சென்னை ஏர்னாவூர் சுனாமி குடியிருப்பு 4 வது பிளாக்கில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி. இவர் மனைவி ஸ்ருதி. இவர் பி.ஏ. பட்டதாரி ஆவார். இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஜய் தனது மனைவியை அடித்து துன்புறுத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சுருதி எண்ணூர் போலீசில் புகார் அளித்தார். அதன் புகாரின் பேரில் […]
Tag: ரவுடி கைது
புதுச்சேரி மாநிலம் அருகே பாகூர் தென் பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு வயலில் வேலை செய்து கொண்டிருந்த 65 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (23) ஈடுபட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. சிலம்பரசன் மீது கொலை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சம்பவத்தன்று திருட்டு வழக்கில் ஜாமினில் வந்த சிலம்பரசன்,கடலூர் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு […]
அண்ணாநகரில் திமுக பிரமுகர் கொலையில் ரவுடி லெனின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணாநகர் டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் 48 வயதாகும் இவர் திமுக பிரமுகர் ஆவார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபயிற்சி சென்ற போது அண்ணா நகர் போலீஸ் நிலையம் முன்பு மர்ம நபர்கள் சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கணவன் மனைவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக […]
மதுரை மாவட்டம் அண்ணா நகர் செண்பகத் தோட்டம் பகுதியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடி குருவி விஜய் மற்றும் கூட்டாளிகள் போலீசாரை தாக்க முயன்றதால் ரவுடியின் காலில் போலீசார் சுட்டு பிடித்தனர். காலில் காயமடைந்த ரவுடி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் அருகே ரவுடி குருவி விஷயம் பெண்ணொருவரை வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் […]
கஞ்சா விற்பனை செய்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அரியநாயகிபுரம் பகுதியில் வசிக்கும் கணேசன் என்பதும் அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் கணேசன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் அவரது […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மருந்துக் கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டல் விடுத்த ரவுடி தனிப்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ராசாத்தி கலைஞர் நகர் என்ற பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்துவருகிறார்.இவர் வண்டலூர் ஊராட்சியில் இருக்கின்ற ஓட்டேரி 4வது மெயின் ரோடு பகுதியில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த ரவுடி சிலம்பரசன் என்பவர் வினோத்குமாரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு 50 […]