கடந்த 9ஆம் தேதி அருணாச்சலப் பிரதேச மாநிலம் பகுதியில் இருக்கக்கூடிய இந்தியா – சீனா இடையான எல்லை கோட்டு கட்டுப்பாட்டு பகுதியில் சீன வீரர்கள் அத்திமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்து இருக்கின்றனர். இந்த முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக டிசம்பர் 11ஆம் தேதி இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற […]
Tag: ராஜ்நாத் சிங்
எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி இருக்கிறது. எல்லையில் உள்ள சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவம் தடுத்திருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருக்கிறார். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய – சீன எல்லையில் கடந்த 9ஆம் தேதி இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் கேள்வி எழுப்பிய நிலையில், […]
கம்போடியா நாட்டின் ஆசியான் அமைப்பு பாதுகாப்பு துறை மந்திரிகள் கூட்டம் நடக்கும் நிலையில், அதில் மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்போடியா நாட்டில் ஆசியான் அமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான ஒன்பதாம் வருடாந்திர கூட்டம் இன்று நடந்திருக்கிறது. கம்போடியா நாட்டின் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் சாம்டெக் பிச்சே சேனா டிபான் அழைப்பு விடுத்ததால் பாதுகாப்பு துறை மந்திரி ராஜிநாத் சிங் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். நாளை ஆசியான் பாதுகாப்பு துறை […]
இந்திய ராணுவத்தில் தான் சேர விரும்பியதாகவும், குடும்பக் சூழ்நிலை காரணங்களால் சேர முடியவில்லை என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அசாம் ரைபிள்ஸ் மற்றும் இந்திய ராணுவத்தின் 57வது மலைப் பிரிவு வீரர்களிடம் உரையாற்றிய அவர், ஆயுதப்படையில் சேர நானும் தேர்வு எழுதியுள்ளேன். சிறுவயதில் இருந்தே ஒரு கதை சொல்ல விரும்புகிறேன், எனக்கும் ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டு ஒருமுறை ஷார்ட் சர்வீஸ் கமிஷன் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதியிருந்தேன். பிரச்சனையால் என்னால் ராணுவத்தில் […]
ராணுவ மந்திரியான ராஜ்நாத் சிங் வியட்நாமிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். வியட்நாம் நாட்டிற்கு ராஜ்நாத் சிங் மூன்று நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். நேற்று புறப்பட்ட அவர் நாளை வரை அவர் அங்கு தங்கியிருந்து பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார். வியட்நாம் நாட்டின் தேசிய பாதுகாப்பு மந்திரி ஜெனரலான ஃபான் வான் ஜியாங்-உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இரண்டு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் உலக […]
இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெலுங்கானாவில் நடந்த சேட்டக் ஹெலிகாப்டரின் வைர விழா மாநாட்டில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “இதற்கு முன்பு இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்தியில் நாம் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை. நாம் பாதுகாப்பு தேவைகளுக்காக வெளிநாடுகளை சார்ந்திருந்தோம். ஆனால் நாம் எப்போதும் அந்நிய நாடுகளையே சார்ந்திருக்க முடியாது. எனவே நாமே நம்முடைய தோள்களை ஸ்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இந்தியா அமைதி மற்றும் உண்மை, நாகரீகம் சார்ந்த மதிப்புகள் ஆகியவற்றுக்காக […]
இந்தியாவின் பஞ்சாப்,கோவா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. எனவே அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் அமேதி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “லட்சுமிதேவி யாருடைய வீட்டிற்கும் சைக்கிளிலோ, யானை மீதோ அல்லது உங்கள் கைகளில் அமர்ந்து கொண்டு வருவதில்லை. அவர் தாமரை மீது தான் அமர்ந்து அமர்ந்துதான் அருள்பாலிக்கிறார். இதனை சில கட்சிகள் புரிந்து […]
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகளின் உடலுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய […]
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பது மனித குலத்திற்கு எதிரானது என்று குற்றம் சாட்டியுள்ளார். கடந்த புதன்கிழமை அன்று தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பவர்களும் மனிதகுலத்திற்கு எதிரானவர்கள் தான் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் இந்தியா இந்த பயங்கரவாத செயல்களுக்கு எதிராக […]
ராணுவ வீரர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கும் இணையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் செவிலியர்கள் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் ராணுவ வீரர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கும் இணையதளத்தை […]
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி […]
இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த டிஆர்டிஓ சார்பில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அலைகள் அமைப்பதாக திரு. ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்நிலையில் ஆக்சிஜன் இல்லாமல் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இதனையடுத்து மத்திய ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஆர்டிஓ என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூலம் 500 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகளை 3 மாதங்களில் அமைக்கப்படும் என ராணுவ […]
விவசாயத்தைப் பற்றி தெரியாதவர்கள் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 33 நாள்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில் இமாச்சல்பிரதேச அரசின் மூன்றாண்டு நிறைவு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேளாண் சட்டங்களின் பலன்களை உணர குறைந்தது 2 வருடங்களாவது காத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். வேளாண் பொருள்களின் குறைந்தபட்ச ஆதாரவிலையை பாதுகாப்பதில் நரேந்திரமோடி உறுதியாக உள்ளதாகவும், வேளாண் சட்டங்களை […]
