கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் காணொளி காட்சி வாயிலாக இன்று பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், பிராந்திய அளவிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும் இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். […]
Tag: ரஷ்யா
உக்ரைன் நாட்டில் நடக்கும் போரில் தற்போது வரை 7000 மக்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது. அந்த போர், சுமார் 10 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த, கடும் போரில் உக்ரைன் நாட்டின் பல நகர்கள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் தற்போது வரை போரில் அப்பாவி பொதுமக்கள் 7 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஆளில்லா விமானங்கள் மூலமாக உக்ரைன் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மின் நிலையங்கள் மீது நடத்தி வரும் போரால் உக்ரைனில் நீண்ட நேர மின்தடைகள் ஏற்பட்டுள்ளது. நேற்று […]
உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய போரில் தற்போது வரை 93,000-த்திற்கும் மேற்பட்ட ரஷ்யப்படையினர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 10 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. போரின் தொடக்கத்தில் ரஷ்யா ஆக்கிரமித்த கெர்சன் உட்பட முக்கியமான பகுதிகளை சமீப நாட்களாக ரஷ்யப்படையினர் இழந்து வருகிறார்கள். இதனால், ரஷ்யா பெரும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது. Hot. pic.twitter.com/IW83f7swDp — Defense of Ukraine (@DefenceU) December 8, 2022 எனினும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் […]
ரஷ்ய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட எண்ணையின் விலை வரம்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலர்கள் என்று நிர்ணயம் செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து ஜி7 இல் உறுப்பினர்களாக இருக்கும் பணக்கார நாடுகள் இந்த விலையை நிர்ணயம் செய்திருக்கின்றன. மேலும் ரஷ்ய நாட்டிலிருந்து உலக நாடுகளுக்கு கிடைக்கும் எண்ணெய் தடையில்லாமல் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த […]
ரஷ்ய அரசு, பாகிஸ்தான் நாட்டிற்கு கச்சா எண்ணையை குறைவான விலையில் கொடுக்க மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா பல மாதங்களாக தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறது. இதனால் மேற்கத்திய நாடுகள், எண்ணெய் போன்ற எரிபொருட்களை ரஷ்ய நாட்டிடமிருந்து வாங்குவதை தவிர்க்குமாறு கோரிக்கை வைத்தன. எனவே ரஷ்ய நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சில நாடுகள் நிறுத்திவிட்டது. இதனால், நஷ்டமடைந்த ரஷ்ய அரசு குறைவான விலையில் கச்சா எண்ணையை வழங்க தீர்மானித்தது. அதன் பிறகு, இந்தியா […]
நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அதனால் கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த போரானது 9 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் மீது தொடர்ச்சியாக ரஷ்யா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடத்த தாக்குதலில் போலந்து நாட்டில் ஏவுகணை விழுந்து வெடித்துள்ளது. இந்த ஏவுகணையை வீசியது ரஷ்யாவா? உக்ரைனா? என்பது இன்னும் […]
உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய நாடுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள மாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெள்ளை மாளிகையானது, ரஷ்ய நாட்டுடன் போரை நிறுத்த அமைதி பேச்சு வார்த்தை மேற்கொள்ள உக்ரைன் ஜனாதிபதி தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. இது பற்றி வெள்ளை மாளிகையினுடைய தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளராக இருக்கும் ஜான் கிர்பி தெரிவித்ததாவது, ரஷ்ய ஜனாதிபதி தங்கள் படைகளை உக்ரைனிலிருந்து […]
