சுகமான, சுமையில்லாத விளையாட்டுடன் கூடிய தரமான கல்வியை மாநில கல்விக் கொள்கை வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, தனியார் பள்ளி மாணவர்கள் 10 கிலோவுக்கும் கூடுதலாக புத்தக பைகளை சுமந்து செல்ல வேண்டி இருக்கிறது. அதிக எடையுள்ள புத்தக பைகளை சுமப்பதால் மாணவர்கள் உடல் வலியால் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் தரைதளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதையடுத்து தொழிற்கல்வியும், விளையாட்டுக்கல்வியும் கட்டாயமாக்கப்பட வேண்டும். வாரத்துக்கு […]
Tag: ராமதாஸ்
பொறியியல் கல்லூரிகளில் தமிழ் இலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியர்கள் தான் தமிழ் பாடங்களை நடத்த முடியும். எந்த ஆசிரியரும் தமிழ் பாடங்களை நடத்த அனுமதிக்கலாமா என அரசுக்கு ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு செய்வதைவிட தமிழ் மொழியை அவமதிக்க முடியாது; தமிழை கட்டாயப்பாடமாக்கியதன் நோக்கத்தை இது சிதைத்து விடும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்களை நடத்துபவர்கள் தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் பொறியியல் படிப்புகளுக்கு 51 பாட வேலைகள் […]
25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட் போட்டுள்ளார். 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். — Dr S RAMADOSS (@drramadoss) December 8, 2022
பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நான் திரைப்படங்களுக்கு நல்ல ரசிகன் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் பாமக கட்சி திரைப்படங்களுக்கு எதிரான கட்சி என்ற ஒரு கருத்து திரையுலக பிரபலங்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. இந்த தகவல் உண்மை கிடையாது என்று தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துள்ளார். இது குறித்து ராமதாஸ் கூறியதாவது, பாமக கட்சியினர் திரைப்படங்களுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் என்ற தகவல் உண்மை கிடையாது. நான் நல்ல திரைப்படங்களுக்கு எப்போதுமே சிறந்த ரசிகன். நம்முடைய […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பஞ்சாப் மாநிலத்தில் தற்போது அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்து மாநிலங்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது. ஆனால் இந்த பட்டியலில் முதலிடம் பிடிக்க வேண்டிய நமது தமிழகம் அதற்கான நடவடிக்கைகளை கொஞ்சம் கூட எடுக்காதது […]
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்ட மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளர்கள் ஊதிய உயர்வு வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இது மிகவும் வருத்தத்திற்குரியது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணியாற்றும் பிற பணியாளர்களுக்கு கடந்த […]
இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருவதால் வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு அரபு நாடுகள்போல கடுமையான தண்டனைகள் […]
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியவற்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது, சமூக நிலையில் எந்த பின்னடைவையும் எதிர்கொள்ளாமல் அடக்குமுறைகளை அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில் மட்டும் மேலும் வருடத்திற்கு 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் எனக்கூறி, […]
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக தற்பொழுது பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு இந்த பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையின் மூலமாக அவர் வலியுறுத்திருக்கிறார். மேலும் தமிழகத்தில் சென்னையில் தொடங்கி சேலம், திருப்பூர், திண்டுக்கல் என பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவது வழக்கமாகி கொண்டிருப்பதாகவும், இதனால் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து […]
தமிழகத்தில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஒன்பதாம் வகுப்பு வரை உடனடியாக விடுமுறை விட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: “தமிழகத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல் எனப்படும் எச்1என்1 சளி காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சல்களால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கின்றது. தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தைகள் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் […]
தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு வேலை என்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் புலம்பெறாத வெளிமாநிலத்தவர்கள் தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்வது தடுக்கப்படும். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேபோல் தமிழக அரசு பணிகளில் வெளி மாநிலத்தவர் சேர்வதை தடுக்க மருத்துவ பணியாளர் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசு குடிவாரி கணக்கெடுப்பு எடுங்கள். ஐயா மருத்துவர் ராமதாஸ் அவர்கள் 20 விழுக்காடு கேட்கிறார். நீங்கள் 10.5 கொடுக்கிறீர்கள். அதை கொடுங்கள், கொடுக்காமல் இருங்கள், ஆனால் அவர் நீண்ட காலமாக வலியுறுத்துகிறார். குடிவாரி கணக்கிடுங்கள் என்று… ஐயா உங்களுக்கு 10.5 வரவில்லை, 8 தானே வருகிறது என்றால்… வாங்கி கொள்வார், எதிர்க்க மாட்டார். அதை எடுக்காமல் நீங்கள் வாய் கணக்கு, சும்மா உங்களுக்கு மூணு கொடுத்தேன், உங்களுக்கு […]
மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கு இலவச மடிக்கணினியை உடனே அரசு வழங்க வேண்டும் என பா.ம.க நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக சென்ற 2020ம் வருடத்தில் தடைபட்ட அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம், நிலைமை சீரடைந்த பின்பும் இன்றுவரை மீண்டும் தொடங்கப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. கடந்த 2020-21, 2021-22 ம் வருடங்களில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டிருக்க […]
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பை 40வது உயர்ந்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “துணை ஆட்சியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பும் பணி தொடங்கிவிட்ட நிலையில் வயது வரம்பு 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது ஏமாற்றம் அளிக்கின்றது. எனவே உடனடியாக வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும். இந்தியாவில் 11 மாநிலங்களில் குரூப் 1 தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பு […]
சீனாவின் உளவு கப்பல் அடுத்த மாதம் இலங்கை செல்வதால் தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் அம்பன் தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி செல்லும் சீன கப்பல், ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை அங்கு தங்க உள்ளது. இந்த கப்பல் 750 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ள நிலப் பகுதியை உளவு பார்க்கும் சிறப்பம்சம் கொண்டது. எனவே தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர துறைமுகங்களை இது உளவு பார்க்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, உஷாராக […]
சென்னை பெரும்பாக்கத்திலுள்ள செம்மொழி தமிழாய்வு மையக்கட்டிட பெயா்ப் பலகையில் ஹிந்தி இடம்பெற்றுள்ளதற்கு பா.ம.க நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுதொடர்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் “சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பெயா்ப் பலகையில் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளுடன் இந்தியும் திணிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி தொடரப்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட நிறுவனத்தின் பெயா்ப் பலகையில் கடந்த காலங்களில் இல்லாத அடிப்படையில் இந்தி திணிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதனிடையில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் […]
தமிழகத்தில் கடன் ஆஃப்கள் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபரின் ஆதார், பான் எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களைப் பெற்றுக் கொண்டு வாடிக்கையாளர்களின் தொலைபேசி உள்ள விவரங்களை சட்ட விரதமாக பதிவிறக்கம் செய்கின்றனர். இந்த மோசடியான கடந்த ஆஃப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில் கூறியது, சென்னை சூளைமேட்டில் சேர்ந்த பாண்டியன் என்ற […]
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:- “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புக்கான பருவத் தேர்வுகள் வரும் 22 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதே தேதியில் பருவத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. பட்டமேற்படிப்பு பயிலும் பல பட்டதாரிகள் உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். காவல் உதவி […]
இனி பொறுப்பாளர்கள் சரியாக செயல்படவில்லை என்றாலோ, தவறு செய்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டதை தொடர்ந்து அவரை வாழ்த்தி டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: ” செயலாற்றல் மிக்க இளம் தலைவரை பா.ம.க.வுக்கு தந்துள்ளேன். டெல்லியில் ஒரு இளம் தலைவர் கட்சி தொடங்கி ஒரே வருடத்தில் ஆட்சியை பிடித்தார். நாம் 1996 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றினோம். […]
