உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா என்ற நகரத்தில் ரஷ்ய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா நகரத்தில் நேற்று தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 23 பேர் உயிரிழந்ததாகவும், 28 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருப்பதாகவும் 85க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தற்போது கூறியிருக்கிறார்கள். இந்த தகவலை அந்நகரத்தின் பிராந்திய ஆளுநராக இருக்கும் ஸ்டாருக் […]
Tag: ராக்கெட் தாக்குதல்
சிரியாவில் 2 ராக்கெட் தாக்குதல்களில் 3 அமெரிக்க துருப்புக்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து அமெரிக்கா ஹெலிகாப்டர்களின் வாயிலாக பதிலடி கொடுத்ததாக அமெரிக்க மத்திய கமாண்ட்(சென்ட்காம்) ஒரு அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. வட கிழக்கு சிரியாவிலுள்ள கொனோகோ மற்றும் கிரீன் வில்லேஜ் ஆகிய 2 பகுதிகளிலும் தங்கி இருக்கும் அமெரிக்க வீரர்கள் மீது ஈரான் ஆதரவு போராளிகள் சந்தேகத்திற்குரிய பல்வேறு ராக்கெட்டுகளை ஏவியதாக சென்ட்காம் தெரிவித்து உள்ளது. இதற்கிடையில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 3 பயங்கரவாதிகளை அமெரிக்கப் படைகள் […]
ராக்கெட் தாக்குதலில் 9 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா நாட்டிற்கும் துருக்கி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் துருக்கி ராணுவத்தினரின் உதவியோடு சிரிய நாட்டில் உள்ள பல்வேறு இடங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். இந்நிலையில் அல்பாப் நகரில் ஒரு மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு சிரிய ராணுவத்தினர் ராக்கெட் தாக்குதல் நடத்துனர். இந்த தாக்குதலில் குழந்தை உட்பட 9 பேர் பலியானதோடு, 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். […]
ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் மீது நள்ளிரவிலிருந்து தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே பல வருடங்களாக மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது காசா முனையிலிருந்து அடிக்கடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இஸ்ரேலும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் இஸ்ரேல் நாட்டின் விமானப்படை காசா முனை பகுதியிலிருந்து வான்வெளி தாக்குதல் மேற்கொண்டது. இதில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பில் […]
உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் ரஷ்யாவின் ஆயுத கிடங்கை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 104-ஆம் நாளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் தற்போது வரை, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உக்ரைன் நாட்டில் தாங்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் ரஷ்யா தன் படை மற்றும் ஆயுதங்களை குவித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் நோவா கஹ்வ்கா நகரை ரஷ்யா ஆக்கிரமித்தது. மேலும், […]
இஸ்ரேல், சிரிய நாட்டின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலத்த காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை நேரத்தில் சிரிய நாட்டினுடைய தலைநகர் டமாஸ்கஸை நோக்கி இஸ்ரேல் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டது. சிரிய நாட்டைச் சேர்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு தங்களை நோக்கி வீசப்பட்ட ராக்கெட்டுகளில் பெரும்பாலானவற்றை சுட்டு வீழ்த்தி விட்டது. எனினும் இந்த ராக்கெட் தாக்குதலில் ஒரு நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இதனால் அதிக பொருட்சேதம் உண்டாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த […]
ரஷ்யா, உக்ரைன் மீது 67வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் சுமார் ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே பல்வேறு நாடுகளும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல முயற்சிகளை முன்னெடுத்தன. இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியை சந்தித்து வருகின்றன. அதேசமயம் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ரஷ்யா, உக்ரைனின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான ஒடிசாவில் […]
உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரத்தில் இருக்கும் காவல்நிலையத்தின் தலைமையகத்தில் ரஷ்ய படைகள் பயங்கரமாக தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது, ரஷ்யா தொடர்ந்து 7-ஆம் நாளாக கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது. எனவே, உக்ரைன் அரசு, தங்களைக் காத்துக் கொள்வதற்காக பொதுமக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகராக விளங்கும் கார்க்கிவிற்குள் புகுந்திருக்கிறது. அதன்பிறகு, அங்கிருக்கும் மருத்துவமனையில் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. […]
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் 2 ராக்கெட்டுகள் வீசப்பட்ட நிலையில் அதனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஈராக் தலைநகரான, பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரக பகுதியில் வழக்கமாக அதிக பாதுகாப்பு இருக்கும். இந்நிலையில் அங்கு 2 ராக்கெட்டுகள் வீசப்பட்ட நிலையில், முதல் ராக்கெட்டை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும், இரண்டாவதாக வீசப்பட்டதாக ராக்கெட்டையும், பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியதில், அங்கிருந்த வாகனங்கள் சேதமடைந்தது. மேலும் கடந்த மாதம் பிரதமர் முஸ்தபா அல் […]
காபூலில் இருக்கும் துணை மின் நிலையம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள Khair Khāna மாவட்டத்தில் ராக்கெட் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலானது Chamtalah துணை மின் நிலையத்தை தாக்கி இருக்கக்கூடும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த ராக்கெட் தாக்குதலினால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு […]
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக, போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருப்பதாவது, நேற்று இரவு நேரத்தில் காசாவிற்கு அருகிலிருக்கும் இஸ்ரேலின் எல்லைப்பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்பு சைரன் ஒலி எழுப்பப்பட்டது. அதே நேரத்தில் இஸ்ரேல் மீது காசாவிலிருந்து ஒரு ராக்கெட் ஏவப்பட்டது. இஸ்ரேல் நாட்டின் ராணுவம், நடு வானிலேயே அதனை தடுத்து அழித்து விட்டது. תיעוד: אתר של חמאס בשם […]
