Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விளைபொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக…. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்….!!!

விவசாய பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாக விளைபொருள் விற்பனை முகாம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாழனூர், புன்னப்பாடி, சர்வந்தங்கள் உள்ளிட்ட கிராமங்களில் விளைபொருட்களை சந்தைகளில் விற்பனை செய்வது தொடர்பாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் வட்டார தோட்டக்கலை வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை சார்பில் நடைபெற்றது. இதை நடத்துவது தொடர்பான ஆலோசனையை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனி ராஜ், உதவியக்குனர் கமலி ஆகியோர் வழங்கினர். இதனையடுத்து விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைவித்த பொருட்களை இடைத்தரகர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டம்…. ரூ.12 லட்சம் கடனுதவி… மகிழ்ச்சியடைந்த குழுவினர்….!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட பொதுமக்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் தங்களது மனுக்களை அளித்துள்ளனர். அதன்படி 320 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து குறைதீர்க்கும் கூட்டத்தில் 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ. 6 லட்சம் என 12 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனநலம் பாதிக்கப்பட்டு வந்த பெண்…. குணப்படுத்தி அனுப்பிய அதிகாரிகள்…. நெகிழவைத்த சம்பவம்….!!

மனநலம் பாதிக்கப்பட்டு வழிதவறி வந்த வடமாநில இளம்பெண்ணை குணப்படுத்தி மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு பாதுகாப்பாக வாலாஜா அரசு மனநல மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் அந்த பெண்ணுக்கு பழைய நினைவு திரும்பியுள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண் ஒடிசா மாநிலத்தை […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்… வேலை தேடுவோர்களே இதோ சூப்பர் வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற மார்ச் 12 ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 2019 நவம்பர் மாதம் முதல் ராணிப்பேட்டையை பிரித்து, தனி மாவட்டமாக உருவானது. இங்கு 330 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், அம்மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும்  தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து படித்த வேலைவாய்ப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அவன் சரி இல்லை” முகநூலில் பதிவிட்ட புகைப்படம்… இளம் பெண்ணின் பரபரப்பு புகார்…!!

இளம்பெண்ணுடன் எடுத்த புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சீனிவாசன்பேட்டை பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி பருவத்தில் ஒரு இளம் பெண்ணிடம் நட்புடன் பழகி வந்துள்ளார். அப்போது அவர் அந்த பெண்ணுடன் சேர்ந்து செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். இதனை அடுத்து ரஞ்சித்தின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அந்த இளம்பெண் அவரிடமிருந்த நட்பை கைவிட்டுள்ளார். அதன்பிறகு ரஞ்சித்குமார் அந்த இளம்பெண்ணுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கோவிலில் அமைந்த ரேஷன் கடை… சிரமப்படும் பெண்கள்… இட மாற்றம் வேண்டி கோரிக்கை….!!

கோவிலில் அமைந்திருக்கும் ரேஷன் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கோடாலி கிராமத்தில் கிருஷ்ணர் பஜனை கோவில் அமைந்துள்ளது. தற்போது இந்த கோவிலை ரேஷன் கடையாக மாற்றி பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோகித்து வருகின்றனர். இதனால் பெண்கள் ரேஷன் கடைக்கு செல்ல சிரமப்படுகின்றனர். இதனை அடுத்து மழைக்காலத்தில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் நனைந்து விடுகின்றது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

முன்விரோதமாக நடந்த சம்பவம்… வாலிபருக்கு நடந்த கொடூரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்னல் பகுதியில் பஸ்வான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவதம் பகுதியில் இருக்கும் மது கடைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சிலர் பஸ்வானிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பஸ்வான் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென எதிரில் வந்த மர்ம கும்பல் அவரை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சென்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பஸ்வான் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பழிக்கு பழியாக இதை பண்ணினேன்” சிக்கிய குற்றவாளிகள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தந்தையைக் கொலை செய்ததிற்காக  பழி வாங்கும் நோக்கத்தோடு  ஒருவர் நண்பர்களுடன் இணைந்து வாலிபரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வடமாம்பாக்கம் பகுதியில் கோதண்டம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி கோதண்டம் மரமநபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை குற்றவாளியை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஆரகோணத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் தனியார் தொழிற்சாலையில் உள்ள பாழடைந்த குடியிருப்பில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

யாரு இப்படி பண்ணிருப்பா… ஊழியருக்கு நடந்த கொடூரம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!

தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வடமாம்பாக்கம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோதண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னை மாவட்டத்திலுள்ள குரோம்பேட்டை பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கோதண்டம் வேலைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாத்தையும் செக் பண்றாங்க… அடுத்தடுத்து சிக்கிய வாகன ஓட்டிகள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 204 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டான ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் சிப்காட் பேருந்து நிலையம், சாவடி மற்றும் பள்ளேரி பகுதிகளில் காவல்துறையினர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்காதவர்கள் மற்றும் இன்சுரன்ஸ் செய்யாதவர்கள் போன்றோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறாக 204 வாகனங்களை பறிமுதல் செய்ததோடு, காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது… வசமாக சிக்கியவர்கள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ஏரி மணல்களை கடத்துவதற்கு பயன்படுத்த பட்ட லாரி மற்றும் ஜே.சி.பி எந்திரம் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தப்பூர் கிராமத்தில் இருக்கும் சீத்தேரி பகுதியில் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் திடீரென தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜே.சி.பி மூலம் மணல் கடத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது சீத்தேரி பகுதியில் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இனிமேல் உண்மை தெரிஞ்சிடும்… சரணடைந்த இருவர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கொலை வழக்கில் சரணடைந்த இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரங்காபுரம் கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். இந்நிலையில் வரதராஜனை கடந்த மே மாதம் 6-ஆம் தேதியன்று மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

செய்வதறியாமல் நின்ற கர்ப்பிணி பெண் … மருத்துவரின் சிறப்பான செயல்… காவல்துறையினரின் உதவி…!!

வாலாஜாவில் இருந்து சென்னைக்கு நடை பயணம் செல்ல முயன்ற கர்ப்பிணி பெண் மற்றும் கைக்குழந்தையை காவல்துறையினர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையத்தில் கைக்குழந்தையுடன் கர்ப்பிணி பெண் சென்னைக்கு நடந்து செல்வதாக கால்நடை மருத்துவர் ரவிசங்கர் என்பவர் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அந்த கர்ப்பிணி பெண் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதும், மேலும் இவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இந்த தப்பு வேற பண்ணிருக்கியா… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கடத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே மேல்விஷாரம் தனியார் கல்லூரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரிடம் பேப்பரில் மடித்து வைக்கப்பட்ட 30 பொட்டலங்களில் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த இளைஞரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது என்னோட நிலம்… தனி நபரின் அத்துமீறல்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அரசு நிலங்களை கையகப்படுத்த முயன்ற நபர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை சில நபர்கள் தனக்கு சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால் அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் புங்கனூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை பரமசிவன் என்பவர் ஜே.சி.பி எந்திரம் மற்றும் லாரி மூலம் நிலத்தை சமன்படுத்தி தனக்கு சொந்தம் என உரிமை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அதுக்கு நான் காரணமில்லை” இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய  இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல் விஷாரம் பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது இளம்பெண்ணை காதலித்துள்ளார். அதன் பின் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததால் தற்போது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். இந்நிலையில் இளம்பெண்ணின் கர்ப்பத்திற்கு நான் காரணமில்லை என்று அந்த இளைஞன் கூறி வருகிறார். இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எத்தன தடவை சொல்லுறது… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை..!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்ததால் நகராட்சி ஆணையர் கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதித்துள்ளார். கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவி வரும் காரணத்தினால் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா நகராட்சி ஆணையர் சதீஷ் குமார் முன்னிலையில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊரடங்கின் விதிமுறைகளை மீறி 5 கடைகள் திறந்து வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யிங்க…. தன்னார்வ நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்த கலெக்டர்…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக தொண்டு நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய கலெக்டரான கிரான்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, ராணிப்பேட்டையில் தன்னலம் கருதாமல் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம், மாவட்ட சமூகத்திற்கான அலுவலருடன் சேர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்வதற்கு அழைக்கப்படுகிறார்கள். மேலும் விருப்பமிருக்கும் நபர்கள் https://ucc.uhcitp.in/ngoregistration என்கின்ற இணையதளத்தில் மூலமாக தங்களை ஈடுபடுத்தி உதவலாம் என்றுள்ளார். இதனையடுத்து ஏதேனும் கூடுதலாக தகவல் வேண்டுமென்றால் ராணிப்பேட்டையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விதியை மீறி ஏன் செயல்படுதிங்க…. அரசு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் விதியை மீறி கடைகள் திறக்கப்பட்டதால் அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை தடுப்பதற்கு அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை பொதுமக்கள் கடைபிடிக்கிறார்களா என்று காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் தீவிரமாக அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்து வருகின்றனர். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர்கள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதியை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொரோனா சித்த சிகிச்சை மையம்…. திடீரென்று ஆய்வு செய்த கலெக்டர்…. பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வரும் மாவட்ட நிர்வாகம்….!!

