உக்ரைன் உடனான போரில் ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை தூண்டக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் ரஷ்யப்படைகள் அணு ஆயுதப் பயிற்சிகளை மேற்கொள்வதை புதின் பார்வையிட்டுள்ளார். இந்த நிலையில் ரஷ்ய ராணுவ படையினரால் சில காலமாக திட்டமிடப்பட்டிருந்த அணு ஆயுதப் பயிற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் நாட்டில் அணுசக்தி படைகள் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் பல பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த பயிற்சியில் யார்ஸ் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு கண்டமிட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் […]
Tag: ரஷ்யப்படை
உக்ரைன் போரில் ஈடுபட்ட ரஷ்ய வீரமான தன் கணவரை கொன்ற புடின் அரசை பழி வாங்குவதற்காக ஒரு பெண் உக்ரைனை ஆதரிக்கும் படையில் இணைந்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் நான்கு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய படையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உக்ரைன் நாட்டில் தன் படைகளை போருக்கு வழிநடத்த மறுத்தார். எனவே, ரஷ்ய அரசு அவரை தூக்கிலிட்டது. எனவே, அவரின் மனைவி உக்ரைன் நாட்டிற்காக ஆதரவு தெரிவிக்கும் Freedom of Russia […]
உக்ரை நாட்டின் லுஹான்ஸ்க் என்னும் மாகாணத்தின் அனைத்து நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்து விட்ட நிலையில், தற்போது கடைசியாக இருந்த லிசிசான்ஸ்க் நகரையும் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாத கடைசியில் போர் தொடுக்க தொடங்கியது. எனினும், தற்போது வரை அந்த போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் லுஹான்ஸ்க் என்ற மாகாணத்தில் இருக்கும் முக்கியமான பல நகர்களை ரஷ்யா இதற்கு முன்பே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், அந்த மாகாணத்தில் கடைசியாக இருந்த […]
ரஷ்ய படைகள், உக்ரைன் படைகளின் அதிரடி தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் கார்கீவ் நகரிலிருந்து பின் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டின் கார்கீவ் என்ற முக்கிய நகரை கைப்பற்ற ரஷ்யப்படை தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. கார்கிவ் நகரமானது, அந்நாட்டின் கோட்டை நகரம் எனப்படுகிறது. ரஷ்ய படையினர் இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக முயற்சி மேற்கொண்டும், அவர்களால் கார்கீவ் நகரை கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்யப்படைகளை எதிர்த்து […]
உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகளிடமிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அதிபர் ஐ பேட் வழங்கி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா கைப்பற்றிய பகுதியிலிருக்கும் அந்நாட்டு படைகளிடமிருந்து, உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவர்களை உக்ரைன் வீரர்கள் மீட்டு விட்டனர். அவர்கள் தற்போது தலைநகர் கீவில் இருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை அதிபர் நேரில் […]
சுவிட்சர்லாந்து நாட்டிற்கு அகதிகளாக சென்ற உக்ரைன் மக்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்ப தொடங்கியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்து அரசு, 40 ஆயிரம் உக்ரேன் அகதிகளுக்கு தங்க இடம் வழங்கியது. ஆனால், உக்ரைன் நாட்டிலிருந்து வந்த மக்களில் சிலர் தங்கள் நாட்டின் டான்பாஸ் பகுதியை மட்டும் ரஷ்ய படையினர் குறி வைத்திருப்பதால், அந்நாட்டின் சில பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதாக கருதுகிறார்கள். எனவே, தங்கள் நாட்டிற்கே உக்ரைன் மக்கள் திரும்புவதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன்-போலந்து எல்லைப் பகுதியில் உள்ள காவல்துறையினர், கடந்த […]
உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு கோடீஸ்வரர் தன் மாளிகையை குண்டு வீசி தகர்க்குமாறு ஆயுதப் படைகளை கேட்டிருக்கிறார். உக்ரைன் நாட்டில் உள்ள TransInvestService என்ற ஐடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான Andrey Stavnitser, தங்கள் நாட்டு ராணுவத்திடம் தன் மாளிகையை குண்டு வீசி தகர்க்குமாறு கேட்டிருக்கிறார். அதாவது, ரஷ்யா, உக்ரைன் நாட்டில் போர் தொடுக்க தொடங்கியவுடன் குடும்பத்தாரோடு போலாந்து நாட்டிற்கு அவர் சென்றிருக்கிறார். தன் பாதுகாப்பு குழுவினரிடம் தான் புதிதாக கட்டிய மாளிகையை விட்டுச் சென்றிருக்கிறார். […]
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் மக்கள் தங்கள் ஆடைகளில் கட்டாயம் வெள்ளை ரிப்பன்கள் அணிய வேண்டும் என்று ரஷ்யப் படைகள் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய படையினர், உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் மக்கள் தங்கள் ஆடைகளில் வெள்ளை நிற ரிப்பன்களை கட்டாயம் அணிய வேண்டும் என்று எச்சரித்திருக்கிறார்கள். அவ்வாறு அணியாத மக்கள் கொலை செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யப்படைகள் அணியக்கூடிய வெள்ளை ரிப்பன்களை மரியுபோல் நகரத்தை சேர்ந்த மக்களும் அணியவேண்டும் என்று வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுபற்றி, […]
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரின் தாய் பல நாட்களாக தேடி வந்த நிலையில், சிறுமி கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகத் தெரிய வந்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் 47-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல முக்கிய நகரங்களை நிலைகுலையச் செய்த ரஷ்ய படைகள், பெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புச்சா நகரத்தில் 16 வயதுடைய கரீனா என்ற சிறுமி ரஷ்ய படையினரால் கொடூரத்தை […]