சரக்கு ரயில்-கார் விபத்தில் 2 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜசன் பிரீத் கவுர், இவரது உறவுக்காரப் பெண்ணான பலம்ப்ரீத் கவுர் மற்றும் மற்றொரு பெண் இவர்கள் 3 பேரும் கல்வி கற்பதற்காகவும், ஆட்டோ மொபைல் தொழிற்சாலையில் பணிபுரியவும் கனடாவுக்கு சென்றிருக்கின்றனர். அப்போது அவர்கள் சென்ற கார் பிராம்ப்டன் அருகிலுள்ள லெவல் கிராசிங்கில் சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜசன் பிரீத் கவுர் மற்றும் மற்றொரு பெண் […]
Tag: ரயில்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வழியாக மின்சார ரயில் சென்றது. அதில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இதனிடையே அதில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் நவீன் என்பவர் புத்தகப் பையில் ஜல்லிக் கற்களை வைத்து இருப்பதை பார்த்த ரயில்வே போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சக மாணவர்கள் நவீனை விடுவிக்க வேண்டும் என்று ஆவடி ரயில் நிலைய தண்டவாளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு தகவலறிந்து வந்த […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மும்பையை நோக்கி நேற்று இரவு லக்னோ மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் லகட்புரி நகரில் உள்ள ரயில் நிலையத்திற்கு வந்த பொழுது அங்கு படுக்கை பெட்டியில் பயங்கர ஆயுதங்களுடன் சில கொள்ளையர்கள் ஏறினார்கள். அவர்கள் பயணிகள் இடத்தில் ஆயுதங்களை காட்டி நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். […]
ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் காமராஜர் நகரில் அம்பிகாவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜீப் டிரைவராக இருக்கின்றார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்தார். இதில் ஆகாஷ் பி.காம் பட்டதாரியாக இருந்தார். இந்நிலையில் ஆகாஷ் அப்பகுதியில் வெண்ணாறு ரயில்வே பாலம் அருகில் காலை கடனை முடித்துவிட்டு தண்டவாளத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு வந்த விரைவு ரயிலில் ஆகாஷ் […]
துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்திற்கு மெட்ரோ ரயில் மூலம் பிரான்ஸ் நாட்டின் மந்திரியான பிராங்க் ரீஸ்டர் வந்துள்ளார். துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் போன்றவற்றின் சார்பாக எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகம் வரையிலும் மெட்ரோ ரயிலின் சேவையானது விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி “ரூட் 2020” என்ற புதிய வழித்தடத்தில் துபாய் ஜெபல் அலி பகுதியில் இருந்து கண்காட்சி வளாகம் வரை மெட்ரோ ரயில்கள் தினமும் இயங்கி வருகிறது. இந்நிலையில் உலக கண்காட்சி தொடங்கியதை முன்னிட்டு பொதுமக்கள், […]
ஓசூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூரில் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசியாக வழங்கிட அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனையடுத்து கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரயில்கள் மூலமாக பிற மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் […]
ரயில் பயணியிடம் திருடி விட்டு தப்பி சென்ற இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். லண்டனில் கடந்த ஆகஸ்ட் மாதம் St Pancras to Blackfrias ஆகிய நகரங்களுக்கு இடையே இரவு 11 மணியளவில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ரயிலில் பயணம் செய்த ஒரு பயணியின் அருகே சென்று இருவர் அமர்ந்துள்ளனர். இதனை அடுத்து அந்த பயணியை ரயில் ஜன்னலில் இருவரும் சேர்ந்து கட்டுப்போட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து இரண்டு பேரில் ஒருவர் திடீரென […]
தண்டவாளத்தில் தலைவைத்து ரயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாழவந்தாள்புரம் வடக்குத் தெருவில் சந்திரன்-சாந்தி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் சந்திரன் செங்கோட்டை ரயில்வேயில் சீனியர் டெக்னீசியனாக கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகின்றது. இந்நிலையில் சந்திரன் கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றித் திரிந்ததால் அதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த […]
தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டிற்கு வந்த 2,600 டன் அரிசி நுகர்பொருள் வாணிப கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. தமிழக பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி கொடுக்கப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்திற்கு தேவையான ரேஷன் அரிசி பல்வேறு பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அங்கிருந்து 2 ஆயிரத்து 600 டன் புழுங்கல் அரிசி 42 பெட்டிகள் கொண்ட ரயில் மூலம் இந்த மாவட்டத்திற்கு கொண்டு […]
பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஈரோட்டுக்கு ரயிலின் மூலம் 2,600 டன் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலை கடைகளில் இருந்து பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை போன்ற பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலிருந்து அரிசி, நெல், கோதுமை போன்ற தானியங்களை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பட்டின்டாவிலிருந்து 2,600 டன் கோதுமை 42 பெட்டிகள் கொண்ட ரயில் மூலம் ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ளது. இதனை […]
பிரிட்டனில் இரயிலில் பயணித்த மூன்று பெண்களிடம் ஒரு நபர், பாலியல் தொடர்பான கருத்துக்களை கூறி அநாகரிகமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின், கிரேட் மான்செஸ்டரில் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி அன்று இரவு சுமார் 8:40 மணிக்கு மூன்று இளம்பெண்கள் ஒன்றாக அமர்ந்து ரயிலில் பயணித்துள்ளனர். அப்போது, ஒரு நபர் அவர்களின் அருகில் சென்று அமர்ந்துள்ளார். அதன்பின்பு அவர்களிடம் பாலியல் ரீதியாக முகம் சுழிக்க வைக்கும் படி பேசியிருக்கிறார். மேலும், அவர்களை பாலியல் ரீதியாக […]
