வடக்கு சிக்கிமில் ராணுவ வீரர்கள் 16 பேர் வீர மரணம் அடைந்துள்ளார்கள். விபத்தில் காயம் அடைந்த நான்கு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாட்டன் என்ற இடத்தில் சாட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு பகுதிக்கு சென்றபோது பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்ததாக ராணுவம் தகவல். துயரமான செய்தியாக தான் தற்போது சிக்கிம் மாநிலத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றது. நார்த் சிக்கி பகுதில் இருக்கக் கூடிய சாட்டன் என்ற இடத்திலிருந்து தாங்கு என்ற இடத்திற்கு மூன்று ராணுவ வாகனங்கள் சென்று […]
Tag: ராணுவ வீரர்கள்
இந்தியாவில் இன்று தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மக்களும் தங்களுடைய சொந்த ஊர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு சென்றனர். அதன் பிறகு தீபாவளி பண்டிகையின் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக புத்தாடை அணிந்து இனிப்புகள் பரிமாறி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்நிலையில் எல்லை பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு பரிமாறி தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அதன் பிறகு மெழுகுவர்த்தி ஏற்றி பண்டிகையை கொண்டாடிய ராணுவ வீரர்கள் நாட்டு மக்களுக்கு […]
ஜம்மு மற்றும் காஷ்மீரில் அக்னூர் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் முடங்கி போயிருந்த தீபாவளி பண்டிகை இந்த முறை நாடு முழுவதும் பரவலாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி அக்னூர் பிரிவின் கர்னல் இக்பால் சிங் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்து செய்திகளை கூறியுள்ளார். மேலும் நம்முடைய ராணுவ வீரர்கள் எச்சரிக்கையுடனும் எல்லையில் பாதுகாப்பு பணியில் […]
அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடித்து வருகின்றார். இந்த படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையே அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். சில வாரங்களுக்கு முன் சென்னையில் இருந்து விமானம் மூலமாக லடாக் சென்று அங்கிருந்து இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றார். இயற்கை காட்சிகளை ரசித்தபடி […]
இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய குஜராத்தின் கட்ச் பகுதியில் ஹரமி நல்லா கடற்கழி என்னும் பகுதி அமைந்திருக்கிறது. எல்லை தாண்டி அத்துமீறல் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இப்படி அத்துமீறி நுழைவதை வழக்கமாகக் கொண்டிருப்பதனால் எல்லை பாதுகாப்பு படையினர் இந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு கூட பாகிஸ்தான் நாட்டு மீனவர்களின் 9 படகுகள் குஜராத் பகுதி கடலில் சுற்றிக் கொண்டிருந்தது. உடனடியாக […]
பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் முதன் முறையாக பெண் ராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்திய ராணுவ வரலாற்றில் காம்பேக்ட் பணிக்காக எல்லையில் பெண்களை பயன்படுத்துவது இதுதான் முதன் முறையாகும். அசாம் ரைபிள் படையை சேர்ந்த பெண் பாட்டாலியனை சேர்ந்த வீரர்கள் வடக்கு காஷ்மீரின் தங்டார் செக்டாரில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 30 பெண் ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். அவரது குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை ராணுவ அதிகாரி ஆகும். எல்லை பகுதியில் காம்பேக்ட் டியூட்டி எனப்படும் […]
தலைநகர் டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் தயாரித்த ராக்கி கயிறுகளை ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைத்துள்ளனர். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் ராக்கி கயிறுகளை வழங்கி இருக்கின்றனர். சகோதரத்துவத்தை போற்றும் விதமாக ரக்ஷா பந்தன் நாளில் ராக்கி கயிறு கட்டப்படுகின்றது. டெல்லி சென்று ராக்கி கயிறுகளை வழங்கிய கரூர் பரணி பார்க் கொழும்பு நிறுவனங்களின் முதல்வர் டாக்டர் சுப்பிரமணியன் பேசும் போது மிகுந்த […]
உக்ரைனின் கெர்சன் நகரில் நடைபெற்று வரும் போர்த் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. பல மாதங்களாக நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதிகம் வசிக்கும் தான்பாஸ் பகுதியில் ரஷ்ய ராணுவம் சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றது. இந்த சூழலில் தெற்கு உக்ரைனின் கெர்சன் பகுதியில் உக்ரைன் ராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற போரில் 100 க்கும் மேற்பட்ட […]
மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் பலியாக நிலையில் 51 ராணுவ வீரர்கள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவில் 55 பிராந்திய ராணுவ வீரர்கள் உள்ளிட ஏராளமான வீரர்கள் சிக்கி உள்ளனர். இவர்களில் தற்போது 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதி அனைவரையும் மீட்க முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவம் பெரும் […]
லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.. 26 ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பர்தாபூர் என்ற இடத்திலிருந்து ஹனிப் என்ற இடத்துக்கு சென்ற போது வாகனம் விபத்துக்குள்ளானது. 7 Indian Army soldiers lost […]
காஷ்மீருக்குள் 200 தீவிரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் உள்ளதாக ராணுவ தளபதி தகவல் அளித்துள்ளார். காஷ்மீரின் உதம்பூர் நகரில் நேற்று வடக்கு மண்டலத்தின் ராணுவ தளபதி உபேந்திரா திவிவேதி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் நடத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிறகு எல்லைகளிள் போர்நிறுத்த மீறல்கள் குறைந்துள்ள நிலையில் 13 மாதங்களில் 3 விதிமீறல்களே நடந்துள்ளன. இருப்பினும் எல்லைக்கு அப்பால் […]
கொலம்பியாவில் நடந்த அதி பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளார்கள். கொலம்பியாவிலுள்ள ஆண்டுயோகுயா மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக லாரியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்கள். இந்நிலையில் இவர்களது லாரி அம்மாநிலத்திலுள்ள கிராம பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது சாலையோரம் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டின் மீது ஏறியுள்ளது. இதனையடுத்து அந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் லாரியிலிருந்த 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். […]
பிரேசில் ராணுவம் வயாகரா மற்றும் செயற்கை ஆணுறுப்புகளை வாங்குவதற்கு லட்சக்கணக்கான பணத்தை அரசாங்கம் செலவிடுவதாக எதிர்கசிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரேசில் நாட்டின் ஆட்சி அதிபர் ஜயார் பல்சொனாரோ தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அந்நாட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எலியாஸ் வாஸ் பிரேசில் ராணுவத்துக்கு எந்த விஷயங்களுக்கெல்லாம் அரசு செலவு செய்கிறது என்று கேள்வி எழுப்பி மனு தாக்கல் செய்து இருந்தார். இதற்கு பிரேசில் ராணுவம் வயாகரா […]
உக்ரைன் போரில் படைவீரர்கள் பல பேரை இழந்ததால், அவர்களது இடத்தை நிரப்ப அப்பாக்களை களமிறக்க ரஷ்யா முடிவு செய்து இருக்கிறது. அந்த வகையில் 60 வயது வரையுள்ள ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை ராணுவத்தில் இணையுமாறு ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது. உக்ரைன் 18,300 ரஷ்யப்படை வீரர்கள் உக்ரைன் போரில் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ள சூழ்நிலையில், 15,000 ரஷ்யப் படையினர் இறந்து இருக்கலாம் என்று நேட்டோ அமைப்பு கருதுகிறது. எனவே இழந்த வீரர்களுக்கு பதிலாக போர் செய்வதற்காக ரஷ்யா முன்னாள் ராணுவ […]
ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு மாத ஊதியம் உயர்வு வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 4 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் ரஷ்யா, உக்ரைனுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் வீதிகளில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே சண்டை முற்றி உள்ளதால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. […]
உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்ய ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும் இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் […]
ஹவுதி தீவிரவாதிகளின் தாக்குதலை தடுப்பதற்காக அமெரிக்க பைட்டர் ஜெட் விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க விமானப்படை கமாண்டர் தெரிவித்துள்ளார். அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ஹவுதி தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அபுதாபிக்கு அமெரிக்காவின் எப்-22 ரேப்டார் பைட்டர் ஜெட் ரக விமானங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் அல் தப்ரா விமான நிலையத்தில் 6 ஐந்தாம் தலைமுறை போர்ப்படை விமானங்கள் மற்றும் 2000 அமெரிக்க படையினரும் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் ஹவுதி […]
ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் வான்வழி தாக்குதலை நடத்தியத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இதனால் கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்க படையின் உதவியுடன் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் மீண்டும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கை ஓங்கி வருவதாக கூறப்படுகிறது. ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் அவர்களை ஒடுக்கும் வகையில் ராணுவ வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு […]
அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சீரற்ற வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதில் அங்குள்ள காமெங் செக்டார் எனும் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்டுள்ள கடும் பனிச்சரிவு காரணமாக லெப்டினன்ட் கர்னல், ஹர்ஷ் வர்தன், பாண்டே உள்ளிட்ட 7 ராணுவ வீரர்கள் அதில் சிக்கியுள்ளனர் . இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் […]
அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 6ஆம் தேதி பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த 6ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 7 ராணுவ வீரர்கள் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மாயமாகினர். தொடர்ந்து இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து அவர்களின் உடல்களை பனிக் குவியலிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு […]
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு சில நாட்களாக அதிகளவு பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. பனிப்பொழிவு நேற்று அதிகரிக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. பனிப்பொழிவின் காரணமாக தெளிவற்ற நிலை காணப்படுகிறது. இதனால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப்போலவே ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடும் பனிப்பொழிவு மற்றும் காற்று வீசினாலும் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய வீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த […]
ராணுவ வீரர்களுக்கு குளிரை தாங்கும் வகையில் பிரத்தியேக நவீன ஆடையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் அதிக குளிரை தாங்கும் உடைகளுக்கான தொழில்நுட்பத்தை ஐந்து இந்திய நிறுவனங்களுக்கு வழங்கியது. இந்த ஆடை பிளஸ் 15 டிகிரி முதல் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையைத் தாங்கும் வகையில் மூன்று அடுக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இமாலய மலைத் தொடர், பனி பிரதேசங்கள் உள்ளிட்ட உயரமான இடங்களில் பணிபுரியும் […]
மியான்மரில் ராணுவ வீரர்கள் கிராம மக்கள் 11 நபர்களை உயிரோடு எரித்துக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை முறியடித்து அந்நாட்டு ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இந்நிலையில் முதல் அந்நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கிவரும் ராணுவம், இதுவரையிலும் 1,300-க்கும் அதிகமான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றுள்ளது. இதனிடையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக […]
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 20 லட்சம் ரூபாயை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். ராணுவத்தில் பணியாற்றி மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 போர் வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம் நிவாரண நிதி மற்றும் கேப்டன் குபேர காந்திராஜ் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இன்று வழங்கினார். ராணுவத்தில் பணியாற்றிய வீரமரணமடைந்த காஞ்சிபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த படைவீரர் ஏகாம்பரம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தை சேர்ந்த படைவீரர் கருப்பசாமி, தேனி […]
பாகிஸ்தானில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எதிர்பாராதவிதமாக நடைபெற்ற இந்த மோதலில் இரண்டு இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் அப்பகுதியை சுற்றி பயங்கரவாதிகள் […]