ஜி 20 உச்சி மாநாட்டில் “இது போருக்கான காலம் அல்ல” என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் ஜீ 20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியுள்ளது. இந்த ஜீ20 உச்சி மாநாடு இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஜீ 20 அமைப்பில் உறுப்பினர்களாகவுள்ள பல்வேறு நாடுகளை சேர்த்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். உக்ரைன் போர் […]
போலந்து நாட்டை குறிவைத்து ரஷ்யா, ஏவுகணைகளை தொடர்ச்சியாக வீசி பயங்கர தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு, போலந்தை அதிரச்செய்துள்ளது. அந்நாட்டில், சுமார் 12-க்கும் அதிகமான பெரிய நகர்களில் தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில், இருவர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, போலந்து ஜனாதிபதியான ஆண்டிரெஜ் துடாவும், அமெரிக்க ஜனாதிபதியும் உடனடியாக பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, போலந்து அதிபரிடம் பேசினேன். இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு என் […]
உக்ரைனியர்கள் குளிர்காலத்தில் இருளில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொள்வதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் இரு தரப்பிலும் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எனினும் போர் முடிவடைவதற்கான அறிகுறிகள் இல்லை. இந்நிலையில் ரஷ்ய படையினர் தற்போது உக்ரைன் நாட்டின் மின் சாதனங்களை குறி வைத்து தாக்குதல் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் […]
பாகிஸ்தான் அரசு, ரஷ்ய நாட்டிலிருந்து நாங்கள் எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க இயலாது என்று தெரிவித்திருக்கிறது. துபாயில் உள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்களிடம் பேசிய பாகிஸ்தான் நிதி, மந்திரி இஷாக் தார் தெரிவித்ததாவது, கடந்த மாதம் அமெரிக்கா சென்று அந்நாட்டு வெளியுறவு துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ரஷ்ய நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து ஆலோசனை செய்தனர். ரஷ்யா, சர்வதேச சந்தையில் இருக்கும் விலையை காட்டிலும் குறைவான விலைக்கு விற்கிறது. எனவே, இந்தியா குறைந்த […]
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட போரில் தற்போது வரை இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் 2 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க தகவல் வெளியிட்டுள்ளது. உக்கரை நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று போரை தொடங்கிய ரஷ்யா தற்போது வரை தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் இரண்டு நாடுகளிலும் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் மூத்த ராணுவ அதிகாரியாக இருக்கும் ஜென் மார்க், […]
உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் தங்கள் நாட்டில் சுமார் 50 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட காட்டுப்பகுதியில் அழிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இதில் இரண்டு தரப்பை சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், உக்ரைன் நாட்டின் பல நகர்களை ரஷ்ய படையினர் கைப்பற்றி விட்டனர். இந்நிலையில், எகிப்தில் நடக்கும் காலநிலை மாற்றம் குறித்த […]
உக்ரைன் ரஷ்யா போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த போரால் இருதரப்பிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்கு பீரங்கி குண்டுகளை வடகொரியா வழங்கியுள்ளது எனவும் இதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன எனவும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வடகொரிய பாதுகாப்பு அமைச்சரகம் கூறியதாவது “ரஷ்யாவுக்கு நாங்கள் ஆயுதங்களை வழங்கவில்லை. அதற்கான திட்டமும் எங்களிடம் இல்லை” என்று கூறியுள்ளது.
