கடந்த மாதம் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரத்துக்கு சொந்தமான தோட்டத்த்தை சுற்றி சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள் இந்த நிலையில் தோட்டத்தின் உரிமையாளரான ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் கடந்த மாதம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்த சூழலில் ரவீந்திரநாத் நேரில் ஆஜராக கூறி வனத்துறை சமன் அனுப்பியுள்ளது. இதுவரை ரவீந்திரநாத் நேரில் ஆஜராகவில்லை. […]
Tag: ரவீந்திரநாத்
ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாக மாவட்ட வனத்துறை அலுவலர் தகவல் தெரிவித்தார். ஏனெனில் தேனியில் உள்ள ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய திமுக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் வன அலுவலர் இத்தகவலை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் புகார் மனுவை பெற்றுக்கொண்ட வனஅலுவலர் சமர்தா கூறியதாவது “சிறுத்தை இறந்த இடமானது எம்.பி ரவீந்திரநாத் உள்பட 3 நபர்கள் பெயரில் […]
அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் க்கு இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பிரச்சினையாக வெடித்து வருகிறது. நாள்தோறும் அதிமுக அரசியல் வட்டாரத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை நிலவி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக திமுகவில் இணைய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ப தினோராம் தேதி நடக்கும் உள்ள பொதுக்குழுவில் இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக மகுடம் சூடப் போவது உறுதியாகிவிட்டதால் முடிந்த வரை அவருக்கு குடைச்சல் […]
ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்தடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள், ரெய்டுகள் பாய்ந்து வருகிறது. முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. அரசு வேலை வாங்கித் தருவது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில், ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் அடுத்ததாக ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். […]
ஓ.பன்னீர்செல்வம் கடந்த சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியிலும், ப.ரவீந்திரநாத் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியிலும் போட்டியிட்டனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தபோது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், ஆண்டு வருமானம், விவசாய நிலங்கள், கல்வித்தகுதி, கடன் உள்ளிட்டவை குறித்த விவரங்களை தவறாக தெரிவித்துள்ளனர் என்று திமுக நிர்வாகி மிலானி என்பவர் மனு ஒன்றை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மேலும் அதற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் […]