ரயிலில் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது . அதன்படி ஏசி முதல் வகுப்பு 70 கிலோ, ஏசி டயர் ஸ்லீப்பர் முதல் வகுப்பு 50 கிலோ, ஏசி 3 ஸ்லீப்பர் /ஏசி சேர் கார் 40, ஸ்லீபேர் கிளாஸ் 40 கிலோ, இரண்டாம் வகுப்பு 35 கிலோ வரை எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி அதிக அளவில் லக்கேஜ் கொண்டு சென்றால் கட்டணம் செலுத்த […]
Tag: ரயில்
சேலம் சூரமங்கலம் ரயில்களில் ஏற்படும் கூட்டநெரிசலை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கி வருகிறது. அதனடிப்படையில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, போத்தனூர் வழியே போகும் 8 ரயில்களில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டியை கூடுதலாக இணைத்து நிரந்தரமாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் வகையில் மங்களூரு சென்டிரல்-சென்னை சென்டிரல் (வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண்-22638) நேற்று முதல் கூடுதலாக 2ஆம் […]
தாம்பரம் பணிமனையில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதனையடுத்து சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே 15 மின்சார ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, தாம்பரம் பணிமனையில் நாளை காலை 9.55 முதல் மதியம் 1.55 வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதனால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை […]
இரண்டு வருடங்களுக்கு பின் வங்காள தேசம் இந்தியா இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இந்தியா வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. கொல்கத்தா ரயில் நிலையத்திலிருந்து வங்காளதேசத்தின் குல்னாவுக்கு பந்தன் விரைவு ரயில் 7:10 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. கொல்கத்தா- டாக்கா இடையேயான மைத்திரி விரைவு ரயில் சேவையும் இரண்டு […]
பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. இதுபற்றி தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோட்டயம் ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் திருவனந்தபுரம் இடையே இரவு 7.45 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வண்டி மே 28ஆம் தேதி சனிக்கிழமை ரத்து செய்யப்படுகிறது. மேலும் மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் […]
ரயில் பயணிகளுக்காக தற்போது ஒரு முக்கிய செய்தி வந்திருக்கின்றது. அதாவது உங்களிடம் முன்பதிவு செய்யப்பட்டிருந்த டிக்கெட் இருந்து சில முக்கியமான வேலை காரணங்களாக உங்களால் அதில் பயணம் செய்ய முடியவில்லை என்றால் இந்த டிக்கெட்டை உங்கள் குடும்பத்தில் உள்ள வேறு யாருக்காவது மாற்றம் செய்துகொள்ளலாம். இல்லையென்றால் தேவைப்படுபவர்களுக்கு இந்த டிக்கெட்டை நீங்கள் கொடுத்துவிடலாம் அதற்கான வசதி இருக்கின்றது. இந்தியாவில் பெரும்பாலானோரின் முதன்மை தேர்வாக ரயில்கள் இருக்கின்றன. மேலும் பேருந்து விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தை அதிகம் […]
உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை குறைந்து வந்தது. அதனால் முக்கிய வழித்தட ரயில் பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டதால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அதன்பிறகு பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தபோது மீண்டும் முழுவதுமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலகட்டத்தில் […]
ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் 150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினமும் 30 ஆயிரம் பயணிகள் பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 50 ரயில் நிலையங்களை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்த மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதற்காக தமிழ்நாட்டில் உள்ள காட்பாடி, சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் […]
சென்னை பெரம்பூர் வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று முன்தினம் இரவு எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து வாலிபர் ஒருவர் தவறி விழுந்து இறந்து கிடப்பதாக பெரம்பூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்தவர் அரக்கோணத்தை சேர்ந்த சேகர் என்பவருடை ய மகன் கார்த்திக் (19) என்பது தெரியவந்தது. அம்பத்தூரிலுள்ள தனியார் […]
மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோடை வெயில் உச்சம் தொட்டு வரும் நிலையில் வெப்பத்தை தணிப்பதற்கு மலை பிரதேசங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஊட்டி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து சிறப்பு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நீலகிரி மலை ரயில் தனது சேவையை வழங்கி வருகின்றது. மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு […]
