ராமநாதபுரம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட 200 முட்டைகளில் 120 முட்டைகள் கெட்டுப் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மட்டுமல்லாமல் அங்கன்வாடிகளும் மூடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு மட்டும் முட்டைகள், அரிசி, பருப்பு போன்றவை வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டு வருகின்றது. அப்படி ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆயக்குடி அங்கன்வாடி மையத்தில் 5 வயதிற்கு உட்பட்ட 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இதையடுத்து அங்கன்வாடியை சேர்ந்த ஊழியர்கள் […]
Tag: ராமநாதபுரம்
மரத்தின் மீது சரக்கு வேன் மோதியதில் காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி தெற்கு தோப்பு பகுதியில் அஷ்ரப் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஹ்மத்துல்லா என்ற தம்பி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் சரக்கு வேனில் மதுரை பரவை மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டு தொண்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து தொண்டி பகுதியில் வசிக்கும் மணீஸ் குமார் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கொல்லூர் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு 100 முதல் 150 ரூபாய் குடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி கல்லூரி மாணவர்களும் கொல்லூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காமன்கோட்டை பகுதிக்கு நடந்து […]
ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் உள்ள 800 மெகாவாட் உற்பத்தித் திறனுடன் இரு அனல் மின் நிலையங்களை அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முடிவு செய்தது. இதற்காக சுற்றுச்சூழல் ஒப்புதல் கேட்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதனை பரிசீலித்து ஒப்புதல் வழங்கி இருந்தது. இதை எதிர்த்து அப்பகுதி […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வருகிறார்கள். சில கிராமப்புறங்களில் ஆன்லைன் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் வகுப்புகளை கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிலர் தங்கள் பிள்ளைகளை வேலைகளுக்கு அனுப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணம் அதிக அளவில் நடை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை […]
நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் நடுக்கடலில் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நம்புதாளை பகுதியில் ஏராளமான மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பாண்டி, ராஜதுரை, கருணானந்தம், தூண்டிமுத்து மற்றும் நாகூர் கனி ஆகிய 5 பேரும் இணைந்து நாட்டு படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 5 பேரும் கடலில் மீன்களை பிடித்துக் கொண்டு கரைக்கு செல்லும் போது படகில் […]
மொபட் மீது கார் மோதிய விபத்தில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் இஸ்மாயில் பகுதியில் பூபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அருணாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சிவகங்கை பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அருணாதேவி தனது வீட்டிலிருந்து பணிக்காக மொபட்டில் காளையார் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் அருணா தேவியின் மொபட் மீது மோதி விட்டது. […]
மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இளம் பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மதுரை விரட்டிபத்து இருளாண்டிதேவர் காலனியில் பிரியா என்பவர் வசித்து வருகின்றார். இவர் அந்தப் பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று பிரியா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர். இதுகுறித்து பிரியா எஸ். எஸ் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் மரத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் பகுதியில் முகமது இப்ராஹிம் வசித்து வந்துள்ளார். தற்போது இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அவரது மனைவி குழந்தைகளுடன் தங்கச்சிமடம் முஸ்லீம் தெருவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களது 14 வயது மகளான பஸ்சானா வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக […]
ராமநாதபுரத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றி திரிந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா 2ஆம் அலை பரவலை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 51 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த 20 நபர்கள் மீதும், […]
ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குடி கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருப்பதால், எளிய மக்கள் திறந்தவெளி கிணற்று நீரை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர். அடிப்படைத் தேவையான கழிப்பிட வசதியும் போதுமான அளவிற்கு இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை […]