புதிய வேளாண் சட்டங்கள், ஓரிரு ஆண்டுகளில் பலன் அளிக்காவிட்டால், சட்டங்களில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தலைநகரில் போராட்டம் நடத்துவது, நமது சொந்த மக்களான விவசாயிகள் என்றும், விவசாயிகள் மீது மத்திய அரசு மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளதாகவும், விவசாயிகளின் நலனுக்கு எதிராக பிரதமர் திரு. மோதி தலைமையிலான அரசு […]
பிரான்சிலிருந்து 3 ரபேல் விமானங்களை இந்தியாவிற்கு பாதுகாப்பாக கொண்டுவந்த விமானப்படைக்கு பாதுகாப்பு துறை மந்திரி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய அரசு நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்வதற்கு பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 36 விமானங்கள் வாங்குவதற்கு 59 ஆயிரம் கோடி ரூபாயில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.அதன் முதல் தவணையாக பிரான்ஸ் நிறுவனம் 5 விமானங்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கியது. அந்த விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தடைந்த […]
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ருத்ரம்-1 ஏவுகணை சோதனையை ஒடிசாவில் வெற்றிகரமாக நிகழ்த்திய அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவின் எதிரி நாடுகளின் ரேடார்கள், ராமர்கள் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தக் கூடிய கருவிகள் என்று எதிரிகளின் கண்காணிப்பு தளங்களை தாக்கி குறிவைத்து அளிக்கும் வகையில் ‘ருத்ரம்- 1’ என்ற ஏவுகணையை இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை ஒளியை விட இரண்டு மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. ஒடிசாவின் பாலாசோரில் […]
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ருத்ரம் 1 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. எதிரி நாடுகளின் ரேடர்கள், ஜாமர்கள் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் என எதிரிகளின் கண்காணிப்பு தளங்களை தாக்கி அழிக்கும் வகையில் ருத்ரம் 1 என்ற ஏவுகணையை இந்தியாவின் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. ஒளியை விட இரண்டு மடங்கு வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணை ஒடிசாவின் பாலாசூரில் நேற்று சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. […]
மாஸ்கோவிலிருந்து ஈரான் புறப்பட்டுச் சென்ற மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஈரான் மந்திரியை நேரில் சந்தித்து பேசயிருக்கிறார். மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மூன்று நாள் ரஷ்யா பயணம் சென்றிருந்தார். அந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது சீன பாதுகாப்பு மந்திரியுடன் ராஜ்நாத் சிங் பல்வேறு ஆலோசனைகளை நடத்தினார். இந்நிலையில் ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் நேற்று ஈரான் […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு மத்தியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சீன பாதுகாப்பு துறை அமைச்சர் நேரில் சந்தித்து பேசினார். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்து கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். பாதுகாப்புத்துறை மந்திரி களுக்கு மத்தியில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை […]
மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை மந்திரியை சந்தித்து பேசினார். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பங்கேற்க பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். இந்த நிலையில் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் […]
என்சிசி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலிருந்து வரும் நிலையில், என்சிசி மாணவர்களுக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள நாடு முழுதும் உள்ள என்சிசி மாணவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை தொடங்கி வைத்த ராஜ்நாத் சிங், என்சிசி மாணவர்களுடன் காணோலியில் உரையாடி, அப்பொழுது கேட்கப்பட்ட மாணவர்களின் கேள்விகளுக்கு […]
இந்தியா மீது எதிரி நாடுகள் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பாதுகாப்பு படையினருக்கு அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்தியா இதயங்களைக் கொள்ளை கொள்வதிலேயே நம்பிக்கை கொண்டுள்ளதே தவிர, நிலப்பகுதிகளை அல்ல என தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங். சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படுவதை இந்தியா பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது என தெரிவித்துள்ளார். எதிரி நாடுகள் தாக்குதல் நடத்தினால் எப்போதும் போல தகுந்த […]
இந்தியா – சீனா எல்லை பிரச்சனையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு நாடே துணை நிற்கும் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு […]
இந்தியா – சீனா எல்லை பிரச்சனை குறித்து முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு வார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து, […]
எல்லை பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள சீனா விருப்பம் தெரிவித்துள்ளது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். எல்லையில் என்ன நடக்கிறது என்பது குறித்த விவரங்களை சரியான நேரத்தில் மத்திய அரசு தெரிவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். தேசத்தின் பெருமையில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம் என்றும் இந்தியா பலவீனமான நாடு அல்ல என் கூறியுள்ளார். ஜம்மு ஜான் சம்வத் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி காட்சி மூலம் பேசினார். […]
டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் நடந்து வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று மீண்டும் தொடங்கியது. முன்னதாக நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக […]
ராணுவத்தில் படைகளை வழிநடத்திச் செல்வதற்கு பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார். ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பெண்களின் உடலியல் அம்சங்களுக்கு அவர்களின் உரிமைகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கமாண்டர் பொறுப்பு வழங்க அனுமதி வழங்கி அதிரடியாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் […]