இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் சத்தி ஷ்தலா என்ற இடத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் மற்றும் நாடு […]
Tag: ராகுல் காந்தி
சோனியா காந்தி ராகுல் காந்தியை பிரதமராக பதவி ஏற்க வைக்காததற்கான காரணத்தை ஒபாமா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி பற்றி ஒபாமா குறிப்பிட்ட கருத்து சில தினங்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த சமயத்தில் பிரதமராக சோனியா காந்தி பதவி ஏற்க பாரதிய ஜனதா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. பதற்றமான சூழலை உருவாக்குவதற்கு முயற்சித்தனர். எனவே வேறு ஒரு நபரை பிரதமராக தேர்ந்தெடுக்கும் சூழல் உருவானது. அச்சமயத்தில் ராகுலை பிரதமராக […]
கொரோனா தடுப்பு மருந்தை இந்திய மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டறிந்து, அதன் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. அந்த தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் மேல் கொரோனாவை குறிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த தடுப்பூசியை இந்தியாவில் சேமித்து வைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார். அது […]
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியை தேர்வு செய்ய அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு வகித்து வந்தார். ஆனால் கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவை தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். ஏற்கனவே தலைவராக இருந்த சோனியா காந்தி 2019ஆம் […]
24 மணி நேரமும் தொலைக்காட்சிகளில் மோடியை மட்டும் காட்டுகிறார்கள் என ராகுல் காந்தி வேதனையை தெரிவித்துள்ளார். நேற்று பீகார் மாநில தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, என்னுடைய பேச்சு இப்போது நடந்து கொண்டிருக்கிறது, மோடியும் பேசுவார். நீங்கள் தொலைக்காட்சியை பாருங்கள். உங்களுக்கு தொலைக்காட்சியில் காங்கிரஸ் தெரியாது, ராகுல்காந்தி தெரியமாட்டார், உங்களுக்கு தொலைக்காட்சியில் வெறும் நரேந்திர மோடி மட்டுமே தெரிவார். நீங்கள் யோசித்து இந்த கேள்வி கேளுங்கள் 24 மணி நேரமும் நரேந்திர மோடியை ஏன் காண்பித்துக் […]
நீங்களே டீ கடை போய் மோடி என்ன செய்தார் என்று கேளுங்கள் என பீகார் மக்களிடம் ராகுல் காந்தி பேசியுள்ளார். நேற்று பீகார் மாநில தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் நிதீஷ்குமார் அரசாங்கம் எப்படி இருக்கின்றது ? என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொதுச் சந்தை, ஜிஎஸ்டி இவை இரண்டும் பீகார் மற்றும் இந்தியாவை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்டது என்று கூறப்பட்டது. என்னுடைய இந்தியா எப்படி இருக்கும் என்று நீங்கள் […]
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதாக சொல்லப்படுகின்றது. பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் ராகுல்காந்தி பிரச்சாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது அரசியல் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கி முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடியின் தேஜாஷ்வி […]
காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி கண்டித்த பின்னரும் பாஜக பெண் வேட்பாளர் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு தெரிவிக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச முன்னாள் முதல் அமைச்சருமான திரு கமல்நாத் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தாப்ரா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் திருமதி இமாதி தேவியை காங்கிரஸ் மூத்த தலைவர் திரு கமல்நாத் சர்ச்சைக்குரிய வார்த்தையில் விமர்சித்தார். இதற்கு […]
கேரளாவில் இருக்கும் தனது சொந்த தொகுதியான வயநாட்டில் திரு ராகுல் காந்தி நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தலைநகர் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நாளை கோழிக்கோடு செல்லும் காங்கிரஸ் எம்.பி. திரு ராகுல் காந்தி அங்கிருந்து சாலை மார்க்கமாக மலப்புரம் செல்கிறார். அங்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பின்னர் வயநாடு செல்லும் திரு ராகுல் காந்தி நாளை மறுநாள் வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா ஆலோசனைக் […]
மோடி அரசு வேளாண் சட்டங்கள் மூலமாக விவசாயிகளுக்கு துரோகம் செய்ததை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்ற ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் பெருநிறுவனங்களுக்கு பயனளிக்கக் கூடிய விதத்தில் இருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளன.அது மட்டுமன்றி அந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மத்திய அரசிற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.மேலும் காங்கிரஸ் கட்சியின் […]