படம் பார்த்து தனக்கு தலைவலி வந்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது: ” எனது வாழ்நாளில் இதுவரை பார்த்திராத திரைப்படம் ஒன்றை இன்று பார்த்தேன். அதில் புகைப்பிடிக்கும் காட்சிகளே இல்லை… மது அருந்தும் காட்சிகளே இல்லை… கல்வியை கடைச்சரக்காக்கும் காட்சிகளும் இல்லை.. பெண்மையை இழிவுபடுத்தும் காட்சிகளும் இல்லை. கொலை, தற்கொலை காட்சிகளும் இல்லை. அழகு தமிழ் பேசும் படம். அவ்வளவு நல்ல படம். ஆனால், பார்த்த […]
திருப்பத்தூர் மாவட்டம் ஆதனூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியர் மாணவர்களை ரெகார்ட் நோட்டை எழுதிவந்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியிருகின்றார். இதில் சில மாணவர்கள் எழுதாததை ஆசிரியர் கண்டித்ததாக தெரிகின்றது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர் ஒருவர் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்க முயற்சி செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடவுளாக மதிக்க வேண்டிய ஆசிரியர்களை திட்டி தாக்க முயலும் அளவிற்கு மாணவர்களிடம் […]
ஓ.பி.சி பிரிவினருக்கு பதவி உயா்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அடிப்படையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அறிக்கையில் “மத்திய அரசுப் பணிகளுக்கான பதவிஉயா்வில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக ஒவ்வொருத்துறையின் உயா்பதவிகளிலும் அவா்களுடைய எண்ணிக்கை பற்றி அளவிடக்கூடிய புள்ளிவிபரங்களைத் திரட்ட மத்திய அரசானது ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கான கணக்கெடுப்பு பிறபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) விபரங்களைத் திரட்டவும் நீட்டிக்கப்பட வேண்டும். அதேசமயம் தமிழகத்தில் சில பணிகளுக்கான பதவி உயா்வில் […]
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்தது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை பயிற்சி பெற வேண்டி இருக்கிறது. அதோடு நீட் தேர்வில் வெற்றி […]
பன்னிரண்டாம் வகுப்பு கணித பாடத்திற்கான வினாத்தாள்கள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 12 ஆம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில் கணித பாடத்திற்கான வினாத்தாள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகியிருந்தன. அதற்காக […]
சென்னையில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “.வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10.5% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனினும் உயர்நீதிமன்றம் எழுப்பிய ஆறு ஏழு கேள்விகள் தவறானவை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சிலர் சொல்வது போல அதிமுக கொண்டு வந்த உள்ஒதுக்கீடு திட்டம் அவசரகதியில் […]
பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உற்பத்தி வரிக் குறைப்பின் மூலம் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில், “நேற்று சென்னையில் டீசல் விலை 76 காசுகளும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும் உயர்த்தப்பட்டிருந்தது. டீசல், பெட்ரோல் விலை 6-வது நாளாக தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது. 8 தவணைகளில் கடந்த 9 நாட்களில் டீசல் விலை ரூபாய் 5.33, பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூபாய் 5.29 உயர்த்தப்பட்டுள்ளது. […]
நீட் விலக்கு சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். எனினும் மசோதா கிடப்பில் போட்டிருக்கிறது சமூக அநீதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் விலக்கு சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2022-2023 ஆம் வருடம் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் நடைபெற […]
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொன்விளைந்த களத்துாரில் புகழேந்தி புலவர் அரசு மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் திருக்கழுக்குன்றம், வல்லிபுரம் சுற்றுவட்டார மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவியர் சிலர் செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் அரசு மாநகர பேருந்தில் நேற்று முன்தினம் மாலை பயணம் மேற்கொண்டனர். இந்த நிலையில் மாணவர்கள் தயாராக வைத்திருந்த பீர்’ பாட்டிலை எடுத்ததும், மாணவியர் அதனை வாங்கி குடித்து கும்மாளம் அடித்தனர். இதையடுத்து “குடித்தால் வாடை […]
தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளை 16 ஆக குறைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூடுதலான சுங்கச்சாவடிகள் அடுத்த 3 மாதங்களில் அகற்றப்படும் என்றும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது வரவேற்கப்பட வேண்டியதாகும். கேரள மாநிலத்தில் 60 கிலோ மீட்டருக்கு 1 சுங்கச்சாவடி என்ற விதியின் அடிப்படையில் […]
தமிழகத்தில் நில அளவைத் துறையில் பணியாளா் தோ்வு, பதவி உயா்வு ஆகியவைகளில் தற்போது உள்ள நடைமுறையே தொடர வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து பாமக நிறுவனா் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தமிழக வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் நில அளவைத் துறையைப் பொறுத்தவரையிலும் டிராப்ட்ஸ் மேன், நில அளவையா் தொடங்கி கூடுதல் இயக்குநா் வரையிலான அனைத்துப் பதவிகளுக்கும் 10-ம் வகுப்பு தோ்ச்சிதான் அடிப்படைக் கல்வித் தகுதி ஆகும். இதற்கிடையில் ஆரம்ப நிலையில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறையாத நிலையில் பள்ளி கல்லூரிகளை திறப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் சில மாநிலங்களில் […]
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா 2-வது அலை பாதிப்பு அண்மையில் குறைந்து காணப்பட்ட நிலையில் தமிழகத்தில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 1-12 வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்று அரசு அறிவித்து இருந்தது. எனினும் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அதன்பின் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1 -12 வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் […]
அம்மா மினி கிளினிக் மருத்துவர்களும், பன்நோக்கு மருத்துவ ஊழியர்களும் மீண்டும் வேலைக்கு வருமாறு சுகாதாரத்துறை அழைத்திருப்பதை இராமதாஸ் வரவேற்றிருக்கிறார். பா.ம.க வின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் இது பற்றி தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, கடலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் வேலை நீக்கம் செய்யப்பட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவர்களையும், பன்நோக்கு மருத்துவ ஊழியர்களையும் மீண்டும் வேலைக்கு சுகாதாரத்துறை அழைத்திருப்பது வரவேற்கக்கூடியது. அவர்களது வாழ்வாதாரத்திற்கு இது பாதுகாப்பாக இருக்கும். திடீரென்று மருத்துவர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]
தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை பறக்க விடுமாறு டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களை அவ்வையாரின் நல்வழி நாற்பது பாடலை கூறி டாக்டர் ராமதாஸ் அழைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகத் தத்துவங்களை இரண்டே வரியில் எழுதியவர் அய்யன் திருவள்ளுவர். அவரை விட எளிமையாக பல கவிதைகளை படைத்து அதன் மூலம் வாழ்க்கை நெறிமுறைகளை இந்த உலகுக்கு கூறியவர் அவ்வையார். […]
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய அரசின் 2022- 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்த பட்ஜெட் குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கிராமப்புற பொருளாதாரம் தொடர்ந்து இறங்கிய வண்ணம் உள்ள நிலையில் வரிச்சுமை […]
கரும்பு கொள்முதலால் ஏற்பட்ட பிரச்சினையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்காக பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஒரு கரும்பும் கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதற்காக, கடலூர் விவசாயிகள் வைத்த கோரிக்கைக்கு ஏற்ப ஒரு கரும்பு 33 ரூபாய் என்ற அடிப்படையில் மொத்தமாக நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. எனினும், பொங்கல் பரிசு பொருட்கள் கொடுக்க தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. ஆனால் தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு 4,862 பேருக்கு உறுதியாகியுள்ளது. மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி முதல் […]
தமிழகத்தில் புதிதாக பார்களை திறக்க பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக பார்கள் திறக்க கூடாது எனவும் ஏற்கனவே உள்ள பார்களை மூட வேண்டுமெனவும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார் . இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தற்போது பார் டெண்டர் தொடர்பாக நிறைய பிரச்சினைகள் எழுந்து வருகின்றன எனவும் இப்போது புதிதாக பார்கள் திறக்கப்பட வேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். […]
புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆங்கில புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், நல்லிணக்கம், அமைதி உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று பாமக கட்சி தலைவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு வழக்கம் போல இந்த ஆண்டும் ரேஷன் கடையில் வாயிலாக பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு ஒரு துணிப்பையில் வழங்குவது வழக்கம். அந்த துணிப்பையில் தலைவர்களின் பெயர் மற்றும் கட்சிகளின் சின்னம் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த முறை தமிழக அரசு முத்திரை மட்டுமே உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் படம் இல்லை. அவரது பெயர் மட்டும் இருந்தது. ஆனால் தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்ற வாசகங்கள் இடம் பெற்றன. இதனைப் […]
தமிழகத்தில் காய்கறிகள், பழங்கள் கொள்முதல் விலையை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காய்கறிகள் கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். அதே சமயத்தில் உழவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கும் உண்மை. கடந்த சில தினங்களுக்கு […]
நெற்பயிர் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர் மழை நீரில் மூழ்கி வீணானது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு அதற்கு உரிய இழப்பீடு வழங்குவோம் என்று அறிவித்து இருந்தது. அதன்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும், சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ரூபாய் 25 ஆயிரமும் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் […]
2000வது ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த போராட்டம் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தற்போது நினைவு கூர்ந்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து மக்களின் உரிமைகளுக்காகவும், போராடும் கட்சி. மற்ற கட்சிகளைப் போன்று வார்த்தைகளில் மட்டும் சொல்லும் கட்சி அல்ல, செயலில் காட்டும் கட்சி. அதற்கு பல எடுத்துக்காட்டுகளை என்னால் கூறமுடியும். அத்தகைய எடுத்துக்காட்டுகளில் ஒன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் மலைவேடன் எனப்படும் பழங்குடி இன […]
பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விழுப்புரம் மாவட்டத்தின் அங்கமாக உள்ள திருக்கோவிலூரை அடுத்த தி மண்டபம் பகுதியில் இருளர் குடியிருப்பை சேர்ந்த காசி என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 22 ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். அன்று குடியிருப்புக்குள் நுழைந்து காவலர்கள் சோதனை என்ற பெயரில் அங்குள்ள வீடுகளைச் சூறையாடி […]
வன்னியர்களின் ஆதரவை பாட்டாளி மக்கள் கட்சியினர் இழந்துவிட்டதாகவும், அதுவே பாமக தோல்விக்கு காரணம் என்று காங்கிரஸ் எம்பி தெரிவித்துள்ளார். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளதாவது: மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளது, விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அதுமட்டுமல்லாமல் தேர்தல் வருகின்ற நேரத்தில் இதனை மாற்றம் செய்துள்ளார். மத்திய அரசை பொருத்தமட்டில் வேளாண் பொருட்களை வாங்குகிற அதிகாரம் பெரும் பணக்காரர்களிடம் இருக்க வேண்டும் என்பற்காக தான் இந்த […]
ரயில்களை தனியார்மயமாக்கும் திட்டங்களை தெற்கு ரயில்வே கைவிட வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தாராளமயமாக்கல் என்பதே தற்போது தனியார்மயமாக்கல் என்பது போல் ஆகிவிட்டது. தொடர்வண்டி சேவைகளை தனியார் மயமாகும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 150 தொடர்வண்டிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானம் செய்து உள்ளது. அவற்றில் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மும்பை, […]
மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கி உள்ளது. பேருந்து, புறநகர் தொடர்வண்டி, மெட்ரோ சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று கரையை […]
மரபுசாரா மின் உற்பத்தி திட்டத்தின் மூலமாக மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற முடியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஐநா காலநிலை மாற்றம் மாநாட்டில் 40 நாடுகள் அனல் மின் உற்பத்தி நிலையங்களை படிப்படியாக மூடப் போவதாக அறிவித்திருப்பது பாராட்டக்கூடிய ஒன்று என்று கூறினார். மேலும் ஓடந்துறை ஊராட்சியில் காற்றாலை மின் திட்டத்தை செயல்படுத்தியதால் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று மிச்சமாகும் 2 லட்சம் யூனிட் […]
பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பாட்டாளி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு தரப்பினர் இதைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இது ஒட்டுமொத்த தமிழினத்தின் சமூகநீதிக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உலை வைத்து இருக்கிறது என்பதுதான் உண்மை. வன்னிய சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத […]
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தொடர்பாக 7 வினாக்களுக்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில் போதுமானதாக இல்லை என்று கூறி, இந்த சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. […]