண்டும். அவ்வாறு நீங்கள் […]
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு உலகம் நவீனமயமாகி விட்டது. செல்போன் மூலம் உலக நடப்புகளை மட்டும் அல்லாமல் சமையல் உட்பட நமக்கு என்னென்ன தேவையோ அதை யூடியூபில் எளிதில் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த அளவிற்கு பலரும் யூடியூப் வலைதளத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை வீடியோக்களாக தொகுத்து யூடியூப் சேனல் தொடங்கி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது. இந்நிலையில் யூடியூப்பில் இனி 4K […]
போலீஸ் தேர்வுக்கு யூடியூப் வழியாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசு துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்த பயிற்சியின் தன்மையை விரிவுபடுத்தவும், மூலை முடுக்கெல்லாம் உள்ளவர்களுக்கு சென்றடைய வேண்டுமென்ற எண்ணத்திலும் இந்த கல்லூரியின் சார்பாக youtube சேனல் ஆரம்பிக்கப்பட்டு அதில் பயிற்சி காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது […]
இந்த ஆண்டும் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரை உலகளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது. பிரதமர் மோடி நேற்று செங்கோட்டைக்கு கம்பீரமாக வந்து முப்படைகளின் மரியாதையை ஏற்ற வீடியோவும் , இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றிய வீடியோவும் யூடியூப்பில் முதல் இரண்டு டிரெண்டிங் வீடியோக்களாக இன்று இருந்தன. பிரதமரின் அதிகாரபூர்வ யூடியூப் தளத்தில் இந்த வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக பிரதமர் தேசிய கொடி ஏற்றும் வீடியோவை 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதை தவிர […]
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசான திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் அரபிக் குத்து பாடல் மே 19ஆம் தேதி வெளியானது. இந்த வீடியோ பாடல் தற்போது இசை பிரிவுக்கான இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் நான்காம் […]
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் செல்வராகவன் ஆவார். இவர் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே உட்பட பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இப்போது தனுஷ் நடிப்பில் “நானே வருவேன்” திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். தற்போது இவர் நடிப்பிலும் கவனம் செலுத்தியுள்ளார். அந்த வகையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் “சாணிக் காயிதம்” படத்தில் செல்வராகவன் நடித்து முடித்து இருக்கிறார். இதில் செல்வ ராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் […]
சென்னையில் லாரி மோதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த யூடியூபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த நெப்போலியன் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் டிசைனராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நெப்போலியன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே நெப்போலியன் பலியானார். தகவல் அறிந்த காவல்துறையினர் […]
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வரும் ஏ.ஆர்.ரகுமான், தற்போது புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலை உருவாக்கி இருகிறார். இதனை துபாய் எக்ஸ்போ-வில் மார்ச் 24ஆம் தேதி ரகுமானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்டதோடு யூடியூப் சேனலிலும் வெளியிட்டு இருக்கிறார்கள். உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழின் புகழை குறிக்கும் வகையில் ‘மூப்பில்லா தமிழே தாயே’ இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது. பழங்காலத் தமிழ்ப் பண்பாட்டையும் தமிழின் பெருமையை உணர்த்தும் வகையிலும் இளைய தலைமுறையினரைத் […]