ராகுல் காந்தி மற்றும் பரூக் அப்துல்லா இருவரும் சீனாவிற்கு சென்ற குடியேறலாம் என பாஜக சாடியுள்ளது. காஷ்மீரின் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்தார். அப்போது சீனாவின் ஆதரவுடன் சிறப்பு சட்டப்பிரிவு 370 மீண்டும் அமலுக்கு வரும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தது பாஜக. இதுகுறித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, “ஜனநாயக செயல் முறை குறித்து தங்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தால் அது பற்றிப் பேசுவதற்கு முழு […]
இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய குண்டு துளைக்காத வாகனங்கள் வாங்க முடியாத பாஜக அரசு 8,400 கோடி ரூபாய் செலவில் பிரதமருக்கு அதிநவீன விமானம் வாங்குவது நியாயமா என காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ராணுவ வீரர்கள் சாதாரண வாகனங்களில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் இராணுவ உயரதிகாரிகள் குண்டு துளைக்காத வாகனங்களில் பயணம் செய்வதாகவும் ஆபத்து நிறைந்த பகுதிகளில் பணிபுரியும் தங்களுக்கு அந்த […]
பிரதமர் மோடியின் யோசனையை கிண்டல் செய்த ராகுல் காந்திக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்துள்ளனர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பிரதமர் மோடி காற்றாலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுடன் குடிநீர். ஆக்சிஜன் போன்றவற்றின் உற்பத்தி குறித்து மேற்கொண்ட உரையாடல் வீடியோவை பதிவிட்டார். மேலும் நமது பிரதமர் புரிதல் இல்லாதவர் என்றால் ஆபத்து இல்லை. ஆனால் பிரதமரை சுற்றி இருப்பவர்களும் அதை எடுத்துச் செல்லும் துணிவு இல்லாதவர்கள் என்பதுதான் மிகவும் […]
நான் டிராக்டரில் சோபா போட்டு அமர்ந்ததை விமர்சனம் செய்துள்ள நீங்கள், பிரதமர் வாங்கியுள்ள சொகுசு விமானத்தை ஏன் கண்டுகொள்ளவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் நடந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டிராக்டரில் சோபா போட்டு அமர்ந்து சென்றுள்ளார். அதற்கு மத்திய மந்திரி ஸ்மிருதி உள்ளிட்ட பலர் ராகுல் காந்தியை கிண்டல் செய்து பல பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் […]
பஞ்சாபில் நடந்த போராட்டத்தில் ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம் போராட்டம் வெடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்றார். அந்தப் போராட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் மற்றும் அமைச்சர் பால்பீர் சிங் சித்து ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். […]
டிராக்டரில் அமர்வதற்கு சோபாவை பயன்படுத்தி பேரணி நடத்தும் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி விஐபி விவசாயி என்று மத்திய மந்திரி விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடத்தும் மூன்று நாள் டிராக்டர் பேரணி நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இரண்டாவது நாளான நேற்று பஞ்சாபில் டிராக்டர் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். […]
பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளையும், கலாச்சாரத்தையும் சொல்லிக்கொடுத்த வளர்த்தால் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தடுக்கப்படும் என பாஜக எம்எல்ஏ கூறிய கருத்துக்கு திரு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். உத்திரபிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கலாச்சாரத்தையும், நல்ல பண்புகளையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க […]
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் தொழிலதிபர்கள் மட்டுமே பலன் அடைவர் எனவும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மத்திய அரசு சிதைத்து விட்டதாகவும் காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி திரு ராகுல்காந்தி பஞ்சாப்பில் இரண்டாவது நாளாக டிராக்டரில் பேரணியில் பங்கேற்றுள்ளார். பன்லாலா சவுத் பகுதியில் இருந்து பட்டியாலா வரையிலான 20 கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணி மேற்கொண்ட அவர் அங்கு பொதுமக்களிடையே உரையாற்றினார். மத்திய அரசின் புதிய […]
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாட்கள் டிராக்டர் பேரணியை ராகுல்காந்தி தொடங்கியுள்ளார் மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. எதிர்க்கட்சியினரும் வேளாண் சட்டத்திற்கு கடுமையாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். புதிதாய் கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இன்றிலிருந்து மூன்று நாட்கள் டிராக்டர் பேரணி நடத்துகிறார். பஞ்சாப் […]
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க திரு ராகுல் காந்தி திருமதி பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் ஆதிராசுக்கு விரைந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14ஆம் தேதி நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசர கதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. […]