ரயில் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விராலிகாட்டுவிளையில் விஜில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு விஜில் ரயிலில் சென்று கொண்டிருந்தார. இதனையடுத்து ரயில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது ரயிலில் இருந்து கீழே இறங்கிய விஜில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அதன்பின் அவர் வந்த ரயில் புறப்பட்டது கவனிக்காமல் […]
திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தன் தோழியுடன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நடுவூர் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகின்றார். இவருக்கும், திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்த உறவினர் பெண் ஷோபா என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து ஷோபா திருப்பூரில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு ஆம்பூருக்கு வந்து தன் […]
உலகின் அதிவேக புல்லட் ரயில் சேவை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் தலைநகர் பீஜிங் முதல் ஷாங்காய் வரையில் இயக்கப்படுகிறது. புக்ஸிங் என்ற இந்த ரயிலானது மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதன் மூலம் பீஜிங் முதல் ஷாங்காய் வரையிலான 1,250 கிலோமீட்டர் தூரத்தை 4 மணி 28 நிமிடங்களில் கடக்க முடியும். பயண நேரம் பெருமளவு குறைந்துள்ளது. பீஜிங் – ஷாங்காய் ரயில் சேவையை தினசரி சுமார் 5,05,000 பேர் பயன்படுத்தி […]
ரயில் முன்பாய்ந்து என்ஜினீயரிங் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சகுப்பம் வடபுதுப்பட்டு பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் கோகுல்நாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்துள்ளார். இதனையடுத்து கோகுல்நாத் அவரது கிராமத்திற்கு அருகிலுள்ள பச்சகுப்பம் ரயில் நிலையத்திற்கு சென்று இருக்கையில் அமர்த்திருந்தார். அங்கு கோகுல்நாத் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில் முன்பு திடீரென […]
காட்பாடி ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுவனை ரயில்வே காவல்துறையினர் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி ரயில் நிலையம் முதலாவது பிளாட்பாரத்தில் 15 வயது சிறுவன் கடந்த 11-ஆம் தேதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் சிறுவனை பிடித்து விசாரித்தபோது மராட்டிய மாநிலம் நாக்பூர் சேர்ந்தவர் என்பதும், ரயிலில் தவறுதலாக காட்பாடிக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த சிறுவனிடம் வீட்டு முகவரி, பெற்றோரின் செல்போன் நம்பர் […]
ரயிலில் கடத்த முயன்ற கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு சென்னையிலிருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயிலில் கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சென்னை-மங்களூர் விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீப்ரத் சத்பதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செழியன் மற்றும் காவல்துறையினர் ரயில் பெட்டிகளில் ஏறி சோதனை […]
தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த முதியவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜெயந்திபுரம் பச்சையப்பன் வடக்கு பகுதியில் குள்ளபெருமாள் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் சோமநாயக்கன்பட்டி-பச்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் பங்காள மேடு என்ற இடத்தில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது அவ்வழியாகச் சென்ற ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மனோகரன் […]
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் பெண் மயில் ஒன்று சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 2-வது பிளாட்பாரத்தில் கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட ரயில்வே காவல்துறையினர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் பெண் மயில் ஒன்று அடிபட்டு இறந்து சிக்கியிருந்ததை பார்த்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் விரைந்து சென்று இறந்த பெண் மயிலை மீட்டு ரயில்வே காவல் நிலையத்திற்கு […]
செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்குவதற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா தொற்றின் 2-ம் அலை காரணமாக மன்னை எக்ஸ்பிரஸ் மற்றும் பாமணி எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 1-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குவதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை தென்னக ரயில்வே வெளியிடவில்லை. மன்னார்குடி மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திருப்பூர், கோவை […]
ரெயிலில் 2 நபர்கள் சரியான ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட வெள்ளியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு 5-வது பிளாட்பாரத்தில் இன்ஸ்பெக்டர் அரவிந்த் குமார் தலைமையில், ரயில்வே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு எர்ணாகுளம்- பிலாஸ்பூர் (08228) சிறப்பு ரயில் 5-வது பிளாட்பாரத்திற்கு வந்தது. அந்த ரயிலில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது சுரங்கப் பாதையில் செல்வதற்கான […]
சேலம் வழியாக எர்ணாகுளம்- நிஜாமுதீன் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருவதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து எர்ணாகுளம்- நிஜாமுதீன் (வண்டி எண் 06171) வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் 17-ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்திற்கு 1:47 வந்தடைகின்றது. அதன்பின் இங்கிருந்து 1:50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், விஜயவாடா, வாரங்கல், நாக்பூர் […]