ராமநாதபுரத்தில் கள்ளகாதலர்களை கண்டித்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் கோவிந்தன் மற்றும் அவருடைய மனைவி காளிமுத்தம்மாள்(92) வசித்து வந்துள்ளார். இதனையடுத்து காளிமுத்தம்மாவின் தென்னந்தோப்பில் அதே பகுதியை சேர்ந்த முத்துராக்கு என்ற 27 வயதான பெண் வேலை பார்த்து வந்த நிலையில் அவருக்கும் மாவிலங்கு கிராமத்தை சேர்ந்தவரான வடிவேல் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துராக்குவை பார்ப்பதற்காக வடிவேல் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் […]
லாரியை ஓட்டகொடுக்காத காரணத்திற்காக ஒருவர் மற்றொருவரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஆர். எஸ். மடை என்ற பகுதியில் ஜெகதீசன் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வீரமணிகண்டன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து அப்பகுதியில் கருப்புசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் குமார் என்ற மகன் இருக்கின்றார். மேலும் வீரமணிகண்டன் லாரியில் சரக்குகளை ஏற்றி செல்லும்போது பிரவீன் […]
அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட வேண்டும் என்று மாவட்ட காஜிகள் தலைமையில் வலியுறுத்தப்பட்டுள்ளது . தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு முழுவதும் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல் படுத்தியது. இதனையடுத்துக் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் இரண்டாவது அலையாகப் கொரோனா […]
மோட்டார் சைக்கிளின் மீது அமரர் ஊர்தி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளிக்குறிச்சி பகுதியில் பாலு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாலு வேலையை முடித்து விட்டு வன்னிக்கோட்டை பகுதியில் இருக்கும் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அமரர் ஊர்தி ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து அந்த அமரர் ஊர்தி பாலுவின் மோட்டார் […]
கண்மாயில் குளிக்கச் சென்ற ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காவாகுளம் பகுதியில் குமரேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கண்மாயிக்கு குமரேசன் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து அவர் கண்மாயில் உள்ள மிகவும் ஆழமான பகுதியில் சென்று குளித்துக் கொண்டிருக்கும் போது அதில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொருவளூர் பகுதியில் 60 வயதுடைய ராமாயி என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் ராமாயி வீட்டில் இருந்த போது திடீரென அவருடைய காலில் பாம்பு ஒன்று கடித்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டது. இதனால் ராமாயி அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டு உள்ளார். இதனையடுத்து அவரின் அலறல் […]
கொரோனா பாதித்த பெண்ணை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் மோட்டார் சைக்கிளில் அமரவைத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சக்கரக்கோட்டை பகுதியில் திருமணமான ஒரு இளம்பெண் வசித்து வருகின்றார். இவருடைய கணவர் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இந்த இளம்பெண் சில நாட்களாகவே சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற காரணங்களால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு கடந்த 23ஆம் தேதி அன்று மருத்துவ குழுவினர், ஊராட்சி செயலாளர் விமல் மற்றும் […]
ராமநாதபுரத்தில் கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர் கருவிகள் போதிய அளவு உள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த வருடம் 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளைஅறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் […]
வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வந்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஃபிளை துபாய் எப் இசட் 8515 துபாயிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். அதில் இருவரின் தலைமுடி சந்தேகம் ஏற்படும் வகையில் இருந்ததால் அவர்களை தடுத்து நிறுத்தி பிறகு அவர்களை சோதனை செய்து பார்த்ததில் அவர்கள் அணிந்திருந்த விக்குகளிகளில் 698 கிராம் எடை […]
வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அனுமதித்த மற்ற அடையாள அட்டைகளை வைத்து வாக்களிக்கலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்குசாவடி சீட்டு வழங்குவார்கள். மேலும் அந்த வாக்குச்சாவடி சீட்டினை மட்டும் கொண்டு வாக்களிக்க இயலாது என்பதால் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்கு அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. […]
தனுஷ்கோடியில் கட்டப்பட்டு வரும் 8 கோடி மதிப்பிலான கலங்கரை விளக்கம்,தேர்தலுக்கு பின் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் அருகே புயலின் காரணமாக தனுஷ்கோடி பகுதியில் பல பகுதிகள் அழிந்து போனது. இந்நிலையில் சாலை வசதி வந்த பிறகு ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்ததை அடுத்து புயலால் அழிந்து போன தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் தனுஷ்கோடி கடற்கரையில் புதிய கலங்கரை விளக்கம் கட்டும் பணி கடந்த பிப்ரவரி […]