பொய்யை உண்மையுடன் வெல்லும் போது வரும் எல்லாத் துன்பங்களையும் என்னால் தாங்க முடியும் என காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலதில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் […]
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை முதல் 6ம் தேதி வரை திரு ராகுல் காந்தி தலைமையில் பஞ்சாப் முதல் ஹரியானா வரை டிராக்டர் பேரணி நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று 9வது நாளாக பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் வரை இந்த போராட்டம் தொடரும் என பஞ்சாப் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் விவசாயிகளின் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி மீண்டும் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக காரில் சென்று […]
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு பலியான இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தாக்கப்பட்டதால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதையொட்டி புதுச்சேரியில் அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். இப்போராட்டத்தை முதல் அமைச்சர் நாராயணசாமி துவக்கி […]
பொய்யை உண்மையுடன் வெல்லும் போது வரும் எல்லாத் துன்பங்களையும் என்னால் தாங்க முடியும் என காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நம் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரின் பிறந்த நாளையொட்டி அனைத்து அரசியல் தலைவர்களும் தங்கள் மரியாதையை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவ்வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க நடைபயணமாக சென்ற ராகுல் காந்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலை யாருக்கும் தெரியாமல் நேற்று போலீசார் எரித்ததால் நாடு முழுதும் கண்டனங்கள் எழுந்த இந்நிலையில் ராகுல் காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கு பதட்டமான சூழ்நிலை உள்ளது. ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் செல்லும் வழியில் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையிலும் கூட நாங்கள் தொடர்ந்து பயணம் செய்வோம் […]
திரு மண்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் தற்போது இல்லாததை இந்தியா உணர்வதாக திரு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். திரு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் வாழ்த்து பதிவில் திரு மன்மோகன் சிங் போல ஒரு பிரதமர் இல்லாததை இந்திய நாடு தற்போது உணர்வதாகவும், அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் […]
ராகுல் காந்தி பிரதமரானதும் நீட் தேர்வு இரத்து செய்யப்படும் என்று புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வுக்கு முன்னர் அதாவது…. நேற்று முன்தினம் நீட் தேர்வு பயத்தினால் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நீட் தேர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து, நீட் தேர்வை […]
காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவர் திருமதி சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் திருமதி சோனியா காந்தி வழக்கம்போல மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெளிநாட்டில் இரண்டு வாரங்கள் தங்கி மருத்துவ பரிசோதனைகளை முடித்து கொண்டு பின்னர் இந்தியாவுக்கு திரும்புகிறார். அதன் பின்னர் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வார். திருமதி சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணத்தில் அவருடன் அவரது மகனும், நாடாளுமன்ற […]
பனி பாறைகளில் மோதி கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலை போல நாட்டிலுள்ள வேலையில்லாத் திண்டாட்டமும் பொருளாதார சரிவு, சீன ஊடுருவல் அனைத்து பிரச்சினைகளும் மக்களின் கவனத்திற்கு வரும் என்றும் பிரதமர் மோடி அவர் கேட்க விரும்பியதை மட்டும் இனிமேலும் தொடர்ந்து கேட்க முடியாது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்கி வார விடுமுறை இன்றி வரும் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ள […]
பிரதமர் திரு மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் இந்தியா தத்தளித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. திரு ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து திரு ராகுல் காந்தி தமது டுவிட்டர் பதிவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி -23.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும், 12 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். மத்திய அரசு தனது GST நிலுவைத் தொகையை […]
மாணவர்கள் நீட், ஜே. இ. இ.தேர்வுகள் குறித்து ஆலோசிக்க விரும்பும்போது பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குவதா என பிரதமர் நரேந்திர மோடிக்கு திரு. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மங்கி பாத் நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் இருப்பதாகவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார். விளையாட்டு பொம்மைகள் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்த […]