ஆப்கானிஸ்தானில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்த சமயத்தில் ஜனாதிபதி மாளிகையின் அருகில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள காபூல் நகரத்தில் பக்ரீத் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது ஜனாதிபதி மாளிகையின் அருகில் திடீரென்று மூன்று ராக்கெட்டுகள் வீசப்பட்டது. இதனால் ஏற்பட்ட விளைவுகள் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனினும் திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் காபூல் நகரத்திலுள்ள பல பகுதிகளிலும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நாட்டின் […]
ஈராக்கில் அமெரிக்கப் படைகள் உள்ள ராணுவத்தளத்தின் மீது பயங்கரமாக ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் ஜன் அல்-ஆசாத் என்ற விமானதளத்தில் தான் அமெரிக்கா மற்றும் மற்ற சர்வதேச படைகளும் இருக்கிறது. இந்நிலையில் இங்கு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் கூட்டுப்படையின் செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார். Images circulating reportedly show smoke rising from al-Asad air base in Iraq after a drone/rocket attack. pic.twitter.com/5itQJxOl1f — Kyle Glen […]
ஈராக்கில் கடந்த திங்கட்கிழமை அன்று இராணுவத்தளத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் உள்ள Ain al-Asad என்ற இராணுவத் தளத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் சுமார் 1:35 மணிக்கு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. எனினும் நல்லவேளையாக இதனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வேறு சேதங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்று அமெரிக்க தலைமையிலான சர்வதேச இராணுவ படையின் செய்தி தொடர்பாளர், அமெரிக்க ராணுவ […]
இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதலில் ரம்ஜான் பண்டிகையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமானோர் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் ரம்ஜான் பெருநாள் அன்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பண்டிகை கொண்டாடி கொண்டிருந்த ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கொடூர தாக்குதலில் அந்த குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பியிருக்கிறது. அந்த சமயத்தில் குடும்ப தலைவர் […]
இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதலில் உயிரிழந்த சிறுவனின் இறுதிச்சடங்கின் போது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலை நோக்கி, ஹமாஸ் அமைப்பினர், காசா முனையிலிருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் Ido Avigal என்ற 5 வயது சிறுவன் உயிரிழந்தார். அவரது தாய் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து சிறுவனின் இறுதிச்சடங்கு, Kiryat Gat என்ற நகரில் நடந்துள்ளது. அப்போது திடீரென்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரிக்கை மணி ஒலிக்கபட்டுள்ளது. இதனால் இறுதி சடங்கில் பங்கேற்ற […]
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்கள் மீதான ராக்கெட் தாக்குதலுக்கு மிகப்பெரிய தொகையை ஹமாஸ் கொடுக்கும் என்று கூறியுள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் பல வருடங்களாகவே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. காசா முனை, பாலஸ்தீனத்தினுடைய தன்னாட்சி பெற்ற பகுதியாக இருக்கிறது. ஹமாஸ் அமைப்பு, இப்பகுதியை ஆண்டு வருகிறது. இந்த அமைப்பினர் ராக்கெட், ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் நாட்டின் மீது நடத்துவார்கள். இதற்கு தகுந்த பதிலடியை இஸ்ரேல் ராணுவமும் கொடுத்து வருகிறது. இதனிடையே கடந்த திங்கட்கிழமை அன்று, […]
இஸ்ரேலில் அந்நாட்டு பிரதமர் Benjamin Netenyahu வருகை புரிந்த நகரத்தின் மீது திடீரென்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள Beersheba என்ற நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்திற்கு இஸ்ரேல் பிரதமர் Benjamin Netenyahu வருகை புரிந்திருந்தார். அப்போது Gaza நகரத்திலிருந்து பிரதமர் வருகை புரிந்த Beersheba நகரை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் திறந்தவெளி பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த நகரை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் […]
இஸ்ரேலில் பிரதமர் வருகை தந்த நகரில் திடீரென்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவிலிருந்து இஸ்ரேலின் பீர்ஷேபா நகரில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பீர்ஷேபா நகருக்கு வருகை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. #BREAKING: Rocket launched from Gaza towards the city of Beer Sheva, while PM Netanyahu visited the city pic.twitter.com/jLAGAeDotj — Amichai […]
ஈராக்கில் அமெரிக்க படைகள் தங்கியிருக்கும் ஒரு ராணுவ விமான தளத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஈராக் பாக்தாத்திற்கு வடக்கே பலடில் உள்ள ஈராக் ராணுவ விமான தளத்தில் பல ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது .அந்த தாக்குதலில் ஒரு ஈராக் கான்ட்ராக்டர் காயமடைந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது ஈராக்கில் அமெரிக்க படைகள் தங்யிருக்கும் தளம் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தத்தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றும் […]
ஈராக்கில் நடந்த ராக்கெட் தாக்குதலுக்கு 5 உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈராக்கில் கடந்த 15 ஆம் தேதி இரவு 9.30 மணி அளவில் எர்பில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அமெரிக்க வீரர் உள்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கு சரயா அவ்லியா அல் டம் என்ற குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த குழுவிற்கு ஈரானுடன் தொடர்பு இருப்பதாக சில ஈராக் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதை […]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சுதந்திர தினத்தன்று பயங்கர ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இன்று சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தலைநகர் காபூலின் வஜீர் அக்பர் கான்,ஷெர்போர், 1வது மேக்ரோரியன் மற்றும் ஷாஷ்டாரக் ஆகிய பகுதிகளில் ராக்கெட் தாக்குதல் நடந்தால், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். இன்று காலையில் காபூல் நகரத்தின் பி.டி 8 மற்றும் பி.டி 17 பகுதிகளில் […]