ராணிப்பேட்டையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்படும் சித்த மருத்துவ மையத்தை கலெக்டர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். ராணிப்பேட்டையில் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தின் எல்லையோரங்களில் சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் இ-பதிவின்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். இதற்கிடையே பல பகுதிகளில் முகாம்கள் போடப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் விளாபாக்கத்திலிருக்கும் தனியார் கல்லூரியில் மையம் அமைக்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சித்தா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விதியை மீறி திறக்கப்பட்ட கடை…. அரசு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டையில் விதியை மீறி திறக்கப்பட்ட கடைக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனாவை தடுப்பதற்கு அரசாங்கம் முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை மீறுபவர்களின் மீது அரசு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஊரடங்கு விதியை மீறி கடைகள் திறக்கப்பட்டிருக்கிறதா என்று வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென்று ஆய்வு செய்தனர். அப்போது சுவால் பேட்டையில் விதியை மீறி திறக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்டிற்கு நகராட்சியினுடைய ஆணையரான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

10 மோட்டார் சைக்கிள் பறிமுதல்…. விதியை மீறியதால் அதிரடி நடவடிக்கை…. கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர்….!!

ராணிப்பேட்டையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 10 நபர்களின் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் முழு ஊரடங்கை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை மீறுபவர்களின் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டினுடைய காவல்துறை சப் இன்ஸ்பெக்டரான சிதம்பரம் தலைமையிலான காவல்துறையினர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அத்தியாவசிய தேவையின்றி விதியை மீறி வெளியே சுற்றித்திரிந்த 10 நபர்களின் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

48 மது பாக்கெட்டுகள் பறிமுதல்…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் மது பாக்கெட்டை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் களத்தூர் பகுதியில் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த முட்புதருக்குள் வைத்து வெளிமாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மது பாக்கெட்டுகளை விற்பனை செய்த ராஜசேகர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த 48 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இங்க இதுக்கான மருந்து இல்லை…. பரிதாபமாக உயிரிழந்த பெண்…. ஆத்திரத்தில் போராட்டம் செய்த உறவினர்கள்….!!

ராணிப்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பாக பொதுமக்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அரக்கோணத்தில் செல்வி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் தூங்கிக்கொண்டிருந்த செல்வியை பாம்பு கடித்தது. அதன் பின் எழுந்து பார்த்த அவர் வலியால் கத்திக் கூச்சலிட்ட நிலையில், உறவினர்கள் செல்வியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர் இங்கு பாம்பு கடிக்கான மருந்து இல்லை என்றும், அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டில் எவருமில்லை…. டிரைவர் செய்த செயல்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