காணொளி வாயிலாக தொடங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் மிகுந்த பரபரப்பை காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நீடிக்கும் சோனியா காந்தி தொடர்ந்து அந்த பொறுப்பை தானே ஏற்று வழி நடத்த முன் வருவாரா ? அல்லது ஏற்கனவே பலமுறை சொல்லி இருந்தது போலவே மீண்டும் புதிதாக முழுநேர தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்துவாரா ? என்பது மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்படுகிறது., […]
நாட்டில் நிலவும் வேலையின்மை பொருளாதார சீரழிவுக்கு மத்திய அரசே காரணம் என திரு ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வேலையின்மை, பொருளாதார சீரழிவு உண்மைகள் இந்திய மக்களிடம் இருந்து மத்திய அரசு மறக்க முடியாது என குற்றம்சாட்டி உள்ளார். பேஸ்புக்கில் தவறான செய்திகள் மற்றும் வெறுப்பைத் பரப்புவதன் மூலம் உண்மையை மறைக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். நான்கு மாதங்களில் இரண்டு கோடி பேர் வேலைவாய்ப்பு, 2 கோடி குடும்பங்கள் எதிர்காலம் இருளில் […]
ஊரடங்கு காரணமாக பல கோடி மக்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டு இருக்கும் ஓர் ஆய்வு அறிக்கையில், “லாக்-டவுன் காரணமாக ஏப்ரல்-ஜூலையில் சம்பள ஊழியர்கள் ஒரு கோடியே 89 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஒரு கோடியே 77 லட்சம் பேருக்கும் கூடுதலாக மே மாதத்தில் 1 லட்சம் பேருக்கும் ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கும் ஜூலையில் 50 லட்சம் பேருக்கும் […]
இயற்கையை நாம் பாதுகாத்தால் தான் இயற்கை நம்மை பாதுகாக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக திரு. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் சுற்றுச்சூழல் ஒழுங்கு முறையை நீர்த்துப்போக செய்வதை நரேந்திர மோதி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இயற்கையை நாம் பாதுகாத்தால் தான், இயற்கை நம்மை பாதுகாக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர் சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு வரைவு அறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பல லட்சத்தை கடந்துள்ள நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசு எங்கே? என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியாவில் தற்பொழுது வரை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ள நிலையில், மொத்த எண்ணிக்கையானது 20,27,000 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்து விட்டது. குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 13,70,000 ஆக உள்ளது. பல லட்சத்தை கடந்துவிட்ட கொரோனா வைரஸ் […]
ராணுவ அமைச்சகம் சீனா அத்துமீறி நுழைந்து விட்டதை ஒப்புக் கொள்ளும் பொழுது பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். லடாக் எல்லைப் பிரச்சனையில் மத்திய அரசு நடந்து கொண்ட விதத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் மற்ற தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். அதாவது இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து விட்டதாகவும், இதனை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள மறுப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். […]
அசுர வேகத்தில் பரவும் கொரோனா தொற்றை மத்திய அரசு திறம்பட கையாளவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் பிரச்சினைகளை கையாள்வதில் மத்திய அரசு திறம்பட செயல்படவில்லை என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சட்டி வருகிறார். தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசை கொரோனா தொற்று குறித்து குற்றம் சாட்டி வரும் ராகுல் காந்தி, நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், […]
இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என பொய்யான தகவல் கூறி வருபவர்கள் தேசத் துரோகிகள் என ராகுல் காந்தி குற்றம் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செயல்படும் மத்திய அரசை, பல விவகாரங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இத்தகைய விமர்சனங்களுக்கு வலு சேர்க்கும் முறையில், சில நாட்களாக வீடியோ தொகுப்புகளை பதிவு செய்து வருகிறார். இத்தகைய நிலையில் இன்று ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீன ஆக்கிரமிப்பு பற்றிய உண்மைகளை மறைப்பது […]
ராகுல் காந்தியினுடைய ஆறுமாத கால சாதனைகளாக ஒரு பட்டியலை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டிருக்கின்றார். காங்கிரஸ் கட்சியுடைய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கொரோனா காலத்தில் பாரதிய ஜனதா அரசினுடைய சில சாதனைகளை பட்டியலிட்டு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்தகைய பதிவில் “கொரோனா பிரச்சனையில் அரசின் சாதனைகள்” என குறிப்பிட்டு அதன் கீழ் பல்வேறு சாதனைகளை வரிசைப்படுத்தி உள்ளார். பிப்ரவரியில் நமஸ்தே டிரம்ப், எனவும் மார்ச்சில் மத்தியபிரதேச அரசினை வீழ்த்தியது, ஏப்ரலில் மக்கள் அனைவரையும் […]
