இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரிக்கிறது. அதனால் நாட்டின் நிலவும் கடும் வெப்பத்தால் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் கடுமையான வெப்பம் நிலவும் என இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உயிர்காக்கும் சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் ரயில் […]
Tag: ரயில் சேவை ரத்து
பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை- பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுக்களை பரிசீலனை செய்யாமல் பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலுக்கு இணைப்பு ரயிலாக பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு ரயில் இயக்கப்படுவதாக அறிவித்தனர். இதற்கு பயணிகள் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. அதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில் சேவையானது டிசம்பர் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஏற்கனவே நவம்பர் 30-ஆம் தேதி வரை […]
தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது ஊட்டி மலை ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது. அதன்பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வின் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் ஊட்டி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் இருந்து குன்னூருக்கு செல்வதற்கு முதல் வகுப்புக்கு ரூ.350 மற்றும் இரண்டாம் வகுப்பு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் மேட்டுப்பாளையத்துக்கு செல்வதற்கு முதல் வகுப்பு ரூ.60 மற்றும் இரண்டாம் வகுப்பு […]
கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாஸ்தாம்கோட்டை பெரிய நாடு இடையில் ரயில் பாலம் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. அதனால் ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதில் வருகின்ற 28 ஆம் தேதி புறப்படும் பாலக்காடு- திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் மற்றும் காயங்குளம் திருநெல்வேலி இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுகிறது. அதைப் போன்று வருகின்ற 25 தேதி புறப்படுகின்ற சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ் கொல்லம் குருவாயூர் இடையே ரத்து செய்யப்படும் என […]
சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே இன்று மற்றும் நாளை காலை இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முதல் பகுதியாக […]