பாமக இளைஞரணி தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2017-18 ஆம் ஆண்டு மகப்பேற்றின் போது தாய்மார்கள் இறக்கும் விகிதத்தில் தமிழகம் 3ஆம் இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பல வருடங்களாக கேரளா, மராட்டியத்துக்கு அடுத்தபடியாக இருந்த தமிழகம் தற்போது தெலுங்கானாவுக்கு பின் சென்றிருப்பது கவலையளிக்கிறது. சென்ற 2016-2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தாய்மார்கள் இறப்பு விகிதம் (1 லட்சம் மகப்பேறுகளில்) கேரளாவில் 13, மராட்டியத்தில் 8, ஆந்திரம் – தெலுங்கானம் தலா […]
யூடியூபை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு வழி முறைகள் தேவை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. யூடியுப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர். நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் பற்றி கடுமையாக விமர்சித்த வழக்கில் சாட்டை துரைமுருகன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. […]
இந்திய பிரதமரான நரேந்திர மோடி, யூடியூபில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, யூடியூப் சேனலில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். உலக தலைவர்களிலேயே, யூட்யூப் தளத்தில் அதிகமான சப்ஸ்கிரைபர்களை பெற்று நரேந்திர மோடி முதலிடத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2007 ஆம் வருடத்தில் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த சமயத்தில், நரேந்திர மோடி யூடியூப் சேனலை தொடங்கியிருந்தார். இவரின் சேனலில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் நடந்த நேர்காணல் […]
பெங்களூரில் வசித்து வரும் தீரஜ் என்ற இளைஞர் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் OLYMP ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து யூடியூபில் வங்கியில் திருடுவது எப்படி ? என்று வீடியோ பார்த்து ஒத்திகை செய்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து வங்கியில் ரூ.80 லட்சம் பணத்தை திருடியுள்ளார். பின்னர் அந்த பணத்தை வைத்து கடனாளிகளுக்கு ரூ.40 லட்சம் வரை கடனை அடைத்துள்ளார். ஆனால் இறுதியாக கடன் கொடுக்கும் போது காவல்துறையினரிடம் வசமாக சிக்கிவிட்டார். இந்த சம்பவமானது […]
இந்தியாவில் யூடியூப் பிரீமியம் மட்டும் யூடியூப் மியூசிக் பிரீமியத்திற்கான வருடாந்திர திட்டங்களை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக பயனர்கள் 12 மாத தொடர் சந்தாவிற்கு முன்பணம் செலுத்த முடியும். அறிமுக சலுகையாக ஜனவரி 23ஆம் தேதி வரை தள்ளுபடி விலைகளை கூகுள் அறிவித்துள்ளது. யூடியூப் பிரீமியத்திற்கான வருடாந்திர சந்தா ரூ.1,159 ஆக நிர்ணயம் செய்துள்ளது. யூடியூப் மியூசிக் பிரீமியத்தை ரூ.889- க்கு பயனர்கள் பெறமுடியும். அதுமட்டுமல்லாமல் பயனர்கள் தங்களின் தற்போதைய சந்தாவை ரத்து செய்து விட்டு […]
யூடியூபில் எவ்வளவு நன்மை தரும் விஷயங்கள் இருக்கிறதோ அதே அளவு அதை விடவும் அதிகளவு தீமை பயக்கும் விஷயங்களும் இருக்கின்றன. அதாவது, தவறான வீடியோக்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அரசுக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை வைப்பவர்களையும், வரம்புக்கு மீறி பேசும் நபர்களையும், இந்திய இறையான்மையை சீர்குலைக்கும் வகையில் கருத்துகளை பதிவிடுவோரையும் கைது செய்யும் நடவடிக்கை நடந்து வருகிறது. தீங்கு விளைவிக்கும் நோக்கில் அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்தி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் யூடியூப் […]
இங்கிலாந்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பயிற்சி பெற்ற விமானி ஒருவர் கொரோனா காலகட்டத்தில் யூடியூப்பை பார்த்து சொந்தமாக 4 பேர் பயணிக்கும் விமானம் ஒன்றை உருவாக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் அசோக் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பயிற்சி பெற்ற விமானியாக திகழ்கிறார். இந்நிலையில் அசோக் கொரோனா காலகட்டத்தில் யூடியூப்பை பார்த்து தன் மனைவியுடன் சேர்ந்து 4 பேர் பயணிக்கும் வகையிலான விமானம் ஒன்றை சொந்தமாக […]
அமெரிக்காவில் வங்கி வேலையை ஒருவர் விட்டுவிட்டு யூடியூப் மூலமாக மாத வருமானமாக பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார். கலிபோர்னியாவில் உள்ள sanfrancisco நகரில் Ben Chon என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல வங்கி ஒன்றில் முதலீட்டு ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு Ben Chon தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தனது தாயை கவனித்துக்கொள்ள Ben Chon வேலையை விட்டுவிட்டார். இதனையடுத்து […]
