நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ராணுவ படையில் பணியாற்றிய வீரர் வெள்ளைச்சாமி ( வயது 98 ) காலமானார். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பர்மா காலனியில் வசித்து வந்த கே.ஆர்.வெள்ளைச்சாமி உடல்நலக்குறைவால் சற்றுமுன் காலமானார். இவர் நேதாஜியின் ராணுவ படையில் ஒருவராக பணியாற்றினார். இவரது மறைவுக்கு தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tag: ராணுவ படை
வெளிமாநில தொழிலாளர்கள் அடுத்தடுத்து படுகொலை, தீவிரவாதிகள் மீதான பாதுகாப்பு படையின் தொடர் என்கவுண்டர் போன்ற பரபரப்புக்கு மத்தியில் மூன்று நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடி பிடித்து சுட்டுக் கொன்று வருகின்றனர். தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையேயான மோதலில் இதுவரை 9 ராணுவ […]
பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணியாக நாய்கள் வளர்க்கப்படுவதுண்டு. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் அனைத்தும் பெரும்பாலும் வெளிநாட்டு ரக வகையைச் சேர்ந்த நாய்களாக மட்டுமே இருக்கின்றன. ஒரு சிலர் மட்டுமே இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த நாய் வகைகளை வளர்த்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் மட்டுமே பாரம்பரிய தமிழ் இனத்திற்கே சொந்தமாக திகழக்கூடிய சிப்பிபாரை உள்ளிட்ட ராஜபாளைய நாட்டு நாய் வகைகளை வளர்த்து வருகின்றனர். இதுபோன்ற நாட்டு நாய்கள் தென் தமிழகத்தில் அதிகமாக […]
சீனாவின் படைகள் இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் குவிந்துள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் படைகள் இந்தியாவின் வடக்குப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவின் முற்றுகை இந்தியாவிலோ, ஹாங்காங் அல்லது தென்சீனக்கடலிலோ இருக்கலாம். சீனர்கள் ராணுவ திறனை வளர்க்க பல ஆண்டுகளாக இது போன்ற நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக அளவில் பாதிக்கப் பட்டதற்கான பதிலை கொடுக்க தாமதப்படுத்துகிறது. சீனா அறிவுசார் சொத்துக்களை திருடும் […]