ராகுல் காந்தி எப்பொழுதும்போல் சேற்றை வாரி இறைத்து, ராணுவம் மற்றும் நாட்டின் வெளியுறவு கொள்கையை அவர் அரசியலாக்க முயற்சி செய்வதாக பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா பதிலடி கொடுத்திருக்கிறார். பிரதமர் மோடி தனது செல்வாக்கை காப்பாற்ற லடாக் எல்லையில் இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று கூறுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருக்கிறார். இந்த குற்றசாட்டுக்கு பாரதீய ஜனதா தலைவரான ஜே.பி.நட்டா டுவிட்டரில் பதில் கொடுத்துள்ளார். அதில் ராகுல் காந்தி வழக்கம் போல் சேற்றை வாரி வீசியுள்ளதாகவும், […]
பெரியார் சிலையை அவமானப்படுத்திய சம்பவத்திற்கு எதிராக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழில் டுவிட் செய்துள்ளார். கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தத்தில் பெரியார் சிலை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் அதன் மீது காவி சாயம் பூசப்பட்டிருந்தது. இதை கண்டித்து பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இச்சம்பவம் பற்றி டுவிட்டரில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் […]
கல்லூரி மாணவர்களின் குரலுக்கும் செவிசாய்த்து தேர்வை ரத்து செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழக தேர்வுகளை கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்து மாணவர்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு மதிப்பெண் வழங்க வேண்டும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.சென்ற ஆண்டு நடக்கவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் கொரோனா பாதிப்பின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டன. ஊரடங்கின் தளர்வுகள் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்படி பல்கலைக்கழக மானியக் குழு தேர்வுகள் நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்கிறது.கொரோனா வைரஸானது மக்களுக்கு […]
மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கிவைத்தார். பிகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் இந்த வருடத்தின் இறுதியில் நடைபெறவுள்ளதையடுத்து அதற்கான முதற்கட்ட பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தற்போது ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பணியில் களம் இறங்கியுள்ளார். இதன் முதல்கட்டமாக காணொலி மூலம் பீகார் மாநிலத்தின் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு ராகுல் பேசினார். அதில் அவர் தேர்தல் பரப்புரையில் முழு மூச்சாக இறங்க போவதாக கூறியுள்ளார்.மேலும் ராகுல் […]
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டங்களும் இல்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 1,97,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக ராகுல் காந்தி […]
சீனாவுடனான எல்லை மோதலில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு குறித்து ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார் இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்திற்கும் சீன ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு மாத காலமாக மோதல் போக்கு இருந்து வந்தது. இதனால் இரண்டு நாடுகளும் அவர்களது படை வீரர்களை எல்லைப்பகுதியில் குவித்தனர். இதற்கு தீர்வு காணும் நோக்கத்துடன் இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி இரவு […]
2012 ராகுல் தலைமையில் நடைபெற்ற 2012ஆம் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இரண்டே மாதங்களில் 200 பேரணிகள் மேற்கொண்ட பிரச்சாரம் நடத்தியதன் விளைவாக 28 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. 2013 உத்தரபிரதேசத்தில் தோல்வி கிடைத்த பிறகு ராகுல் காந்தியின் தலைமையில் பிரச்சாரங்கள் எதுவும் நடக்கவில்லை. அதே வருடத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். 2014 16வது மக்களவைத் தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் […]
1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் நாள் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு மகனாகப் பிறந்தவர் ராகுல் காந்தி. புதுடெல்லியில் பிறந்த ராகுல் காந்தி தனது ஆரம்பக் கல்வியை அங்கிருக்கும் மாடர்ன் பள்ளி மற்றும் டூன் பள்ளியில் தொடங்கினார். ஆனால் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து பாதுகாப்பின் காரணமாக தங்கையுடன் பள்ளி சென்று படித்தவர் வீட்டிலிருந்து கற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். பள்ளிப்படிப்பை முடித்த ராகுல் புனித ஸ்டீபன் கல்லூரியில் சேர்ந்து தனது கல்லூரிப் […]