கெர்சன் நகரிலிருந்து தங்கள் இராணுவத்தை வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 9 மாதம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் பல்வேறு பகுதிகள் ரஷ்ய இராணுவ படைகள் வசம் கைப்பற்றியுள்ளன. இந்த சூழ்நிலையில் உக்ரைன் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷ்ய ராணுவத்தினர், அங்குள்ள வீடுகளை ஆக்ரமித்துடன் பொருட்களை கொள்ளை அடிப்பதாகவும், பொதுமக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாகவும் அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. அந்த நகரத்தில் […]
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் பிரைஸ் இந்தியா ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைத்துக் கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தினுடைய செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் ப்ரைஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் மீது போர் மேற்கொண்டு வரும் ரஷ்யா ஆற்றலிலும் பாதுகாப்பு உதவியிலும் நம்பகத்திறன் உள்ள நாடு கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் நாட்டின் நலனை இந்தியா கருத்தில் கொண்டிருக்கிறது. எனவே தான் ரஷ்ய நாட்டை அதிக சார்ந்திருப்பதை […]
ரஷ்ய நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் இல்லை என்றும் வடகொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் இல்லை என்றும் வடகொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளார். உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்கு பீரங்கி குண்டுகளை வடகொரியா வழங்கியதற்கான ஆதரங்கள் உள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். இதனை மறுத்த வடகொரிய பாதுகாப்பு அமைச்சரகம், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் […]
ரஷ்யா மற்றும் இந்திய நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் மாஸ்கோவில் சந்தித்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா போரானது தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோ சென்றடைந்துள்ளார். அங்கு ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் உடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இருநாட்டு வெளியுறவு துறை அமைச்சர்களும் நான்கு முறை சந்தித்து பேசி உள்ளனர். இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து மாஸ்கோவில் இந்திய […]
ரஷ்ய போரை எதிர்த்து போராடும் உக்ரைன் நாட்டிற்கு வழங்கி வரும் எங்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்கா, ஜெர்மன் நாடுகள் உறுதி கூறியிருக்கின்றன. ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் ஸ்கால்ஸ், சீன நாட்டிற்கு சமீபத்தில் சென்றிருக்கிறார். அப்போது சீன அதிபர் ஜின்பிங் அவரை நேரடியாக பார்த்து பேசியுள்ளார். ரஷ்ய நாட்டின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இரண்டு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் […]
ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவிற்கு அருகில் கோஸ்ட்ரோமா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் அந்த விடுதியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென பரவி விடுதி முழுவதும் புகைமண்டலமானது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் கடும் சிரமப்பட்டனர். இது குறித்து உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் மீட்டுக் குழுவினர் சம்பவ […]
சமாதான பேச்சுவார்த்தைகள் மூலமாக போருக்கு முடிவு கட்டுதல் அவசியம் என போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார். பக்ரைன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று தலைநகர் மணமாவில் அந்த நாட்டின் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபாவில் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வமத உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார். மேலும் இந்த மாநாட்டில் முன்னணி முஸ்லிம் இமாம்கள் உலகின் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் தலைவர் மற்றும் நீண்ட காலமாக மதங்களுக்கு இடையேயான உரையாடலில் ஈடுபட்டு […]
உக்ரைன் மீது அணு ஆயுதம் பயன்படுத்தும் திட்டத்தை ரஷ்யா மொத்தமாக கைவிட வேண்டும் என நேரடி எச்சரிக்கை விடுத்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜேர்மன் சேன்ஸலர் Olaf Scholz-ஐ கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி திரும்ப பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான நிலைமைகளை சர்வதேச சமூகம் உருவாக்க வேண்டும். இதனை அடுத்து அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தலை எதிர்க்க வேண்டும் என […]
ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டின் ஒற்றுமை நாளில் இந்தியாவை புகழ்ந்திருக்கிறார். ரஷ்யா, சுமார் 8 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வருடந்தோறும் நவம்பர் மாதம் நான்காம் தேதி அன்று ரஷ்ய நாட்டின் ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படும். அதன்படி நேற்று ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்ததாவது, “இந்திய நாட்டை பாருங்கள், அங்கு உள்நாட்டு வளர்ச்சிக்குரிய […]
உக்ரைன் நாட்டில் இருக்கும் விலங்குகள் பூங்காவில், ஒட்டகம், கங்காரு போன்ற விலங்குகளை கொன்று அவற்றை உண்டு ரஷ்ய வீரர்கள் உயிர் வாழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப் போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யா கைப்பற்றிய தங்களின் பகுதிகளை உக்ரைன் படையினர் மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக இரண்டு தரப்பினருக்குமிடையே மோதல் வெடித்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய நாட்டின் ஆக்கிரமிப்பில் இருக்கும் டோனட்ஸ் நகரத்தை மீட்பதற்காக உக்ரைன் படை போராடி […]
இந்தியாவிற்கு அதிகமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா முதல் இடத்தை பிடித்துள்ளது. ரஷ்ய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொள்முதல் செய்யப்பட்ட கச்சா எண்ணையின் அளவானது 2.4% குறைந்திருந்தது. அதே சமயத்தில் இந்திய நாட்டிற்கு அதிகமாக கச்சா எண்ணெய் விநியோகிப்பதில் முதல் இடத்தில் ஈராக்கும் இரண்டாம் இடத்தில் சவுதி அரேபியாவும் இருந்தது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் ரஷ்யாவின், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் பங்கானது, 22% உயர்ந்தது. அந்த வகையில் ரஷ்யா, ஈராக் […]
உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் மொத்தமாக சுமார் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக உள்ளார்கள் என்று கூறிய ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையராக இருக்கும் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஐ.நா கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது, கடந்த பிப்ரவரி மாதத்தில் உக்ரைனில் போர் தொடங்கியது. அப்போதிலிருந்து தற்போது வரை சுமார், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 14 மில்லியன் […]
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மின் நிலையங்களை நோக்கி தாக்குதல் மேற்கொள்வதால் அந்நாட்டின் தலைநகரில் இருக்கும் 80% பகுதிகள் இருளில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களில் செர்காசி, கெர்சன் மற்றும் கீவ் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் இருளில் மூழ்கியிருக்கிறார்கள். தங்கள் நாட்டின் கருங்கடல் பகுதியில் ஆளில்லா விமானங்கள் மூலமாக உக்ரைன், தாக்குதல் மேற்கொண்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் முக்கிய உள்கட்டமைப்புகள் பாதிப்படைந்துள்ளன. […]
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 8 மாதங்களை க் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போரில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்த போரில் உக்ரைனின் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதே நேரம் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி இருக்கிறது மின் நிலையங்கள் மீது ரஷ்ய படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. […]
உலகில் அதிக ஊழியர்களைக் கொண்ட அரசு துறை விவரம் ஒன்றை ஸ்டேட்டிஸ்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக அளவில் அதிக ஊழியர்களைக் கொண்ட துறையாக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட அரசு துறைகள் பற்றிய விவரத்தை ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்டேட்டிஸ்டா என்ற நிறுவனம் வருடம் தோறும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 2022 ஆம் வருடத்திற்கான பட்டியல் படி உலகில் உள்ள நாடுகளில் அதிக ஊழியர்களைக் கொண்ட […]
ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள் என உக்ரைன் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் ரஷ்யா போரானது தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றது. இந்த போரில் ரஷ்யா ஈரானிடம் இருந்து வாங்கப்பட்ட வெடிகுண்டு ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது. இதனை மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஹொஷைன் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா உடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அந்த சமயத்தில் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி கூறியதாவது […]
ஈரான் நாட்டில் தயார் செய்யப்பட்ட 300க்கும் அதிகமான ட்ரோன்கள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது சுமார் 8 மாதங்களாக ரஷ்யா போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதற்கு உக்ரைன் படையும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை ஈரான் நாட்டில் தயார் செய்யப்பட்ட 300க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளார். அவர் ஈரான் தயாரித்த நூற்றுக்கும் அதிகமான ஷாஹெட்-136 காமிகேஸ் என்ற ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாக […]
உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான போர் எட்டு மாதங்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த தாக்குதலை உக்ரைனும் சளைக்காமல் எதிர் கொண்டு வருகிறது. இந்த சூழலில் உக்ரைனில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டு உக்ரைன் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உக்ரைன் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் நாட்டின் […]
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் பல மாதங்களை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு உக்ரேனிய நகரங்களை குறிவைத்து பதிலடி கொடுக்கும் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகின்றது. இந்த நிலையில் உக்ரேனில் போர் தீவிரமடைகின்ற காரணத்தினால் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அவசர உத்தரவிட்டிருக்கிறது. இந்த சூழலில் உக்ரேனின் அணுமின் நிலையங்களில் அணு கழிவுகளை பயன்படுத்தி நாசக்கார ஆயுதங்களை அந்த நாட்டு அரசு தயாரித்துக் கொண்டிருப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு முன் வைத்துள்ளது. இதனை மறுத்திருக்கின்ற […]
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் ரிஷி சுனக்கை முறைப்படி இங்கிலாந்தின் புதிய பிரதமராக அரசர் மூன்றாம் சார்லஸ் அறிவித்துள்ளார். இதனை அடுத்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் தனது முதல் உரையின் போது நான் தவறுகளை சரி செய்ய நியமிக்கப்பட்டேன் நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல செயலால் ஒன்றிணைப்பேன் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]
உக்ரைன் ரஷ்யா இடையான போர் பல மாதங்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் பெரும்பாலான பகுதிகள் மின்தடையால் இருளில் மூழ்கி இருக்கிறது. இந்த சூழலில் ஒரு லட்சம் டன் விமான எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்று அளிக்கப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் இது பற்றி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில் […]
சைபிரியாவில் குடியிருப்பு கட்டிடம் மீது விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய போர் விமானம் ஒன்று சைபிரியாவில் உள்ள இர்குட்ஸ் நகரத்தில் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது அந்த விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்துள்ளது. இந்த விபத்தில் விமானத்திலிருந்து விமானிகள் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர் இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின் ரஷ்ய போர் […]
ரஷ்ய பொதுமக்கள் மீது உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரானது எட்டு மாதங்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படையெடுப்பின்போது டொனட்ஸ்க், லூகான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜியா போன்ற நான்கு பகுதிகளை கைப்பற்றிய ரஷ்யா அவற்றை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது அந்த நாட்டு அதிபர் புதின் அறிவித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பகுதியில் […]
மின்சாரம் தண்ணீர் இல்லாமல் குளிரில் வாடினாலும் ரஷ்யாவை நாங்கள் அதிகமாக வெறுப்போம் என உக்ரைன் மக்கள் கூறியுள்ளனர். உக்ரைனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலில் நேற்று உரையாற்று உள்ளார். அப்போது அவர் பேசும்போது எங்கள் நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகளை போர்க்களமாக மாற்றிய அரசியல் தலைமை கட்டளையிட்டு இருப்பதாக […]
உக்ரைன ரஷ்யா இடையேயான போர் காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டு இருப்பதால் பிரான்சில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் அந்த நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிரான்சில் எரிசக்தி தட்டுப்பாடு தலைதூக்கி இருக்கின்ற நிலையில் மின்சார தட்டுப்பாட்டை போக்கும் விதமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் தெருக்களில் இரவு முழுவதும் தேவையில்லாமல் எறிந்து கொண்டிருக்கும் விளக்குகளை தன்னார்வல இளைஞர்கள் சிலர் ஸ்பைடர் மேன்களை போல சுவற்றில் சகசரவென ஏரி அனைத்து மின்சாரத்தை சேமித்து வருகின்றார்கள். […]
கிரீமியாவை ரஷ்யா உடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் காரணமாக கிவ் உள்ளிட்ட நகரங்கள் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ளது ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் இது பற்றி உக்ரைன் […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டுடன் சேர்க்கப்பட்ட உக்ரைன் நாட்டின் பிராந்தியங்களில் ராணுவ சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டிடம் கைப்பற்றிய ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க் மற்றும் கெர்சன் போன்ற நான்கு பிராந்தியங்களை தங்கள் நாட்டோடு சேர்த்துக் கொண்டனர். உலக நாடுகள், சர்வதேச சட்டத்தை மீறி ரஷ்யா செயல்படுவதாக கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து உக்ரைன் ராணுவம், சட்டவிரோதமான […]