மத்திய பிரதேசத்தில் 9 ராணுவ அதிகாரிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே 2 ராணுவ வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சியில் பங்கேற்ற மேலும் 9 ராணுவ வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி பி.எஸ் சைத்யா கூறுகையில், […]
கொலம்பியா நாட்டில் போதை பொருள் கடத்தல் கும்பல் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. கொலம்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போதைப் பொருள் கடத்தலை தடுக்க அரசு பல்வேறு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையில் அந்த நாட்டின் மிகப்பெரிய போதை பொருள் கடத்தல் கும்பலின் […]
ஜம்மு காஷ்மீர் நௌஷேரா பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, அங்கு புதைந்திருந்த கண்ணிவெடி மீது தவறுதலாக கால்வைத்ததால் அது வெடித்து இந்திய ராணுவத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, சிகிச்சையின் போது லெஃப்டினன்ட் ரிஷி குமார், சிப்பாய் மஞ்சித் சிங் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். மற்றொருவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ரிஷி குமார் பிகாரைச் சேர்ந்தவர் என்றும், மஞ்சித் சிங் பஞ்சாப்பை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த தசரா பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாட உள்ளார். இதற்காக அவர் 2 நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். இதனைத் தொடர்ந்து லடாக் பகுதிக்கு செல்லும் அவர் லே, மற்றும் சிந்துப் படித்துறையில் சிந்து தர்ஷன் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. பின்னர் மாலை உதம்பூரில் ராணுவ வீரர்களுடன் உரையாற்றுகிறார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அக்டோபர் […]
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு ராணுவ வீரர்களின் சாகசத்தை கண்டு வியந்த புகைப்பட காட்சிகள் வெளியாகியுள்ளது. வடகொரியாவில் சமீபத்தில் பாதுகாப்பு மேம்பாட்டு கண்காட்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் அதிபர் கிம் ஜாங் உன்னிடம் வடகொரிய ராணுவ வீரர்கள் தாங்கள் எந்த அளவிற்கு பலமானவர்கள் என்பதை செய்து காட்டியுள்ளனர். அந்த வகையில் பலர் சேர்ந்து ஒருவரை மரப்பலகைகளை கொண்டு அடிப்பதும், அதனை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதும், இரும்பு ராடுகள் மற்றும் செங்கற்கள் ஆகியவற்றை தங்களது […]
ஸ்மார்ட் போன்களில் எல்லாவிதமான வசதிகளும் தற்போது இருக்கிறது. அதில் தனி மனிதனுக்கு தேவையான ஷாப்பிங், பணபரிவர்த்தனை, உணவு ஆர்டர்,கட்டணம், ரீசார்ஜ், மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் மொபைலில் ஆப்களாக இருக்கிறது. அதில் மிக முக்கியமான ஒரு ஆப் தான் டிஜிலாக்கர். அரசுக்கு சொந்தமான இந்த மொபைல் ஆப்பில் ஆதார் முதல் டிரைவிங் லைசென்ஸ் வரை பல்வேறு ஆவணங்களை சேமித்து வைப்பதோடு போக்குவரத்து சோதனைகளிலும் மற்ற இடங்களிலும் இந்த டிஜிலாக்கர் ஆப் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆப்பில் […]
தலீபான்களுக்கு பயந்து இராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து தலீபான்கள் அந்நாட்டை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆப்கான் எல்லைப்குதிகளை கைப்பற்றுதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையேயுள்ள எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தலீபான்களின் வன்முறை செயலுக்கு அஞ்சி ஆப்கானைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று தகவல்கள் […]
தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்க அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி அமெரிக்க நேட்டோ படை வீரர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேருகின்றனர் . இந்த ஒப்பந்தத்தின் படி வெளிநாட்டுப் படை வீரர்களின் வெளியேற்றத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டில் வன்முறையை குறைத்துக் கொள்வோம் என்று தலிபான் தீவிரவாதிகள் ஒப்பந்தத்தில் உறுதி அளித்துள்ளனர். ஆனால் இதற்கு மாறாக கடந்த சில வாரங்களாகவே தீவிரவாதிகள் அரசு படைகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதுவரை ஆப்கனிஸ்தான் நாட்டில் 10-ல் மூன்று பகுதிகளை தங்களுடைய […]