தலைமன்னார் – தனுஷ்கோடி பகுதியில் முதல் மூறை சியாமளா என்ற பெண் நீந்தி சாதனை படைக்க உள்ள செயல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த சியாமளா ஹோலி வயது 48 . இவர் ஒரு நீச்சல் வீராங்கனை . மேலும் இவர் தனது நீச்சல் பயிற்சியை, பயிற்சியாளர் காவல்துறை உயர் அதிகாரியான ராஜூவ்திரிவேதிகான் என்பவரிடம் முறையாக கற்றுக்கொண்டார். மேலும் அவர் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் கிருஷ்னா நதியில் , 13 கிலோமீட்டர் கங்கை நதியில் நிந்தியுள்ளதாக […]
இரண்டு வருடங்களுக்கு முன்னால் ராமநாதபுரம் அரண்மனை பள்ளியில் நட்ட மரக் கன்றுகள் இப்படி வளர்ந்துள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா அப்துல் கலாம் வழிகாட்டுதலின்படி இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடிகர் விவேக் நட்டுள்ளார். தற்போது இரண்டு வருடங்களுக்கு முன்பு ராமநாதபுரம் அரண்மனை பள்ளியில் மரக்கன்றுகள் இளம் மரங்களாக வளர்ந்துள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நண்பர்களே முடிந்தால் நீங்களும் மரம் நடுங்கள் என்று […]
16 வயது சிறுமியிடம் திருமணம் செய்ய வற்புறுத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் அருகே கமுதியைச் சேர்ந்தவர் கோகுல் (28 வயது). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஒருதலையாக காதல் செய்து வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவிக்காத அந்த சிறுமிக்கு கோகுல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த சிறுமி தனது பெற்றோரிடம் […]
காலையில் திருமணம் முடிந்த மணமகன் மாலையில் நெஞ்சுவலியல் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் வசிப்பவர் மலைச்சாமி. இவர் தற்போது திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகன் விக்னேஷ் (27). இவருக்கும் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று காலை 10.30 மணியளவில் மணமக்களுக்கு கோவிலில் வைத்து திருமணம் நடந்துள்ளளது. பின்னர் மணமக்கள் மணமகள் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் மணமகள் […]
மணல் கடத்தியவர்களை பிடிக்க சென்ற போலீசாரை தள்ளி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கம் என்ற ஊரைச் சேர்ந்த இருள்ராஜ் (வயது22), நல்லீஸ்வரன் (22), கருத்தாமலை (22), அழகர்சாமி (19), அரிகிருஷ்ணன் (23) ஆகிய 5 பேர் காரில் 25 மணல் மூடைகளை கடத்திச் சென்றுள்ளனர். அப்போது நடந்த வாகன சோதனையில் காரில் மணல் கடத்தியது சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவனுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் […]
ராமநாதபுரம் அருகே உடல்நிலை சரியில்லாத கல்லூரி மாணவிக்கு பேய் விரட்டுவதாக கூறி சாட்டையால் அடித்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அருகே உள்ள கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வீர செல்வம். அவரது மனைவி கவிதா இறந்துவிட்ட நிலையில், மகன் கோபிநாத், தாரணி ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தாரணிக்கு காய்ச்சல் வந்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.ஆனால் தாரணிக்கு சிகிச்சை அளிக்காமல் பேய் பிடித்துள்ளதாக கூறி அவரை திருப்பாலை குடியில் உள்ள கோடங்கியிடம் தந்தை […]
ராமநாதபுரத்தில் பேய்பிடித்ததாக கூறி இளம்பெண் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் குறவள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் வீரசெல்வம் – கவிதா. இவர்களது மகள் தாரணி. வீரசெல்வத்தின் மனைவி கவிதா கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுகு முன்பு தாரணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு கவிதாவின் ஆவி தான் காரணம் என்று சிலர் வீரசெல்வதிடம் கூறியுள்ளனர். இதை நம்பிய வீரசெல்வம் தாரணியை திருப்பாலைக்குடி கோடாங்கி, […]
தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் வர உள்ளதால் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றனர். தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது திமுக-அதிமுக என் என இரண்டு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் விடுதலையான சசிகலா எட்டாம் தேதி தமிழகம் திரும்பியுள்ளார். அவர்களின் வருகையால் அதிமுகவில் சில சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றது. அவரை வரவேற்று போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது […]
குடும்ப தகராறில் 10 பிள்ளைகளை பெற்ற மாமியாரை மருமகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் வசிப்பவர் பொன்னம்மாள் (70). இவருக்கு 10 பிள்ளைகள் உள்ளனர். இதில் தன்னுடைய ஏழாவது மகள் ராமலட்சுமியை முருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் முருகன் அடிக்கடி குடித்துவிட்டு தன்னுடைய தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மகளின் பாதுகாப்பிற்காக ராமலட்சுமியின் வீட்டில் பொன்னம்மாள் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று […]
