Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் திடீர் வெள்ளம்…. 100 பேர் தவிப்பு…!!!

ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பக்தர்கள் 100பேர் மறுகரையில் சிக்கி உள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

Breaking: விநாயகர் ஊர்வலத்தில் பெரும் விபத்து….. மரணம்…!!!!

ராஜபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது சப்பரத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். சொக்கநாதன்புத்தூரில் உள்ள ஒரு தெருவில் திரும்பிய போது சப்பரம் ஒரு மரத்தில் மோதியுள்ளது. அப்போது அதிலிருந்து விழுந்த விளம்பரப் பலகையில் இருந்த ஒயர் வழியாக மின்சாரம் சப்பரத்தில் பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதே போல நடந்த ஒரு தேர் விபத்தில் 11 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்னை அவங்க கூட சேர்த்து வைங்க…. டிரைவர் தீக்குளிக்க முயற்சி…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு….!!

போலீஸ் சூப்பிரண்டின் அலுவலகத்திற்கு முன் டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் குறிஞ்சி நகரில் ஷேக் முகமது என்பவர் வசித்து வருகின்றார். இவர் கார் டிரைவராக இருக்கின்றார். இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஷேக் முகம்மதுக்கும் அவரது மனைவி லட்சியமா பானுவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் லட்சியமா பானு தனது 2 மகன்களுடன் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பழக்கடைகள் திறக்க அனுமதி இல்லை… விரக்தி அடைத்த உரிமையாளர்… செய்த செயலால் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பழக்கடை உரிமையாளர் பழங்களை சாலையில் வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மாடசாமி கோவில் தெருவில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவரம்பட்டி விலக்கு பகுதியில் பழக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் பழங்களை கடையில் இறக்கி கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் அப்பகுதியில் அனுமதியின்றி திறந்திருந்த டீக்கடைக்கு 200 ரூபாய் அபராதம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மான்களை வேட்டையாடி… இறைச்சி விற்ற மர்ம நபர்கள்… ஒருவரை கைது செய்த வனத்துறையினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் மான்களை வேட்டையாடி விற்பனை செய்த நபர்களில் ஒருவரை கைது செய்த வனத்துறையினர் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து அதனை பயன்படுத்தி புள்ளி மான், மிலா உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சிகளை விற்பனை செய்து வருவது வனத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் ராஜபாளையத்தில் இருந்து செண்பகத்தோப்புக்கு செல்லும் சாலையில் அனதலை என்ற பகுதியில் வன காவலர்கள் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“எங்கள் சாவுக்கு யாரும் காரணம் அல்ல”… ஹோட்டலில் தனி அறை… போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!!

ராஜபாளையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவருடன் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையத்தில் உள்ள குருவராஜா தெருவில் வாசிப்பவர் ஜனார்த்தன ராஜா. இவர் மஸ்கட், குவைத் போன்ற வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கோவையில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி கலாவதி, மகன் சித்தார்த். இவர் கோவையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மகன் அங்குள்ள பள்ளியில் படிப்பதால் ஜனார்த்தனன் கோவையிலேயே மனைவி மகனுடன் தங்கியுள்ளார். நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முன்விரோதம்… அண்ணன், தம்பியை சரமாரியாக வெட்டிய கும்பல்..!!

ராஜபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவரும் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேசிகாபுரம் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் முன்விரோதம் காரணமாக தங்கவேல் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக அதே பகுதியைச் சேர்ந்த புதிய தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சைக்கிள் மீது பால் வேன் மோதி விபத்து… தொழிலாளி உயிரிழப்பு..!!

நூற்பாலையில் வேலைபார்த்து வரும் தொழிலாளி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள என்.பி.கே. புதுப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி இவருக்கு வயது41.. இவர் மதுரை ரோட்டிலுள்ள தனியார் நூற்பாலையில் வேலைபார்த்து வந்தார். நேற்றிரவு பணி முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மம்சாபுரம் விலக்கு அருகே  சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக பால் ஏற்றி வந்த வேன் திடீரென அவர்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கந்தசாமி அதே இடத்தில் […]

Categories

Tech |