ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உள்ளூர்மயமாக்குவதன் மூலம் கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றே வெளியிட்டு உள்ளார். அதில், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி உள்ளூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக அந்த திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும் என்று வல்லுனர் குழு பரிந்துரைக்கிறது. மக்களுக்கான திட்டத்தை மக்களின் விருப்பப்படி செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு வல்லுனர் […]
Tag: ராமதாஸ் கோரிக்கை
தமிழகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் பணிநிலைப்பு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 6 பேரை பணிநிலைப்பு செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஆணையிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களை பணிநிலைப்பு செய்ய தமிழக அரசு மறுத்து நிலையில், அதை நிராகரித்து அவர்களுக்கு சென்னை என் நீதிமன்றம் […]
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பன்றி காய்ச்சல் எனப்படும் ஏற்று எச்1என்1 சளி காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தையை அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு புறம் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி […]
பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக அரசு போக்குவரத்து துறையை தனியாருக்கு தாரைவார்க்க முடிவு செய்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் உலக வங்கியுடன் தமிழக அரசு செய்துள்ள ஒப்பந்தம் தான். தமிழக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு உலக வங்கியுடன் நீடித்த நகர்ப்புற சேவைகள் திட்டம், சென்னை மாநகர கூட்டமைப்பு திட்டம் என்ற தலைப்புகளில் சில ஒப்பந்தத்தில் கையெழுத்து […]
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையை தடுப்பதில் அக்கறை காட்டுவதை போல புகையிலை பொருட்களின் விற்பனையை தடுப்பதிலும் தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும் ராமதாஸ் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் குட்கா விற்பனை முற்றிலுமாக தடுக்கப்படும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தடை […]
கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுக்கு பிறகு மிகப்பெரிய அளவிலான ஆய்வு சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 13ம் தேதி இந்த அகழ்வாய்வு தொடங்கியது. அங்கு தமிழர்களின் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான பொருட்கள் கிடைத்து வருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட ஆறு கட்ட ஆய்வுகளை விட தற்போது கிடைத்துள்ள […]
அரசு ஊழியர்களின் உரிமைகளை வழங்குவதை தாமதப்படுத்துவது நியாயமல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு, ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்காதது அவர்களைப் பெரும் சங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது. தமிழக அரசு நிர்வாகத்தில் முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களுடைய உரிமைகளை வழங்குவதில் தாமதப்படுத்துவது நியாயம் கிடையாது. எனவே 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் […]
திருப்பூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தான் பெற்ற பயிர்க் கடனை அடைக்காததன் காரணமாக அவருடைய வங்கி கணக்கை பொதுத்துறை வங்கி முடக்கியது. இந்நிலையில் அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது தன்னுடைய மருத்துவத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது. ஆனால் வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் பணத்தை எடுக்கமுடியாமல் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தனக்கு வேதனை அளிப்பதாக கூறிய ராமதாஸ், பயிர் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்த விவசாயினுடைய குடும்பத்திற்கு ரூபாய் 50 […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]