ராமேஸ்வரம் மாணவர்களால் உருவாக்கப்பட்ட 100 சிறிய செயற்கை கோள்கள் நாளை காலை விண்ணில் பறக்கப்பட்ட இருக்கின்றது. டாக்டர் ஏபிஜே கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பெஸ் ஆன் இந்தியா மற்றும் மார்டின் குரூப் இணைந்து டாக்டர் அப்துல் கலாம் பெயரில் 100 சிறிய செயற்கை கோள்களை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை கோள்கள் நாளை காலை பலூன் மூலம் விண்ணில் பறக்க விட்டு துவங்கப்பட உள்ளது. 5 அடி முதல் 8 அடி உயரத்திற்கு வானில் இந்த செயற்கைக்கோள்கள் பறக்க […]
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் அருகே மகள் பேத்திகளை நிம்மதியாக வாழ விடாத மருமகனை மாமனாரே வெட்டி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எமனேஸ்வரம் அருகே உள்ள கேணிக் கரையை சேர்ந்த நாகநாதனுக்கும் பொதுவை குடியை சேர்ந்த கருப்பையாவின் மகள் சங்கீதாவிற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் . பரமக்குடி அருகே உள்ள அங்கன்வாடியில் சங்கீதா சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். ஆனால் குடும்பத்தை கவனிக்காமல் நாக நாதன் நாள்தோறும் […]
பெண் ஒருவர் நகைகளை திருப்புவதற்காக வைத்திருந்த பணம் காணாமல் போயுள்ளது குறித்து போலீசார் விட்ஸப்கார்னை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பக்கத்தில் உள்ள கடுக்கை வலசை பகுதியைச் சேர்ந்த ராக்கு என்பவருடைய மனைவி பாக்கியவடிவு (65). இவர் சம்பவத்தன்று ராமநாதபுரத்தில் உள்ள வங்கியில் அடகு வைத்த நகைகளை திருப்புவதற்காக 90 ஆயிரம் ரூபாய் பணத்தை பையில் வைத்துக்கொண்டு உச்சிப்புளியில் இருந்து காலை மதுரை செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் இறங்கி உள்ளார். […]
சுற்றுலா புறப்பட்ட வேன் மீது மற்றொரு வேன் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் இருக்கும் கீழக்கரையை சேர்ந்தவர் ஹாஜா செய்யது அஹமது (60). இவர் தன் குடும்பத்தினருடன் இன்று காலை ஆம்னி வேனில் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது சத்திரக்குடிக்கு அருகில் இருக்கும் தபால் சாவடி என்ற பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலார் என்ற பகுதியிலிருந்து ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த மற்றொரு வேன் […]
ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 4 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள மூன்றாம் எண் கொண்ட ரேஷன் கடையில் நேற்று அரிசி மற்றும் பிற பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த ரேஷன் கடையில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தார்கள் ரேஷன் அட்டைகள் வைத்துள்ளனர். இதில் காளியம்மன் கோவில் தெரு பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு நேற்று ரேஷன் கடைக்கு வந்து இருந்தனர். அப்போது அங்கு […]
260 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 2 நாட்களுக்கு முன் சந்தேகிக்கும் வகையில் ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறையினர், நடத்திய விசாரணையில் கஞ்சாவை ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதனடிப்படையில் ராமநாதபுரம் நேரு நகர் 6வது தெருவை சேர்ந்த நவாஸ்கான் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடந்தது. அதில் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது […]
தொடர் மழை பெய்து வரும் காரணத்தினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகள் மற்றும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட ரெட்டையூரணி, தாமரைக்குளம், கடுக்காய்வலசை, கீழகளிமண்குண்டு, சூரங்காட்டு வலசை ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி கிடக்கின்றன. மேலும் […]
இருசக்கர வாகனம் மரத்தில் மோதி ராமநாதபுர வாலிபர்கள் இருவர் பலியானார்கள். ராமநாதபுரம் மாவட்டம் தாயுமானசுவாமி கோவில் தெருவில் வசிப்பவர் பால்பாண்டி. ராமநாதபுரம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர்கள் இருவரும் பெயின்டர்களாக பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தங்கள் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திலிருந்து லட்சுமிபுரம் ஊருணி வழியாக சென்றுகொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை பால்பாண்டி ஓட்டிச் சென்றுள்ளார். இவர்கள் லட்சுமிபுரம் கரையை ஒட்டிய தேவிபட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி சாலையின் […]
ராமநாதபுரத்தில் தொடர்ந்து 6-வது நாளாக பெய்து வரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் தொடர்ந்து ஆறு நாளாக மழை பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு சுமார் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் […]
அரசின் தடையை மீறி புகையிலை மற்றும் மது விற்ற குற்றத்திற்காக 19 பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். ராமநாதபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்யவும் மது விற்பனை செய்வதை தடுத்து வழக்கு பதிவு செய்யவும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனால் மாவட்ட மதுவிலக்கு காவல்துறை மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினரும் தீவிரமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மது விற்பனை செய்ததாக 12 பேரை […]
கமுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வேப்பங்குளம், கரிசல்புளிகே, கொம்பூதி ஆகிய பகுதிகளில் செல்லும் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களை வழிமறித்து பணம் செல்போன் உள்ளிட்ட பொருட்களை சிலர் பறித்து செல்வதாக கோவிலாங்குளம் காவல்துறையினருக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன. இதனால் அப்பகுதியில் கோவிலாங்குளம் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக அந்த பகுதியில் சுற்றித் திரிந்த மூவரைப் பிடித்து […]
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு இரு நாட்டு பக்தர்களும் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கச்சதீவு இயற்கை எழில் மிகுந்த இடமாகவும் 287 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாகவும் உள்ளது. கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டாலும் நம்முடைய நாட்டை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கும் போது வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் அதனை பயன்படுத்திக் கொள்ள உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. கச்சத் தீவில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் இருநாட்டு பக்தர்களுக்கும் ஒரு முக்கியமான வழிபாட்டுத் தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் படகுகளை பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒரு நிகழ்வாக தொடர்கிறது. அதனுடன் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்கும் செயல் அதிகரித்துள்ளது. மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாரம்பரிய மீன்பிடி தொழிலாளர்களை தாக்கும் இலங்கை […]
சாமி தரிசனம் செய்ய சென்றவர்கள் வேன் கவிழ்ந்து அதில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் கீழக்கரை பகுதியில் உள்ள களிமங்குண்டு எனுமிடத்தில் இருந்து 15 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு சென்று முருகனை தரிசிக்க கிளம்பினர். பிள்ளையார் பட்டியில் சாமி தரிசனம் செய்துவிட்டு பழனிக்கு செல்ல நினைத்திருந்தனர். இதனால் அவர்கள் பிள்ளையார்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஜமீன்தார்பட்டி அருகே கண்மாய் வளைவு என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து […]
நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்ததால் சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. ராமேஸ்வரம் பகுதியில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையும் விடிய விடிய தூரல் பெய்தது. மழை தூறிக்கொண்டே இருப்பதன் காரணமாக முக்கிய சாலைகளில் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரஜினியின் உடல் நலம் பூரண குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ரஜினிகாந்த் தன் உடல் நலம் சீராக இல்லாத காரணத்தால் அரசியலுக்கு நான் வரவில்லை என்று சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனைக் கேட்ட அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் எம்ஜிஆர் நகரில் உள்ள கோவிலில் ரஜினி ரசிகர்களும், நரிக்குறவர் சமுதாய மக்களும் […]
கமுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் பத்திர எழுத்தாளர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அபிராமம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவர் பத்திர எழுத்தாளர் ஆக பணி செய்கிறார். நேற்று பார்த்திபனூர் என்னும் இடத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கமுதி நோக்கி ஒரு கார் வந்தது. இவர் குடமுருட்டி ஐயப்பன் கோயில் அருகே சென்ற போது இரண்டு வாகனங்களும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டது. இதில் இருசக்கர […]
பரிசுத் தொகை என கூறி இணையத்தில் 11 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் ஒரு மருந்து விற்பனையாளர். அடிக்கடி தனது வீட்டு உபயோகப் பொருட்களை இணையதள நிறுவனம் மூலம் வாங்கி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணையதளத்தில் உள்ள நிறுவனத்தில் இருந்து ஒரு கடிதம் இவருக்கு வந்தது. அதாவது அவரது பத்தாம் திருமண நாளுக்காக குழுக்களில் அவர் பெயரில் ஒரு பெரும் […]
கேரளாவில் மிக விரைவாக பரவி வரும் பறவைக்காய்ச்சல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பரவிடுமோ என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கேரளாவில் இருந்து ராமநாதபுரத்திற்கு மீன் போன்ற பொருட்கள் லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. கேரளாவிலிருந்து ஏர்வாடியில் உள்ள தர்காவிற்கு பிரார்த்தனைக்காக பக்தர்கள் ஏராளமானோர் செல்கின்றனர். சுற்றுலா பயணிகளும் பலர் வருகின்றனர். இவர்கள் யாருக்கும் எந்தப் பரிசோதனையும் மேற்கொள்வது இல்லை. இராமநாதபுரம் மக்கள், ஏற்கனவே பன்றி காய்ச்சல் அச்சத்தில் இருந்த நிலையில் தற்போது புதிதாக பறவை காய்ச்சல் வந்து விடுமோ […]