உலகின் பாதுகாப்பான போக்குவரத்து முறையாக மறுக்கப்படும் ரயில் போக்குவரத்து, உலகின் பல இடங்களில் தீவிரமாக பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்களின் பிரதான போக்குவரத்து ஊடகமாக ரயில் செயல்பட்டு வருகிறது. ரயில் பயணத்தில் கட்டணம் குறைவு மற்றும் பயண நேரம் குறைவு என்பதால் லட்சக்கணக்கானவர்கள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ரயிலில் உணவு, தேநீர் போன்ற வசதிகள் உள்ளன. அதனைத் தொடர்ந்து இரயில்களில் நிறைய பேருக்கு கன்ஃபார்ம் டிக்கெட் கிடைப்பது இல்லை. ஏனென்றால் பயணம் செய்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே […]
மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை நிறுத்தி வைக்கப்பட்டதால் ரயில்வே நிர்வாகத்திற்கு 1500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்ததாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில்வே கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்ததன் மூலமாக இந்திய ரயில்வேக்கு கடந்த இரண்டு […]
கேரள மாநிலமான கோழிக்கோடு மாவட்டத்தில் மாணவி நபாத்(16) வசித்து வந்தார். இவர் தன் ஆண் நண்பரான இசாமுடன் அங்குள்ள பரோக் ரயில்வே பாலத்திற்கு சென்று இருக்கிறார். அங்கு நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்த அவர்கள் தங்களது செல்போனில் செல்ஃபி எடுக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் ரயில்வே தண்டவாளத்தின் அருகில் நின்று போஸ் கொடுக்க முயன்றபோது அவ்வழியே வந்த மங்கலாரம் -கோயம்பத்துார் விரைவு ரயில் அவர்கள் இருவர் மீதும் மோதி இருக்கிறது. இந்த விபத்தில் ஆற்றுக்குள் தூக்கிவீசப்பட்ட மாணவி […]
கோவையில் இருந்து டெல்லி வரை முதன்முறையாக சரக்கு ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையிலிருந்து பிற மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் பல்வேறு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இவற்றில் விவசாய விளைபொருட்கள், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் போன்றவை அடங்கும். மேலும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் பேருந்து மற்றும் ரயில் வசதிகள் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றது. அதில் சரக்கு போக்குவரத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த நிலையில் […]
கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டுமாக படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 23ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, # கோவை-மேட்டுப்பாளையம் முன்பதிவு இல்லாத ஊட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட்டு மேட்டுப் பாளையத்திற்கு மாலை 4:30 மணிக்கு சென்றடையும். பின் மேட்டுப்பாளையத்திலிருந்து மாலை 4:45 மணிக்கு புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு கோவை வந்து சேரும். # […]
நாம் பயணம் செய்யும் ரயில்களின் கடைசி பெட்டியில் ஏன் X மார்க் இருக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா…? இந்த X மார்க்கை ரயிலில் கடைசி பெட்டியில் அடர் மஞ்சள் நிறத்தில் போட்டிருப்பர். அதன் அருகில் LV என எழுதி இருக்கும். அதன் அர்த்தம் Last Vehicle என்பதாகும். இதனை அடுத்து X மார்க்குக்கு கீழே சிகப்பு கலர் விளக்கு இருக்கும். இவை அனைத்தும் கடைசி பெட்டியில் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. அதாவது ரயில்வே நிலையத்தில் ரயிலின் […]
கோவையிலிருந்து ஷீரடிக்கு வாராந்திர ரயில் சேவை, விரைவில் தொடங்கப்படவுள்ளது. கோவையிலிருந்து தனியாரால் இயக்கப்படும் முதல் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஷீர்டியிலுள்ள சாய்பாபா கோவிலுக்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆண்டு முழுவதும் ஆன்மிகச் சுற்றுலா செல்கின்றனர். பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஷீரடிக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆனால் கோவையிலிருந்து ஷீரடிக்கு நேரடி போக்குவரத்து வசதியில்லை. விமானம் மற்றும் ரயில்களில் மாறிச் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்நிலையில் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு பல்வேறு […]
இந்தியாவில் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்தல், முறையற்ற டிக்கெட் வைத்திருப்போர் மற்றும் லக்கேஜ்களுக்கு டிக்கெட் எடுக்காமல் இருப்பது ஆகிய குற்றங்களுக்கு அபராதம் (அல்லது) சிறை (அல்லது) இரண்டும் சேர்த்த தண்டனைகள் விதிக்கப்படும். இந்நிலையில் வட கிழக்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடமிருந்து ஓராண்டில் மட்டும் ரூபாய் 23.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் வருடம் ஏப்ரல் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் வரையில் 4 லட்சத்து […]