ராணிப்பேட்டையில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் டிரைவரான பிரபுதேவா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் பிரபுதேவா குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்ததால் இவருடைய மனைவியான டில்லி ராணி என்பவருக்கும், அவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தத்திலிருந்த பிரபுதேவா தன்னுடைய மாமியாரது வீட்டிற்கு சென்று அங்கு யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொரோனாவை துரத்திட தடுப்பூசியே சிறந்த வழி…. விழிப்புணர்வு பாடல் எழுதிய மாவட்ட சூப்பிரண்ட்…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பாடலை எழுதியுள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் 2 ஆவது அலையை முற்றிலுமாகத் துரத்திவிட தடுப்பூசியே சிறந்த வழியாகும். இந்த கருத்தை பொதுமக்களிடம் மிக வேகமாக கொண்டு செல்வதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான சிவகுமார் விழிப்புணர்வு பாடலை எழுதியுள்ளார். இந்தப் விழிப்புணர்வு பாடலை பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகரான கிருஷ், அவருடைய குழுவினர்கள் பாடியுள்ளனர். இதனை ராம் கோபி எடிட்டிங் செய்துள்ளார். இப்பாடலுக்கான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஏரி மண்ணை கடத்திய வாலிபர்கள்…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் ஏரி மண்ணை கடத்திய 3 டிராக்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தினுடைய சப்-இன்ஸ்பெக்டரான வசந்த் தலைமையிலான காவல்துறையினர்கள் பாகவெளி பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஏரி வழியே வந்து கொண்டிருந்த 3 டிராக்டரை காவல்துறையினர் மடக்கினர். இதனையடுத்து காவல்துறையினரை கண்டதும் டிராக்டரை ஓட்டி வந்த நபர்கள் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். அதன்பின் காவல்துறையினர் வண்டியை சோதனை செய்ததில் அவர்கள் ஏரி மண்ணை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தடுப்பூசி போட்டுட்டு கடை மேல கைய வைங்க…. அரசு அதிகாரிகளின் அதிரடி அறிவிப்பு…. கொரோனாவை விரட்டியடிக்க வழிவகை செய்யும் மாவட்ட நிர்வாகம்….!!

ராணிப்பேட்டையில் தடுப்பூசியை போட்டுக் கொண்டால் மட்டுமே கடையை திறப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் அனைவரையும் தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் பனப்பாக்கம் பேரூராட்சியின் சார்பாக பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதிலும் முக்கியமாக கடைகளில் வேலை செய்யும் பணியாளர்களும், வியாபாரிகளும் கொரோனாவிற்கான தடுப்பூசியை செலுத்திக்கொண்டு அதற்கான சான்றிதழ்களை பேரூராட்சியிலிருந்து வாங்கியிருந்தால் மட்டுமே ஊரடங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா…? கட்டுக்குள் வராத கொரோனா…. நோய்த்தொற்றை விரட்டியடிக்க வழிவகை செய்யும் மாவட்ட நிர்வாகம்….!!

ராணிப்பேட்டையில் ஒரேநாளில் கொரோனாவால் 19 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக பரவிவரும் கொரோனா நோய்த்தொற்றை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தொற்று குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளில் கொரோனாவால் 493 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே மாவட்டத்தினுடைய நிர்வாகம் தொற்றை தடுப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென தீப்பிடித்த 20,000 சவுக்கு மரங்கள்…. பல மணி நேரம் போராடிய தீயணைப்புத்துறையினர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் சுமார் 20,000 சவுக்கு மரங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 6 ஏக்கர் அளவிலான சவுக்கு மர தோப்பு உள்ளது. இந்நிலையில் ராஜியினுடைய சவுக்கு மர தோப்பு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கலவை தீயணைப்பு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அத்தகவலின் அடிப்படையில் தீயணைப்பு நிலையத்தினுடைய அலுவலரான பரிமளாதேவியின் தலைமையிலான வீரர்களும், மீட்பு பணி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

500 க்கும் மேலான பாதிப்புகள்…. வேகமாக பரவும் கொரோனா…. நோய்த் தொற்றைத் தடுக்க நடவடிக்கை….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 577 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவினுடைய 2 ஆவது அலை பரவி வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரேநாளில் 577 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 4,653 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதனையடுத்து 18 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நோய் தொற்றை தடுக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஒரே நாளில் 18 பேர் பலி…. நோய் தொற்றை தடுக்கும் பணிகள் தீவிரம்…. ராணிப்பேட்டையில் வேகமாக பரவும் கொரோனா….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 544 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவினுடைய 2 ஆவது அலை பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 544 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே மாவட்டத்தினுடைய நிர்வாகத்தின் சார்பாக நோய்த்தொற்றை தடுக்கும் பணிகள் தீவிரமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 420 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பெருக்கெடுத்து ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 420 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இ-பதிவின்றி வந்த வாகனங்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய எல்லையில் இ-பதிவுயின்றி வந்த வாகனங்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் மாவட்டத்தினுடைய எல்லையான தாமரைப்பக்கத்தில் காவல்துறையினர்களும், வருவாய்த்துறையினர்களும் சேர்ந்து சோதனைச் சாவடியை அமைத்து பிற மாவட்டத்திலிருந்து உள்ளே வரும் வாகனங்களை சோதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்…. கொரோனாவை தடுக்க நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டையினுடைய கலெக்டர் வீடு வீடாக சென்று தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய கலெக்டரான கிளான்ஸ் புஷ்பராஜ் அரக்கோணத்திலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா வார்டு பகுதியையும், ஆக்சிஜன் பகுதியையும் ஆய்வு செய்தார். அதன்பின் மருத்துவ அலுவலரிடம் மருந்து இருப்புகள் மற்றும் ஆக்சிஜன் இருப்புகள் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து கலெக்டர் நகராட்சி பணியாளர்களுடன் சேர்ந்து அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட சுவால்பேட்டை பகுதியிலிருக்கும் வீடுகளுக்கு சென்று கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதன்பின் அப்பகுதியில் அமைந்திருக்கும் கொரோனா சிகிச்சைக்கான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொரோனா குறித்த ஆலோசனை கூட்டம்…. தலைமை தாங்கிய தமிழக அமைச்சர்…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டையில் கொரோனா தடுப்பிற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையிலிருக்கும் ஊராட்சி ஒன்றியத்திற்கான அலுவலகத்தில் வைத்து கொரோனா தடுப்பு பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஆற்காட்டினுடைய எம்.எல்.ஏ மற்றும் பல முக்கிய அரசு அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் இக்கூட்டத்திற்கு தமிழகத்தினுடைய துணிநூல் மற்றும் கைத்தறி துறையின் அமைச்சரான ஆர்.காந்தி தலைமை தாங்கினார். அதன்பின் அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை ஊராட்சி செயலாளர்களுக்கு கூறினார். மேலும் அவர் அந்தந்த ஊராட்சி இடங்களிலிருக்கும் குறைபாடுகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் 500 க்கும் மேலான பாதிப்புகள்…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 635 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரேநாளன்று 635 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை சிகிச்சைக்காக தனியார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் 500 க்கும் மேலான பாதிப்புகள்…. ராணிப்பேட்டையில் வேகமாக பரவும் கொரோனா….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 719 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமுலுக்குக் கொண்டுவந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 719 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தொற்றால் ஒரே நாளில் 15 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய முதியவர்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் 16 வயதாகின்ற சிறுமியை கர்ப்பிணியாக்கிய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரத்தில் 75 வயதாகின்ற அன்வர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வேப்பூரில் வசித்து வரும் 16 வயதாகும் சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததோடு மட்டுமல்லாமல் பலாத்காரமும் செய்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பிணியாகி கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனையடுத்து அச்சிறுமியினுடைய தாயார் முதியவரின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 539 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரேநாளன்று 539 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை சிகிச்சைக்காக தனியார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 333 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமுலுக்குக் கொண்டுவந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது முக கவசத்தை அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 333 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்காக தனியார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்…. கொரோனா தடுப்பு நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டையில் கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதியில் 5 நபர்கள் கொண்ட குழுவினர் கொரோனா குறித்த அறிகுறிகள் இருக்கிறதா என்று வீட்டிற்கே சென்று விவரங்களை சேகரித்துள்ளனர். அப்பணியினை ராணிப்பேட்டையினுடைய உதவி இயக்குனரான ஆனந்தன் ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்கள் எவருக்காவது கொரோனா குறித்த அறிகுறிகள் இருந்தால் உடனே மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறு கேட்டுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவுரைகளையும் கூறினார். அதன்பின் அவர்களுக்கு கபசுர […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

1000 காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பு உபகரணம்…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி செயல்…. ராணிப்பேட்டையில் வேகமாக பரவும் தொற்று….!!

