உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரானது 8 மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இருப்பினும் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து தொடர்ந்து துணிச்சலுடன் போரிட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக உதவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ள நிலையில் உக்ரைனுக்கு […]
Tag: ராணுவ உதவி
உக்ரைனுக்கு 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா போரானது தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷ்ய இராணுவத்திற்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணிதிரட்ட உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பும் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்னும் பெயரில் ரஷ்யா தொடங்கிய போரானது ஆறு மாதங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த சூழலில் உக்ரைனுக்கு உதவும் விதமாக ஏற்கனவே அனுப்பப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களை சேர்த்து கூடுதலாக ராணுவ ஆயுத உதவி வழங்க அமெரிக்கா திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி உக்கிரைனுக்கு 600 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்திருக்கிறது. மேலும் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனியர் ராணுவத்தின் உதவுவதற்காக […]
ரஷ்யாவுக்கு எதிரான போர் நடவடிக்கையில் உக்ரைனை ஆதரிக்கும் வகையில் கூடுதலாக 63.5 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள புது உதவி தொகுப்பினை பிரித்தானியா வழங்கும் என அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து இருக்கிறார். உக்ரைனின் சுகந்திரதினத்தன்று அறிவிக்கப்படாத சுற்றுப் பயணமாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு சென்றார். இந்த பயணத்தின்போது ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு உதவும் வகையில் கூடுதலாக 63.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ தொகுப்பினை பிரித்தானிய வழங்கும் என்று […]
உக்ரைனுக்கு புதிதாக 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க வழங்குவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து ஐந்து மாதங்களாக நீடித்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், ராணுவ உதவியும் வழங்கி வருகின்றது. இதனை தொடர்ந்து உக்ரைனுக்கு மேலும் புதிதாக 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது. இதில் கூடுதல் ஹிமார்ஸ் சிஸ்டம் ஏவுகணைகளும் அடங்கும். இவை உக்ரேனிய […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 150-வது நாளை நெருங்கி இருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷ்யாவிடம் வீழ்ந்தது. இருப்பினும் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷ்யபடையை எதிர்த்து போர் செய்து வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா, ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,171 கோடி) மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி ஜோபைடன் […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 129 நாளை எட்டியுள்ளது. இந்த போரில் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிரிழந்துள்ளனர். இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அது மட்டுமில்லாமல் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்க உள்ளது என்று அமெரிக்க அறிவித்துள்ளது. இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ராணுவ நிவாரண உதவிகளின் மொத்த மதிப்பு […]
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கின் ரஷ்யாவின் போர் நோக்கங்கள் தோல்வியில் முடிந்துள்ளதாகவும், ஏற்கனவே உக்ரைன் வெற்றி பெற்றுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறை செயலாளர் டாயர்ட் ஆஸ்டினும், ஆண்டனியும் உக்ரைனுக்கு சென்று அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைனை கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியை சந்தித்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் ராணுவ உதவியை உக்ரைனுக்கு வழங்க முடிவெடுத்துள்ளோம் என்று ஆண்டனி கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு உதவுவதற்காக ஐரோப்பாவுக்கு ராணுவ போக்குவரத்து விமானத்துடன் 50 வீரர்களையும் அனுப்பி வைப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். மேலும் அத்துடன் வெடிமருந்துகள், ஆயுதங்களை வாங்க பிரித்தானியாவுக்கு 7.5 மில்லியன் டொலர்கள் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘நியூசிலாந்து அனுப்பும் C130 ஹெர்குலிஸ் விமானம் முக்கிய விநியோக மையங்களுக்கு மிகவும் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல ஐரோப்பா முழுவதும் பயணிக்கும். ஆனால் அந்த விமானம் நேரடியாக உக்ரைனுக்கு போகாது.பெரும்பாலான இராணுவ உபகரணங்கள் தரை […]
இந்தியாவில் கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவுவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றின் 2 வது அலை மிக வேகமெடுத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் தான் அதிக மக்கள் மீண்டும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் நகரங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்களிடையே […]
தெலுங்கானா வெள்ள மீட்பு பணியை மேலும் தீவிர படுத்துவதற்கு ராணுவத்தின் உதவியை தெலுங்கானா மாநில அரசு நாடியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் அங்கு அதிக அளவு மழை கொட்டித் தீர்த்துள்ளது. அம்மாநிலத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. அங்கு பெய்து கொண்டிருக்கும் கனமழையால் தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் […]