ரயில்வே மேம்பாலம் அமைக்க இருக்கும் இடங்களை சப்- கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் பகுதியில் மற்றும் சிவகாசி- விருதுநகர் சாலையில் திருத்தங்கள் பகுதியில் ரயில்வே கேட் இருக்கின்றது. இந்த ரயில்வேகேட் வழக்கமாக ஒரு நாளைக்கு 8 முறை அடைத்து திறக்க வேண்டிய நிலை இருந்துள்ளது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக தினமும் 3 முறை சென்று, திரும்பும் மதுரை- செங்கோட்டை பயணிகள் ரயில் இயக்கப்பட வில்லை. இதனால் தற்போது தினசரி […]
அரவைக்காக நீடாமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்தில் நெல் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு அரவைக்காக மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள ஆலைகளுக்கும் இந்த நெல் மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு […]
கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாவூர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால் அதனை கண்ட பொதுமக்கள் நபரை விலகிச் செல்லும்படி சத்தமிட்டனர். ஆனால் அந்த நபர் ரயில் வரும் திசையை நோக்கி எதிரே வேகமாக சென்றதால் ரயில் அவர் மீது பயங்கரமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதைந்த […]
ரயில் முன் பாய்ந்து என்ஜினீயர் பட்டதாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி கொசப்பாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் ஜெகன் என்ஜினீயரிங் படித்துவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது தாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். மேலும் ஜெகனின் பாட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு […]
குடியாத்தம் அருகில் ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம்- காவனூர் ரயில்வே நிலைய இடையில் தண்டவாளத்தை கடப்பதற்காக 40 வயதுடைய வாலிபர் முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் வாலிபர் அடிபட்டு உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மனோகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]
சட்டவிரோதமாக ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில்வே காவல்துறையினர் வெளிமாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா, மதுபாட்டில்கள் கடத்தி வருவதை தடுப்பதற்காக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடிக்கு வந்தது. அந்த ரயிலில் பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் டேப்ரத்சத்பதி தலைமையில், காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயிலில் உள்ள இருக்கைக்கு அடியில் தனியாக கிடந்த […]
ரயிலில் கடத்திய ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோம நாயக்கன்பட்டி ரயில்வே கேட் அருகில் பெங்களூரை நோக்கி செல்லும் பாசஞ்சர் ரயிலில் கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் உதவியாளர் அருள் பாண்டியன், கிருஷ்ணன் போன்றோர் அந்த இடத்திற்கு செல்வதற்கும் பாசஞ்சர் ரயிலில் மர்மநபர்கள் ரேஷன் அரிசி கடத்திச் […]
குடியாத்தத்தில் முதியவர் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் ரயில் நிலையம் அருகில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் முதியவர் மீது மோதியது. இதனால் முதியவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிமனோகரன் சம்பவ […]
மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டுவந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் 1 மாதத்திற்கும் மேலாக மதுக் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் மது பிரியர்கள் வெளிமாநிலத்தில் இருந்து ரயிலில் மதுவை கடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தில் மைசூர்- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் தினசரி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் மதுபானம் பறிமுதல் செய்யப்படுவதோடு பலரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் […]
பீகார் மாநிலத்தில் திருமணமான பெண் வீட்டை விட்டு வெளியேறிய காதலருடன் ரயிலில் திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் சுல்த்கஞ்ச் என்ற கிராமத்தை சேர்ந்த அனு குமாரி என்ற பெண்ணுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. ஆனால் திருமணத்திற்கு முன்பு அவர் ஆஷ்குமார் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் அந்த பெண் முறையாக கணவருடன் வாழாமல் காதலன் நினைவாகவே இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டை […]
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரயில் படிக்கட்டில் 50 வயதுடைய ஒரு ஆண் பயணம் செய்துள்ளார். அப்போது ஆம்பூர்- விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்றுகொண்டிருக்கும் போது அவர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 5 குழந்தைகளுடன் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் என்ற பகுதியை சேர்ந்த உமா சாஹு என்ற பெண்மணி தனது 5 குழந்தைகளுடன் இரவு இரயில் தண்டவாள பகுதிகளில் நின்றுகொண்டிருந்தார். பின்னர் ரயில் வரும் நேரம் பார்த்து திடீரென்று ரயில் முன் குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஐந்து பிள்ளைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் […]
ரயில் தண்டவாளத்தை கடக்கச் முயன்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி யமுனை நகரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சாய் கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவன் சாய் கிருஷ்ணன் திரும்பி வராததால் குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். அப்போது ஊரப்பாக்கம்-கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடந்து […]
