தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து காரில் கடத்தி நகைகளை பறித்துக்கொண்டு நிர்வாணமாக புகைப்படம் எடுத்து மிரட்டி வந்த நாசகார கும்பல் பிடிப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்துள்ள பூவிளத்தூர் செல்லும் சாலையில் வீரவனூரை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய உறவினருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென இருவரையும் காரில் கடத்தி சென்று அந்த பெண் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் கைப்பையில் வைத்திருந்த பணம் ஆகியவற்றை பறித்தது மட்டுமில்லாமல், […]
Tag: ராமநாதபுரம்
கீழக்கரை அருகே காசு வைத்து சூதாடிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இடிந்தகல் புதூரில் அமைந்திருக்கும் தென்னந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தபோது அவ்வழியாக ரோந்து சென்ற கீழக்கரை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் சூதாட்டத்தில் ஈடுபட்ட கீழக்கரையை சேர்ந்த முகைதீன் அடிமை, செல்வக்குமார், ராஜா, காஜா, ஆரிப், நவாஸ், இஸ்மாயில் ஆகிய 7 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் […]
ராமநாதபுரம் அருகே மெக்கானிக் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் சீதக்காதி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவருடைய 38 வயது மகன் சரவணன் ராமநாதபுரத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவருக்கு கோமதி(31) என்ற மனைவி இருக்கிறார்.. இந்நிலையில் சரவணன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி கோபித்துவிட்டு நெல்லையில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு […]
போலி ஐஏஎஸ் என்று மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். நேற்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரவி என்பவர் மாவட்ட குற்றவியலில் கொடுத்த புகாரில், தன்னிடம் டிஎன்பிஎஸ்சி அரசு செயலாளராகப் பணி புரிகிறேன் என்று கூறி, அரசு வேலைக்காக 15 லட்சம் வாங்கி, வேலை கொடுக்காமல் பணத்தை மட்டும் மோசடி செய்ததாக மோசடி நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து விசாரித்த போலீசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாவப்பன் மற்றும் ஜார்ஜ் பிலிப் ஆகிய இருவரும் ஐஏஎஸ் […]
தமிழகத்தில் தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். தஞ்சை, […]
தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்று உறுதியாகியுள்ள 2 பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனோவால் 234 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த 110 பேரும் […]
ராமநாதபுரத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழத்தில் இந்த வைரசால் 4 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் குணமாகியுள்ளார். இந்த வைரஸ் […]
ராமநாதபுரத்தில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது […]
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த 500 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்தை மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு சட்டசபையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 1,500 ஏக்கரில் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய அனல் மின் நிலையம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் சிக்கல் நீடித்து வந்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு அ.தி.மு.க அரசு […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் தன்னைக் கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு காலத்தில் பாம்பு ஒரு மனிதனை கடித்தால் அவ்வளவு தான் அவரை பிழைக்க வைப்பது கடினம்.ஆனால் இப்போது நவீன வசதிகள் பெருகிவிட்ட நிலையில் எத்தகைய பாம்பு கடித்தாலும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அவர்களை காப்பாற்றி விடலாம். இந்நிலையில் தான் ராமநாதபுரத்தில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேது கூலி தொழிலாளியான இவர் தன் […]