தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ரயில் சேவை முடக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் நீக்கப்பட்டு, ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், முன் பதிவு செய்யாமல் உடனடி டிக்கெட் மூலம் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு கோரிக்கை எழுந்தது. […]
Tag: ரயில்வேத்துறை
பயணிகளின் வசதிக்கேற்ப ரயில்வேத்துறை பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் பயணிகளும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு அதனை ரத்து செய்வதற்கு பதில் வேறொருவருக்கு மாற்றும் வசதியை ரயில்வே துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதற்கு டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து அருகிலுள்ள ரயில் நிலைய முன்பதிவு கவுண்டருக்கு சென்று யார் பெயருக்கு டிக்கெட்டை மாற்றப்படவேண்டுமோ அவருடைய ஆதார் அல்லது வாக்காளர் அட்டை போன்ற அடையாள சான்றை எடுத்து செல்ல […]
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பயணிகள் வரத்து குறைந்தது. இதன் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதன் காரணமாக பயணிகள் வரத்து கூடியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று முதல் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவையும், தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரயில் சேவையும் என்று மொத்தமாக 323 மின்சார ரயில்கள் இயக்கப்பட […]
கொரோனா ஊரடங்கு காரணமாக பயணிகள் வரத்து குறைவாக இருப்பதால் 8 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பேருந்து சேவை ரயில்கள் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் கொரோனா […]
ரயில்வே துறை தனியார்மயமானால் மக்களுக்கு தான் அதிக ஆபத்து ஏற்படும் என மாநில தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே […]
நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதில் மண் கோப்பைகளில் இனி தேநீர் விற்பனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த முயற்சி பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவுக்கு ரயில்வேயின் பங்களிப்பாக இருக்கும். மண் கோப்பைகள் சுற்றுசூழலை காக்கின்றன. மேலும் லட்சக்கணக்கான மக்கள் இதன் மூலம் வேலை வாய்ப்பை பெற முடியும் என தெரிவித்துள்ளார். மத்திய அரசு சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து கொண்டிருக்கின்றனது. […]