மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில்அகாபல்கோ நகரில் நடைபெற்றது. இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி போட்டியில், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ரபேல் நடால் பிரிட்டனை சேர்ந்த கேமரூன் நார்ரி ஆகியோர் மோதினர் . இதில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கேமரூனை வீழ்த்திய நடால் சாம்பியன் பட்டம் வென்றார். அகாபல்கோவில் ரபேல் நடாலுக்கு இது 4-வது சாம்பியன் பட்டம் ஆகும். அதேசமயம் நடப்பு 2022-ம் ஆண்டில் ரபேல் நடாலின் 3-வது […]
Tag: ரபேல் நடால்
கொரோனா தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தெரிவித்துள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நடால் கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். இந்நிலையில் போட்டி முடிந்து நாடு திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டார். இதுகுறித்து ரஃபேல் நடால் தெரிவிக்கையில்,’ சில லேசான கொரோனா […]
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரபெல் நடாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பிரபல டென்னிஸ் வீரர் ரபெல் நடாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு பல போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்த அவர் கடந்த மாதம் அபுதாபியில் நடந்த உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கலந்து கொண்டார். தொடரில் அரையிறுதி வரை […]
டென்னிஸ் தொடர் தரவரிசை பட்டியலில் முன்னணி வீரரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் 6-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார் . டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்களுள் ஒருவரான ரபேல் நடால் இதுவரை 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இவர் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் இடம் தோல்வியடைந்தார் .அந்த ஆட்டத்தின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதில் காயத்தால் அவதிப்பட்ட அவர் தற்போது வரை டென்னிஸ் போட்டியில் […]
டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் விம்பிள்டன் ஓபன் தொடரிலிருந்து ரபேல் நடால் விலகியுள்ளார் . பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் 13 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் நடந்து முடிந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் அரை இறுதி போட்டியில் ஜோகோவிச், ரபேல் நடாலை தோற்கடித்தார். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததால் ரபேல் நடால் 14 வது சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தார். […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடந்து வருகிறது .இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் , இத்தாலி வீரரான மசெட்டியுடன் மோதினார். இதில் முதல் 2 செட்டை மசெட்டி கைப்பற்றினார். அதன் பிறகு சுதாரித்துக்கொண்ட ஜோகோவிச் 3 மற்றும் 4 வது செட்டை 6-1 , 6-0 கைப்பற்றினார். 5வது செட்டில் ஜோகோவிச் […]
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 3வது சுற்று போட்டியில் ஜோகோவிச் ,ரபேல் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறினர் . ‘கிராண்ட்ஸ்லாம்’அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3 வது சுற்று போட்டியில், நடப்பு சாம்பியனான ரபேல் நடால் , இங்கிலாந்து வீரரான கேமரான் நோரியுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ,இறுதியாக ரபெல் நடால் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில், […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ,நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி காயம் காரணமாக விலகியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று போட்டியில் ஸ்பெயின் வீரரான ரபேல் நடால், பிரான்ஸ் வீரரான ரிச்சர்ட் கேஸ்கேட்டுடன் மோதினார். இதில் 6-0, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று, 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் […]
கொரோனா தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்றுள்ள வீரர்-வீராங்கனைகள் தங்களுடைய கவலையை தெரிவித்துள்ளனர். உலகில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவலால்,ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற திட்டமிட்டுள்ளது. எனவே போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் போட்டிக்கு […]