பல்வேறு பகுதிகளில் ரயிலில் அடிபட்டு விலங்குகள் உயிரிழப்பதை நாம் கேள்விபட்டிருப்போம். அண்மைக்காலங்களில் ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ரயிலை நிறுத்தாமல் வேகமாக செல்வதால் தான் விலங்குகள் அடிபட்டு இறக்கின்றன என சிலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. கார், பைக் போன்ற வாகனங்களில் சடன் பிரேக் பிடித்து விபத்தை தடுக்கலாம். ஆனால் ரயிலில் திடீரென ஏற்படும் விபத்தை ஏன் தடுக்க முடியவில்லை? ரயிலில் ஏன் உடனே நிற்பதில்லை? போன்ற எண்ணற்ற […]
ரயிலில் பயணிக்கும்போது இந்தத் தவறை நீங்கள் செய்தால் அபராதம் மட்டுமின்றி சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அது என்னவென்று நாம் தெரிந்து கொள்ளலாம். விதிமுறை ரயிலில் பயணம் செய்யும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அவ்வாறு இத்தவறை யாரேனும் செய்து பிடிபட்டால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம். ஆகவே ரயிலில் தீயை பரப்புவது (அல்லது) எளிதில் எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது […]
சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்திய 8 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ரயிலில் கஞ்சா கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்காக ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா கடத்தி வருபவர்களை கைது செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரயிலில் கஞ்சா கடத்தியதாக 13 பேரை கைது செய்து 141 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போலீஸ் விசாரணையில் கூலி பணத்திற்காக […]
செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு சிறப்பு ரயில் ஏப்ரல் மாதம் மட்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி செகந்திராபாத் – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் செகந்திராபாத்தில் இருந்து மே 2 முதல் ஜூலை 25 வரை திங்கட்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை […]
கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி மார்ச் 21-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை பயணிகளுக்கான குலுக்கள் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது. ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் மற்றும் 40 நாள்களுக்கான விருப்பம் போல் […]
மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு புதிதாக சேவையைத் தொடங்கிய ரயிலில் பொதுமக்களும், வர்த்தகர்களும் உற்சாகத்துடன் பயணத்தைத் தொடங்கினர். கோடை சீசனை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் -நெல்லை இடையில் வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடங்கி இருக்கிறது. கடந்த வியாழனன்று இரவு நெல்லையில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் நேற்றிரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லை புறப்பட்டது. கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், தென்காசி என்று முக்கியமான நகரங்களை இணைக்கும் இந்த ரயிலில் மேட்டுப்பாளையத்தில் […]
எந்தெந்த ரயில்களில் போர்வை, தலையணை வழங்கப்படுகிறது என்பது தொடர்பான பட்டியலை, ரயில்வே வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து 2 வருடங்களுக்கு பின் கடந்த மாதம் முதல் விரைவு ரயில்களின் “ஏசி” பெட்டிகளில் போர்வை, கம்பளி, தலையணை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் எந்தெந்த ரயில்களில் போர்வை, கம்பளி வழங்கப்படுகிறது எனும் பட்டியல், ரயில்வே இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் 774 ரயில்களில் தற்போது இச்சேவையை வழங்கி வருவதாகவும், மெல்ல மெல்ல அனைத்து ரயில்களின் “ஏசி” […]
‘பாரத் தர்ஷன்’ சுற்றுலா ரயில் திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால், பயணியர் அதிருப்தி அடைந்துஉள்ளனர். இந்நிலையில் மக்களிடையே சுற்றுலா பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், ‘பாரத் தர்ஷன்’ என்ற, சுற்றுலா ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று வர, 1000க்கும் மேற்பட்ட சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும் பயணியரிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திட்டம், மார்ச் முதல் நிறுத்தப்பட்டிருப்பதால் , பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு […]
