பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது வழக்கம். மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குரான் அருளப்பட்டது இந்த ரமலான் மாதத்தில் தான். ஹஜ்ஜை தவிர இறைநம்பிக்கை, நோன்பு, தொழுகை, கட்டாயக்கொடை ஆகிய நான்கு கடமைகளும் ஒன்று சேர இந்த ரமலான் மாதத்தில் தான் நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில் ரமலான் மாத பிறை நேற்று மாலை பல்வேறு இடங்களில் காணப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் […]
Tag: ரமலான்
சவுதி அரேபியாவில் நேற்று பிறை தென்பட்டதால் அமீரக பிறை பார்க்கும் கமிட்டி இன்றிலிருந்து ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அனைவரும் புனித ரமலான் மாதத்தில் 30 நாட்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ள நோன்பு இருக்கிறார்கள். இந்நிலையில் சவுதி அரேபியாவில் நேற்று பிறை தென்பட்டதால் அமீரக பிறை பார்க்கும் கமிட்டி இன்றிலிருந்து ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இது இஸ்லாமிய நாள்காட்டி பிறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க அமீரகத்தில் ரமலான் மாதத்தை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் […]
நினைவுக்கு வந்தாலே நாவெல்லாம் எச்சில் சொட்டும் உணவு பிரியாணி. ஆனால் கரோனா வந்ததால் நாவில் மட்டும் அல்லாது பலரின் வாழ்வாதாரத்திலும் வறட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு முடிந்ததும் ஒரு கட்டு கட்டனும் என்று ஆசை கொள்ளும் பலர், இந்த ரம்ஜானுக்காவது பிரியாணி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் தவிக்கின்றனர். இந்த தொகுப்பின் மூலம் பிரியாணியை சுவைப்போம்! இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் விரும்பும் உணவாக பிரியாணி உள்ளது. கொல்கத்தா, ஹைதராபாத், ஆற்காடு என பிரியாணிக்கு பெயர் போன ஊர்களின் பட்டியல்களில் திண்டுக்கலும் […]
இஸ்லாமிய மக்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகையாக இருப்பது ரமலான். பொய் பேசுவதை தவிர்த்து கெட்டதை செய்யாமல் உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் நோன்பிருந்து இந்த ரமலான் மாதத்தை கடப்பார்கள். ரமலான் மாதச் சிறப்பு ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு […]
இஸ்லாமிய மதத்தலைவர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும், கொரோனா தாக்கத்தின் பாதிப்பை புரிந்துகொண்டும் வீடுகளிலேயே இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் தொழுகையை நடத்தி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் 30 நாட்கள் நோன்பு இருக்கும் முஸ்லிம்கள் அதன் இறுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இம்மாதத்தில் தினமும் மாலையில் நோன்பு முடிக்க அனைவரும் ஒன்றாகக் கூடுவதுடன், இப்தார் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது […]