Categories
மாநில செய்திகள்

Breaking: இந்த 2 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!!

ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, 18 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் கனமழை…. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு…. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….!!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொன்னை அணைக்கட்டு பகுதிக்கு வினாடிக்கு 65,000க்கும் அதிகமான தண்ணீர் ல வருகிறது. திருவல்லம் வழியாக வரும் பொன்னையாறு மேல்விசாரம் அருகே பாலாற்றில் கலக்கிறது. இந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாலாற்றில் 84 ஆயிரம் கன […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தொடரும் கனமழை… மேலும் 2 மாவட்டங்களுக்கு… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தொடர் கனமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று சென்னை அருகே கரையைக் கடந்த போதிலும் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்தாலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக சில மணி நேரம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக […]

Categories
சற்றுமுன் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

BREAKING: ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதுமட்டுமல்லாமல் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால் மாணவர்களின்  நலனை கருத்தில் கொண்டு கடந்த வாரம் முழுவதும் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து அதிக […]

Categories
கடலூர் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை விழுப்புரம் வேலூர்

நாளை (நவ.12)…. 10 மாவட்டங்களுக்கு விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 7  மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

FLASH : நாளை (12ஆம் தேதி)… இந்த 9 மாவட்டங்களுக்கு விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை 9 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் நாளை 9 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) […]

Categories
மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 47 பேரை கடித்து குதறிய வெறிநாய்…. பெரும் பரபரப்பு….!!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் சாலையில் வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்தது,  திடீரென அந்த நாய் பொதுமக்களை வெறித்தனமாக கடித்து குதறியது. இதனால் பொதுமக்கள் அந்த நாயை விரட்டி அடித்தனர். அப்போது பாட்டி குளம்,போர்டின் பேட்டை, ஈஸ்வரன் கோவில் தெரு மற்றும்  பஜார் வீதி ஆகிய  பகுதிகளில் நடந்து சென்ற பொதுமக்களை கடித்தது. இதனால் மொத்தம் 47 நபர்களை அந்த நாய் கடித்து உள்ளது. அதில் படுகாயம் அடைந்த சேகர், முருகேசன், அண்ணாமலை, பாரதி, கணேசன்,  கணபதி, கண்ணன், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்னால தாங்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் நகர்ப்பகுதியில் சுகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதினால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நள்ளிரவில்… ஏடிஎம் இயந்திரத்தில் ரூ 4,00,000 கொள்ளை… 2 தனிப்படைகள் அமைப்பு…!!

பெருங்களத்தூரில் ஜிஆர்டி கல்லூரி அருகேயுள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு அருகாமையில் 5 கிலோமீட்டர் தொலைவில் ஆக்ஸிஸ் பேங்க்குக்கு  சொந்தமான ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎமில் சிசிடி கேமரா கிடையாது,  பாதுகாவலர் யாருமே இல்லை.. இந்த நிலையில் நேற்று இரவு இந்த இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் கொண்டு உடைத்து மர்ம நபர்கள் பணத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வெல்டிங் இயந்திரம் கொண்டு… ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் உடைப்பு…. பல லட்சம் கொள்ளை என தகவல்!!

பெருங்களத்தூரில் ஜிஆர்டி கல்லூரி அருகேயுள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு அருகாமையில் 5 கிலோமீட்டர் தொலைவில் ஆக்ஸிஸ் பேங்க்குக்கு  சொந்தமான ஏடிஎம் மிஷின் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎமில் சிசிடி கேமரா கிடையாது,  பாதுகாவலர் யாருமே இல்லை.. இந்த நிலையில் இரவு இந்த இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் கொண்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.. கடந்த 15ஆம் தேதி ஏடிஎம் மையத்தில் 8.50 லட்சம் நிரப்பப்பட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை வேலூர்

அதிகாரிகள் அதிரடி… “2 நாட்களில்”…. 15 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்..!!

தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 15 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைப்பது அதிகரித்து வருகின்றது.. ஆம்,  படிப்பறிவின்மை, வறுமையின் காரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு 18 வயதுக்கு முன்பாகவே குழந்தை திருமணம் செய்து வைக்கின்றனர்.. இது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் சிலர் மறைமுகமாக செய்து வைத்து வருகின்றனர்.. இதுபோன்று நடப்பது குறித்து தெரிந்தால் அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு…. புதிய ஆட்சியர் நியமனம்… வெளியான தகவல்..!!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர் பாண்டியனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடந்த அதிமுக ஆட்சியின்போது வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் என்று மூன்று மாவட்டங்களாகப் மாறியது. இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக கிளாஸ்டோன் புஷ்பராஜ் பணியாற்றி வந்தார். தற்போது அவர் மாநில திட்ட ஆணைய உறுப்பினர் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் ஐ நியமித்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரானார் பாஸ்கர பாண்டியன்!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது கடந்த மே 7ஆம் தேதி மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.. அதேபோல காலியாக  இருக்கும் இடங்களுக்கு அதிகாரிகளை நியமித்தும் அரசு உத்தரவிட்டு வருகிறது.. இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு வெளியிட்டதாவது, ராணிப்பேட்டை மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்….? டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்மின்னல் பகுதியில் எழில்மாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி எழில்மாறன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனைப்பார்த்த அருகிலுள்ளவர்கள் எழில்மாறனை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் எழில்மாறன் மேல் சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஸ்கூட்டியில் வைத்திருந்த பணம்…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரணாப் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி பிரணாப் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.90 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளார். அந்த பணத்தில் ரூ.70 ஆயிரத்தை ஒரு பகுதியிலும், மீதி பணமான ரூ.20 ஆயிரத்தை மற்றொரு பகுதியிலும் தனது ஸ்கூட்டியின் சீட்டுக்கு அடியில் பிரணாப் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அறுந்து கிடந்த மின்சார வயர்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வசித்து வந்துள்ளார். இவர் படித்து முடித்துவிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நந்தகுமார் நிலத்திற்கு மாடுகளை மேய்த்து சென்றுள்ளார். அப்போது டிரான்ஸ்பார்மர் அருகே மின்சார வயர் அறுந்து கிடந்துள்ளது. இதனைப் பார்க்காத நந்தகுமார் மின் வயரை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி நந்தகுமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தாயை திட்டிய மகன்…. கட்டிட மேஸ்திரிக்கு நடந்த கொடூரம்…. தம்பிக்கு வலைவீச்சு….!!

அண்ணனை கத்தியால் குத்திய தம்பியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவனூர் பகுதியில் தேவநாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தேவநாராயணன் மதுபோதையில் தனது தாயை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனைப் பார்த்த தேவநாராயணனின் தம்பியான கணபதி என்பவர் அவரை தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிரேனில் இருந்து விழுந்த பைப்…. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிரேனிலிருந்து இரும்பு பைப் விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள லாலாபேட்டை பகுதியில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெய்சங்கர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கிரேனில் இருந்து இரும்பு பைப் ஒன்று ஜெய்சங்கரின் மீது விழுந்தது. இதில் ஜெய்சங்கர் பலத்த காயம் அடைந்தார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் ஜெய்சங்கரை உடனடியாக மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மினி லாரி – மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் பகுதியில் மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் மோட்டார் சைக்கிளில் புது கேசாவரம் செக்போஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக தமிழரசன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழரசன் தூக்கி வீசப்பட்டு பலத்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்….? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை பர்மா காலனி பகுதியில் ரித்திகா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரித்திகா திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ரித்திகாவை உடனடியாக மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் ரித்திகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வள்ளியம்மாளுக்கும் அவரது மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையடைந்த வள்ளியம்மாள் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வள்ளியம்மாள் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அடிப்படை வசதிகள் இல்லை” சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மனந்தாங்கல் காலனி உள்ளது. இந்த காலனியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், சாலை வசதி போன்றவைகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அம்மனந்தாங்கல் பகுதியில் உள்ள ஒருசில தெருக்களில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. ஆனால் அந்த கால்வாயில் கழிவுநீர்கள் வெளியேறாமல் தேங்கி நிற்பதால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“தடையை மீறினால் நடவடிக்கை” உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

இரவு 10 மணிக்கு மேல் மதுபானக் கூடங்கள் இயக்கினால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது மதுபான கூடங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து ராணிப்பேட்டையில் திறக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வருகிற 6ம் தேதி வரை தனியார் மதுபான கூடங்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நிலைத்தடுமாறி கவிழ்ந்த பேருந்து…. படுகாயமடைந்த பயணிகள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 25 – க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து ஒரு தனியார் பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்தில் 40 – க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து கீராம்பாடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்து நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த பேருந்தில் பயணம் செய்த 25 – க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்நிலையில் செய்யாறு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடந்து சென்ற ஆசிரியர்…. மர்மநபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஆசிரியரிடம் தங்கச்சங்கிலி பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் ஆசிரியரான செல்வி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 11 – ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து ஆசிரியரான செல்வி அணிந்திருந்த 15 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து செல்வி ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடந்த பணி மாற்றம்…. நியமிக்கப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்…. குவியும் வாழ்த்துகள்….!!

ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்ட அனிதாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த மதன்குமார் திடீரென கரூர் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் பணியாற்றி வந்த அனிதா ராணிப்பேட்டையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து தலைமை ஆசிரியர்கள், ஊழியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பல்வேறு பகுதிகளில் ஆய்வு….விதிமுறையை பின்பற்றாத கடை…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!

கொரோனா விதிமுறையை பின்பற்றாத ஜவுளி கடைக்கு அதிகாரிகள் ரூ.5000 அபராதம் விதித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு வணிக கடைகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதாக புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் பேரில் செயல் அலுவலர் கணேசன் தலைமையில் ஊழியர்கள் தக்கோலத்தில் உள்ள தனியார் அலுவலகங்கள் மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சிறு கடைகள் உள்ளிட்டவைகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாழ்க்கையை வெறுத்த தொழிலாளி….திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் பூங்காவனம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பூங்காவனத்திற்கு வாழ்க்கையே வெறுத்துப் போனதால் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து விட்டு மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் பூங்காவனத்தை உடனடியாக மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம்” நடந்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!

காவல்துறையினர் சார்பில் பொதுமக்களிடையே கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் காவல் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடையே தக்கோலம் காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அந்த நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து பங்கேற்ற பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள், கிருமிநாசினி பாட்டில்கள் மற்றும் முகக் கவசங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காணாமல் போன நகை…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

பீரோவில் இருந்த 20 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் பார்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மகள் உள்ளார். கடந்த மாதம் 28 – ஆம் தேதி பாரதிக்கு சீமந்த விழா நடைபெற்றது. அதற்காக பார்வதி வீட்டை பூட்டிவிட்டு ஓச்சேரி பகுதிக்கு சென்றுள்ளார். அதன்பின் பார்வதி உறவினர்களுடன் ஆற்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடும்பத்தினருடன் அனுப்பி வைக்க எதிர்ப்பு…. திருநங்கைகளின் திடீர் போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

உடன் இருந்தவரை அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்க எதிர்ப்பு தெரிவித்து திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்திலுள்ள சித்தூர் மாவட்டம் நகரி பகுதியில் திருநங்கையான அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இருந்து வெளியேறி ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் கும்பினிபேட்டை பகுதியிலுள்ள திருநங்கை மோனிஷா வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் அஜித்தின் அண்ணன் ஜனா மற்றும் தாய் தேசம்மாள் ஆகியோர் அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சொத்தில் பங்கு தரல…. பெண் தீக்குளிக்க முயற்சி…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பெண் தனது தாய் மற்றும் மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள புதுமாங்காடு பகுதியில் முனியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முனியம்மாள் தனது தாயான கம்சலா மற்றும் மகளான எலனிகா ஆகியோருடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூவரும் தங்கள் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனைப்பார்த்த வேலை பார்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

சைக்கிளிலிருந்து திடீரென மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விஷாரம் புதுப்பேட்டை பகுதியில் ஜலால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜலால் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தென்னந்தியலம் தனியார் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது ஜலால் சைக்கிளிலிருந்து மயங்கிக் கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் ஜலாலை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மாடியிலிருந்து தண்ணீர் பிடித்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கட்டிட தொழிலாளி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விசாரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் அப்பகுதியில் புதிதாக கட்டி வரும் கட்டிடத்திற்கு மாடியிலிருந்து பைப் மூலம் தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முருகன் கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் பலத்த காயமடைந்த முருகனை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சுதந்திர தினத்தை முன்னிட்டு…. மதுபான கடைகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

சுதந்திர தினமான இன்று மாவட்ட ஆட்சியர் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் விடுமுறை அறிவித்துள்ளார். இந்நிலையில் நட்சத்திர ஹோட்டலில் உள்ள பார்கள் மற்றும் மதுபான மொத்த விற்பனை கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் உத்தரவை மீறி கடைகளில் மதுபானம் விற்றால் சம்பந்தப்பட்ட  ஊழியர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதிகரித்த தொல்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் சின்னராசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது ரேவதி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ரேவதி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை…. திடீரென நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தணிகை போளூர் பகுதியில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் தீபிகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தீபிகா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தீபிகா அப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து தீபிகாவை உடனடியாக மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பள்ளிக்கு சென்ற ஆசிரியர்…. திடீரென ஏற்பட்ட சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ஆசிரியரிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் பிச்சாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் மாசாபேட்டை அண்ணாநகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மதிய நேரத்தில் செல்வி பள்ளியில் இருந்து வீட்டிற்கு சாப்பிட  நடந்து சென்று கொண்டிருந்தார். அதன்பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் பள்ளிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மதுபோதையில் இருந்த பெண்…. திடீரென எடுத்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மது போதையில் இருந்த பெண் பூச்சி மருந்தை குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கணபதிபுரம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மது அருந்தும் பழக்கம் உடையவர். இந்நிலையில் இரவு நேரத்தில் மது போதையில் இருந்த கௌரி திடீரென பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். இதனையறிந்த அவரது குடும்பத்தினர் கௌரியை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கண்டன ஆர்பாட்டம்…. தொழிற்சங்கத்தினரின் கோரிக்கை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள முத்து கடையில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் எனவும், 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் எனவும், நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ.600 வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து விலைவாசி உயர்வை தடுக்க வேண்டும் எனவும், கொரோனா பாதித்த குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்க வேண்டும் கோஷங்கள் எழுப்பினர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சீக்கராஜபுரம் பகுதியில் மணிகண்டன் மற்றும் சரவணன் என்ற 2 நபர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் சீக்கராஜபுரத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் திருவலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருவலம் சாலையில் இருந்து ஐயப்பன் என்பவர் சீக்கராஜபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திருவலம் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதிவேகமாக சென்ற வேன்…. தப்பி ஓடிய டிரைவர்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

எரி சாராயம் கடத்திய இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிறுவிடாகம் பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக சென்ற சரக்கு வேனை நிறுத்தும்படி காவல்துறையினர் சைகை காட்டினர். ஆனால் சரக்கு வேன் டிரைவர்கள் சற்று தூரத்தில் நிறுத்தி விட்டு காவல்துறையினரை கண்டதும் கீழே குதித்து தப்பி ஓடினர். அதன்பின் தப்பி ஓடிய  டிரைவர்கள் விட்டு சென்ற சரக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“வருமான வரி கட்டவில்லை” 6 லட்ச ரூபாய் மோசடி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வருமான வரித்துறையினர் என கூறி ரூ.6 லட்சத்தை எடுத்துச் சென்ற பெண் உள்பட 6 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆற்காட்டில் ஆட்டோ பைனான்ஸ் நிதி நிறுவனம் வைத்து தொழில் நடத்தி வருகிறார். மேலும் இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் செயலாளராகவும் உள்ளார். கடந்த மாதம் 30 – ஆம் தேதி செல்வகுமார் வீட்டிற்கு சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அதில் 5 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பூட்டியிருந்த வீட்டில்…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வேடல் பெரியார் நகர் பகுதியில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பினார். இந்நிலையில் தனலட்சுமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து தனலட்சுமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தரமற்ற அரிசி வழங்கல்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

தரமான அரிசி வழங்காததால் பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிபாக்கம் பஜார் தெருவில் கற்பகம் கூட்டுறவு ரேஷன் கடை செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் இருந்து செங்கட்டான் தெரு, கோட்டைத் தெரு, கவரைத் தெரு, ஒச்சேரி அம்மன் கோவில் தெருக்களில் 460 குடும்ப அட்டை தாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி வழங்கப்பட்டதால்  விற்பனையாளர்களிடம் பொதுமக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நால்வர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அதன்பின் காவல்துறையினர் அவர்களை துரத்தி சென்று பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அரக்கோணம் பகுதியில் வசிக்கும் டேவிட் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பொய்யாக எழுதப்பட்ட கணக்கு…. அரசு ஊழியர் செய்த செயல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வளர்ச்சி பணிக்கான நிதியிலிருந்து கையாடல் செய்ததால் பேரூராட்சி செயல் அலுவலர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பணப்பாக்கம் பேரூராட்சியில் கடந்த 2018 – 19 ஆம் ஆண்டு சம்பத்குமார் என்பவர் செயல் அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம், சாலை அமைத்தல், மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பல லட்ச ரூபாய் கையாடல் செய்துள்ளார். இதுகுறித்து வேலூர் மாவட்ட லஞ்ச […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய மூவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ஆற்காடு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ஆற்காடு பகுதியில் வசிக்கும் பார்த்திபன், தினேஷ் மற்றும் விஜயகுமார் என்பதும் அவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் மற்றும் பொன்னம்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிப்காட் பகுதியில் வசிக்கும் ராமமூர்த்தி என்பவர் தனது காய்கறி கடையில் சட்டத்திற்கு புறம்பாக காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதே போன்று பொன்னம்பட்டு பகுதியில் வசிக்கும் தினகரன் என்பவரும் தனக்கு சொந்தமான டீக்கடையில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனையடுத்து சிப்காட் காவல்துறையினர் சட்டவிரோதமாக காட்டன் […]

Categories

Tech |