அரக்கோணம் அருகே யூ-டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நெடுமொழி கிராமத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில் அவரது மனைவி கர்ப்பமாக கடந்த 13ம் தேதி பிரசவ நாள் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் மனைவிக்கு பிரசவ வலி […]
ப்ளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் யூடியூப் பார்த்து தனக்கு தானே பிரசவம் செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்த மாணவியின் தந்தை அந்த ஊரின் அருகில் உள்ள ஊரில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாயாருக்கும் பார்வை குறைபாடு உள்ளது. மாணவியின் வீட்டின் அருகே 21 வயதான […]
யூடியூப் நிறுவனமானது, கொரோனா தடுப்பூசியை எதிர்த்து வெளியிடப்படும் வீடியோக்கள் உடனே நீக்கப்பட்டுவிடும் என்று எச்சரித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும், ஒரு சில நாடுகளில் மக்கள் தடுப்பூசியை எதிர்க்கிறார்கள். அமெரிக்க நாட்டில் தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யூடியூப் சேனலில் வீடியோக்கள் வருகிறது. இதனை தடுப்பதற்காக, யூடியூப் நிறுவனமானது, புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன் படி, தடுப்பூசிக்கு எதிரான வீடியோவை யாரேனும் வெளியிட்டால், அது உடனடியாக அழிக்கப்பட்டுவிடும் என்று […]
ஊரடங்கு காலத்தில் காணொளி மூலம் விரிவுரைகளை வழங்கியதால் யூடியூப் தனக்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுத்ததாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலை பணிகளை ஆய்வு செய்த மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி, மத்திய பிரதேசத்தின் ரட்லம் என்ற இடத்தில் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் நான் இரண்டு வேலைகளை செய்தேன். அதில் ஒன்று நான் […]
கரூர் மாவட்டத்தை சேர்ந்த தந்தை மகன் இருவரும் சேர்ந்து யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணத்தினால் குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றன. பலரும் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த தந்தை […]
மும்பையில் ஒரு இளைஞன் தனது மனைவியை யூடியூபில் வீடியோ பார்த்து அதன்படி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள விரார் கிழக்கில் கோப்சர்பாடா என்ற பகுதியில் வசித்து வருபவர் 35 வயதான அஜய் ஹர்பஜன்சிங். இவருடைய மனைவி ரூபி. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ரூபி ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் பிறந்த நிலையில் அவரது கணவரை விட்டுவிட்டு அஜய் ஹர்பஜன் சிங்கை திருமணம் செய்து வாழ்ந்து கொண்டு வருகிறார். அஜய்க்கும், […]
டெல்லியை சேர்ந்த நபரொருவர் ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் யூடியூப் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது சேனலில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளன. இவரது வீடியோக்கள் பல லட்சம் வியூஸ்களை அள்ளிக் குவிக்கும். சமீபத்தில் இவர் தனது நாய்க்குட்டியை ஹீலியம் பலூனில் கட்டி பறக்க விட்டு அதை வீடியோவாக எடுத்து அவரது சேனலில் அப்லோட் செய்து இருந்தார். அந்த […]
ஒரு வீடியோவில் கட்டிலுக்கு அடியில் குழந்தை இழுத்து செல்வது போன்று காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஒரு குழந்தை தனது படுக்கைக்கு அடியில் இழுத்து செல்வது போல் தோன்றும் ஒரு அமானுஷ்ய வீடியோ வைரலாகி வருகிறது. இது அனைவரையும் பயமுறுத்தும் வகையில் உள்ளது. அவரது தந்தை ஜோஸ் டீன் இதனை அமானுஷ்ய செயல்பாடு என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நள்ளிரவில் சிறுமி தனது பொம்மைகளுடன் விளையாடும்போது […]