சுமார் 23 ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு, வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியிலிருந்து வழக்கமான பயிற்சியை செய்வதற்காக ஹெலிகாப்டர் ஒன்றில் சுமார் 23 ராணுவ வீரர்கள் புறப்பட்டு சென்றுள்ளார்கள். இவ்வாறு 23 ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் நைரோபியின் புறநகர் பகுதியில் பறந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து ஹெலிகாப்டரில் ஏற்பட்ட இந்த திடீர் தீ […]
ராணுவத்தில் மூன்று வாரங்களில் மட்டும் 5,134 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வருகிறது. இவற்றில் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1076 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வைகை பட்டாளம் என்ற அமைப்பின் மூலம் 15 ராணுவ வீரர்கள் ரத்ததானம் வழங்கினர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வைகை பட்டாளம் என்ற அமைப்பை ராணுவ வீரர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். தற்போது நிலவி வரும் கொரோனா காலத்தில் ஏழ்மையில் இருப்பவர்களுக்கு சர்க்கஸ் கலைஞர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அந்த அமைப்பின் மூலம் இளையான்குடி பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் […]
மயிலாடுதுறையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக வருகை தந்துள்ளனர். அதன்படி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், செம்பனார் கோவிலில் உள்ள பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை […]
தென்னமெரிக்க நாடான மெக்சிகோவில் குற்ற செயல்கள் செய்யப்பட்டவர்களிடம் கைப்பற்றிய துப்பாக்கிகளை வைத்து கண்கவர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். மெக்சிகோ தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.லோபஸ் ஓப்ரடோர் அதிபராக உள்ளார்.நமது நாடுகளில் குற்றம் செய்தால் அவர்களிடம் உள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் பாதுகாப்பான இடத்தில் வைப்பார்கள். ஆனால் மெக்சிகோவில் குற்றம் செய்தவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களை கொண்டு ராணுவ வீரர்கள் வித்தியாசமான சிற்பங்களை மிக அழகாக உருவாக்கியுள்ளார்கள். https://twitter.com/RT_com/status/1362937514630078465?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1362937514630078465%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.news7tamil.live%2Fhttps-twitter-com-rt_com-status-1362937514630078465.html இந்த சிற்பங்களுக்கு 600க்கும் மேற்பட்ட ஆயுதங்கள், துப்பாக்கியின் […]
லடாக் எல்லையில் குளிரால் அவதிப்படும் ராணுவ வீரர்களுக்காக சூரிய சக்தியில் இயங்கும் கூடாரம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் எல்லையில் நம்மை அந்நிய நாடுகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு ராணுவ வீரர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள். பெரும்பாலான பகுதிகளில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நம் நாட்டிற்காக பாடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் லடாக் எல்லையில் உறைபனி குளிரால் அவதிப்படும் ராணுவ வீரர்களுக்காக மாசு ஏற்படுத்தாத சூரிய சக்தியில் இயங்கும் இதமான கூடாரத்தை ஒருவர் வடிவமைத்துள்ளார். […]
காஷ்மீரில் கர்ப்பிணிப் பெண்ணை நான்கு மணி பணியில் நடந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நிறைமாத கர்ப்பிணியான ஷப்னம் பேகத்திற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்துள்ளது. அதுமட்டுமன்றி அங்கு சாலைகள் முழுவதும் பனி மூடி உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் அந்த […]
இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இணையதளம் மூலமாக மதுபானம் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. ஆனால் மதுபான கடைகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு கேண்டின் மூலம் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. \இதனையடுத்து சீன […]
டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில் பங்கேற்க வந்த ராணுவ வீரர்களில் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]
இந்தியா அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நேரடிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பேச்சுவார்த்தை வரும் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்பாப்ரியோ, ராணுவ அமைச்சர் மார்க்ஏஸ்பர் ஆகியோர் 26 ஆம் தேதி இந்தியா வருகின்றனர். அவர்களுடன் […]