கனடா நாட்டில் ரயில் பாதையில் ஜாகிங்சென்ற நபர் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கால்கரியில் நேற்று மதியம் 1:00 மணியளவில் ஒருவர் ரயில் பாதையில் ஜாகிங் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ரயில் ஒன்று வந்துள்ளதால் மக்கள் அவரை எச்சரிக்க குரல் எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் அதனை கவனிக்கவில்லை. இதனால் வேகமாக வந்த அந்த ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். அந்த நபர் தன் காதுகளில் இயர்போன் […]
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வாகனத்தின் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டதில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹாரிஸ் கவுன்டியின் வடகிழக்குப் பகுதியில் ஒரு ரயில் நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றது. அந்த ரயில் ஹூஸ்டன் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 12 மைல்கள் தூரத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில், அந்த வழியே சென்று கொண்டிருந்த வாகனம் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்த போது […]
பண்டிகை நாட்களில் சொந்தஊா்களுக்கு சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக தேஜஸ், முத்துநகா்உட்பட 13 விரைவு ரயில்களில் கூடுதலாக உறங்கும் வசதி வகுப்புப் பெட்டிகள் சோ்க்கப்பட்டுள்ளது. தமிழ்ப்புத்தாண்டு, விஷூ உள்ளிட்ட பண்டிகைகளில் சொந்த ஊா்களுக்கு சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக தெற்கு ரயில்வேயில் பல வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் ஏப்ரல் 21ஆம் தேதி வரை சோ்த்து கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 13 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சோ்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை எழும்பூா் […]
புதுச்சேரி TO தாதருக்கு இன்று (ஏப்.17) இரவு இயக்கப்பட்டு வந்த விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தாதரிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்ட விரைவு ரயில், தாதா்-மாட்டுங்கா இடையில் சென்றபோது இந்த ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டது. இதன் காரணமாக புதுச்சேரி TO தாதருக்கு ஏப்.17-ஆம் தேதி (இன்று )இரவு 9.30 மணிக்கு இயக்கப்பட்டு வந்த விரைவு ரயில் (11006) முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் கடந்து செல்லும்போது தண்டவாளத்தில் படுத்துகொண்டு செல்போன் பேசும் பெண்ணின் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெயில் கடந்து செல்லும்போது தண்டவாளத்தில் படுத்துகொண்டு செல்போன் பேசும் பெண்ணின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரெயில் தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று கடந்து சென்றுள்ளது. இந்நிலையில் ரெயில் சென்றவுடன் அது சென்ற தண்டவாளத்தில் பெண் ஒருவர் முகத்தை மூடியபடி படுத்திருந்தது தெரியவருகின்றது. கையில் பை ஒன்றை வைத்துகொண்டு சாதாரணமாக எழுந்து வரும் அவர் செல்போன் […]
ரயில் கடந்து செல்லும் போது தண்டவாளத்தில் படுத்துகொண்டு செல்போன் பேசும் பெண்ணின் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று கடந்து செல்கிறது. ரயில் சென்றவுடன் அது சென்ற தண்டவாளத்தில் பெண் ஒருவர் முகத்தை மூடியபடி படுத்திருந்தது தெரியவந்தது. கையில் பை ஒன்றை வைத்து கொண்டு சாதாரணமாக எழுந்துவரும் அவர் செல்போன் பேசிக்கொண்டே நடந்து செல்கிறார். இந்த வீடியோ இணையத்தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பதிவிட்ட IPL அதிகாரி திபான்ஷூ […]
சென்னை, எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கடந்த 13ஆம் தேதி புறப்பட்ட அனந்தபுரி விரைவு ரயில் பெட்டியில் பயணிகள் மாற்று திறனாளி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் இதன் வீடியோ பரவியது. இதுதொடர்பாக சென்னை ரயில்வே கோட்டம் உடனடியாக விசாரணை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி பயணிகள் இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி கூறிய போது, இந்த சம்பவம் குறித்து தீவிரமான பரிசீலனை செய்யப்பட்டு ரயில் […]
பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ‘பெங்களூரு ரவுண்ட்ஸ்’ திட்டத்தையும் செயல்படுத்த இருக்கிறது.பி.எம்.டி.சி., பஸ்களில் பயணியரை ஏற்றி, பெங்களூரு நகரின் முக்கியமான சுற்றுலா தலங்களை சுற்றி காண்பிக்கும் நோக்கில், ‘பெங்களூரு ரவுண்ட்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரவியதன் காரணமாக, இந்த திட்டத்திற்கு பயணியரின் வரவேற்பு கிடைக்கவில்லை.இது பற்றி , மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறிய போது:பெங்களூரு ரவுண்ட்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பயணியரின் நேரம் சேமிக்கப்படும். போக்குவரத்து நெருக்கடி தொந்தரவும் இருக்காது, மேலும் செலவும் […]