ராணிப்பேட்டையில் காவல்துறையினருக்கு முக கவசம் மற்றும் கையுறையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான சிவகுமார் வழங்கியுள்ளார். ராணிப்பேட்டையிலும் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இத்தொற்றின் பரவலை தடுக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபடுகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான சிவகுமார் கொரோனா தொற்றை தடுக்கும் பணியில் ஈடுபடும் காவல்துறையினர், சிறப்பு படை காவல் துறையினர், ஆயுத படை காவல் துறையினர், ஊர்காவல் படையினர்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு மொத்தமாக 1000 நபர்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 415 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 415 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விதியை மீறிய பொதுமக்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் ஊரடங்கு விதியை மீறி வாகனத்தில் சுற்றித்திரிந்த பொதுமக்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக தற்போது கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலிலுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஊரடங்கு விதியை மீறி வாகனங்களில் சுற்றித்திரியும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொரோனாவிற்காக வைக்கப்பட்ட தடுப்பை உடைத்து வெளியே சுற்றும் பொதுமக்கள்….. நடவடிக்கை எடுக்க கோரிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் கொரோனாவிற்காக வைக்கப்பட்ட தடுப்புகளை உடைத்து அப்பகுதி மக்கள் வெளியே சுற்றித் திரியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரிலிருக்கும் சங்கர் நகரில் 11 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினை சோளிங்கர் பேரூராட்சி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அங்கு எவரும் செல்ல முடியாதவாறு தடுப்புகளையும் அமைத்தது. ஆனால் அப்பகுதியிலிருக்கும் பொதுமக்கள் பேரூராட்சி சார்பாக வைக்கப்பட்ட தடுப்பை உடைத்து வெளியே சுற்றித் திரிகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்திலுள்ளனர். இந்நிலையில் சில சமூக ஆர்வலர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கடைகளுக்கு சீல்…. அரசு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் கொரோனா விதிமுறையை கடைபிடிக்காத 2 கடைக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டு வந்தது. அதில் ஒரு பகுதியாக காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகளை திறந்து வைக்க அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரிலிருக்கும் பஜாரில் இயங்கி வரும் 2 கடைகளில் அரசு அறிவித்த கொரோனா விதிமுறைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 227 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 227 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தந்தை இறந்த சோகத்தை தாங்காத மகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தந்தை இறந்த சோகத்தை தாங்காத மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காரைநகரில் தனியார் தொழிற்சாலையினுள் டிரைவர் வேலையை பார்த்து ஓய்வுபெற்ற சம்பத் என்பவர் வசித்து வந்தார். இவர் சுவாச கோளாறு பிரச்சனையினால் அவதிப்பட்டு வந்த நிலையில், திடீரென்று வீட்டில் வைத்து உயிரிழந்தார். இவர் இறந்த தகவல் அப்பகுதியில் வசித்து வரும் அவருடைய மகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இச்செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதை கண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

9 காவல் நிலையத்தில் பெண் போலீஸ் நியமனம்…. குற்றங்களை தடுக்க நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டையில் குற்றங்களை தடுக்க காவல்துறையினருக்கு மடிக்கணினி மற்றும் மொபட்டை போலீஸ் டி.ஐ.ஜி காமினி வழங்கியுள்ளார். ராணிப்பேட்டையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை கண்காணிப்பதற்கும், அதனை தடுப்பதற்கும் 9 காவல்நிலையத்தில் பெண் போலீஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவ்வாறான குற்றங்களுக்காக பெறப்படும் புகாரினுடைய எண்ணிக்கையை பொறுத்து 9 காவல் நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபடவிருக்கும் காவல்துறையினருக்கு மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து மடிக்கணினி மற்றும் மொபட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை […]

Categories

Tech |