ரயிலில் மதுபானம் கடத்திய உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் பலர் வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து செல்லும் ரயில்களில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மைசூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னையை நோக்கிச் […]
சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி மனோகரன், ஜெயகுமார் மற்றும் காவல்துறையினர் ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூர்- சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்தப் பெட்டியில் சந்தேகத்தின்படி இருந்த 2 வாலிபர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த […]
ரயிலில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சோமநாயக்கன்பட்டியிலிருந்து பெங்களூருக்கு ஒரு கும்பல் ரேஷன் அரிசியை ரயில் மூலம் கடத்த முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையில், உதவியாளர் அருள், ரயில்வே காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அந்தப் பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ரேஷன் அரிசி இருக்கும் மூட்டைகளை 10 பேர் கொண்ட […]
ரயிலில் சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகளை கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி மே 10-ஆம் தேதி முதல் அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் வெளிமாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் காவல்துறையினர் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் […]
ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழையில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில் நிலையத்திற்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வழியாக ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் இரண்டாவது பிளாட்பாரத்தில் மாலை வேளையில் வந்து நின்று பின்பு புறப்பட்டபோது ரயில் என்ஜின் இயங்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரயில் […]
ஓடும் ரயிலில் மனைவி உயிரிழக்க 3வயது கைக்குழந்தையுடன் கணவர் ரயில்வே நிலையத்தில் தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்கள் பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். தொற்று காரணமாக பலர் உயிரிழந்து வந்தாலும் பசியினால் உயிரிழக்கும் ஏழை களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அதேபோல் 35 வயதான கிரித்தா என்ற நபர் மேற்குவங்க மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் ஊத்துக்குளியில் தேங்காய் நார் உரிக்கும் […]
ரயிலில் சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை புறப்படும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் காவல்துறையினர் சோதனையிட்டதில் பயணிகள் இருக்கையில் 195 கர்நாடக மாநிலம் மது பாக்கெட்டுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த ரயில் பெட்டியில் பயணம் செய்த […]
சட்டவிரோதமாக ரயிலில் கடத்தப்பட்ட மது பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதால் ரயில்களில் மது பாக்கெட்டுகளை கடத்தி வருவதாக ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து […]
120 டன் மெட்ரிக் ஆக்சிஜனை ஏற்றி வந்த ரயிலை பெண் குழுவினர் இயக்கி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 120 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கொண்ட ரயிலை பெண்கள் குழு ஒன்று இயக்கி வந்தது. இதுதொடர்பான வீடியோவை ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “7வது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஜாம்ஷெட்பூர் டாடா நகரில் இருந்து பெங்களூருக்கு வந்தடைந்தது. எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய பெண் குழு […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக பயணிகள் தவிப்பதை அறிந்த முதலமைச்சர் முக. ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகள் உரிய பயணத்தை மேற்கொள்ள முடியாமல் நீண்ட நேரமாக காத்திருந்தனர். இந்த செய்தி முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தவிர்த்து வந்த அந்த பயணிகளின் குறையை போக்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முக .ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ரயில் நிலையத்தில் காத்திருந்த […]
ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலில் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கூறியபோது, நெல்லை மேம்பாளையத்துக்கும் செங்குளம் ரயில் நிலையத்திற்கும் இடையில் ஒரு பெண் சடலமாக கிடப்பதாக அப்பகுதியில் இருப்பவர்கள் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய […]
ரயிலில் ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், முரளி மனோகரன் மற்றும் போலீசார் காக்கிநாடா மாநிலத்தில் இருந்து பெங்களூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயிலில் இருக்கும் 30 மூட்டைகளில் 60 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை போலீசார் கன்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து போலிசார் அந்த […]
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த வாலிபர் அருகுவிளை அம்மன் கோவில் தெருவில் வசித்து […]
நாகர்கோவில் வந்த ரயிலில் தொழிலாளரிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்தவர் தொழிலாளி வினோத் குமார். இவருடைய மகன் நெல்லை மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக வினோத்குமார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். இந்நிலையில் அந்த ரயிலில் பயணம் செய்த இரண்டு நபர்கள் தாம்பரத்தில் வினோத் குமாருக்கு டீ வாங்கி கொடுத்துள்ளார்கள். அதை டீயை வினோத்குமார் வாங்கி குடித்தவுடன் மயங்கி […]
கொரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் படலாம் என்ற அச்சம் காரணமாக , முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் பேருந்து மற்றும் ரயில்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். குறிப்பாக […]