லடாக்கின் எல்லையை தாண்டி இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ முயற்சி செய்த சீன வீரர் ஒருவரை இந்திய ராணுவ வீரர்கள் பிடித்துள்ளனர். இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதியான லடாக் அருகே உள்ள சுமர்-டெம்சோக் என்ற பகுதியில் இந்திய வீரர்கள் ரோந்து பணியில் இருந்தபோது, இந்திய பகுதிக்குள் சீன வீரர் ஒருவர் நுழைய முயற்சி செய்துள்ளார். அவரை கையும் களவுமாக பிடித்த இந்திய ராணுவ வீரர்கள், அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த நபர் தனது கவனக்குறைவால் […]
ஜம்மு-காஷ்மீரில் தன் மகனுக்குக் கருணை காட்டியதால் பயங்கரவாதியின் தந்தை ராணுவ வீரர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தனியாக சிக்கிய பயங்கரவாதி ஒருவர் இராணுவ வீரர்களின் அன்பு பேச்சால் மனம் மாறி தானாக முன் வந்து சரணடைந்துள்ளார். அவருக்கு ராணுவ வீரர்கள் தண்ணீர் கொடுத்து உதவியுள்ளனர். தன் மகனுக்குக் கருணை காட்டியதால் பயங்கரவாதியின் தந்தை ராணுவ வீரர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ […]
ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி 22 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது உக்ரைனில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி தீ குழம்பாக மாறியதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியது. அதோடு அந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 22 பேர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் இருவர் மட்டும் மிகவும் மோசமான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். சுகுவேர் நகரின் வெளியே விமான நிலையம் ஒன்றில் தரை இறங்குவதற்கு தயாரான நிலையில் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. விபத்துக்குள்ளானது அந்நாட்டு ராணுவத்திற்கு […]
முதல் உலகப் போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் கோழைகள் என குறிப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரான்சில் அமையப்பெற்றுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களின் கல்லறைக்கு செல்ல மறுத்ததோடு கோழைகளின் கல்லறைக்கு என்னால் மரியாதை செலுத்த முடியாது என்றும் கூறியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 1918 ஆம் ஆண்டு பிரான்ஸில் வைத்து உயிரிழந்த இராணுவ வீரர்களின் கல்லறைக்கு மரியாதை செலுத்த மறுத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தன்று […]
உள்ளூர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்து இருக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் சந்தல் மாவட்டத்தில் இந்தியா – மியான்மர் எல்லைப்பகுதியில் ரைபிள் படையை சேர்ந்த வீரர்கள் நேற்று மாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடித் தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அங்குள்ள உள்ளூர் தீவிரவாதிகள் செய்துள்ளதாக தெரிகின்றது. மக்கள் விடுதலை சேனை என்ற அமைப்பு நடத்திய இந்த தாக்குதலில் ஆறுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் […]
நெதர்லாந்து அருபா தீவிற்கு அருகே உள்ள காவிரி கடலில் நெதர்லாந்து நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்ததில் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நெதர்லாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்ற ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கடலோர காவல் படையினருக்கு உரிமையான என்ஹெச் 90 ஹெலிகாப்டர் ரோந்து பணியில் இருந்தபோது கடலில் விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில் ஹெலிகாப்டரில் பயணித்த விமான ஓட்டுநர் கிரிஸ்டியன் மார்டென்ஸ், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எர்வின் வார்னீஸ் என்ற […]
இணையதளத்தை உபயோகப்படுத்த ராணுவ வீரர்களுக்கு அனுமதி கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களான “பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை ராணுவ வீரர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீரில் பணியாற்றும் ராணுவ அதிகாரியான பி.கே.சவுத்ரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அம்மனுவில் ராணுவ வீரர்கள் அனைவரும் தங்களது குடும்பங்களை பிரிந்து தொலை தூரங்களில் கடினமான நிலப்பரப்பு மற்றும் வானிலையில் பணிபுரிகிறார்கள். இச்சூழ்நிலையில் குடும்பங்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான சமூக வலைத்தளங்களை பயன்படுத்தக்கூடிய நிலை உள்ளது. அதுமட்டுமன்றி […]