தமிழகத்தில் தென்னக ரயில்வே சார்பாக இயக்கப்பட்டு வரும் பல்வேறு ரயில்கள் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்து வருகிறது. சென்ற இரு வருடங்களாக கொரோனா தொற்று அதிகமாக இருந்த சமயத்திலும் ரயில்வேதுறை தொடர்ந்து தங்களின் பங்கை அளித்து வந்தது. இந்த நிலையில் தற்போது தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரயில் சேவைகள் விமர்சையாக நடந்து வருகிறது. இதையடுத்து சேலம் மாவட்டத்திலும் இச்சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேலம் ரயில்வே கோட்டத்தின்கீழ் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகம் […]
அர்ஜென்டினாவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் திடீரென பழுதானது. அதனால் அந்த கார் தண்டவாளத்தை நகர முடியாமல் போனதாக கூறப்படுகிறது. சில நொடிகளில் வந்த ரயில் கார் மீது மோதி சிறிது தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது. இந்த நிலையில் ரயில் ஓட்டுனரின் துரித நடவடிக்கையால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.மேலும் காரில் பயணித்த 3 குழந்தைகள், பெண் உள்பட ஒரே குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் முக்கிய ரயில் சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டது. மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே முக்கிய வழித்தடங்களில் ஒரு சில ரயில்கள்அனுமதிக்கப்பட்டது. பொது போக்குவரத்து மூலமாக நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இவை தடை செய்யப்பட்டிருந்தது. முன்னதாக புதுச்சேரி- திருப்பதி வழித்தடத்தில் ஊரடங்கிற்கு முன் டீசல் வண்டியாக ரயில் சேவை வழங்கப்பட்டிருந்தது. அப்போது மிகவும் குறைந்த அளவிலான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது […]
ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஹங்கேரிய நகரமான Mindszentல் டெலி தெருவில் உள்ள ரயில்வே கிராசிங்கில் Szentesல் இருந்து Hodmezovasarhely நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரயில்வே தண்டவாளத்தை வேன் ஒன்று கடந்துள்ளது.அந்த வேன் மீது ரயில் மோதியதில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், மாணவர்களுக்கு ரயில் கட்டண சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இருப்பினும் மூத்த குடிமகன்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை நிராகரித்துள்ளது. இதனால் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுகளில் மூன்றில் ஒரு குறைந்த ரயில்வே வருவாயானது, 2021 – 2022-யில் மேலும் குறைந்துள்ளது. இதனால் முதியவர்களுக்கான கட்டண சலுகை உள்ளிட்டவற்றை வழங்க முடியவில்லை. ஆனால் மாற்றுத் […]
சென்னை சென்ட்ரல்- கூடூா் மாா்க்கத்தில், நாயுடுபேட்டை- பெடபரியா ரயில் நிலையங்களுக்கு இடையில் பொறியியல் பணி நடக்க இருப்பதால் ஏப்.5-ஆம் தேதி இன்று முதல் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. அந்த வகையில் விஜயவாடா- சென்னை சென்ட்ரலுக்கு இன்று காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரயில் கூடூா்-சென்னை சென்ட்ரல் இடையில் பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. சென்னை சென்ட்ரல்- விஜயவாடாவுக்கு இன்று பிற்பகல் 2.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-கூடூா் இடையில் பகுதி […]
மராட்டியத்தின் நாசிக்நகர் அருகில் லஹாவிட் மற்றும் தேவ்லாலி இடையில் சென்று கொண்டிருந்த 11061 என்ற எண் கொண்ட எல்.டி.டி-ஜெய்நகர் செல்லும் பவன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 15.10 மணியளவில் திடீரென்று தடம் புரண்டது. இதில் யிலில் இருந்த சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து புரண்டது. இதையடுத்து சம்பவபகுதிக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி சென்றனர். மேலும் ரயில்வே நிர்வாகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பின் விபத்து நிவாரண ரயில் மற்றும் மருத்துவ வேன் போன்றவை சம்பவ இடத்திற்கு உடனே […]
மகாராஷ்டிர மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிர மாநில லாகவித்,தோவ்லாலி இடையே எல்டிடி ஜெய்நகர் பவன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் நாக நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து வந்துள்ளனர். இந்த விபத்தில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் இல்லை. உடனடியாக […]
சென்னை சென்ட்ரல்- கூடூா் மாா்க்கத்தில், நாயுடுபேட்டை- பெடபரியா ரயில் நிலையங்களுக்கு இடையில் பொறியியல் பணி நடக்க இருப்பதால் ஏப்.5-ஆம் தேதி முதல் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. அந்த வகையில் விஜயவாடா- சென்னை சென்ட்ரலுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரயில் கூடூா்-சென்னை சென்ட்ரல் இடையில் பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. சென்னை சென்ட்ரல்- விஜயவாடாவுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி பிற்பகல் 2.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரயில், சென்னை […]
பெரம்பலூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலை கடந்த நிதியாண்டில் 3201 ரயில் பெட்டிகள் தயாரித்து இலக்கை எட்டி உள்ளது. ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் 1955ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 500க்கும் மேற்பட்ட வடிவங்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தவிர ‘ரயில் 18’ திட்டத்தில் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயிலுக்கு உலகத்தரத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக ஐசிஎப் பில் கடந்த இரு ஆண்டுகளாக […]
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு ஏப்ரல் 1ஆம் தேதி இரவு புறப்பட்டு சென்ற பொதிகை விரைவு ரயிலில் கல்லூரி மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார். ரயில் நள்ளிரவு 12.30 மணியளவில் விருதாச்சலம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே அமர்ந்திருந்த பயணி அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன அந்த பெண் எஸ்ஒஎஸ் காவலன் செயலி மூலமாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த பெட்டியில் பயணச்சீட்டு பரிசோதகராக இருந்த டி.எஸ் அண்ணாதுரை மற்றும் […]
சென்னை சென்ட்ரல் அரக்கோணம் பிரிவில் வியாசர்பாடி, வில்லிவாக்கம் இடையே பொறியியல் பணி நடைபெற உள்ளதால் ஏப்ரல் 3 மற்றும் 10-ம் தேதிகளில் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 3 மற்றும் 10ஆம் தேதி முழுமையாக ரத்தாகும் ரயில்கள் சென்னை கடற்கரை திருவள்ளுவருக்கு சென்னை கடற்கரை திருவள்ளுவருக்கு ஏப்ரல் 3,10 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை பட்டாபிராம் ராணுவத்துக்கு சைட்டிங்-க்கு காலை10.55 மணிக்கு இயக்கப்படும். மின்சார […]
ரயில் பயணத்தின்போது அடிப்படை தேவைகள் இல்லாததால் பயணிகளுக்கு இழப்பீடாக ரூபாய் 20 ஆயிரம் வழங்க ரயில்வே துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலத்தைச் சேர்ந்த குருவாசலில் சசிதரன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கொச்சுவேலி விரைவு ரயிலின் ஏ.சி பெட்டியில் ராஜஸ்தானின் பிகானேரிலிருந்து கோழிக்கோடு நோக்கி பயணம் மேற்கொண்ட குடும்பத்தினர் 2013 ஆம் ஆண்டு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினர். அதாவது, கழிவறைக்குள் செல்ல முடியாத அளவுக்கு கழிவுகள் நிரம்பி […]
தமிழ் புத்தாண்டையொட்டி பயணிகளின் வசதிக்காக தாம்பரம் டூ நாகர்கோவில் இடையில் ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரயில் வரும் 13ஆம் தேதி தாம்பரத்திலிருந்தும் மறுமார்க்கமாக வருகிற 17-ம் தேதி நாகர்கோவிலில் இருந்தும் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு துவங்கி காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று விட்டது. தமிழ் புத்தாண்டுக்கு முந்தைய தினம் சென்னையிலிருந்து தென்காசி வழியே செல்லும் ரயில்களான பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில் முறையே 225, 175, 125 என காத்திருப்போர் […]
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் ஓன்று வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பொது போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது. அதன் பின் நாளடைவில் நோய் பரவல் வெகுவாக குறைந்ததை அடுத்து முழு ஊரடங்கு அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தது. இதனால் மீண்டும் பொது போக்குவரத்து சேவை இயங்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]
தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது, சென்னை எம்ஜிஆர் சென்டிரல்- ஜோலார்பேட்டை- எம்.ஜி.ஆர் சென்டிரல் (வண்டி எண்:16089/16090) ஏலகிரி எக்ஸ்பிரஸ், நிலாம்பூர்- கோட்டயம்- நிலாம்பூர் (16325/16326) எக்ஸ்பிரஸ், புனலூர்-குருவாயூர்-புனலூர் (16327-16328) எக்ஸ்பிரஸ், கொச்சுவேலி-மங்களூரு-கொச்சுவேலி (16355/16356) அந்தியோதயா எக்ஸ்பிரஸ், கண்ணூர்-கோவை-கண்ணூர் (16607/16608) எக்ஸ்பிரஸ், திருச்சி-பாலக்காடு- திருச்சி (16843/16844) எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்- கோட்டயம் (16366) எக்ஸ்பிரஸ், மங்களூரு- கோழிக்கோடு (16610) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மே மாதம் 1ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் மீண்டும் இயக்கப்படும் […]