Categories
உலக செய்திகள்

ஹைதி சூப்பிற்கு…. இந்தப் பட்டியலில் அங்கீகாரம் அளித்த யுனெஸ்கோ….!!!!

ஹைதி நாட்டின் சுதந்திரத்தை குறிக்கும் சூப்பை மனிதகுல கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்த்து ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது. பூசணிக்காயை பிரதானமாகக் கொண்டு காய்கறிகள், இறைச்சி, பாஸ்தா மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்படும் சூப், அடிமைத்தனம், காலனித்துவம், இனவெறியில் இருந்து தங்களை விடுவித்த சுதந்திரத்திற்கான அடையாளம் என்று ஹைதி தூதர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் மற்றும் சூப்பின் உரிமையை பெற்றது எங்களுடைய கௌரவம் மற்றும் கண்ணியத்தை குறிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |