உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் கல்யாண்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளதால் மக்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக ஏராளமான நபர்கள் சாலையோரம் கடைகள் அமைத்து பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இந்த வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தது. மேலும் இந்த வியாபாரிகளால் வாகனங்கள் சென்று வருவதற்கும் பயணிகள் செல்வதற்கும் இடையூறு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் கல்யாண்பூர் அருகில் […]
Tag: ரயில் விபத்து
உத்திரபிரதேசம் மாநிலத்தில் கான்பூர் அருகே உள்ள கல்யாண் பூர் என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தெருவோர வியாபாரிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். காய்கறி விற்பனையாளர்கள் ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றி வருகின்றனர். அவ்வகையில் அர்சலன் என்ற தெருவோர வியாபாரியின் கடையில் இருந்த எடை கற்களை போலீஸ் தலைமை காவலர் ராகேஷ் தண்டவாளத்தில் தூக்கி வீசினார். இதனைக் கண்டு பதறிய அந்த வியாபாரி உடனே தண்டவாளத்தில் வீசப்பட்ட எடை கற்களை எடுப்பதற்காக விரைந்தார். அப்போது […]
இந்திய ரயில்வேயில், விபத்துக்களை தன்னிச்சையாக தடுக்கும் விதமாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட “கவசம்” என்னும் புதிய தொழில் நுட்ப கருவி விரைவில் அறிமுகமாக உள்ளது. அதாவது ஆர்.டி.எஸ்.ஓ என்ற ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரங்கள் நிறுவனம் ரயில் விபத்துகளை தன்னிச்சையாக தடுக்கும் “கவசம்” என்ற தொழில்நுட்ப கருவியை உருவாக்கியுள்ளது. ரயில் தடம் மற்றும் ரயில் இன்ஜின் அருகே பொருத்தப்படும் இந்த கருவி 2 ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்தால் அதனை கண்டறிந்து ரயில் இஞ்சின் இயக்கத்தை நிறுத்திவிடும். அதேபோல் […]
இங்கிலாந்தில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் சாலீஸ்பரி ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் வேகமாக சென்ற ரயில் தடம் புரண்டதில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிக்கொண்டு பலர் படுகாயம் அடைந்தனர். பின்னர், விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, ரயிலில் சிக்கிய பயணிகள் அனைவரும் ஜன்னல் வழியாக […]
அமெரிக்காவில் ரயில் ஒன்று வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அமெரிக்காவிலுள்ள தெற்கு கரோலினா என்னும் மாகாணத்தில் இருக்கும் வடக்கு சால்ஸ்டன் என்ற பகுதியில், ஒரு வாகனத்தில் நான்கு பேர் பயணித்திருக்கிறார்கள். அப்போது அந்த வாகனம் ரயில்வே கிராசிங்கை கடந்து சென்றிருக்கிறது. அந்த சமயத்தில் ரயில் ஒன்று எதிர்பாராமல் அந்த வாகனத்தின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மூவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மீதமுள்ள ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. […]
கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில் விபத்துகளில் சிக்கி ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என்று சுஷில் குமார் மோடி எம்பி தெரிவித்துள்ளார். 2016 – 2017 & 2020 – 2021 காலகட்டத்தில் நடந்த 313 ரயில் விபத்துக்களில் 239 பயணிகள் பலியானார்கள். ஆனால் 2019 – 2020 மற்றும் 2020 – 2021 ஆம் ஆண்டுகளில் ரயில் விபத்துக்களில் எந்த பயணியும் உயிரிழக்கவில்லை. மனித தவறுகளால் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க 6.218 ஸ்டேஷன்களில் இன்டர்லாக் அமைப்பு […]
பாகிஸ்தானில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலிருக்கும் ரைட்டி ரயில்வே நிலையத்திற்கு அருகில் மில்லட் எனும் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டதோடு மட்டுமல்லாமல் ராவல்பிண்டியிலிருந்து வந்த சர் சையத் என்னும் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீதும் வேகமாக மோதியுள்ளது. இதனால் 2 ரயில்களிலிருக்கும் பெட்டிகள் புரண்டும், கவிழ்ந்தும் கிடந்துள்ளது. இந்தக் கோர விபத்தில் 31 நபர்கள் பலியாகியும், 100 க்கும் மேலானோர் காயமடைந்த நிலையில் தொடர்ந்து மீட்புக்குழுவினர்களால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து […]
சீனாவில் ரயில் மோதிய விபத்தில் பராமரிப்பு பணியை செய்து கொண்டிருந்த ரயில்வே ஊழியர்கள் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலிருக்கும் ஷிங்சாங் நகரில் ரயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணியை சுமார் 50க்கும் மேலான ரயில்வே ஊழியர்கள் செய்து கொண்டிருப்பதால் ரயில்வே தண்டவாளத்தை சிறிது தூரத்திற்கு மூடி வைத்துள்ளனர். இதனிடையே சீனாவின் ஹாங்சவ் நகரிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கும் நகரமான ஷிங்சாங்கை கடந்து ஹாங்சவ்விற்கு […]
உலகத்தில் தினம்தோறும் பல்வேறு சம்பவங்கள் நடந்து மக்களை ஆட்டி படைத்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி மக்களை அச்சறுத்தி வருகிறது. இதற்கிடையே மேலும் பல சம்பவங்கள் அரங்கேறி மக்களின் உயிரைப் பறித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இதில் முக்கியமான சம்பவம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தைவானின் கிழக்கு பகுதியில் இருக்கும் சுரங்கப் பாதையில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 36ஆக அதிகரித்தது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கனடாவில் […]
