ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு 70 அடி சாலையில் இருக்கும் குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் கடைக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் காதல் ஜோடிகள் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடுவது வழக்கம். நேற்று ராணிப்பேட்டையைச் சேர்ந்த முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் தனது மகளுடன் கடைக்கு சென்று உலர் பழ வகை ஐஸ்கிரீம் சாப்பிட்ட போது முந்திரி தூள்களுடன் புழுக்கள் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார் அதன்படி கடைக்கு […]
Tag: ராணிபேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பஜார் வீதியில் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நெடும்புலி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், கொசத் தெருவை சேர்ந்த அஜித் ஆகிய இருவரும் நிதி நிறுவனத்தில் 50 பவுன் நகைகளை அடகு வைத்து 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர். இதனையடுத்து நிதி நிறுவன புதிய மேலாளர் அன்பரசு அடகு நகைகள் குறித்து ஆய்வு செய்தபோது அஜித், பிரகாஷ் ஆகிய இருவரும் அடமானம் […]
மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகள், 2 ஆடுகள் உயிரிழந்தன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரக்கோணம் சோமசுந்தரம் நகரில் துரைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 2 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் துரைகண்ணுவின் பசு மாடுகளும் குமாரசாமி என்பவரின் ஒரு பசுமாடும் வயலில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது மின்வயர் அறுந்து விழுந்ததால் மின்சாரம் […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எம்.பி.டி சாலையில் தனியார் வங்கி அமைந்துள்ளது. இங்கு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாடியில் இருந்த ஜெனரேட்டரை இயக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்ததால் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் வெடித்து வாலிபர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கொண்டகுப்பம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முத்து உறவினர் ஒருவரை ரயிலில் ஏற்றி விடுவதற்காக அம்மூரில் இருக்கும் வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து உறவினரை ரயிலில் ஏற்றிவிட்டு முத்து அம்மூர்- லாலாபேட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் முத்துவின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்ததால் அவரது தொடை பகுதியில் காயம் […]
ராணுவ வீரர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வைலம்பாடி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகலாந்து பகுதியில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி விடுமுறையில் வினோத்குமார் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் காளிகாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வினோத்குமார் உறவினரான வெங்கடேசன் என்பவர் வீட்டிற்கு […]
டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பெண் குழந்தை பலியான சம்பவம் சோழத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரிசி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு யாழினி(3) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் யாழினி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு எதிரே நின்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திமிரியில் இருந்து ஆரணி நோக்கி வேகமாக சென்ற டிராக்டர் சக்கரத்தில் சிக்கி யாழினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]
தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பழையபாளையம் மோட்டூர் அஞ்சலக தெருவில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரதீஷ் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவரான அன்பரசு என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் கரையும் ஓரத்தில் அமர்ந்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக […]
கார் மோதிய விபத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சாயிநாதபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உதவி இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் தனது மனைவியுடன் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். இவர் சாலை கிராமம் எஸ்.ஆர் கண்டிகை பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை […]
மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செங்காடு மோட்டூர் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பார்வதியின் தாயார் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை அடுத்து மீண்டும் ஊருக்கு வரும்போது மழை பெய்ததால் இருவரும் புளிய மரத்திற்கு அடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நின்றனர். அப்போது பார்வதியை […]
இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டிடத்தை எடுத்து அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செய்யாறு சாலையில் கிராம நிர்வாக அலுவலகம் வருவாய், ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தினமும் 50-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் இல்லாத துணை தாசில்தார் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. மேலும் கட்டிடத்திற்குள் விஷ ஜந்துக்கள் பதுங்கி உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு கட்டிடத்தை இடித்து […]
பேருந்து ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் அன்னை சத்யா நகர் பகுதியில் ஜெயக்குமார்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சோளிங்கரில் இருக்கும் தனியார் நிறுவனத்துக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தி வந்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமாருக்கு தீபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு தனுஷ்கா(9) என்ற மகளும், ராகேஷ்(2) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 2 […]
15 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோகனூர் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியனுக்கு தகவல் கிடைத்துள்ளது, அந்த தகவலின் படி உதவி கலெக்டர் பாத்திமா, அரக்கோணம் தாசில்தார் பழனி ராஜன் ஆகியோர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமிக்கும், 31 வயதுடைய கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நபருக்கும் திருமணம் […]
சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புன்னபாடி கிராமத்தில் தச்சு தொழிலாளியான கஜபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மல்ராஜ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ராணிப்பேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக நிர்மல்ராஜுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]
சிகரெட் வாங்கி வர மறுத்த சிறுவனின் கையை வாலிபர் பிளேடால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தணிகைபோளூர் கிராமத்தில் கோபி(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் பக்கத்து தெருவில் வசிக்கும் 12 வயது சிறுவனிடம் சிகரெட் வாங்கி வருமாறு கூறியுள்ளார். அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்து விட்டு விளையாட சென்றுவிட்டார். இதனால் கோபமடைந்த கோபி வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுவனின் கையை பிளேடால் அறுத்துள்ளார். இதனை அடுத்து ரத்தம் சொட்டிய நிலையில் வலியால் […]
மரத்திலிருந்து கீழே விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெரியகோட்டை வடக்கு வளைவு பகுதியில் செல்லகண்ணு(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்லகண்ணு அப்பகுதியில் இருக்கும் பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்லக்கண்ணு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]
மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பேபிஷாலினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பேபி ஷாலினி ஹீட்டர் மூலமாக வெந்நீர் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு […]
வேன் கவிழ்ந்து டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் பலமனேர் பகுதியில் ராம்ஜி என்ற டிரைவர் வசித்து வந்துள்ளார். இவர் பலமனேரிலிருந்து சென்னை கோயம்பேடுக்கு வேனில் காய்கறிகளை ஏற்றிகொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருக்கும்போது தனியார் திருமண மண்டபம் எதிரில் நிலைதடுமாறிய பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இதில் டிரைவர் ராம்ஜி வேனுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]