யூடியூப் வீடியோ விற்காக 1.5 லிட்டர் வோட்காவை பருகிய தாத்தா நேரலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்டிபென்டென்ட் பத்திரிக்கையில் ஒரு அறிக்கையில் தாத்தா என்று அழைக்கப்படும் ரஷ்ய மனிதர் நேரலையில் ஓட்கா குடிக்க ஒரு யூடியூபர் பணம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த சவாலை யூரி துஷெச்ச்கின் என்ற 60 வயது நிறைந்த நபர் இவரின் பணத்திற்காக ஆசைப்பட்டு ஓட்காவை குடிக்க சவால் விடுத்தார். இதனை நேரில் நேரலையில் ஒளிபரப்பு கொண்டிருக்கும்போது 1.5 லிட்டர் வோட்காவை […]
யூடியூப் என்பது அனைவரிடமும் பொதுவாக உள்ள செயலி. எந்த வீடியோ பார்க்கவேண்டும் என்றாலும் நாம் முதலில் தேடுவது யூடுயூப்பைத் தான். ஆனால் அவற்றில் இருந்து வீடியோக்களை நாம் அவ்வளவு எளிதாக பதிவிறக்கம் செய்யமுடியாது. அதனை பதிவிறக்கம் செய்வதற்கு நாம் மூன்றாம் நபர் இணையதளத்தையே நாடுவோம். அதிலும், ஒவ்வொரு வீடியோவாகத் தான் பதிவிறக்கம் செய்யமுடியும். உங்களது ப்ளே லிஸ்டில் உள்ள அனைத்து வீடியோக்களையும் ஓரே சமயத்தில் பதிவிறக்கம் செய்ய சில வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். முதலில் 4k video Downloaderஐ […]
பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய காணொளி காட்சி பாஜகவின் யூடியூப் பக்கத்தில் 4500 க்கும் அதிகமான முறை டிஸ் லைக் செய்யப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த கட்டுப்பாடுகளில் தற்போது தளர்வுகள் விடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் ஊரடங்கு தளர்வு ஐந்தாம் நடவடிக்கை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி நேற்று மாலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அந்த […]
இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் திரு ஜாகிர் நாயக்கின் பீஸ் செயலி மற்றும் அவரது யூடியூப் சேனலுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இஸ்லாமிய மத பிரச்சாரகர் திரு சாகிர் நாயக் தனது பீஸ் டிவி மூலம் மத வெறுப்புணர்வை தூண்டும் செயலில் ஈடுபட்டு வந்ததால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த டிவி ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பீஸ் ஆப் என்ற மொபைல் போன் செயலி மூலம் மத வெறுப்புணர்வையும் இந்தியாவுக்கு எதிரான […]
யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறவன் குறத்தி நடனம் ஆபாச நடனங்களாக சித்தரிக்கப்படுவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் ஆபாசம் நடனத்திற்கு குறவன் குறத்தி ஆட்டம் என்று குறிப்பிட்டு அதை பதிவேற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தடுக்க வலியுறுத்தி குறமகள் வள்ளி பெருந்தகை பாசறை மற்றும் வனவேங்கைகள் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து புகார் அளித்தவர்கள் கூறுகையில் “கிராமிய […]
இசை அமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் இசையமைத்து வெளிவந்த பாடல்களான ஹே சின்ன மச்சான், ஹரஹர மஹாதேவகி போன்ற பாடல்கள் எத்திசையிலும் அனைவராலும் விரும்பி கேட்கப்பட்டு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூபில் வெளியாகிய இவ்விரண்டு பாடல்களும் 1.33 கோடி பார்வையாளருக்கு அதிகமாக ரசித்து பார்க்கப்பட்டு சிறந்த சாதனையை படைத்துள்ளது. இப்பாடல்களில் ரகவா லாரன்ஸ் ,பிரபுதேவா ஆகிய இருவரும் நடனமாடியது இந்த சாதனைக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது என்று கூறப்படுகிறது.அம்ரிஷ் கணேஷ் இசையமைப்பில் இன்னும் பல ஹிட் பாடல்கள் […]
வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் யூடியூப்பை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த புதிய வசதிகளை யூடியூப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கோவிட்-19 பரவல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் இணைய பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக யூடியூப், நெட்பிளிக்ஸ் போன்ற ஸ்டிரீமிங் தளங்களின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. பயனாளர்கள் நீண்ட நேரம் ஸ்டிரீமிங் தளங்களில் தங்கள் நேரத்தைச் செலவழிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த யூடியூப் நிறுவனம், தற்போது பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளது. ‘Take a […]