பக்முத் நகரில் தீவிரமாக சண்டை நடந்து வருவதாக அந்நகர துணை மேயர் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் டொனெட்ஸ்க் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பக்முத் மற்றும் அருகிலுள்ள அவ்திவ்கா நகரங்கள் மீது ரஷ்ய ராணுவ படைகள் தொடர்ந்து சண்டை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உக்ரைனிய துருப்புகள் உறுதியாக நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு முன்பு சுமார் 80 ஆயிரம் பேர் இந்நகரில் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இந்த படையெடுப்பு தொடங்கியதிலிருந்து […]
Tag: ரஷ்ய படைகள்
போரோடியங்கா நகரில் ரஷ்ய ராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்துள்ள கட்டிடத்தின் உள்ளே பூனை சிக்கித்தவித்தது. உக்ரைன் நாட்டில் கீவ்வின் வடமேற்கில் போரோடியங்கா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் ரஷ்ய ராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் சேதமடைந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் பூனை சிக்கி தவித்துக்கொண்டிருந்தது. இந்தப் பூனையை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த பூனைக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த இருநாடுகளுக்கு இடையிலான போரில் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதற்கிடையில் போரை நிறுத்துமாறு ரஷ்யாவை பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் ரஷ்யா, உக்ரைன் மீதான ஆக்ரோஷமான போரை நிறுத்தாமல் நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் விரைவில் முன்னேற்றம் அடைவதற்கு தடையாக சீனாவினுடைய டயர்கள்உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது […]
ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரம்காட்டி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் போர் அச்சம் காரணமாக பதுங்கி இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கத்துடன் தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
ரஷ்ய படைகள் உக்ரைனின் தெற்கு பகுதிகளில் உள்ள மக்களை துன்புறுத்துவதாகவும், மக்கள் பிரதிநிதிகளை கடத்துவதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் சமீபத்தில் ரஷ்யாவின் போர்க் கப்பலை அழித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் தலைநகர் மரியுபோலை முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. இதுமட்டுமின்றி கீவ் நகரில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அந்நகரைச் சுற்றி ஆயிரக்கணக்கான உடல்கள் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த […]
உக்ரைனின் தலைநகரான கீவில் உள்ள Ivankiv-ன் துணை மேயர் Maryna Beschastna அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது Maryna Beschastna கூறுகையில், ரஷ்ய வீரர்கள் கிராமத்தில் வைத்து 15, 16 வயதுடைய சிறுமிகளை அண்மையில் சீரழித்துள்ளனர். மேலும் தரதரவென தலைமுடியை பிடித்து இழுத்து செல்லப்பட்ட அவர்கள் மீது ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் உக்ரைன் பெண்கள் பலரும் தற்போது தங்கள் அழகினைக் குறைத்து காட்டுவதற்காக தங்களுடைய தலைமுடியை அதிக அளவில் வெட்டி கொள்கின்றனர். இப்படி […]
உக்ரைன் மீது ரஷ்யா 45-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகளின் பிடியில் கடந்த ஒரு மாத காலமாக சிக்கியிருந்த 300 அப்பாவி மக்களில், 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களுடைய சடலங்கள் அப்புறப்படுத்தப்படாமல் இருட்டு அறை ஒன்றில் கிடப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பள்ளி ஒன்றின் அடித்தளத்தில் 700 சதுர அடி கொண்ட அறையில் சிக்கிக்கொண்ட 300 அப்பாவி மக்களில் சிலர் பசி அல்லது மூச்சுத்திணறலாலும், சில முதியவர்கள் சோர்வாலும் […]
உக்ரைன் மீது ரஷ்யா 6 வாரங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிவ் சுற்றியுள்ள பகுதிகளை ரஷ்ய படைகளிடம் இருந்து உக்ரைன் படையினர் கைப்பற்றினர். இதற்கிடையில் நேற்று உக்ரைன் தலைநகரங்களில் இருந்து வெளியேறிய ரஷ்ய வீரர்கள் அப்பாவி மக்கள் 410 பேரை படுகொலை செய்து புதைகுழியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். கீவ் உள்ளிட்ட நகரங்களை உக்ரைன் கைப்பற்றியதால், அதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் ரஷ்ய படையினர் […]
உக்ரைனில் உள்ள பொருள்களை ரஷ்யப் படைகள் கொள்ளையடித்ததாக நாட்டு உளவுத் துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 38 நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகரை சுற்றி உள்ள இடங்கள் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியதாகவும், அவர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் புலனாய்வு இயக்குனரகம் கூறியதாவது, “பெலராஸ் நாட்டின் Naroulia-வில் நகரில் ரஷ்ய படைகள் திறந்தவெளி […]
கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது […]
ரஷ்ய படைகளை குழப்ப, உக்ரைன், சாலைகளில் இருக்கும் வழிகாட்டி பலகைகள் திசையை மாற்றி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாக பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடல்வழி, வான்வழி மற்றும் தரை வழி என்று தீவிரமாக தாக்குதல் நடத்தி வருவதால் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. உக்ரைனில் உள்ள பெரும்பாலான இராணுவ இலக்குகள் ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதனிடையே ரஷ்ய அரசு போரை முடித்துக் கொள்வதற்காக பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு […]
ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் தற்போதுள்ள ஆட்சியை அகற்றி விட்டு ராணுவ ஆட்சியை கொண்டுவர வேண்டும் என அறிவித்துள்ளார். ரஷ்ய படைகள் தனது உக்கிரமான தாக்குதலை இரண்டாவது நாளாக உக்ரைன் மீது நடத்தி வருகின்றது. ரஷ்யப் படைகள் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனைத் தாக்குதலை உக்ரைன் மீது நடத்துவதால் பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் அந்நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளையும் தாக்கி ரஷ்ய படைகள் அளித்துள்ளன. அதேபோல் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இருந்து உக்ரைன் […]