தைவானில் சுமார் 350 பயணிகளுடன் சென்ற ரயில், ட்ரக்கில் மோதி விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தைவானில் இருக்கும் தை துங் நகர் என்ற நகரிற்கு சென்ற ரயில் ஹூலியன் நகரில் விரைவாக சுரங்க பாதையை கடக்க முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ட்ரக்கின் மீது மோதியதில் தடம் புரண்ட ரயில் கடும் விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் சுமார் 350 பயணிகள் இருந்துள்ளனர். இதில் 36 பயணிகள் பலியானதாகவும், 72 பேர் […]
கிழக்கு தைவானில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. டைதுங் நோக்கி பயணித்த அந்த ரயில் ஒரு சுரங்கப் பாதையின் தண்டவாளத்தில் இருந்து இறங்கி சுரங்கப் பாதையும் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அந்தக் கோர விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த 70 […]
எகிப்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 66 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே விபத்தில் 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு 36 ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த கோர விபத்தில் ரயிலில் பயணம் செய்த பலர் […]
குடியாத்தம் அருகே தண்டவாளத்தை கடக்கும் முயற்சித்த டெய்லர் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள உல்லி கிராமத்தில் கஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று கஜேந்திரன் குடியாத்தம் பகுதியில் ரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள வளத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த பாதை வழியாக வந்த ரயில் ஒன்று எதிர்பாராதவிதமாக கஜேந்திரன் மீது வேகமாக மோதியது. இதில் அவர் […]
கோயம்புத்தூரில் 50 வயது நபர் ஒருவரின் மீது ரயில் மோதிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் சாலையில் உள்ள ரயில் தண்டவாளத்தின் மீது சென்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க நபரின் மீது டெல்லி-திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் ஒன்று அவர் மீது மோதியது. ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த ரயில் ஓட்டுனர் உடனே ரயிலை நிறுத்தினார். பின்பு இந்த தகவலை கோயம்பத்தூர் ரயில்வே காவலரிடம் […]
தேசிய குற்ற ஆவண காப்பகம் ரயில் விபத்துகளில் சென்ற வருடம் மட்டும் 24,000 பேர் உயிரிழந்ததாக புள்ளிவிவர தகவல்களை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 27,987 ரயில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதில் 76.3 சதவீதம் ரயில் விபத்துகள் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விவரங்களை தெரியப்படுத்தியுள்ளது. அதோடு கடந்த வருடம் நடந்த இந்த ரயில் விபத்துகளில் 24,619 பேர் மரணம் அடைந்ததாகவும், அதில் 21,361 பேர் ரயில் மோதியதால் ரயிலில் இருந்து கீழே […]
ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து 30 ஆம்புலன்ஸ்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்தில் இருக்கும் அபெர்டீன் நகரின் அருகே ரயில் ஒன்று தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்து காணொளியாக சமூகவலைதளத்தில் பரவி வர அதில் ரயில் தடம் புரண்ட இடத்தில் கரும்புகை எழுவது பதிவாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட பகுதியில் ஹெலிகாப்டர் உட்பட 30 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளதும் காணொளியில் பதிவாகியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் நேற்று இரவு பெருவெள்ளம் ஏற்பட்டதால் ரயில் சேவைகள் அதிக […]
மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக நடத்த சென்றுள்ளனர். கர்மாட் பகுதியில் வந்தபோது உடல் அசதி காரணமாக தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று வந்தது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை […]
மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக நடத்த சென்றுள்ளனர். கர்மாட் பகுதியில் வந்தபோது உடல் அசதி காரணமாக தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று வந்தது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் […]
மும்பையில் தூங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்துக்குள்ளானதில் 17பேர் உயிரிழந்துள்ளார் . மும்பையில் அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர் மீது ரயில் ஏறியதில் 17 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியையும், சோகத்திலும் ஏற்படுத்தியுள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பான உயிரிழப்புகள் ஒரு புறம் சென்று கொண்டிருக்க இதுபோன்ற ஒரு துரதிஷ்டவசமான சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறும் வருகின்றது. முன்னதாக நேற்றைய தினம் ஆந்திராவில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டு […]