உக்ரைனிய பிராந்தியங்களில் ராணுவ சட்டத்தை விதிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புதின் கூறியுள்ளார். உக்ரைன் உடனான போர் நடவடிக்கையில் உச்சகட்டமாக டொனட்ஸ், லுஹான்ஸ்க் மக்கள் zaporizhzhia மற்றும் kherson நான்கு கிழக்கு உக்ரைனிய நகரங்களை ரஷ்யா தனுடன் அதிகாரபூர்வமாக இணைத்து கொண்டதாக கிரெம்ளினில் நடைபெற்ற விழாவில் ரஷ்ய ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்த நிலையில் இதற்கு உக்ரைன் மற்றும் உலக நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தது இதனை அடுத்து ரஷ்யாவின் அறிவிப்பை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இந்த […]
பிரிட்டனில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விரைவில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று எரிசக்தி தலைவர் எச்சரித்திருக்கிறார். பிரிட்டனில் எரிவாயு இறக்குமதி செய்யப்படுவது சரிவடைய தொடங்கியிருக்கிறது. எனவே, வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாலை நேரங்களில் 4 மணி முதல் 7 மணி வரை வீடுகளில் மின் தடை ஏற்படும். எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மின்சாரத்தை துண்டிப்பதை தவிர வேறு வழி கிடையாது என்று எரிசக்தி தலைவராக இருக்கும் ஜான் பெட்டிகிரேவ் கூறியிருக்கிறார். இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே மக்களுக்கு இவ்வாறான […]
உக்ரைனுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தில் மீது ராணுவ விமான மோதி விபத்து ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் தென்மேற்கே உக்ரைனுக்கு அருகாமையில் அமைந்துள்ள எய்ஸ்க் நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று நேற்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதனை தொடர்ந்து கட்டிடத்தில் முதல் தளத்திலிருந்து ஒன்பதாவது தளம் வரை தீப்பற்றி உள்ளது. இந்த விபத்தில் அனைத்து […]
ரஷ்யா ஸ்டார்லிங் செயற்கைக்கோளை அழிக்க முயற்சித்து வருவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 6 மாதங்களாக தொடர்ந்து நீடித்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கப்பட்டு வருகின்றது. உக்ரைன் நாட்டில் இணைய சேவையை முடக்க ரஷ்யா ஸ்டார்லிங் செயற்கைக்கோளை அழிக்க முயற்சித்து வருகின்றது. […]
உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவில் இருக்கும் மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்து, ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் சுமார் எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் அந்நாட்டின் பல நகரங்கள் அழிந்து போனது. பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையத்தை குறி வைத்து ரஷ்யப்படையினர் நேற்று ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனர். இதனால், அங்கு அதிகளவில் தீ […]
உக்ரைனுக்கு 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா போரானது தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷ்ய இராணுவத்திற்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணிதிரட்ட உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பும் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]
கஜகஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரி, உக்ரைன் விவகாரத்தில் இந்திய நாட்டின் நிலைப்பாடு மிக சமநிலையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் முடிவடைய போவதாக தெரியவில்லை. இதனிடையே கஜகஸ்தான் நாட்டின் துணை வெளியுறவு மந்திரியான ரோமன் வாசிலென்கோ தெரிவித்ததாவது, இந்த வருட ஆரம்பம் முதல், இந்தியா சர்வதேச மன்றங்களில் தங்களின் கருத்தை தெரிவிக்கும் சமயங்களில் உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய போர் தொடர்பில் மிகவும் சமநிலையாக இருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போரில் இந்திய நாட்டின் நிலைப்பாடானது […]
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அதிகமாக நிதி உதவி கிடைத்தால் ரஷ்யா மேற்கொள்ளும் போரை விரைவாக முடிவடைய செய்யலாம் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்யா மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதல்களால் வீடுகளும், குடியிருப்புகளும் மொத்தமாக அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவற்றை மீண்டும் கட்ட கூடுதலாக பணம் தேவை என்று கோரிக்கை வைத்திருக்கிறார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய வருடாந்திர கூட்டமானது, வாஷிங்டனில் நடந்தது. அமைச்சர்களோடு காணொளி காட்சி மூலமாக ஜெலன்ஸ்கி உரையாடினார். அப்போது, அவர் தங்கள் […]